topbella

Wednesday, December 21, 2011

புத்தாண்டில் புது குறிக்கோள்....!


ஒரு வழியா இந்த வருஷம் கடந்தேறி... புது வருசத்துக்கு ரெடி ஆயிட்டீங்களா?  புது வருஷம் பிறந்ததும்... நம்ம பிரண்ட்ஸ் சில பேர் போன் பண்ணி விஷ் பண்ணிட்டு... ஹ்ம்ம் அப்புறம்... இந்த வருசத்துக்கு என்ன Resolution ..ன்னு கேப்பாங்க (அப்டின்னா........??? ). நம்மளும்... பெருமையா... அதாவதுங்கன்னு... தொடங்கி... வருஷம் வருஷம் சொல்ற அதே குறிக்கோள் தான் சொல்வோம். (வாக்கு மாறக் கூடாதில்லையா..? எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...)

எத்தனை பேர்... நினைச்சதை நினச்ச மாதிரி நிறைவேத்தி இருப்போம்.... ஒரு முடிவு எடுக்கறது எவ்ளோ சுலபமா இருக்கு.... ஆனா அதை நிறைவேத்துறதுல இல்ல இருக்கு மேட்டர்...! ஒரு உதாரணம் சொல்றேன்... கடந்த மூணு வருசமா நானும்.... எப்படியாச்சும்... ஒரு பத்து கிலோ எடை குறைத்தே ஆகணும்ன்னு பிளான் பண்றேன்... நாம ஒண்ணு நினச்சா... நம்ம கிரகம் ஒண்ணு நினைக்குது...!

சரி.....ஒரு வழியா... பிளான் ஸ்டார்ட் பண்ணிரலாம்னு... எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சா....... எல்லாரும் ஒட்டுமொத்த அட்வைஸ்.. டயட்...! ஹ்ம்ம் ஹும்ம்ம்.. ஐ ஆம் சாரி....அப்படி பட்டினி கிடந்து... உடம்பு குறையனும்னு எனக்கு அவசியம் இல்ல... நெக்ஸ்ட் ஐடியா... ப்ளீஸ்...!

எக்சர்சைஸ் பண்ணினா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சுலபமா குறைக்கலாம்.. அப்டியா....? சொல்லவே இல்ல....இப்ப பாரு நானா....... எப்படி குறையறேன்னு கிளம்பி பக்கத்துல உள்ள ஜிம்-ல போயி கெஸ்ட் பாஸ் (Guest pass ) வாங்கி... சேர்ந்தேன்..! ஏக போக வரவேற்பு தான்... கரெக்டான இடத்துக்கு வந்திருக்கீங்க... எடை குறைக்குறது அழகுக்கு மட்டும் இல்ல... நல்ல ஆரோக்கியமான உடலுக்கும் தாங்கன்னு அருமையா.. சொன்னாங்க.. (பயபுள்ளைங்க பேச்செல்லாம் நல்லாத்தேன் இருக்கு....) சரி ரைட்டு... நா இப்போ என்ன செய்யனும்ன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்.

உடனே அழகா.. ஒரு அட்டையில் என் பேர் எழுதி, வரிசையா நம்பர் போட்டு.. இந்த ஆர்டர்ல எக்சர்சைஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு ஒரு தரம் காமிச்சி கொடுத்தாங்க.  சரி இதெல்லாம் ஜுஜிபின்னு அவங்க மாதிரியே... செஞ்சிட்டே வந்தேன்.. 20 நிமிசத்துல முடிஞ்சு போச்சு... அட இம்புட்டு தானா... அடடா... இவ்ளோ நாள் இது தெரியாம எவ்ளோ டைம் வேஸ்ட் பண்ணிட்டோம்ன்னு பீலிங்க்ஸ் வேற....!

அப்புறம் என்னன்னு பவ்யமா போயி கேட்டேன்.... கார்டியோ எக்சர்சைஸ் கொஞ்சம் செஞ்சு முடிச்சிரலாம்ன்னு சொல்லவே... நேர போயி ட்ரெட்மில்ல ஏறி.. ஒரு 10 நிமிஷம் நடந்துட்டு.... ஜாலி-ஆ கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.  அப்படியே தொடர்ந்து ஒரு மூணு நாள் போனேன்... நாலாவது நாள்... வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்ததும்... தோள்பட்டை செமையா..வலி. என்ன மேட்டர்-னா... நல்ல வேகமா எக்சர்சைஸ் செஞ்சு சீக்கிரம் குறையறதா நினச்சு... ஓவர்-ஆ பண்ணி.... வலி வந்திருச்சு..!

அப்படியும் விடாம... முன் வச்ச கால பின் வைக்க கூடாதுன்னு போனேன்.. அந்த ஜிம்-ல நாமளா எக்சர்சைஸ் பண்றது தவிர... தனிப்பட்ட ட்ரைநர்ஸ் வந்து.. யோகா, பிலாடே....இது மாதிரி வேற கிளாஸ் எடுப்பாங்க... எந்த கிளாஸ்-ல வேணா நம்ம ஜாயின் பண்ணிக்கலாம்.. அப்படி ஒரு கிளாஸ்-ல சேர்ந்து சுறுசுறுப்பா நானும் எக்சர்சைஸ் பண்ணேன்..! ஹ்ம்ம் ஹும்ம்.. பின்விளைவுகள் செம.....! (ஒரு வேளை தொடர்ந்து போயிருந்தா.. பழகி இருக்குமோ என்னவோ?)

