Thursday, April 1, 2010
திக்கு முக்காட வைத்த திருப்பதி.. தரிசனம்..
திருப்பதி என்றதும் நினைவிற்கு வருவது, பளபளக்கும் பெருமாளும், அருமையான லட்டும் தான்.. (அதுலயும் எனக்கு திருப்பதி லட்டுன்னா.. ரொம்பவே பிடித்தம்..) சரி சரி மேட்டருக்கு வரேன்..
தமிழ்நாடு டூரிசம், ரொம்ப நல்லா....பிளான் பண்ணி கலக்கிருவாங்கன்னு நம்பி... டிக்கெட்ஸ் புக் பண்ணி நல்லாத்தான் கிளம்பினோம்.. ஸ்டார்டிங்-ல பிளான் எல்லாம் நல்லா தான் போட்டாங்க.... சென்னைல இருந்து கிளம்பி, சில பல இடை நிறுத்தங்களுக்கு பிறகு.. ஒரு வழியா திருப்பதி போய் சேர்ந்தோம்..
போயி இறங்கினதும், டூரிஸ்ட் கைடு, எல்லாரையும் மொத்தமா கூப்பிட்டு.. யாரும் ஷாப்பிங் அங்க, இங்கன்னு எங்கயும் போயிராதீங்க.. உங்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட்ஸ் இருக்கு, இந்த லைன்ல போயி சாமிய பார்த்துட்டு அப்படியே வெளில வந்தீங்கன்னா நா லட்டோட வெளில வெயிட் பண்றேன்னு சொன்னாரு.. என்னவோ காஃபி / டீ குடிச்சிட்டு வாங்கன்னு சொல்ற மாதிரி சொல்லிட்டு அவரு போயிட்டாரு..!
சரி, இவ்வளோ உறுதியா கைடு சொல்றாரேன்னு நம்பி லைன்ல போனோங்க..!!
சப்பாஹ்.... கொஞ்சம் பொறுங்க ஒரு பெருமூச்சு எடுத்துக்கரேன்..
அப்போ மணி காலை 11 :30 .
அப்பவே கேட்டோம், ஏன் சார், லஞ்ச் டைமுக்கு வெளில வந்திரலாம் தானேன்னு? ஆமாமா, வந்துறலாம்னு சிரிச்சிக்கிட்டே அனுப்பி வச்சாருங்க..
லைன்ல போகும் போது, ஆரம்பமெல்லாம் நல்லா தான் இருந்திச்சு.... கொஞ்ச தூரம் போனதுமே.. இதே மாதிரி நாலா திசையில இருந்தும் மக்கள் கூட்டம் வந்து, ஒரே இடமா சேர்த்து விட்டுர்ராங்க.. கூட்டம்னா.. உங்க வீட்டு கூட்டம்.. எங்க வீட்டு கூட்டம் இல்லைங்க அவ்ளோ கூட்டம்... சரி பரவாயில்ல.. மணி தான் 12 :30 ஆச்சுதே சீக்கிரமா பெருமாளை பார்த்துட்டு, வெளில போகலாம்னு நினைச்சா...
மணி 1 ஆச்சு, 2 ஆச்சு, 3 ஆச்சுங்க... வரிசை ஆமை வேகத்தில் நகர்கிறது.. சின்ன சின்ன குழந்தைங்க வேற, வயசானவங்க வேற இருக்காங்க.. எங்கள எல்லாம் யாரும் இடித்து தள்ளி விடாமல் காப்பதே, ஆண்களுக்கு பெரிய வேலையா போச்சு..!!
