ஆதவன் அமர்க்களமாய் சஞ்சரிக்க
அங்கங்கே பறவைகள் இசையமைக்க
அவ்விசைக்கு ஏற்றாற்போல்
அத்தனை மரங்களும் தலையசைக்க...
தலையசைத்த நேரத்தில்
தளிர்காற்று எனைத் தாக்க
கண்மூடியே ஒரு நிமிடம்
கண்ணுக்கெட்டா தூரம் நான்
கடந்தே போக...
பள்ளி செல்லும் பாலகர்கள்
அலுவல் பார்க்கச் செல்லும் ஆசாமிகள்
அனைத்தையும் ஆமோதிப்பது போல்
ஆலய மணியின் அழைப்போசை...
கண்ணுக்கு விருந்தாய் விரிந்திருக்கும்
வண்ண வண்ணப் பூக்கள்
அன்னை மடி அசைவாய்
தென்னை ஓலையின் தாலாட்டு...
நெருக்கி அடுக்கி வைத்தது போல்
பளபளக்கும் பப்பாளிகள்...
பதுங்கிய படியே
பார்த்துச் செல்லும் தெரு நாய்கள்...
உச்சஸ்தாயியில் உரக்க கூவியே
உப்பு விற்கும் வியாபாரி...
கலகலப்பாய் கடை திறந்தே
காத்திருக்கும் கடை முதலாளி...
தக்காளி மிளகாய் விலையேற்றம் பற்றி
தர்க்கம் செய்து செல்லும் பெண்மணிகள்...
பார்த்தபடியே நின்றுவிட பல விஷயங்கள்
படர்ந்ததுவே பகல் பொழுதும்...!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
6 comments:
தக்காளி மிளகாய் விலையேற்றம் பற்றி
தர்க்கம் செய்து செல்லும் பெண்மணிகள்...
பார்த்தபடியே நின்றுவிட பல விஷயங்கள்
படர்ந்ததுவே பகல் பொழுதும்...!
------
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
அழகாகக் காலைக் காட்சியைக்
காட்சிப்படுத்தி உள்ளீர்கள் !
ஆகா... அருமையான காலை பொழுது.
@சே. குமார்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@ஸ்ரவாணி
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@தமிழ்வாசி பிரகாஷ்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
காலைப் பொழுது கண்முன்னே தெரிகிறது, இயற்கையை எவ்வளவு அழகாக உற்று நோக்கியுள்ளீர்கள் என்பது தங்களது படைப்பில் காண முடிகிறது. தொடருங்கள் உங்கள் இலக்கியப் பயணம்.
@அ. பாண்டியன்
தங்கள் கருத்திற்கு நன்றி.
Post a Comment