topbella

Wednesday, October 3, 2012

பஜ்ஜி...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
பெருங்காயம் - சிறிது
மிளகாய்த்தூள் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
பஜ்ஜி மிளகாய் - 5
வெங்காயத் தாள் - 5 (ஒரு கட்டு)
 
செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், மிளகாய்த் தூள், இடித்த பூண்டு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  • மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். (மிளகாய் மிகவும் காரம் என்றால் உள்ளே உள்ள விதைகளை நீக்கி விடவும்)
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை ஒவ்வொன்றாய் கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, மெதுவாய் (எண்ணெய் தெறித்து விடாமல்) போட்டு, நன்கு வெந்து சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும்.
  • கத்தரிக்காய், குடை மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், அப்பளம், சௌ சௌ, காலிபிளவரிலும் கூட இதே மாவினை உபயோகித்து பஜ்ஜி செய்யலாம்.
 

~அன்புடன் ஆனந்தி

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு ரொம்ப பிடிக்கும்... வீட்டில் தான் செய்வதில்லை... குறிப்பிற்கு நன்றி...

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு இன்றே செய்து பார்க்க வேண்டியதுதான்!...
மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

Menaga Sathia said...

அருமை,குளிருக்கேத்த இதமான ஸ்நாக்ஸ்...

Vijaya Vellaichamy said...

இதை உண்ணும் பாக்கியம் எனக்கே கிடைத்தது!!!!!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@திண்டுக்கல் தனபாலன்
ஹ்ம்ம். உங்க கருத்திற்கு நன்றி.


@அம்பாளடியாள்
கண்டிப்பாய் செய்து பாருங்க. கருத்துக்கு நன்றி தோழி.


@S. Menaga
ஹ்ம்ம்... ஆமாங்க. கருத்துக்கு நன்றி. :)



@விஜி
ஹா ஹா... ஹ்ம்ம். நன்றி ;)

'பரிவை' சே.குமார் said...

பஜ்ஜி அருமை... ஆனா நமக்கு வாழக்காய் பஜ்ஜி தவிர மற்ற பஜ்ஜி பிடிக்காது சகோதரி.

Anonymous said...

எனக்கு பஜ்ஜி சுட வராது, ஆனால் நல்லா சாப்பிடத் தெரியும் .. ஹா ஹா . பகிர்வு அருமை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே. குமார்

வாழைக்காயிற்கும் இதே ரெசிப்பி தான்.
நன்றி.


@இக்பால் செல்வன்

நன்றி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)