வீட்டருகே வித்தியாசமாய்...
வித விதமாய் வண்ண மலர்கள்..
விளங்க வைக்குமே உன்
வசந்தத்தின் வருகையை...!
வாடி நிற்கும் தருணம் எல்லாம்
வாசலில் பூத்திருக்கும்
வாச மலர் அழகு தன்னில்..
வந்த இடம் தெரியாமல்
வாட்டமும் ஓடிப் போகும்...
கொஞ்சி மகிழத் தோன்றும்
கொத்து கொத்தான மலர்க்கூட்டம்
நெஞ்சை அள்ளுமே
நேர்த்தியான பூந்தோட்டம்..!
எழுந்தே நான் வருகையிலே..
என் எதிரில் மலர் கண்டால்..
எண்ணமெல்லாம் வண்ண மயமாய்
ஏகாந்த எழுச்சி தோன்றும்...
புது மலர் உன்னைக் கண்டால்..
புத்துணர்வும் பொங்கும் இங்கே..
பனி மலர் பார்த்தாலே...
பரவசமாய் பாடத் தோன்றுமே...
ஒரு நாளோ ஒரு வாரமோ
உன் ஆயுள் எதுவாயினும்
உன்னிடம் வருவோர் எல்லாம்
உற்சாகத்தில் மலரச் செய்வாய்...
வசந்தமே உன் வருகையில்
வஞ்சி என் உள்ளத்தில்
வற்றாத நீரோட்டம்....
எப்போதும் எனக்குள்ளே
உனக்கான சீராட்டம்....!!
...அன்புடன் ஆனந்தி
23 comments:
நிஜமாவே இந்த கவிதை நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு அப்புறமும் ஒரு டவுடோட பாத்த என்னங்க அர்த்தம்...!!!
கோவில்ல வேணா கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்றேன் கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...!!!!
(வேண்டிக் கொண்டபடி கமெண்ட் போட்டாச்சு.......பேசி வச்சபடி ......டீல் டீலா இருக்கணும் சொல்லிபுட்டேன்..!
வசந்தத்தின் அழைப்பை ஏற்று நானும் வந்திருக்கிறேன்...
அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்..
superrrrrrrrr.........
நன்றாகவுள்ளது தொர்ந்து எழுதுங்கள்.
////ஓர் நாளோ ஒரு வாரமோ
உன் ஆயுள் எதுவாயினும்
உன்னிடம் வருவோர் எல்லாம்
உற்சாகத்தில் சிரிக்கச் செய்வாய்.../// வாழ்க்கை குறுகியதென்றாலும் வாடும் வரை வசந்தத்துடனே பூத்திருக்கும்..... இது மனிதனுக்கு ஒரு எடுத்துக்காட்டோ!! கவிதை நன்றாக இருக்கு சகோதரி
கவிதை மலருக்காகவா இல்லை காதளுக்காகவா என்ற குழப்பம் எனக்கு எதுவாக இருந்தாலும் ஒரு நீண்ட சுவாசத்தை படித்து முடிக்கும் வரை வெளியிட மறுத்துவிட்டது தேகம் . பகிர்ந்தமைக்கு நன்றி ஆனந்தி
வசந்தத்தின்
வசீகர
வருகையை
வார்த்தைகளில்
வடித்த
விதம்
வியாபம்....
வாழ்த்துக்கள்
அருமை..அருமை...
வசந்ததத்தின் வருகையை கவிதையில் வார்த்தது அருமை அருமை அருமை ஆனந்தி
வா, வா வசந்தமே என்று பாடிட வைத்தது கவிதை!
கவலையெல்லாம்
காணாமல் போனது உங்கள்
கவிமாலை கண்டு
வாழ்த்துகள்
அருமை..
அருமை..
அருமையான கவிதை
வாடி நிற்கும் தருணம் எல்லாம்
வாசலில் பூத்திருக்கும்
வாச மலர் அழகு தன்னில்..
வந்த இடம் தெரியாமல்
வாட்டமும் ஓடிப் போகும்...
அருமை அக்கா........
வசந்தத்தின் வருகை பூக்களோட அருமைடா ஆனந்தி..:))
வசந்தத்தின் வருகை... புத்துணர்வு தந்தது... தொடர்ந்து எழுதுங்கள்.
ஹைய்யா.. ஜோரா இருக்கு.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!
@தேவா
ஆஹா.. திரும்பவுமா... சரி ரைட்ட்டு... பாக்கல...!
வேணாம்.. அனாவசியமா உங்களுக்கு எதுக்கு ஒரு ரூபா செலவு??
கிரர்ர்ர்ரர்ர்ர்ர்.. யார் யார்.. வேண்டினாங்க..
இப்படி தான் பப்ளிக்-ல போட்டு குடுக்கணும்...!!
நல்லா இருங்கப்பூ...! :)
நன்றிங்க..
@கவிதை வீதி சௌந்தர்
நன்றிங்க.. உங்க கருத்துக்கு :)
@ஜீவன்பென்னி
ரொம்ப தேங்க்ஸ்... :)
@முனைவர். ரா. குணசீலன்
மிக்க நன்றி.. தொடர்கிறேன்.. :)
@கந்தசாமி
ஆமாங்க.. இருப்பது சில காலமாயினும்... முடிந்தவரை சுற்றத்தாரை மகிழச் செய்தல் பாக்கியம்..!
நன்றிங்க :)
@பனித்துளி சங்கர்...
ஹ்ம்ம்... உங்கள் ரசனைக்கு நன்றிங்க.. :)
@A. R. Rajagopalan
கவிதையில் சொல்லிய பாராட்டிற்கு நன்றிங்க :)
@தமிழ்வாசி -Prakash
நன்றிங்க :)
@தோழி பிரஷா
ரொம்ப ரொம்ப நன்றிங்க பிரஷா.. :))
@middleclassmadhavi
வாவ்.. சந்தோசங்க.. ரொம்ப நன்றி :)
@திகழ்
ரொம்ப சந்தோசங்க.. மிக்க நன்றி :)
@logu
நன்றிங்க :)
@யாதவன்
ரொம்ப நன்றிங்க :)
@சித்தாரா மகேஷ்
ரொம்ப நன்றிங்க :)
@தேனம்மை லஷ்மணன்
ரொம்ப சந்தோசம் அக்கா :)
@நந்தினி
தேங்க்ஸ் நந்து :)
@logu
ஹா ஹா... திரும்பவும் நன்றிங்க :)
@ஷர்புதீன்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)
Wow...colourful pics as well lines Ananthi..:)
கவிதை நல்லா இருக்கு ...
டெம்ப்ளேட்டும் கலர்புல்லா இருக்கு..,
வசந்த காலத்தை
வாசம் நிறைந்த
மலர்கள் கொண்ட
பூங்கொத்து கவிதையுடன்
நல்ல வரவேற்பு கொடுத்துள்ளிர்கள்....ஆனந்தி..
Post a Comment