அதான் சாப்பாடு நேரத்துக்கு வந்திருவமேன்னு நினச்சு, கையில எதுவும் எடுத்துக்கலை.. குட்டீஸ் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தண்ணி வேணும், பாத்ரூம் போகணும்னு ஒவ்வொண்ணா ஆரம்பிச்சிட்டாங்க..... பாவம் அவங்களும் தான் என்ன பண்ணுவாங்க.. காத்து கூட சரியா இல்ல... இப்படியாக, மணி நாலு ஆச்சு, அஞ்சு ஆச்சு... சுவாமிய பாக்கற அறிகுறியே இல்ல.. ரொம்ப மெதுவா நகர்ந்தது.. என் சின்ன பொண்ணு உம்மாச்சி நாளைக்கு பாக்கலாம் வீட்டுக்கு போகணும்னு ஒரே அழுகை...!!
ஒரு வழியா, 6 மணி போல கோவில் உள் பிரகாரம் வந்தால், அங்கே இன்னொரு பக்கமிருந்து மக்கள் கும்பலா வந்து சேர்ந்தாங்க..
மம்மிமிமிமிமி....னு அழணும் போல இருந்தது.. எனக்கு..!!
எப்படியோ, எல்லாம் கடந்து பெருமாள் சந்நிதானம் வந்து சேர்ந்தால், சுவாமிய நின்னு ஒரு நிமிஷம் பாக்க விடாம.. ரண்டி..ரண்டின்னு....... இழுத்து வெளியில அனுப்பிர்றாங்க...... செம டென்ஷன்-ஆ இருந்திச்சு....!!
இத்தன கெடுபிடி எல்லாத்துலயும் ஒரே ஒரு நிம்மதி என்னன்னா... இவ்வளவு கஷ்டபட்டாலும் பெருமாள் முகத்தைப் பார்த்தது சில நொடிகளே ஆயினும், என் மனதில் அப்படி ஒரு சிலிர்ப்பு, நிறைவு ஏற்பட்டது என்னவோ உண்மை தான்......!!
கடைசியிலே வெளில வந்து, ஏன் இப்படி லேட் ஆச்சு, என்ன பிரச்சனைன்னு கேட்டா, யாரோ ஒரு அரசியல் தலைவர் தரிசனத்துக்கு வந்ததால் பொது மக்கள் வரிசையை நிறுத்தி வைத்தார்களாம்..!! எனக்கு வந்த கோவத்தை சொல்லி மாளாது..!!
என்ன கொடும சார்... தனிப்பட்டவங்க வசதிக்காக பொது மக்களை இப்படி கஷ்டபடுத்தறது.. கொஞ்சம் கூட நல்லா இல்லை...!! யார் கேட்பது.. இதையெல்லாம்.??
எல்லா விஷயத்துலயும் தான் தலையீடு இருக்கு.. அட்லீஸ்ட் ஸ்வாமியையாவது விட்டு வையுங்களேன்...!!
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
ippa neraya changes iruku. nan last year ponathukum ippavume neraya matthi irukanga. avangalum enna panna mudium ivlo kootam varappa?
என்ன கொடும சார்... தனிப்பட்டவங்க வசதிக்காக பொது மக்களை இப்படி கஷ்டபடுத்தறது.. கொஞ்சம் கூட நல்லா இல்லை...!! யார் கேட்பது.. இதையெல்லாம்.??
எல்லா விஷயத்துலயும் தான் தலையீடு இருக்கு.. அட்லீஸ்ட் ஸ்வாமியையாவது விட்டு வையுங்களேன்...!!
........ அரசியல்வாதிகள், நம்மை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏப்ரல் ஒன்று அன்று, இந்த பதிவை போட்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்
@LK
thanks for your comment.. ya..enna changes vandhalum arasiyil vaathinga thalayitta onnum panna muiyathu..
// அரசியல்வாதிகள், நம்மை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏப்ரல் ஒன்று அன்று, இந்த பதிவை போட்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள் //
ஹிஹிஹி... உங்க கமெண்டுக்கு நன்றி..
nallaa solli irukkeenga ananthi.. unga favourite word (சப்பாஹ்.... ) innum varakkaanomennu ore tensionaa padichchikittirunthen சப்பாஹ்.... kadaisiyaa atha paarththappuram thaan ananthi blog padikkirom appadinnu ninaippu vanthathu.
