நாங்கள் வசிக்கும் இடத்தில்.... குழந்தைகளுக்கான குருகுலம் ஒன்று இருக்கிறது.... அங்கே ஞாயிறு தோறும், ஸ்லோகம் மற்றும் தமிழ் பாடம் சொல்லித் தராங்க. குழந்தைகள் நமது கலாச்சாரம் மற்றும் மொழி தொடர்புடன் வளர இந்த அமைப்பு உற்ற துணையா இருக்கிறது.
போன வருடம், வருட இறுதியில், குருகுலம் குழந்தைகள் பாலராமாயணம், பகுதி- 1 பண்ணாங்க.. சிறப்பா நடந்தது... இந்த வருடம் பகுதி -2 நேற்று நடந்தது.. சுமார் 55 குழந்தைகள் பங்கேற்ற இந்த டிராமா ஒரு பெரிய அளவில் வெற்றியா முடிஞ்சது.
கடந்த ரெண்டு மாசமா, பெற்றோரும், குழந்தைகளும் அவங்களால முடிஞ்ச அளவு ஒத்துழைப்பு குடுத்து, ஒரே குடும்பமா சேர்ந்து வேலை செஞ்சோம். இந்த ரெண்டு மாசத்துல கஷ்டப் பட்டு உழைச்சது ஏதும் வீண் போகல... நேத்து, பிள்ளைங்க அசத்திட்டாங்க.. நேத்து, நடந்த ஒரு சில விஷயங்கள்... எங்க எல்லாரையும் சிரிக்க வச்சது..
ஹனுமான்-ஆக வேஷம் போட்டிருந்த ஒரு குழந்தை.. சஞ்சீவினி மலையை தூக்கி வரும் காட்சி.. அதுக்கு அவனை, இப்படி இப்படி செய்யணும்.. பயப்படாதேன்னு சீரியஸ்-ஆ விளக்கம் சொல்லிட்டு இருந்தா..... அவன், ரொம்ப கூல்-ஆ நா பாத்துக்குறேன்.. நா பாத்துக்குரேன்னு.. சொன்னான் பாருங்க.. ரொம்ப க்யூட்..!
இன்னொரு இடத்தில், ராவணனாக வந்த பையன் தன்னோட கம்பீர குரல்-ல அசத்தலா பேசிட்டே வந்தான்.. ஆடியன்ஸ் எல்லாம் ஆர்வமா கிளாப் பண்ணி பாத்துட்டு இருந்தாங்க... ஒரு இடத்தில், ஹா ஹா ஹா...ன்னு சிரிச்சிட்டு, கைய வீசி டயலாக் பேசும்போது.. அவன் மைக் தூர போய் விழுந்திரிச்சு.. ஆனா.. எந்த பதட்டமும் இல்லாம.. அவனோட டயலாக் பேசிக்கிட்டே.. ஸ்டைல்-ஆ நடந்து... அந்த மைக்கை ஸ்டைல்-ஆ தரையில் இருந்து கேட்ச் பண்ணி கையில் கொண்டு வந்து நடிச்சான்.. உண்மையில்.. குழந்தைகளின் சமயோசித புத்தி நினச்சு...ரொம்ப பெருமையா இருந்தது.
ஒரு சீன்-ல அசோகவனத்தில் ஹனுமான், சீதையை முதல் முதலா பார்க்கிற இடம் வரும். அங்கே, ஹனுமான், ராமாயணத்தின் கதையை குறிப்பிட்டு....அந்த சீதா தேவி இவராகத் தான் இருக்க வேண்டும்ன்னு... மரத்துக்கு பக்கத்தில இருக்கிற சீதையை பார்த்து சொல்ற மாதிரி காட்சி.. ஸ்க்ரீன் ஓபன் பண்ணி, ஹனுமான் வேடத்தில் இருந்த குழந்தை..ராமாயணம் சொல்ல தொடங்கிருச்சு.. இடையில்... "இவர் தான் ஸ்ரீ ராமரின் சீதையாக இருக்க வேண்டும்ன்னு சொல்லி..." அந்த பக்கம் திரும்பினா, அங்கே சீதையை காணோம்... (சீதைக்கு காதில் மாட்டிக்கொள்ளும், மைக் செட்-அப் பண்ணிட்டு இருந்திருக்காங்க... ) குழந்தை டென்ஷன் ஆகாம...மெதுவா எங்கள திரும்பி பார்த்துச்சு.. நாங்க ஸ்க்ரீன் க்ளோஸ் பண்ணிட்டு, சீதையை அங்க உக்கார வச்சோம்... இந்த குட்டி, குட்டி டென்ஷன் கூட இப்போ நினச்சா சிரிப்பா தான் வருது..!
