அற்புதத்தின் ஆலயம்
அல்லிமலர் அவளின்
வாசம்..
காதோடு சொன்னதை
கண்ணிமைத்துக்
கேட்கிறாள்...
கண்மூடி ரசிக்கிறேன்
கண்மூடிச்
சிரிக்கிறாள்..
மென்மை இவளிடம்
மெனக்கிடலாய்ப்
போட்டியிடும்..
பாசம் இவளருகே
பாந்தமாய்
ஏங்கும்...
நட்சத்திரக் குவியலில்
நகாசு இல்லாத
நாயகி...!
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
0 comments:
Post a Comment