Laddu katha solla maranthutteengalo?? Oh athukku vera oru postaa??
//கடைசியிலே வெளில வந்து, ஏன் இப்படி லேட் ஆச்சு, என்ன பிரச்சனைன்னு கேட்டா, யாரோ ஒரு அரசியல் தலைவர் தரிசனத்துக்கு வந்ததால் பொது மக்கள் வரிசையை நிறுத்தி வைத்தார்களாம்..!! எனக்கு வந்த கோவத்தை சொல்லி மாளாது..!!//
இது எல்லா காலமும் நடக்கிறதுதான்... ஒருமுறை அமிதாப்பச்சன் குடும்பம் வந்தப்ப இதுபோல ஆகி அதனால பிரச்சினைகள் வந்து அப்ப எதோ சட்டமெல்லாம் போட்டாப்புள ஞாபகம்... சட்டமெல்லாம் தனி மனிதனுக்குத்தான்... அரசியல்வாதிக்கு இல்லைங்களே... அவனுங்க எங்க போனாலும் மரியாதைங்கிற பேர்ல பாதிக்கப்படுறது நாம தானேங்க....
சரி பெருமாள் தரிசனம் நல்ல முடிஞ்சதுல்ல... சந்தோஷம்.
தங்கை ஆனந்தி, கடைசியில லட்டு வாங்கினீங்களா?
சில நேரம் இது போல பக்தி டூர், டென்ஷன் டூரா மாறிவிடும் அபாயம் நம்ம ஊர்ல எல்லா கோவில்லயும் உண்டு.
என்னைக்கு கோவில் டியுப் லைட்ல உபயம் என்று போட்டு பெயர் எழுதுவது நிற்கிறதோ, அன்றைக்குதான் இந்த வி.ஐ.பி குறுக்கீடுகளும் நிற்கும்.
@சே.குமார்
கரெக்ட் தான்.. என்னத்த சட்டம் போட்டாலும்.. அவங்க பண்றத தான் பண்ணுவாங்க..
உங்க வருகைக்கும், கமெண்ட்க்கும் நன்றி...
@Mythii
hahahaa.. Sappahhhh.. romba Thanks ma. unga edhirpaarpa yemathuvaenaa?
yes, laddu kidachathu.. irundha tensionla rachichu saapida thaan mudiyala.. already ulla irundhu velila vandhathum..pasi mayakkam.. ellam rendu rendaa therinchathu..!!
@செல்வா அண்ணா
கரெக்ட் தான்.. அண்ணா.. நம்ம ஊர்ல எப்பவும் இருக்கறது தான்..
ஆனா இந்த முறை.. 11 மணியில இருந்து 6:30 மணி வரைக்கும் ஆனது தான் ரொம்ப டூ மச் ஆயிருச்சு..
உங்க கமெண்ட்க்கு நன்றி... :)
enna kodumainga ananthi idhu...neenga sonnanthu appadiyeah en manathil screen play aaguthu...reall touch.
ungala thikku mukkada vachathu thirupathi...bt naan padichu paarthutu romba feel panna vachuteenga ponga....
@Nat
thanks for your comment..
// தங்கை ஆனந்தி, கடைசியில லட்டு வாங்கினீங்களா? //
ஆமா...அந்த கைடு சொன்ன மாதிரி லட்டு குடுத்தார்.. ( அல்வா குடுக்கறதுக்கு பதில்..) இருந்த டென்ஷன்ல ரசிச்சு சாப்பிட தான் முடியல... :D
ஆண்டவனை தரிசிக்க ஆள்பவர்கள் இடஞ்சலாக உள்ளார்களே.
@தாராபுரத்தான்
//ஆண்டவனை தரிசிக்க ஆள்பவர்கள் இடஞ்சலாக உள்ளார்களே //
சரியாய் சொன்னிங்க.. ரொம்ப நன்றி..நீங்க வந்ததில் மகிழ்ச்சி..!
