சிற்பமாய் வடிவெடுக்க
வாதிட்ட நேரம் போக
வாழும் நேரம் எல்லாம்
வகையாய் உன்னோடு...
பாய்ந்தோடும் ஆறாய்
பாடல் மீட்டும் கருவியாய்
மீள முடியா சுழலாய்
எனை மீட்டுகின்ற உயிராய்...
எண்ணத்தில் உழன்ற
வண்ணக் கனவுகள்
எதிரேயே வந்து நின்று
கவிதை புனையச் செய்தே
கைகட்டிப் பார்ப்பதென்ன...
உணர்வுகளில் ஒளிந்திருந்த
ஓராயிரம் அசைவுகளும்
ஒரே நாளில் உயிர் பெற்றே
உன்னுடன் உறைந்ததென்ன...
நினைத்தே பார்க்கிறேன்
நிகழும் நிஜம் அனைத்தும்
கலையாத ஓவியமாய்
சிதறாத சித்திரமாய்
கருத்தில் வருவதென்ன...!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
6 comments:
மனதில் நிற்கிறது! அருமையான கவிதை! நீரூற்று போலே!
good kavithai nalla rasikka mudinthathu
maha
//சேமித்த நினைவெல்லாம்
சிற்பமாய் வடிவெடுக்க
வாதிட்ட நேரம் போக
வாழும் நேரம் எல்லாம்
வகையாய் உன்னோடு..//
நேசித்த நினைவுகளைக் கொஞ்சம் மீட்டிக் கொண்டேன்.நன்றி அக்கா.
உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் இணைத்துள்ளேன் ...
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_10.html
நன்றி .
குணா
அழகான கவிதை
@விஜி
ஒரு வழியா உங்க கமெண்ட் எல்லாம் கண்டு பிடிச்சிட்டேன் . ரொம்ப ரொம்ப சந்தோசம். :)
@maha
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)
@சித்தாரா மகேஷ்
கருத்துக்கு மிக்க நன்றி. :))
@குணா
மிக்க நன்றி குணா. :)
@என் ராஜபாட்டை-ராஜா
மிக்க நன்றி :)
Post a Comment