பனி விழும் போது.... எப்படாப்பா இந்த சம்மர் வரும்-னு நினச்சதென்னவோ உண்மை தாங்க.. ஆனா அதுக்குன்னு இப்படியா?? ஸூஊஊஊ.. ஒரு வாரமா, வெயிலு போட்டு தாக்கிட்டு இருக்குது.. 100 டிகிரிக்கு மேல போயிட்டு இருக்குங்க.. புழுக்கம் தாங்க முடியல.
வெளியில எங்கயும் போக முடியல.. ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண மாதிரி இருக்குது. இந்த வாரம் தொடக்கத்துல மூணு நாள், சமத்தா வீட்டுக்குள்ளயே இருந்தேன்... அதுக்கு மேல முடியல.. சரி என்ன பெரிய வெயிலுன்னு... கிளம்பி வெளிய போய்ட்டேன்.. சொல்லக் கூடாது... நொந்துட்டேன்.. இருந்தாலும் நாம தான் முன், வச்ச காலை பின் வைக்கிற பரம்பரை இல்லியே.. (அப்படின்னு பில்ட் அப் குடுத்துக்க வேண்டியது தான்....).
இந்த வெயில்லயும் துணிஞ்சு வெளியூர் வேற போனோம்.. உச்சி வெயில்ல.. ஊர் சுத்துறது ரெம்ப முக்கியம் பாருங்க.. நடக்கவே முடியல... ஏதோ... தோதோ-வுக்கு பிஸ்கட் காமிக்கற மாதிரி.. ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து நடக்க வச்சாங்க..!
ஆனா உண்மைல... வெளில அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்றவங்களை நினச்சாலே பாவமா இருக்கு... தண்ணி எவ்ளோ குடிச்சாலும் தாகம் தணிய மாட்டேங்குது... அப்படியே... ஏர் கண்டிஷனிங் ஓட விட்டாலும்... ஒரு பிரயோஜனமும் இல்ல...! 24 மணி நேரமும்.... ஜில்ல்லுனு எதாச்சும் குடிக்கணும் போல இருக்கு. ச...போற போக்கப் பாத்தா பனி காலத்த மிஸ் பண்றேன்னு சொல்ல வச்சிரும் போல இருக்கு...அடிக்கற வெயிலு!
ஹ்ம்ம்.. நீ என்ன வேணா அடி... என் வேலை-ல நான் கரெக்ட்-ஆ இருப்பேனாக்கும்-ன்னு ரொட்டின் வேலைய பார்த்துட்டு இருக்கேன். அதாங்க, இந்த கடைக்கு போய் சுத்துறது, பிரண்ட்ஸ் வீட்ல போயி கும்மி அடிக்கிறது... இந்த மாதிரி முக்கியமான வேலைங்க தான்..! (இதெல்லாம் ஒரு வேலை....ன்னு திட்டுறது கேக்குது... கேக்குது...).
ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் இருட்டாம பளிச்-னு வெயில் அடிச்சிட்டு இருக்கு.. லஞ்ச் டைம்-ஆ, டின்னெர் டைம்-ஆன்னே தெரிய மாட்டேங்குது. சரி ஏதோ ஒரு டைம்-ன்னு குத்து மதிப்பாத்தேன் திரிய வேண்டியதா இருக்கு....! இங்க தான் ராத்திரி நேரம், நிலவையும் சூரியனையும் ஒண்ணா பாக்கலாம்.. பின்னே... அவுக கிளம்பி போறதுக்குள்ள..... இவுக வந்திர்ராக. என்னத்த சொல்ல...!!!
குளிர் காலத்துல போட்ட வெயிட் எல்லாம் வெயில் காலத்துல நடந்து சரி பண்ணிரலாமுன்னு பாத்தா............அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் ஐஸ் கிரீம் சாப்பிடணும் போல இருக்கு நிலைமை.... இந்த அழகுல எங்க வெயிட் குறையறது....! ஜூஸ் எல்லாம் ஜூஜூபி.... போங்க.. ஐஸ் கட்டிய அரைச்சு அப்படியே உள்ள தள்ள வேண்டியது தான் போல...!
