தேவையான பொருட்கள்:
ஸுக்கினி - 2
வெங்காயம் - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
செய்முறை:
ஸுக்கினியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் ஸுக்கினியை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில், மூடி வைத்து ஒரு 5 நிமிடம் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
பிறகு மூடியை திறந்து அதில் மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.
~அன்புடன் ஆனந்தி
7 comments:
ஐ ... பாக்கவே ஜோரா இருக்கு:)
வாசனை ஆளை தூக்குது சகோ ..!
பொரியல் சூப்பரா இருக்குங்க ஆனந்தி!
நான் ஒருமுறை வாங்கினேன், லேசா கசப்பு வந்த மாதிரி தெரிந்தது,அதிலே இருந்து ஸூக்கினி வாங்கறதே இல்லை! :)
@விஜி
தாங்க்ஸ் மா :)
@வரலாற்று சுவடுகள்
கருத்துக்கு நன்றிங்க :)
@மஹி
ஹ்ம்ம்.. வாங்க மஹி. சில நேரம் பீர்க்கங்காய் போல கசப்பு ஏறிய காயும் உண்டு.. காயை நறுக்கும் போது, சிறு துண்டு வாயில் வைத்து பாருங்க. கசப்பு இருந்தால் அதை உபயோகிக்காதீங்க. :)
நன்றி மஹி.
பொரியல் பாக்க நல்லாயிருக்கு.
அது என்ன்ங்க ஸூ...க்கினி.?
ஸுக்கினி சாம்பார் இல் இல்லே அவியல் ல தான் சேர்த்திருக்கேன். பொரியல் நல்லா இருக்கு செஞ்சு பார்க்கணும்.
@சே. குமார்
அது நம்ம ஊர் வெள்ளரிக்காய் மாதிரி இருக்குங்க. ஸுக்கினி-யோட படம் ஒண்ணு போட்டிருக்கேனே.. அப்படி தான் இருக்கும்.
தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய். :)
நன்றி.
@En samaiyal
ஹ்ம்ம்.. நானும் சாம்பார், அவியலில் சேர்த்திருக்கிறேன்.. பொரியலும் ரசம், சாம்பார் சாதத்திற்கு நன்றாய் இருக்கும். அவசியம் செஞ்சு பாருங்க. :)
நன்றி.
Post a Comment