topbella

Thursday, July 14, 2011

காத்திருக்கிறேன்...!!!
உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
அவஸ்தையாய் எனைத் தாக்க
இதோ வந்து விடுவாய் என்றே
நான் எதிர்பார்த்தே வழி நோக்க...!

காத்திருக்கும் காலம் மட்டும்
கண்களில் ஏக்கம் பூக்க...
உனைக் கண்டதும் தான்
ஓடி வந்து காதலால்
உனைப் பார்க்க....!

வந்த வேகத்தில் என்னிடம்....
வண்ணமயில் உன் எண்ணமெல்லாம்
எனக்குத் திண்ணமாய்த் தெரிந்தும்
கண்ணளவில் தான் நம்
காதல் சாத்தியம் என்றாய்....!

கதிரவனைக் கண்ட
தாமரையாய் மலர்ந்த
என் வதனம் ஓர் நொடியில்
வாடி வதங்கிய வண்ணமலராய்..!

என் கருத்தினில் பதிந்து விட்ட
என் கண்களில் கரைந்து விட்ட
உன் உருவம் நான் கண்
மூடும் வரை எனை நீங்கிடாதே!


...அன்புடன் ஆனந்தி 

22 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

காத்திருத்தல் இருக்கே... அப்பப்பா பேரும் அவஸ்தை அது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்கலாலும் காதல் செய்யலாம்....

உண்மையான காதலுக்கும் எல்லாமே சாத்தியம்...

அழகிய கவிதை...

சாந்தி மாரியப்பன் said...

பின்றீங்க போங்க :-)))

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை சகோதரி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ்வாசி
ஆமாங்க.. உங்க கருத்துக்கு நன்றி :)@கவிதை வீதி சௌந்தர்
ஹ்ம்ம்.. அதுவும் சரி தான். நன்றிங்க :)


@அமைதிச்சாரல்
ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ் :)@சே. குமார்
மிக்க நன்றிங்க :)

மதுரை சரவணன் said...

kavithai nalla irukku vaalththukkal

மாய உலகம் said...

உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
அவஸ்தையாய் எனைத் தாக்க

உனைக் கண்டதும் தான்
ஓடி வந்து காதலால்
உனைப் பார்க்க.

வரிகள் நினைவுகளை பின்னோக்கி இழுக்கிறது

Paru said...

என் கண்களில் கரைந்து விட்ட
உன் உருவம் நான் கண்
மூடும் வரை எனை நீங்கிடாதே!

ஒவ்வொவ்ரு பென் மனதின் வார்தை
கவிதை அருமை

middleclassmadhavi said...

நல்ல கவிதை..

'பரிவை' சே.குமார் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்.

http://vayalaan.blogspot.com/2011/07/blog-post_17.html

சௌந்தர் said...

உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
அவஸ்தையாய் எனைத் தாக்க
இதோ வந்து விடுவாய் என்றே
நான் எதிர்பார்த்தே வழி நோக்க...!///

அப்போ இன்னும் வரலையா..???

காத்திருக்கும் காலம் மட்டும்
கண்களில் ஏக்கம் பூக்க...//

அப்போ தலையில் வைச்சுக்கோங்க

கதிரவனைக் கண்ட
தாமரையாய் மலர்ந்த
என் வதனம் ஓர் நொடியில்
வாடி வதங்கிய வண்ணமலராய்..!//

ஓஹ ரொம்ப வதக்கிடீங்களா..?? ஸ்டவ் சிம்ல வைச்சுஇருக்கணும்... :))


என் கருத்தினில் பதிந்து விட்ட
என் கண்களில் கரைந்து விட்ட
உன் உருவம் நான் கண்
மூடும் வரை எனை நீங்கிடாதே!///


சரி சரி டெலிட் பண்ண மாட்டார் கவலை படாதீங்க..!!

சௌந்தர் said...

உங்கள் வருகைக்கு நன்றி..!
மீண்டும் வருக..!!
நினைத்ததை சொல்லிவிட்டு செல்லலாமே.. :)//

நீங்க சொன்னா மாதரியே சொல்லிட்டேன் கவிதை ரொம்ப சூப்பர் அடுத்த தடவை ஒரு 50 ரூபாய் போட்டு கொடுங்க...!!!


மெய்யாலுமே உங்க கவிதை சூப்பரா கீதுங்க...!!!

சௌந்தர் said...

சே.குமார் said...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்.

http://vayalaan.blogspot.com/2011/07/blog-post_17.html////

வாறே வா இப்படி தான் இருக்கணும் ஐ லைக் இட். .. .. :))

Unknown said...