எப்படி இந்த வெயில் சமாளிக்கன்னே தெரியல...! அம்புட்டு கடுப்பா இருக்கு...! இப்படி புலம்ப வச்சிருச்சே... நா என்ன செய்வேன்...! சரி, என் பிரச்சினை எனக்கு..., வந்தது வந்தீங்க.. இந்த ஜூஸ் ஆச்சும் குடிச்சிட்டு போங்க..!!
...அன்புடன் ஆனந்தி
படம்: நன்றி கூகிள்
34 comments:
அதானே.. நமக்கு இது இருந்தா அது வேணுமேன்னு இருக்கு. அது இருந்தா ஐயோ இதை மிஸ் பண்றோமேன்னு இருக்கு.. மனம் ஒரு குரங்குன்னு சும்மாவா சொன்னாங்க :-)))
ஹா ஹா.. வாங்க பா.. சரி தான்.
(ஆமா... அதென்னங்க சைடு-ல குரங்குன்னு திட்டுறீங்க.. ;) )
தேங்க்ஸ் :))
இந்த வருஷம் மிட்வெஸ்ட்லே ஹீட் வேவ்ஸ் எக்கச்சக்கம்னு நியூஸ்ல பாத்தேன் ஆனந்தி. மினியாபோலிஸ்ல 119F போயிருச்சாமே!!
அவ்வ்வ்...சம்மரும் எக்ஸ்ட்ரீஈஈஈஈம்,வின்டரும் எக்ஸ்ட்ரீஈஈஈஈம்! எப்படிப்பா அட்ஜஸ்ட் பண்ணறீங்க?
டெம்பரேச்சர் 90F-ஐ தாண்டினாலே சூடுன்னு புலம்பிட்டு இருக்கேன் நான்! ;)
பாத்து பத்திரமா இருங்கோ!
இங்கே கோடை மழை மாலையில் இருந்து!
இங்கயும் கடுமையான வெயில் ,எப்ப குளிர் வரும் என்று இருக்கு ,ஆனா குளிர் வந்தா எப்படா வெயில் வரும் என்று இருக்கும் ;-)
அவுக கிளம்பி போறதுக்குள்ள..... இவுக வந்திர்ராக. என்னத்த சொல்ல...!!!
நிலவை பார்த்து சூரியன் சொன்னது என்னைத்தொடாதே....
ஜீஸ் ஹாட்டா இருக்குங்க...
அக்கரைக்கு இக்கரை பச்சை ....ஆனாலும் மழை காலத்த ரசிக்கர மாதிரி சம்மர யாரும் ரசிக்க மாட்டாங்க ...பதிவு செம்ம ஹாட்டு மச்சி.. வாழ்த்துக்கள்
cool...
அருமையான படைப்பு என்ன நம்ம வீட்டுப்பக்கம் ஆள காணல
ரொம்ப சந்தோசம்....!!!! வாழ்த்துக்கள் :)))
அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் ஐஸ் கிரீம் சாப்பிடணும் போல இருக்கு நிலைமை.... இந்த அழகுல எங்க வெயிட் குறையறது....! ஜூஸ் எல்லாம் ஜூஜூபி.... போங்க.. ஐஸ் கட்டிய அரைச்சு அப்படியே உள்ள தள்ள வேண்டியது தான் போல...!
ஹா ஹா நல்லா நகைசுவையா எழுதறீங்க நல்லாருக்கு ஆனந்தி
சித்திரை மாதம் பனியை தேடி ஓடுகிறாய்
மார்கழிமாதம் வெய்யிலை நினைத்து ஏங்குகிறாய்
என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
பொறுக்கமுடியாமல் அளவு மீறிப்போகும்போது புலம்பத்தானே முடிகிறது!