கவுள் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம்
வெறும் பேச்சுக்குதான் போல.
@சைவகொத்துப்பரோட்டா
// கடவுள் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம்
வெறும் பேச்சுக்குதான் போல.//
ஆமாமா... அதெல்லாம் ஏட்டு சுரைக்காய் கதை தான்..
வருகைக்கும், கமெண்ட்டுக்கும் நன்றி..
இந்த அனுபவம் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் உண்டு.பெருமாள் இந்த விஷயத்தில் எப்பதான் கண்ணை தொறப்பார்ன்னு தெரியல...
//அட்லீஸ்ட் ஸ்வாமியையாவது விட்டு வையுங்களேன்...!!//
உங்கள் கஷ்டத்தை விலாவாரியாகச் சொன்னீர்கள்.
கடைசியில் சொன்னீர்களே, அதுதான் 'நச்'!
எனக்கு நினைவு தெரிந்து இன்று வரை நான் திருப்பதி போனதில்லை.
போக வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை... காரணம் ... ஏழுமலையானுக்கே வெளிச்சம்.
// எல்லா விஷயத்துலயும் தான் தலையீடு இருக்கு.. அட்லீஸ்ட் ஸ்வாமியையாவது விட்டு வையுங்களேன்...!!//
இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க... காசுள்ள கடவுளைப் பார்க்கத்தான் கூடுவாங்க... மத்த கோயிலைப் பற்றி எத்தனைப் பேரு கவலைப் படறாங்கன்னு சொல்லுங்கப் பார்க்கலாம்.
@Mrs.Menagasathia
//இந்த அனுபவம் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் உண்டு.பெருமாள் இந்த விஷயத்தில் எப்பதான் கண்ணை தொறப்பார்ன்னு தெரியல...//
சாமி கண்ண தொறந்தாலும் ஆசாமி தொறக்க விட மாட்டங்க போல இருக்கே..
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
@NIZAMUDEEN
//உங்கள் கஷ்டத்தை விலாவாரியாகச் சொன்னீர்கள்.
கடைசியில் சொன்னீர்களே, அதுதான் 'நச்'! //
நீங்க வந்ததுக்கும் கமெண்ட் பண்ணதுக்கும் நன்றி..
@இராகவன் நைஜிரியா
//இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க... காசுள்ள கடவுளைப் பார்க்கத்தான் கூடுவாங்க... மத்த கோயிலைப் பற்றி எத்தனைப் பேரு கவலைப் படறாங்கன்னு சொல்லுங்கப் பார்க்கலாம்.//
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.. இந்த விசயத்துல எனக்கும் வருத்தம் தான்..
வந்ததற்கும், உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கும் ரொம்ப நன்றி..
unga thirupathi tharisana anubavam nalla ezhuthi irukeenga..more than ur post,honestly,i liked the comments written by ur friends in tamil..nice to read some good tamil after long time..good work..
தேங்க்ஸ்.. லேகா.. நீங்களும் இந்த லிங்க் யூஸ் பண்ணி தமிழ்-ல கமெண்ட் பண்ணலாம்.. ;)
http://google.com/transliterate/indic/tamil
அன்பின் ஆனந்தி
என்ன செய்வது - எதிர்பாராத இயல்பான செயல் இது - அங்கு வரும் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த வேறு வழி அவர்களுக்கும் தெரியவில்லை. முடிந்த வரை சரியாகச் செய்கிறார்கள். கட்டுப்படுத்த இயலாத கூட்டம் - என்ன செய்வது.
நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று இயல்பாகச் சென்று விட வேண்டியதுதான்.
