topbella

Wednesday, February 15, 2012

எது நிரந்தரம்...?


உலர்ந்து போவோம்
என்றறியாமல்..
உதடு விரித்துச் சிரிக்கும் 
உன்னத மலர்கள்..

உதிரப் போவதை 
உணராமல்..
உற்சாகமாய் 
சலசலக்கும் இலைகள்..

கலைந்து போவோம் 
என்று உணரா
கண்கவரும் 
வண்ணக் கோலங்கள்..

கரைந்து போவோம் 
என்று கலங்காது 
ஒளியை வீசும் 
மெழுகு வர்த்திகள்..

எரிந்து போவோம் 
என்பதறியா 
ஏராள விட்டில் பூச்சிகள் 
எல்லாம் வாழும் 
நம்பிக்கையில்...

எழுதிய கவிதை 
அழிந்து போவதில்லை..
எடுத்த பிறவி
எதுவுமற்றுப்  போவதில்லை...

எதுவும் நிரந்தரம் இல்லை 
எதார்த்தத்தை மனதில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி 
ஏகாந்தமாய் வாழ்வோம்..!

~அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள், நன்றி)

19 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை ஆனந்தி.. சிந்திக்க வைக்கும் கருத்துகள்.

மதுரை சரவணன் said...

//எதுவும் நிரந்தரம் இல்லை
எதார்த்தத்தை மனதில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி
ஏகாந்தமாய் வாழ்வோம்..!//

arumaiyaana karuththulla kavithai...vaalththukkal

மதுரை சரவணன் said...

//எதுவும் நிரந்தரம் இல்லை
எதார்த்தத்தை மனதில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி
ஏகாந்தமாய் வாழ்வோம்..!//

arumaiyaana karuththulla kavithai...vaalththukkal

Vijaya Vellaichamy said...

உண்மையில் நினைவில் கொள்ள வேண்டியவை!

Narayanan said...

உலர்ந்து போவோம்
என்றறியாமல்..
உதடு விரித்துச் சிரிக்கும்
உன்னத மலர்கள்..//

உலர்ந்து போவோம் என்று தெரிந்தே உதடு விரித்து சிரிக்கும் மலர்கள்...

உதிர்ந்து போவோம் என்று தெரிந்தே ஆனந்தமாய் சலசலக்கும் இலைகள்.....

நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும்...தெரிந்ததனாலேயே ஆனந்தமாய் இருக்கும் கலை கற்போம் வாரீர்.....

Ana Kavya said...

அருமையான கவிதை.

Sanjay said...

எது நிரந்தரம்?? ஆறு அடி தான், வேற என்ன..!! :D :D

தனிமரம் said...

வாழ்வில் சிந்தனையைத் தூண்டும் கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

//எதுவும் நிரந்தரம் இல்லை
எதார்த்தத்தை மனதில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி
ஏகாந்தமாய் வாழ்வோம்..!//

பின்றீங்க ஆனந்தி.. அருமையாயிருக்கு கவிதை.

'பரிவை' சே.குமார் said...

அருமையான வரிகள்.
அழகான கவிதை ஆனந்தி,
வாழ்த்துக்கள்.

Nandhini said...

////////உலர்ந்து போவோம் என்று தெரிந்தே உதடு விரித்து சிரிக்கும் மலர்கள்...////////


அருமையான வரிகள் ஆனந்தி...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான கவிதை...:)

தினேஷ்குமார் said...

அருமையான கவிதை சகோ நிரந்தரம் ஏதுமில்லை இவ்வுலகில் உண்மைதான்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்டார்ஜன்
உங்க கருத்துக்கு மிக்க நன்றி. :)


@மதுரை சரவணன்
மிக்க நன்றிங்க. :)


@விஜயா
தேங்க்ஸ் விஜி ;)


@நாராயணன்
ஹ்ம்ம்... உண்மை தான்.. தெரிந்தும்... ஆனந்தமாய் இருக்கும் இயற்கை போல்,
நம் வாழ்வும் இருந்தால் சிறப்பு தான். கருத்துக்கு நன்றி. :)


@தனிமரம்
உங்க கருத்துக்கு நன்றி :)


@சே. குமார்
கருத்துக்கு நன்றி குமார். :)


@அப்பாவி தங்கமணி
ரொம்ப நன்றிங்க..! :)


@தினேஷ்குமார்
உண்மை... உங்க கருத்துக்கும் நன்றி. :)

Venkat said...

Yes. Absolutely true. We must understand that Change is the only one that cannot be changed.

We must understand that this situation, whether it is good or bad, will change.

Fantastic lines. congrats.

Venkat said...

Yes. it it true. We must understand Change is the only one that cannot be changed.

We must understand that the situation whether it is good or bad, will change.

Fantastic touching lines. Congrats

ஸ்ரீராம். said...

நேற்றையும் நாளையையும் எண்ணாமல் இன்று வாழ்வோம் என்று எண்ண வைக்கும் கவிதை. அருமை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீராம்

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. :)

dogra said...

உங்கள் கவிதைகளில் மிக மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை...
முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை முதல் வரிசை கவிதை இது...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)