இங்கு நாங்கள் வசிக்கும் பகுதியில் கூட சம்மரில் வெயில் ரொம்ப கடுமையா இருக்கும்... இதுக்கு குளிரே பெட்டர்ன்னு தோணும்!
ரொம்ப புழுக்கத்தோடு படிச்சி முடிச்சவங்களுக்கு ஜூஸ் கொடுத்து உபசரித்த உங்களுக்கு மிக்க நன்றி! ஜூஸ் படம் மிக அழகா இருக்கு ஆனந்தி!
அது பொதுவா சொன்னதுங்க... இங்கியும் அதே கதைதான். வெய்யில் காலத்துல மழை வந்தா நல்லாருக்குமேன்னு தோணிச்சு. இப்ப நசநசன்னு ஓவரா பெய்யறச்சே கொஞ்சம் வெய்யில் வந்து ரோடெல்லாம் கொஞ்சூண்டாவது காயாதான்னு இருக்கு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அது பொதுவா சொன்னதுங்க... இங்கியும் அதே கதைதான். வெய்யில் காலத்துல மழை வந்தா நல்லாருக்குமேன்னு தோணிச்சு. இப்ப நசநசன்னு ஓவரா பெய்யறச்சே கொஞ்சம் வெய்யில் வந்து ரோடெல்லாம் கொஞ்சூண்டாவது காயாதான்னு இருக்கு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இங்கே நாங்கெல்லாம் மழை மட்டும் தான் பெய்யுதுன்னு கடுப்ப்ப்பா இருக்கும் போது இந்த மாதிரி உங்க வெயிலு வெயிலு பதிவ படிச்சிட்டு கர்ர்ர் உர்ர்ர்ர் ன்னு பல்ல கடிச்சதுதான் மிச்சம். வெயில் மட்டும் வருவேனாங்குது! ஹூஊஊஊஉம் என்ன பண்ண இக்கரைக்கு அக்கரை பச்சை ! என்சாய் ! சூசுக்கு நன்றி....
//அதாங்க, இந்த கடைக்கு போய் சுத்துறது, பிரண்ட்ஸ் வீட்ல போயி கும்மி அடிக்கிறது... இந்த மாதிரி முக்கியமான வேலைங்க தான்..! ///
திரும்பவும் என்னத்த சொல்ல... நல்லா இருந்தா சரிதான்
அந்த வெயிலை கொஞ்சம் இங்க அனுப்பி வைங்க...இங்க டிசம்பர் ஜனவரி மாதிரி செம குளிரும் மழையுமா இருக்குப்பா..ஒரே எரிச்சலா இருக்கு..
ஹலோ மாடம்...நீங்க பொறந்த ஊரு சுவிட்சர்லாந்தா??!!:P :P
எங்க ஊர்ல மட்டும்தான் வெயிலடிச்சா வியர்க்கும், உங்க ஊர்ல ஜில்லுன்னு இருக்கும்னு கைக்குட்டையோட திரிந்து கொண்டிருந்த எனக்கு இதைப் படிச்சதும், அப்பாடிடிடிடிடிடி என்றிருக்கிறது.
ஐஸ்க்ரீமை என்ஜாய் பண்ணு தங்கை!
மழை காலத்த ரசிக்கர மாதிரி சம்மர யாரும் ரசிக்க மாட்டாங்க....
/ரொம்ப புழுக்கத்தோடு படிச்சி முடிச்சவங்களுக்கு ஜூஸ் கொடுத்து உபசரித்த உங்களுக்கு மிக்க நன்றி!/
/சூசுக்கு நன்றி..../ :))))))))))
மக்கள்ஸ்,நீங்க சொன்னத நம்பி நானும் சூஸ் படத்த க்ளிக் பண்ணிப் பாத்தா...ஆஆஆஆ..