நல்வாழ்த்துகள் ஆனந்தி
//என்ன கொடும சார்... தனிப்பட்டவங்க வசதிக்காக பொது மக்களை இப்படி கஷ்டபடுத்தறது.. கொஞ்சம் கூட நல்லா இல்லை...!! யார் கேட்பது.. இதையெல்லாம்.??//
இது உங்களுக்கு புதுசு, இங்க அரசியல்வாதிகள் பண்ற அட்டூழியத்துக்கு அளவே இல்லை, அரசியல் வாதி மதுரையில கிளம்பினா சென்னையில ட்ராபிக் க்ளோஸ் பண்ணிடுவானுங்க. பார்ப்போம் இன்னும் என்ன என்ன கூத்து நடந்தது என்று
Madam, Thappa eduthukatheenga...Ippadi kastapattu swamin darsinam pannanuma....Thirupathiya parkum pothu namma tamil nadu koil kale romba parava illay..enna inga lancham kudutha swamiya seekiram parkalam. Itho ennoda oru murai errpatta anubavam. Sundar
@Cheena
// நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று இயல்பாகச் சென்று விட வேண்டியதுதான்//
கடைசியில அப்படி தான் வந்தோம். வேறென்ன பண்ண முடியும்..:)
வருகைக்கும், கமெண்ட்க்கும் நன்றி..
@சசிகுமார்
//அரசியல் வாதி மதுரையில கிளம்பினா சென்னையில ட்ராபிக் க்ளோஸ் பண்ணிடுவானுங்க. பார்ப்போம் இன்னும் என்ன என்ன கூத்து நடந்தது என்று//
ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க.. வாங்கி வந்த வரம் அப்படி!!!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@சுந்தர்
//Madam, Thappa eduthukatheenga...Ippadi kastapattu swamin darsinam pannanuma....Thirupathiya parkum pothu namma tamil nadu koil kale romba parava illay..enna inga lancham kudutha swamiya seekiram parkalam. Itho ennoda oru murai errpatta anubavam.Sundar //
இதுல தப்பா நினைக்க ஒன்னும் இல்ல, சுந்தர்.. நானும் அதையே தான் நினச்சேன்..
ஆனா குடும்பத்தினர் ஆசை படும் போது, எனது விருப்பமின்மையை காட்டி கொள்வதில்லை..
உள்ளூர் கோவில்கள்ல ஒரு பத்து ரூபாய் குடுத்தாலே ராஜமரியாதை கிடைக்கும்..:D
உங்க கமெண்ட்க்கு நன்றி.
///என் சின்ன பொண்ணு உம்மாச்சி நாளைக்கு பாக்கலாம் வீட்டுக்கு போகணும்னு ஒரே அழுகை...!!///
Ha ha ha So Sweeeeeettt...... ;-)
//யாரோ ஒரு அரசியல் தலைவர் தரிசனத்துக்கு வந்ததால் பொது மக்கள் வரிசையை நிறுத்தி வைத்தார்களாம்..!! //
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா னு சொல்லிக்க வேண்டியது தான்....
ஆனந்தி,
உங்கள் எழுத்துநடை மிகவும் இயல்பாக,Non-Artificialஆக (இதற்கு தமிழ் தெரியவில்லை). வாழ்த்துக்கள்..... ;-)
உஷ் ஆனந்தி, ஒரு இரகசியம். அன்று கோவிலுக்கு வந்தது, அரசியல்வாதி இல்லை,அது அரசியல்வியாதி. இது நாமளா வளர்த்து விட்டதுகள். மக்கள் குண்டர்கள் மக்களுக்கு ஆற்றும் சேவைகள். நன்றி.
@பித்தனின் வாக்கு
//உஷ் ஆனந்தி, ஒரு இரகசியம். அன்று கோவிலுக்கு வந்தது, அரசியல்வாதி இல்லை,அது அரசியல்வியாதி. இது நாமளா வளர்த்து விட்டதுகள். மக்கள் குண்டர்கள் மக்களுக்கு ஆற்றும் சேவைகள்//
ஹா ஹா.. மறுக்க முடியாத உண்மை :D :D.
வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. மீண்டும் வருக.
