கடந்து செல்லும் வீதி...
ஏக்கங்கள் நிறைத்துப்
போட்டிருக்கும் என் மனம்..
காலம் இழுத்து வந்த பாதை
காதல் கடந்து வந்த மீதி..
எனதுயிரை சுமந்து போகும் பாதை..
ஏக்கங்கள் நிறைத்து
என்னுள்ளம் தொலைத்து
எதுவுமறியாத எல்லைக்கோடு...
காரணம் தேவையில்லை
அவள் கைகளில் நான் பிள்ளை
யாரவள் என் வாழ்வில்
எனை தாலாட்டும் வீணை...
தேடலில் தெரிந்த சொந்தம்
தீண்டியும் தீராத பந்தம்...
மோனத்தில் உதிர்ந்த இன்பம்
உன் மௌனத்தால்
உணர்ந்த துன்பம்...
கலைந்த எண்ணத்தில்
கவனச் சிதறலில் கூட
கலையாத உன் வண்ணம்
நிறைத்த எண்ணத்தில்
நீங்காத உன் பிம்பம்...!
~அன்புடன் ஆனந்தி
என்னுள்ளம் தொலைத்து
எதுவுமறியாத எல்லைக்கோடு...
காரணம் தேவையில்லை
அவள் கைகளில் நான் பிள்ளை
யாரவள் என் வாழ்வில்
எனை தாலாட்டும் வீணை...
தேடலில் தெரிந்த சொந்தம்
தீண்டியும் தீராத பந்தம்...
மோனத்தில் உதிர்ந்த இன்பம்
உன் மௌனத்தால்
உணர்ந்த துன்பம்...
கலைந்த எண்ணத்தில்
கவனச் சிதறலில் கூட
கலையாத உன் வண்ணம்
நிறைத்த எண்ணத்தில்
நீங்காத உன் பிம்பம்...!
~அன்புடன் ஆனந்தி
7 comments:
அருமையான கவிதை! நன்றாக முடித்துள்ளீர்கள் ! மனதில் நிற்கிறது:)
காரணம் தேவை இல்லை
அவள் கைகளில் நான் பிள்ளை
ஈகோ இல்லாத காதல் போல பிள்ளையாகவும் தயாராக உள்ளார்.
கலைந்த எண்ணத்தில்
கவனச் சிதறலில் கூட
கலையாத உன் வண்ணம்
நிறைத்த எண்ணத்தில்
நீங்காத உன் பிம்பம்...!
ரொம்ப பிடிச்சு போட்டு இந்த வரிகள்
//**
கலைந்த எண்ணத்தில்
கவனச் சிதறலில் கூட
கலையாத உன் வண்ணம்
நிறைத்த எண்ணத்தில்
நீங்காத உன் பிம்பம்...!
**//
புடிச்சிருக்கு..
அருமை... அதுவும் கடைசி இரு பத்திகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
நன்றி...
அருமை!
அருமை !!! அருமை !!!
@விஜி
நன்றி விஜி.
@கவி அழகன்
மிக்க நன்றி.
@அன்பு
மிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி.
@உஷா அன்பரசு
மிக்க நன்றி.
@Thanglish Payan
மிக்க நன்றி.
Post a Comment