topbella

Thursday, April 21, 2011

உன் சிரிப்பில்..!

Free photo Happy Smile Woman Back Shoulder Lady People - Max Pixel


உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்...

இதயத்தை வருடி
இன்பத்தை அளித்து
என் இறுதி வரை
துணை வரத்தான்
உறுதியுடன் இருந்தாயே...

உத்தரவு நீ தந்தால்...
உன்னை இமைக்குள் காத்து
இக்கணமே இவ்விடமே
என் உயிர் நீப்பேனே...

ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?


...அன்புடன் ஆனந்தி

31 comments:

dheva said...

//உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்...
//

அடக் கொடுமையே இப்படியெல்லாமா கொடுமைப் படுத்துவாங்க....ம்ம் சரி..அப்புறம்...


//இதயத்தை வருடி
இன்பத்தை அளித்து
என் இறுதி வரை
துணை வரத்தான்
உறுதியுடன் இருந்தாயே...
//

பார்ரா இம்புட்டையும் பண்ணிப்புட்டு இறுதி வரை ........ம்ம் ச்ச்சரி....

//உத்திரவு நீ தந்தால்...
உன்னை இமைக்குள் காத்து
இக்கணமே இவ்விடமே
என் உயிர் நீப்பேனே...//

ஓ.. இது இந்த பக்கம்...அட ஏங்க உயிர் நீப்பேனேன்னு ரொம்ப ஜாலியா சொல்றீங்க.......உசுரு மக்கா உசுரு...!

//ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?//

இம்புட்டையும் சொல்லிப்புட்டு நீங்க ஊமையா போயிட்டியாளாக்கும்..ஆமா ஆமா.. இவ்வளவு பேசுனா...ஹா ஹா ஹா!

உன் சிரிப்பில் என்ற கவிதை தட்டுத் தடுமாரி பார்டரில் பாஸ் ஆகி இருக்கிறது என்பதை பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்...!

அட நெசந்தாங்க!

dheva said...

//உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்...
//

அடக் கொடுமையே இப்படியெல்லாமா கொடுமைப் படுத்துவாங்க....ம்ம் சரி..அப்புறம்...


//இதயத்தை வருடி
இன்பத்தை அளித்து
என் இறுதி வரை
துணை வரத்தான்
உறுதியுடன் இருந்தாயே...
//

பார்ரா இம்புட்டையும் பண்ணிப்புட்டு இறுதி வரை ........ம்ம் ச்ச்சரி....

//உத்திரவு நீ தந்தால்...
உன்னை இமைக்குள் காத்து
இக்கணமே இவ்விடமே
என் உயிர் நீப்பேனே...//

ஓ.. இது இந்த பக்கம்...அட ஏங்க உயிர் நீப்பேனேன்னு ரொம்ப ஜாலியா சொல்றீங்க.......உசுரு மக்கா உசுரு...!

//ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?//

இம்புட்டையும் சொல்லிப்புட்டு நீங்க ஊமையா போயிட்டியாளாக்கும்..ஆமா ஆமா.. இவ்வளவு பேசுனா...ஹா ஹா ஹா!

உன் சிரிப்பில் என்ற கவிதை தட்டுத் தடுமாரி பார்டரில் பாஸ் ஆகி இருக்கிறது என்பதை பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்...!

அட நெசந்தாங்க!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேவா..

இப்புடி பார்டர்-ல பாஸ் பண்ணி விடத்தான் பஸ் ஏறி.. பரபரன்னு ஓடி வந்தீகளாக்கும்..!

ரெம்ப நன்றிங்கோ..! :-))

dheva said...

அட ச்ச்சுமா சொன்னேங்க.. கவிதை அருமையாதான் இருக்கு!!! (தெகிரியமா இருங்க)

சௌந்தர் said...

உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்...////

எப்படி குமரி முத்து மாதரி சிரிப்பா
அப்படி ஒரு கொடுமையான பார்வை ...


இதயத்தை வருடி
இன்பத்தை அளித்து
என் இறுதி வரை
துணை வரத்தான்
உறுதியுடன் இருந்தாயே.///

இவ்வளவு நடந்தும் ஆசைய பாரு இன்னும் இறுதி வரை வரணுமாம்...


உத்திரவு நீ தந்தால்...
உன்னை இமைக்குள் காத்து
இக்கணமே இவ்விடமே
என் உயிர் நீப்பேனே...///

எதுக்கு கொலை கேஸு ல மாடிக்கவா..??

ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?////

என்ன ஊமையா இருந்தா எப்படி...உங்க காதலை சொல்வீங்க ஓஹ பார்வையாலையா...???

ஏன் ஊமை ஆணிங்க அவர் சிரிப்பை பார்த்தா ........


செம கவிதை போங்க உருகி உருகி கவிதை எழுதுறீங்க....

உண்மையா கவிதை நல்லா இருக்கு நம்புங்க...அட நெசமா...தாங்க

Unknown said...

Nanajai varudum kavidhaigal.

நிரூபன் said...

உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்.//

காதல் வசப்படும் உள்ளமொன்றின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கவிதையின் முதல் அடிகள் சொல்லுகின்றன

நிரூபன் said...

உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்.//

காதல் வசப்படும் உள்ளமொன்றின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கவிதையின் முதல் அடிகள் சொல்லுகின்றன

நிரூபன் said...