@சஞ்சய்
//Ha ha ha So Sweeeeeettt//
Thanks.. :D
//அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா னு சொல்லிக்க வேண்டியது தான்....//
அப்படி தான் கடைசியில் வந்தேன்..வேறன்ன பண்ண முடியும் :P :P
//ஆனந்தி,
உங்கள் எழுத்துநடை மிகவும் இயல்பாக,Non-Artificialஆக (இதற்கு தமிழ் தெரியவில்லை). வாழ்த்துக்கள்..... ;-)//
ரொம்ப தேங்க்ஸ்.. சஞ்சய்..! சந்தோசமா இருக்கு.. :)
உங்க வாழ்த்துக்கு நன்றி..
//எல்லா விஷயத்துலயும் தான் தலையீடு இருக்கு.. அட்லீஸ்ட் ஸ்வாமியையாவது விட்டு வையுங்களேன்.//
நகை திருட வந்திருப்பானுங்களா ஒரு வேளை ?
@ஜெய்லானி
//நகை திருட வந்திருப்பானுங்களா ஒரு வேளை ?//
ஹி ஹி ஹி.. யாருக்கு தெரியும்.. இருக்குமா இருக்கும்.. :D :D
வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி..
பெருமாளைப் பார்த்தீங்க..லட்டும் வாங்கினீங்க...அப்புறம் வெளியில ட்ராவல்ஸ் கைட் அங்கே இருந்தாரா இல்லையா?
உள்ளே அந்த அரசியல்வாதியைப் பார்த்திருந்தால் நம்ம கூட்டத்துக்குள்ள இழுத்து விட்டு எல்லோரும் தப தபவென ஓடி ஏறி மிதிச்சிருக்கலாம் இல்லை..
@ ஸ்ரீராம்
//பெருமாளைப் பார்த்தீங்க..லட்டும் வாங்கினீங்க...அப்புறம் வெளியில ட்ராவல்ஸ் கைட் அங்கே இருந்தாரா இல்லையா?//
அவருக்கு என்ன.. கூல்-ஆ நின்னுட்டு இருந்தாரு.. காதுல புகை வந்ததுதான் மிச்சம்... :D
//உள்ளே அந்த அரசியல்வாதியைப் பார்த்திருந்தால் நம்ம கூட்டத்துக்குள்ள இழுத்து விட்டு எல்லோரும் தப தபவென ஓடி ஏறி மிதிச்சிருக்கலாம் இல்லை..//
ஹிஹிஹி. இது நல்ல ஐடியா-வா இருக்கே..!! :O :O
வருகைக்கும், கமெண்ட்கும் ரொம்ப நன்றி..
அட......
அம்புட்டு சுளுவா “வெங்கி”ய பார்த்துட முடியுமா என்ன!!
சரி... மெயின் மேட்டருக்கு வருவோம்... எம்புட்டு “லட்டு” உள்ள தள்ளினீங்க!!!
@R.Gopi
//அட......
அம்புட்டு சுளுவா “வெங்கி”ய பார்த்துட முடியுமா என்ன!!
சரி... மெயின் மேட்டருக்கு வருவோம்... எம்புட்டு “லட்டு” உள்ள தள்ளினீங்க!!!//
ஹிஹிஹி.. அதெல்லாம் கம்பெனி சீக்ரெட்... :D :D
வருகைக்கும், கமெண்ட்-க்கும் நன்றி.. கோபி..
திருப்பதி பத்தி இவ்ளோ அங்கலாய்த்து இருக்கீங்க. ஏதுனா ஸ்பெஷல் நியூஸ் இருந்தா, அதையும் சொல்லலாமே...
ஹி.ஹி.ஹி
இந்த கூட்டத்துக்கு பயந்தே எண்ணோட தம்பி திருப்பதியில இருந்தாலும் அவன் வருஷத்துல 1 முரைதான் கோயிலுக்கே போவானாம்!...
---
வாங்க பழகலாம் வாங்க!
http://www.sindanaisiragugal.blogspot.in/2012/06/blog-post_29.html
Post a Comment