அப்புறம் என்னவா??? இதெல்லாம் எதுக்குடா வம்புன்னு வெற்றிகரமா திரும்பி வந்தாச்சு... இப்போ அடிக்கடி அந்த ஜிம்-ல இருந்து.. பாசமா போன் பண்ணி... நாங்க இப்போ வேற ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கோம்... கண்டிப்பா வந்து ட்ரை பண்ணுங்கன்னு சொல்வாங்க..! இப்படி எல்லாம் கூப்டா.. போயிருவமாக்கும்..! அவள் ஒரு தொடர்கதை மாதிரி... இதுவும் ஒரு தொடர் கதை...!

சரி பேசிட்டே இருந்து.. உங்கள கேட்க மறந்துட்டேன்... உங்களுக்கு இந்த வருஷம் என்ன குறிக்கோள் (Resolution )? (சுதாரிப்பா... என் ப்ளாக் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன்ன்னு மட்டும் சொல்லிராதீங்க.. மீ பாவம்..!)

ஜோக்ஸ் அபார்ட்... உடல் ஆரோக்கியத்திற்கு.. சரியான நேரத்தில்.. சரியான விகிதத்தில் உணவு, தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி,  அமைதியான உறக்கம்.... இதெல்லாம் இருந்தாலே போதுங்க...!  (சரி.. சரி.. கோவப் படக் கூடாது)  உடல் ஆரோக்கியத்தோட.. மனமகிழ்ச்சியோட புது வருஷம் பிறக்க வாழ்த்துக்கள்...!

வாசித்த (வருந்திய...) அன்பு உள்ளங்களுக்கு நன்றி..!!!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

16 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

மகிழ்ச்சி பொங்கும் இனிய புத்தாண்டில் உங்களது நாட்டங்களும் ல்ட்சியங்களும் நிறைவேற வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஸ்டார்ஜன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :)

Yaathoramani.blogspot.com said...

மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
புது வருடப் பிறப்பும் முதல் ஒரு வாரமும்
குறிக்கோள் வாரமாகத்தான் போகுது
அப்புறம் அடுத்த வருடம்தான்...
இது ஒரு தொடர் தொடர் கதைதான்..
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

Vijaya Vellaichamy said...

பிளான் எல்லாம் நல்லாத்தேன் இருக்கு! நமக்கு சரியாவரனுமே! அறிவாளியா நம்ம ஆரோக்கியமா இருக்குகோம்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன். சந்தோசமா புது வருடத்த தொடங்க முடிவு செய்திட்டேன்! தங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரமணி

ஹ்ம்ம்.. உண்மை தான். உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@விஜி

ஹி ஹி.. அதே அதே.. ;)
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Sanjay said...

ஜோக்ஸ் அபார்ட்..//
இது சங்க கால தமிழா??!! :P :D
உடல் ஆரோக்கியத்திற்கு.. சரியான நேரத்தில்.. சரியான விகிதத்தில் உணவு, தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி, அமைதியான உறக்கம்...//
அப்போ யாராம் வேலைக்கு போறது???!!!!!!!!! :D :D

தமிழ்வாசி பிரகாஷ் said...

புத்தாண்டில் புது லட்சியங்கள்... குறிக்கோள்கள்...
அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.

Surya Prakash said...

அதுக்குள்ள புத்தாண்டுக்கு ரெடி ஆகிடீங்களா ?,, அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ,சகோ

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

//இது சங்க கால தமிழா??!!//
ஆமா... இப்போ மாத்திட்டாங்க. :D

//அப்போ யாராம் வேலைக்கு போறது???!!!!!!!!!//

ஹா ஹா... நல்லா கேக்குறீங்க டீடெயில்ஸு.... நீங்க தான் போகணும்!!! (கிர்ர்ர்ர்ர்)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ்வாசி பிரகாஷ்
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.



@சூர்ய பிரகாஷ்
ஆமா.. அட்வான்ஸ்-ஆ ரெடி ஆயாச்சு. ரொம்ப நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!
பதிவுலகில் புதியவன்.
பகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

'பரிவை' சே.குமார் said...

புத்தாண்டில் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

ஜெய்லானி said...

//ஜோக்ஸ் அபார்ட்... உடல் ஆரோக்கியத்திற்கு.. சரியான நேரத்தில்.. சரியான விகிதத்தில் உணவு, தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி, அமைதியான உறக்கம்.... இதெல்லாம் இருந்தாலே போதுங்க...!//

சரியான நேரம் ...இரவு 2 டூ 3 வரை இருக்கலாமா...??

சரியான விகிதம்... ஒரு இட்லிக்கு 3 லிட்டர் சாம்பார் (அ) ஒரு கரண்டி சோற்றுக்கு 2 1/2 கிலோ மட்டன் ஃபிரை

30 நிமிடம் அமைதியா ஒரு பெட்டில் காலுக்கும் , தலைக்கும் ஒரு தலைகானியை வச்சிகிட்டு படுத்துகிட்டு தூங்கிகிட்டே செய்யலாமா

காலை 10 மணி வரை அமைதியான உறக்கம்

இப்படி வச்சிகிட்டா உடல் , மண்ம் ஆரோக்கியமா இருக்குமா.?? ஹி...ஹி....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
ஹா ஹா.. ஏன் ஏன் இப்படி..? :)
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)