அதே போல ராமரின் அடையாள மோதிரத்தை சீதையிடம், ஹனுமான் காட்டும் காட்சியில்... ஸ்க்ரீன் ஓபன் பண்ணிட்டோம்... ஹனுமான் பேச ஆரம்பிச்சிட்டார்.. ஹனுமான்... கையில் மோதிரம் குடுக்க மறந்து விட்டது. மெதுவா... ஸ்டேஜ்-ல அந்த மோதிரத்தை ஹனுமான் பக்கத்தில் உருட்டி விட்டாங்க. ஹனுமான், அசரலயே...! அந்த பையன் பொறுமையா டயலாக் பேசிட்டு இருந்தான்... நாங்க அச்சோ.. மோதிரம் போட்டது தெரியல போல இருக்கே..ன்னு பார்த்துட்டு இருக்கோம்... கரெக்ட்-ஆ மோதிரம் எடுத்து கொடுக்கும் இடம் வந்ததும்.. டக்-குனு குனிஞ்சு அந்த மோதிரம் எடுத்து சீதை கிட்ட குடுத்திட்டான்.. எங்களுக்கு ஒரே சந்தோசம்...! இதுல என்ன காமெடி-னா சீதையா நடிச்ச பொண்ணுக்கும் ஒரே கவலை.. மோதிரம் உருண்டு வந்தத பார்த்திருச்சு... என்னது இது ஹனுமான்... இன்னும் பாக்காம இருக்கானேன்னு கவலை பட்டிருக்கும் போல... ஆனா இது எதுவும் முகத்தில் காட்டாம சமத்தா உக்காந்திருந்தது.
இந்த மாதிரி... மனதைத் தொடுற மாதிரி குழந்தைகள் நிறைய பண்ணாங்க.. ரொம்பவே பெருமையா இருந்தது.
ராவணனின் அரண்மனை செட்-அப், ஹனுமான் சஞ்சீவினி மலையை பெயர்த்து வரும் காட்சி..., ஹனுமான் தனது விஸ்வ ரூபம் காட்டும் காட்சி..., ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்ல...பாலம் அமைக்கும் இடம்..., கும்பகர்ணன் மற்ற வானரங்களிடம், உன் தலைவன் ராமனைத் தான் பார்க்க வேண்டும் என்று.. பேசும் இடம்..., ஸ்ரீராமர்.. கும்பகர்ணாவின் யுத்த காட்சி... ( நடனத்துடன் சண்டைக்காட்சி அமைக்கப் பட்டிருந்தது ), சீதையின் தூய்மையை நிரூபிக்க அக்னி குண்டத்தில் இறங்கும் காட்சியில் அக்னி... உள்ளிருந்து எழும்பும் காட்சி..., அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம் காட்சி... இப்படி எல்லாமே...,பார்க்க பிரம்மாண்டமாக அமைந்தது.
அத்தனை பேரின் அயராத உழைப்பிற்கு, ஆண்டவனின் பரிசாய் இந்த வெற்றியை எடுத்துக்கொள்கிறோம்... உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்...!
பகிர்வைப் படித்த உங்களுக்கும் நன்றிகள்...!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
22 comments:
அருமையான பகிர்வு...நன்றி
அந்தக் குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு...
குழந்தைகள் அறிய வேண்டியதுதான்...