அவ்வ்வ்வ்! cool-alcohol-drink-08.jpgன்னு பேரிருக்கு! ஆனந்தி இது நியாயமா? ;))))
என்னதான் வெயிலா இருந்தாலும்...! :)
ஏம்மா ஆனந்தி இது உனக்கே நல்லா இருக்கா? அவனவன் சென்னை வெயில்ல மண்ட காஞ்சுக்கிட்டு இருக்கான். அமெரிக்காவுல இருந்துகிட்டு இப்படி எங்கள வெறுப்பு ஏத்தறது
நல்லா இருக்கா? :)
இந்த வெயில்லயும் துணிஞ்சு வெளியூர் வேற போனோம்.. உச்சி வெயில்ல.. ஊர் சுத்துறது ரெம்ப முக்கியம் பாருங்க.. நடக்கவே முடியல... ஏதோ... தோதோ-வுக்கு பிஸ்கட் காமிக்கற மாதிரி.. ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து நடக்க வச்சாங்க..!
very intrestig
////இங்க தான் ராத்திரி நேரம், நிலவையும் சூரியனையும் ஒண்ணா பாக்கலாம்.. பின்னே... அவுக கிளம்பி போறதுக்குள்ள..... இவுக வந்திர்ராக. என்னத்த சொல்ல...!!!////
செம செம போங்க.... மீண்டும் இதை போல அருமையாக எழுதவும்...
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
நாம வைத்த கொள்ளி தாங்க
இது இயற்கையை அழிச்சோம்
இப்ப இயற்கை நம்மை
அழிக்குது.
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சும்மா நம்ம வலைப் பக்கம்
வாங்க குளிர்ச்சியா இருக்கும்
@Mahi
அவ்வவ்.... 119 ஆ?? நாங்களே பரவாயில்லை போல இருக்கே..! :(
ஆமாங்க.. இந்த விண்டர்-ம் ஹெவி தாம்ப்பா..!
ரொம்ப நன்றிங்க. :))
@தினகர்
ஹ்ம்ம்... இப்படி தான் வெருப்பேத்தணும் :))
என்சாய்.. பண்ணுங்க.. மழையை!!
@கந்தசாமி
உண்மை தாங்க.. இக்கரைக்கு அக்கறை எப்பவும் பச்சை தானே!!
கருத்திற்கு நன்றிங்க :)
@மாய உலகம்
ஹா ஹா.. அதே தான். :)
சம்மரும் அளவோடு இருந்தால் ரசிக்கலாம் தான்.
உங்க கருத்திற்கு நன்றிங்க..!
@கலாநேசன்
நன்றிங்க :)
@கவி அழகன்
கருத்திற்கு நன்றிங்க..
நிச்சயம் வருகிறேன்!! :)
அழைப்பிற்கு நன்றி.
@சௌந்தர்
ஹா ஹா... என்ன ஒரு நல்லெண்ணம்..
ரெம்ப நன்றிங்கோ!!!! :))
@r . v . saravanan
வாங்க.. ரொம்ப நன்றிங்க
ரசித்து.. சொன்ன கருத்திற்கு மிக்க நன்றி :))
@இராஜராஜேஸ்வரி
ஆமாங்க.. உண்மை தான்..
எதுவுமே அளவோட இருந்துட்டா எந்த பிரச்சினையும் இல்லையே..
நமக்கும் புலம்ப ஒரு ரீசன்.. :))
உங்க கருத்திற்கு நன்றிங்க.
@Priya
வாங்க ப்ரியா..
உங்களுக்கும் வெயில் கொடுமை தானா? ஹ்ம்ம்
கருத்திற்கு ரொம்ப தேங்க்ஸ்பா.. :)
@அமைதிச்சாரல்
ஹா ஹா ஹா... அடடா..உங்கள சும்மா கலாட்டா பண்ணேங்க. :))
ஹ்ம்ம்ம்.. ஒய் ப்ளட்......சேம் ப்ளட்..!!!! :)
@En Samaiyal
ஹா ஹா ஹா... அப்படியே உல்டா சீசன் போல உங்களுக்கு. :)
கருத்திற்கு நன்றிங்க :))
@சஞ்சய்
ஆமா... நா பொறந்தது ச்விட்செர்லாந்து.... இவுக... ந்யூசிலாந்து..! :))
ரெம்ப தேங்க்ஸ்.
