யாருமற்ற வெளியில்
ஏக இறையின் துணையில்
ஏகாந்த சிலிர்ப்பில்
எதைப் பற்றியும் எண்ணாது
நான் நானாக இருக்க வேண்டும்...
என் ஈசன் பாதம் பற்றி
என் ஆசை அவன்
தாள் பணிதல் ஒன்றே
என்றென் எண்ணம்
உரைத்தல் வேண்டும்....
சலனமில்லாத பயணம்
சஞ்சலமில்லாத உள்ளம்
சறுக்கல் இல்லா பாதை
காயமில்லாத நெஞ்சம்
காண்பேன் அவன் தஞ்சம்...
உறுத்தல் வேண்டாம்
உளறல் வேண்டாம்
கருத்து வேறுபாடு
கடுகளவும் வேண்டாம்
கைகட்டி யார்முன்பும்
நிற்கவும் வேண்டாம்
கண்டதை எண்ணிக்
கலங்கவும் வேண்டாம்...
காண்பேன் அவன் எழில்
பாடுவேன் அவன் நாமம்
தேடுவேன் மெய்ஞானம்
உள்ளன்போடு சேர்ந்திடுவேன்
அவன் பொற்பாதம்....!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
7 comments:
சிறப்பான கருத்துக்களுடன் கவிதை அருமை... வாழ்த்துக்கள்...
தனியாக உட்கார்ந்து இருக்கும் ஈசன் உடனடியாக எழுந்து உங்க வீட்டுக்கு வந்து விட்டார் போய் பாருங்கள்!
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
கவிதை நன்றாக இருக்கிறது தோழி.
உங்களின் அழகான கவிதையை படித்த பின் நாங்களும் அவனின் பொற்பாதமடையவே விரும்புகிறோம்....!
.வாழ்த்துக்கள் தொடருங்கள்
ஈசன் பாதம் தேடும் கவிதை
அதன் பயன் சுகம் சொல்லிப்போகும் கவிதை
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Nice one Anandhi. Been a while, how r u? Hope all is fine. Take care
@திண்டுக்கல் தனபாலன்
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
@விஜி
ஹா ஹா.. ஹ்ம்ம்ம்.. பார்த்தாச்சு. ;)
நன்றி.
@அருணா செல்வம்
மிக்க நன்றிங்க. வருகைக்கும் நன்றி.
@அவர்கள் உண்மைகள்
ஹ்ம்ம்.. வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.
@ரமணி
மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் நன்றி.
@அப்பாவி தங்கமணி
ஹ்ம்ம்... ரொம்ப நாள் ஆச்சு. நான் நலம்.. உங்க நலமும் அறிய ஆவல். ரொம்ப நன்றி. :)
Post a Comment