தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் - 2 கப்
வெண்டைக்காய் - 20
பெருங்காயப் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் - 1/2 கப் துருவியது
பச்சை மிளகாய் - 10 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
- வெண்டைக்காயை கழுவி, தண்ணீர் போக துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
- அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- அதனுடன் (தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி) அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.
- இத்துடன் கடைந்து வைத்த மோரை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
(வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா சேர்த்தும் செய்யலாம்)
~அன்புடன் ஆனந்தி
6 comments:
எளிமையான குறிப்பு.. எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு இது.. அதிகம் அம்மா கையில் சமைத்து சாப்பிட்டத ஞாபகம்
மிக்க நன்றிம்மா..........!!
அருமை!
அருமை!
பார்க்கும்போதே நாவில் நீர் சுரக்கிறது.சுவைத்தால் அருமைதான்.முயற்சி செய்து சுவைத்தும் பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
@faiza kader
கருத்திற்கு மிக்க நன்றி.
@Jayadev Das
கருத்திற்கு நன்றி.
@Vijaya
நன்றி விஜி.
@சித்தாரா மகேஷ்
ஹ்ம்ம்.. செய்து சாப்பிடுங்க. நன்றி.
Post a Comment