@r . selvakumar
ஹா ஹா ஹா.. அண்ணா....!!!!
என்ன ஒரு திருப்தி.... இப்போ சந்தோசமா... ஓகே ஓகே.. நீங்களும் ஒரு ஐஸ் கிரீம் வாங்கி உள்ள தள்ளுங்க.. :)
@சே. குமார்
அப்படி இல்லைங்க.. மழையோ.. வெயிலோ...அளவுக்கு மீறி போகும் போது, தாங்க முடியறதில்லை. :)
கருத்திற்கு நன்றிங்க
@மகி
ஹா ஹா ஹா... ஏங்க... ஏதோ படம் நல்லா இருக்கேன்னு ஒரு ஆர்வக் கோளாறுல நேம் பார்க்காம போட்டுட்டேன்.. அதுக்கு இப்படியா போட்டு விடுறது.... அவ்வ்வ்வவ்...!!
சரி சரி.. விடுங்க.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளில சொல்லப் பிடாது..! :))
@naarayanan
ஹா ஹா ஹா... ஏங்க.. அமெரிக்கா என்ன ஐஸ்-பாக்ஸ் உள்ளேயாங்க இருக்கு??? :))
தேங்க்ஸ்
@Paru
ஏன் இன்டரஸ்டிங்-ஆ இருக்காது... பிளாஷ் பாக் ஞாபகம் வந்திருக்குமே.. ;))
தேங்க்ஸ் டா!!
@நந்தினி
ஹா ஹா ஹா.. தேங்க்ஸ் டா.. எஸ்.. எழுத முயற்சி பண்றேன். :)
@மாய உலகம்
நன்றிங்க.. கண்டிப்பா படிக்கிறேன்.
@புலவர் சா. இராமாநுசம்
ஹ்ம்ம்.. ஒரு விதத்தில் உண்மை தாங்க.
கருத்திற்கு மிக்க நன்றிங்க!
@S. Menaga
ஹா ஹா.. சரி ஓகேபா.. கொஞ்சம் வெயில் உங்க பக்கம் அனுப்பி வைக்கிறேன் ;))
தேங்க்ஸ்!!
ஆனந்தி நம்ம நாட்டில விண்டர் காலத்தை தாங்கலாம்.. ஆனால் சமர் காலம் இருக்கெ அப்பப்பா முடியவே முடியாது... நான் வீட்டை விட்டு வெளிய பொறதே இல்ல ஆனந்தி....
ரொம்ப தேங்க்ஸ்ங்க ஜுஸ் குடுத்ததுக்கு
வாழ்த்துக்கள்
பகிர்விற்கு நன்றி ஆனந்தி.
@தோழி பிரஷா
ஹ்ம்ம்..ஆமாங்க.. நம்ம ஊரு வெயிலு எவ்வளவோ பரவாயில்ல பா.. :((
வெளியில போக வேண்டிய சமயத்துல போயி தானேங்க ஆக வேண்டியதா இருக்கு.
கருத்துக்கு நன்றிங்க. :)
@M . R .
வருகைக்கு நன்றிங்க :)
@மாலதி
நன்றிங்க! :)
@இந்திரா
ரொம்ப நன்றிங்க :)
நான் கோவைக்கு குடிவந்ததே இந்த வெயில் பிரச்சனயினாலத்தானே !! குழு குழு கோவை ( என்னோட ப்ளக்குல கிளைமேட் விட்ஜெட் வச்சிருக்கேன் பாருங்க!
Post a Comment