காத்திருத்தல் சுகமே-காக்க
வைத்திருத்தல் சுகமே
பாத்திருக்கும் வழியே-உள்ளம்
படபடக்க விழியே
ஆத்திரமும் வருமே-மேலும்
அன்புதனைத் தருமே
மாத்தமிழாய் இன்பம்-வரின்
மறைந்துவிடும் துன்பம்

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
அவஸ்தையாய் எனைத் தாக்க
இதோ வந்து விடுவாய் என்றே
நான் எதிர்பார்த்தே வழி நோக்க...

உவமை

மாய உலகம் said...

தமிழ்வாசி பிரகாஷ் சொல்லியிருக்கிறார்...காத்திருத்தல் இருக்கே... அப்பப்பா பேரும் அவஸ்தை அது...... அது கூட பரவாயில்லை பிரகாஷ் காத்திருந்து வரும் என நம்பலாம்...ஆனால் வருமா வராதா என காத்திருப்போமே...விடை தெரியா கொடுமை

ம.தி.சுதா said...

காத்திருப்பின் வலியையும் அதனால் வரும் சுகத்தையும் வரிகள் சொல்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

Devinth said...

உனைக் கண்டதும் தான்
ஓடி வந்து காதலால்
உனைப் பார்க்க....!/////

கண்டதும் ஓடி வந்தேன் காதலா(ல்)
உனைப் பார்க்க !!!


இப்படியாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது எனக்கு !!


வலியை உணர்த்தும் அருமையான வரிகள்!!!!
நன்றி!!

இசைஞானியின் பக்தன் !!!
எஸ். தேவிந்த்

Nandhini said...

பின்றீங்க கவிதை அருமை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகிய கவிதை ஆனந்தி..

இராஜராஜேஸ்வரி said...

கதிரவனைக் கண்ட
தாமரையாய் மலர்ந்த
என் வதனம் ஓர் நொடியில்
வாடி வதங்கிய வண்ணமலராய்//
அழகிய கவிதையும் படமும் பாராட்டுக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மதுரை சரவணன்
ரொம்ப நன்றிங்க :)


@மாய உலகம்
ஹ்ம்ம்.. நன்றிங்க! :)


@Paru
ஆமாடா.. உண்மை தான். தேங்க்ஸ் :)


@middleclassmadhavi
ரொம்ப நன்றிங்க :)


@சே. குமார்
அழைப்பிற்கு ரொம்ப நன்றிங்க.
ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன். :)


@சௌந்தர்
கிர்ர்ர்ர்.... ஆமா வரல... அதான் காத்துக்கிட்டு இருக்கேன்.

தலையில தானே.. சரி ஓகே.. (என்ன ஒரு வல்லிய ஐடியா..? ஆமா யார் தலைலன்னு சொல்லவே இல்லையே....!!!! )

ஹா ஹா ஹா.... முடியல.. வேணாம் அழுதிருவேன்.!!!

ரெம்ப நன்றிங்கோ.. ஏதோ.. பெரியவங்க.. வந்து நாலு நல்ல வார்த்தை சொல்றீக..
கேட்டுக்கறேன்.

(ஒரு கவிதை எழுதினா... அதை படிச்சு.. கருத்து சொல்லாம.. இப்படியா..கொல வெறியோட.. சுத்துறது?? ...அவ்வ்வ்வவ்வ்வ்)

ஹ்ம்ம் கும்.. ஆமா.. ஏற்கனவே ரொம்பவே சொல்லிட்டீங்க. போதும் நன்றி!!!


@சௌந்தர்
என்ன என்ன...??? என்னைய தொடர் பதிவுக்கு கூப்பிட்டா.. உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோசம்...????


@புலவர் சா. இராமாநுசம்
அடடா.. கவிதையாகவே ஒரு கருத்து சொல்லிட்டேங்க.
மிக்க நன்றிகள்! :)


@மாய உலகம்
ஹ்ம்ம்.. நன்றிங்க :)


@மாய உலகம்
விடை தெரியாமல் காத்திருத்தல்.. உண்மையில் கொடுமை தாங்க.
கருத்துக்கு நன்றி! :)


@ம. தி. சுதா
உங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)


@Devinth
வாவ்.. இதுவும் நல்லாத்தான் இருக்குங்க. :) நன்றி.
உங்கள் கருத்திற்கு நன்றி!


@நந்தினி
ஹ்ம்ம்.. தேங்க்ஸ் டா ;)


@தோழி. பிரஷா
வாங்க பா.. ரொம்ப தேங்க்ஸ் :)@இராஜராஜேஸ்வரி
வாங்க.. ரொம்ப நன்றிங்க :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)