இதயத்தை வருடி
இன்பத்தை அளித்து
என் இறுதி வரை
துணை வரத்தான்
உறுதியுடன் இருந்தாயே..//

காதலிக்கும் போது நம்பிக்கையின் சின்னமாய் இருப்பதையும், பின்னர் கழுத்தறுக்கும் செயல் செய்வதையும்
வலிகளோடு கலந்த வார்த்தைகளால் சுட்டியிருக்கிறீர்கள்.

நிரூபன் said...

ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?//

பொதுவாக பெண்ணின் மனம் தான் கல்லு, ஊமை என்று சொல்லுவார்கள். ஆனால் ஆணின் மனம் மட்டும் இங்கே ஊமையாகி, ஒரு பெண்ணை வேதனையில் தவிக்க விட்டிருக்கிறது.

நிரூபன் said...

உன் சிரிப்பில்- சிரிப்பில் தான் தொலைந்து போய், வலிகளில் மீண்டெழுந்த பெண்ணின் உணர்வுகளை, இங்கே வெளிப்படுத்துகிறது.

கவி அழகன் said...

காதலிக்கும் போடு என தோன்றும் சிந்தனைகள் கவிதையாக வந்துள்ளது

கவி அழகன் said...

ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?

மவுனம் சமத்துக்கு அறிகுறி என்று தெரியாதா

தமிழ்வாசி பிரகாஷ் said...

///உத்தரவு நீ தந்தால்...
உன்னை இமைக்குள் காத்து
இக்கணமே இவ்விடமே
என் உயிர் நீப்பேனே...///

அருமையான வரிகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஆனந்தி கவிதை நல்லாயிருக்கு

//ஓயாத உன் நினைவு
என்னை உயிர்வரை எச்சரிக்க
உருகாத உன்னுள்ளம்
ஊமையாய் ஆனதென்ன?//
ரிசித்தேன் இவ்வரிகயளை

சாந்தி மாரியப்பன் said...

கவிதை நல்லாருக்கு ஆனந்தி..

சசிகுமார் said...

கவிதை மிகவும் அழகு

Priya said...

கவிதை வரிகள் மிக அழகு!

RVS said...

ம்.... ஊமையாய் ஆனதென்ன என்று கேட்டது ரொம்ப நல்லா இருக்குங்க.. ;-))

Mahan.Thamesh said...

மீண்டும் படிக்க துண்டும் வரிகள்; அஹா அற்புதம்

Nandhini said...

அருமையான வரிகள்.....ஆனந்தி கவிதை நல்லாயிருக்கு
....

Thenammai Lakshmanan said...

அருமை ஆனந்தி..:))

ம.தி.சுதா said...

உயிரோட்டமான வரிகள் அக்கா... அருமை அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேவா

ஹ்ம்ம் கும்ம்.. ரெம்ப நன்றிங்க..

நல்ல தகிரியமாதேன்...இருக்கேன்.. (என்ன ஒரு வில்லத்தனம்??? )



@சௌந்தர்

ஆமா... அதே சிரிப்பு தான்....

உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு கேக்குறேன்...?? :-))

ஹா ஹா ஹா... :-)) (நெஜமா சிரிப்பா அடக்க முடியல.. )

ஆமா ஆமா.. அதே தான்.. எப்படிங்க இப்படி...பிரில்லியண்டா இருக்கீக.. :)

ஹா ஹா.. என்ன ஒரு விமர்சனம்.. நன்றிங்கோ...!!!





@savitha ramesh

கருத்துக்கு நன்றிங்க.. :)





@நிரூபன்

கவிதையை ரசித்து சொன்ன, உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றிங்க.. :)

செந்தில்குமார் said...

ஆனந்தி....

ஓயாத உன் நினைவுஎன்னை உயிர்வரை எச்சரிக்க உருகாத உன்னுள்ளம்ஊமையாய் ஆனதென்ன?

ம்ம்ம்...உருக்கமான வரிகள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@யாதவன்
ஓ.. அப்படியும் வைத்துக்கொள்ளலாம்..
உங்க கருத்துக்கு நன்றிங்க :)


@தமிழ்வாசி - Prakash
உங்க கருத்துக்கு நன்றி :)


@தோழி பிரஷா
ரொம்ப நன்றிங்க ;-))


@அமைதிச்சாரல்
ரொம்ப நன்றிங்க :)


@சசிகுமார்
ரொம்ப நன்றிங்க :)


@Priya
ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா :)


@RVS
ஹ்ம்ம்.. நன்றிங்க உங்க கருத்துக்கு :)


@Mathan Thamesh
ரொம்ப நன்றிங்க :)


@Nandhini
தேங்க்ஸ் டா... நந்து ;)


@தேனம்மை லக்ஷ்மணன்
வாங்க அக்கா.. ரொம்ப தேங்க்ஸ் :)



@ம. தி. சுதா
கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :)


@செந்தில்குமார்
ரொம்ப நன்றிங்க செந்தில் :-)


@FOOD
ரொம்ப நன்றிங்க :)

ரிஷபன் said...

எளிமையாய் ஆனால் உள்ளம் கவரும் அழகு வரிகள்..

KRISHNAMMAL FIREWORKS said...

உன் சிரிப்பில் என்
சிந்தனை இழந்தேன்..
உன் பார்வையில் என்
நிம்மதி இழந்தேன்...

Mm True Line...

DASIS said...

//கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்..//

உண்மைய உண்மையா சொல்லி இருக்கீங்க... நல்ல இருக்கு..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ரிஷபன்

ரொம்ப நன்றிங்க, உங்க கருத்திற்கு. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@DASIS

கருத்துக்கு நன்றிங்க :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)