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் எந்த முயற்சிக்கும் என்னுடைய ஆதரவு உண்டு. டபுள் சியர்ஸ். விரைவில் வீடியோ எதிர்பார்க்கிறேன்.
பகிர்வு நேரில் கண்டது போல்..
இந்தக் கால குழந்தைகள் வாழ்க!
"குருகுலத்தில் ராமாயணம்....!"
அருமையான் தலைப்பு...
குட்டீஸ்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
பின் குறிப்பு
மைக் கிழே விழுந்த இடம்...
மோதிரம் உருட்டி விட்ட..இடம்
ம்ம்ம்...
குட்டீஸ்களை வச்சி ஒரு பெரிய...கலாட்டாவே..நடந்திருக்கு
அன்புடன் ஆனந்தி
அஹா.. நாடகத்தை பாக்காம மிஸ் பண்ணிட்டோமேன்னு இருக்கு.
soo cute
வாவ்...கிரேட்... ரெம்ப நல்ல விசயங்க... குட்டி குட்டி ரகளைகள் இன்னும் சுவாரஷ்யம் சேர்த்தது... எங்களிடம் பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி
குழந்தைகளின் செயல்கள் அனைத்தும் சுவாரஸியமாக ரசிக்கக்கூடியதாகவே இருக்கும்... அதே சுவாரஸியம் குறையாமல் எழுதி இருக்கிங்க ஆனந்தி!
Ramayanam thula evvalvu Pada anga Ramar Patta patta vida athigam pola erukke
maha
super
maha
குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள் என்பது உங்கள் பதிவில் இருந்து அறிய முடியும்... வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு... குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
அருமை.பகிர்வுக்கு நன்றி
குருகுலத்தில் ராமாயணம்....
அருமை...
very very nice....
supper..
"congratulation"
can you come my said?
@தமிழ்வாசி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
@எல். கே.
கருத்திற்கு நன்றிங்க
@சங்கவி
கருத்திற்கு நன்றிங்க
@ர. செல்வகுமார்
நன்றிங்க அண்ணா..!
@தமிழரசி
ரொம்ப நன்றிங்க :)
@middleclassmadhavi
ஆமாங்க.. ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க. நன்றி :)
@செந்தில்குமார்
ஆமாங்க... உண்மையில் அந்த கலாட்டாக்கள் தான் இன்றும் நினைவில் இருக்குங்க. நன்றி :)
@madhavan srinivasagopolan
ஹா ஹா.. ஆமாங்க பார்த்திருந்தா.. இன்னும் என்ஜாய் பண்ணி இருப்பீங்க. நன்றி
@யாதவன்
ரொம்ப நன்றி :)
@அப்பாவி தங்கமணி
வாங்க பா.. ஆமா... ரகளை தான்... பட் க்யூட் ரகளைஸ்.. :)
நன்றிங்க
@Priya
ஆமாங்க.. நம்ம மனதில் பதிவது போல், செய்து விடுகிறார்கள்..
ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா..
@Geetha6
கருத்துக்கு நன்றிங்க :)
@maha
ஹா ஹா.. பாடெல்லாம் ஒன்னும் இல்லை... எல்லாமே இனிமையான அனுபவம் தான்.. கருத்துக்கு நன்றி
@மதுரை சரவணன்
ஆமாங்க.. உண்மை தான்.. கருத்திற்கு நன்றி :)
@சே. குமார்
கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)
@குணசேகரன்
கருத்திற்கு நன்றிங்க :)
@நந்தினி
தேங்க்ஸ் டா ;)
@Tamil Unicode Writer
வருகைக்கு நன்றி
@vidivelli
தேங்க்ஸ் :)
அழைப்பிற்கு நன்றி. கண்டிப்பாக வருகிறேன்.
aananthi neenka srilankaava?
ஆனந்தி எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
உங்கள் வர்ணனை படித்த பின் அந்த நாடகத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது.
கணபதி
http://valmikiramayanam.in/
Post a Comment