ஆதவன் அயர்ச்சியில்
அப்புறத்தில் சென்று விட...
பிள்ளைச் சிரிப்பாய்
பிறை நிலா உந்தன்
வெள்ளைத் தோற்றம்...
எவரோ உன்னை...
எட்டிப் பார்ப்பதாய் எண்ணியோ
வேகமாய் அங்குமிங்கும்
வெட்கத்தில் மறைந்து திரிகிறாய்...
சூல் கொண்ட மங்கை போல்
சூழ்ந்திருக்கும் மேகக்கூட்டம்
கருத்தடர்ந்த பஞ்சுப்பொதியாய்
விம்மி வெடித்து விட
விமரிசையாய் காத்திருப்பு...
மேல தாளம் போல்
இடி மின்னல் இசை அமைக்க
இக்கணமே வருகிறேன் என்றே
இழை இழையாய் வரைந்தபடி
இப்பூமி முத்தமிட்டாய்...
கொட்டும் மழையில்
குதித்து நனைந்திட தூண்டும்
மழை உன்னைக் கொண்டாடியே
மனம் நிறைந்திட வேண்டும்..!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
10 comments:
மழையில் நனைந்தேன்... ரசித்தேன்...
கவிதை மழையில் நனைந்தேன்
சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்கள் சகோதரி .
கவிதை அருமை... ரசித்தேன்.
@திண்டுக்கல் தனபாலன்
கருத்துக்கு மிக்க நன்றி..!
@ராஜி
கருத்துக்கு மிக்க நன்றி..!
@அம்பாள் அடியாள்
கருத்துக்கு மிக்க நன்றி..!
@சே. குமார்
கருத்துக்கு மிக்க நன்றி...!
@ஜீவன்பென்னி
மிக்க நன்றி.
மங்கையவள் வந்து குளிர்வித்து விட்டாள்.
மனமும் நிறைகின்றது.
மதி மயங்கவைத்த கவிதை!
@மாதேவி
கருத்துக்கு மிக்க நன்றி.
@விஜி
கருத்துக்கு நன்றி விஜி.
முழுவதும் படித்தேன் முழுசா நனைந்தேன் தங்களின் கவிதை மழையில். ஒவ்வொரு வரியும் அருமை. பகிர்வுக்கு நன்றி சகோதரி.
@அ. பாண்டியன்
தங்கள் கருத்திற்கு நன்றி.
Post a Comment