topbella

Wednesday, April 13, 2011

வாழ்க்கைச்சக்கரம்...!


எத்தனை விஷயங்கள்
எண்ணிலடங்கா ஆசைகள்
எதுவும் செய்ய முடியா
எதிர்க்கும் சக்தியற்ற
ஏகாந்த மனோநிலை...!

அத்தனைக்கும் ஆசைப்படு என்றே
பித்தன் ஒருவன் சொன்னான்
சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்
ஏதாவது ஒன்று கிடைக்கும்....?

இத்தனைக்கும் இயல்பாய்
இருக்கவென்றே இயன்றவரை
முயன்ற போதும்  
இசையாத மனதினை 
என்ன சொல்லி 
இசையச்செய்ய....?

சமயத்தில் கடந்த காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்
நிகழும் காலத்திலோ
நிலைத்து நிற்பது இல்லை...!

நிகழ்காலத்தில் நடந்த எல்லாம்
எதிர்காலத்தில் தொடர்வதில்லை...
அப்படித் தொடரா நேரமோ 
அங்கே தொடரும் பெருங்கவலை...!

ஓர் நாளில் ஓராயிரம் மாற்றங்கள்
அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?

~அன்புடன் ஆனந்தி 





25 comments:

Sanjay said...

அதாவது நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா,

காலங்கள் மூன்று வகைப்படும்..
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்..!!

அதானே..!!! :D :D :D

எல் கே said...

கொஞ்சம் வசன நடைல இருந்தாலும் , கருது நல்லா இருக்கு

Akila said...

kavithai migavum arumai.....

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி..

Anonymous said...

அழகான வரிகள் !!வாழ்த்துக்கள் .!!
இந்த வரி மட்டும் புரியவில்லை ??
////
சமயத்தில் கடந்த காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம்
நிகழும் காலத்திலோ
நிலைத்து நிற்பது இல்லை...///

நிகழும் காலத்தில் நினைவில் நிற்பது இல்லையா ?? அல்லது நிலைத்து நிற்பது இல்லையா ??

Unknown said...

கவிதை வரிகள் அழகு

உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிரூபன் said...

நிகழ்காலத்தில் நடந்த எல்லாம்
எதிர்காலத்தில் தொடர்வதில்லை...
அப்படித் தொடரா நேரமோ
அங்கே தொடரும் பெருங்கவலை...!//

வாழ்க்கைச் சக்கரத்தில் கொஞ்சம் தத்துவமும் கலந்து சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க்கைச் சக்கரம்.. வாழ்வியல் யதார்த்தத்தைப் பேசி நிற்கிறது

Unknown said...

நல்லா இருக்குங்க...

Anonymous said...

//இத்தனைக்கும் இயல்பாய்
இருக்கவென்றே இயன்றவரை
முயன்ற போதும்
இசையாத மனதினை
என்ன சொல்லி
இசையச்செய்ய....? //
திமிரும் ஆசையினை அடக்கும் மனதின் போராட்டத்தை அருமையாக சொல்லிச் செல்லும் வரிகள்.
நைஸ் ஆனந்தி! :)

சி.பி.செந்தில்குமார் said...

>>அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?

நல்ல கேள்வி..ஆனால் பதில் தான் தெரில..

sulthanonline said...

அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?


கற்பனையிலேயே எவ்வளவு நா‌ள்தான் வாழ முடியும்.. தெரியல..

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nandhini said...

வாழ்க்கை சக்கரம் நன்றாக சுழல்கிறது...... உங்கள் கவிதை நடையில்.......

r.v.saravanan said...

நல்லாருக்கு ஆனந்தி..

Priya said...

வரிகள் அழகு...! வாழ்த்துக்கள்!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அமைதியான ஓடையாய்
ஆர்ப்பாட்டம் இல்லா அருவியாய்
கலங்களில்லா நீர்த்தேக்கமாய்
கற்பனையில் தான் வாழ முடியுமோ...?

உண்மையே...அருமையான கவிதை ஆனந்தி

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
ஆமாங்கோ... அதே தான்.. அடடா.. எந்தா ஒரு ஞானம்.. :)


@எல். கே
உங்க கருத்திற்கு நன்றிங்க :)


@Akila
தேங்க்ஸ் பா :)


@அமைதிச்சாரல்
உங்க கருத்துக்கு நன்றிங்க :)


@தேவிந்த்
நன்றிங்க...
இல்லை.. நிலைத்து நிற்பது இல்லைன்னு சொல்ல வந்தேன்.
போன மாதம் நிகழ்ந்த நல்ல நிகழ்வு.. இந்த மாதம் நடக்காமல் போய் விடலாம்.. :)
அந்த மாதிரி அர்த்தத்தில் சொன்னேங்க..


@சிநேகிதி
உங்க கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.. :)


@நிரூபன்
ஹ்ம்ம்ம்.... உங்கள் கருத்திற்கு நன்றிங்க :)


@கலாநேசன்
ரொம்ப நன்றிங்க :)


@Balaji saravana
அதே தாங்க... ரொம்ப தேங்க்ஸ்.. :)



@சி. பி. செந்தில்குமார்
ஹ்ம்ம்ம்..எனக்கும் இன்னும் தெரியலங்க.. நன்றி :)


@sulthanonline
ஹா ஹா.. அதுவும் சரி தான்.. அது கூட சில நேரம் முடிவதில்லை.. :)
வாழ்த்திற்கு நன்றிங்க.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..!


@Nandhini
தேங்க்ஸ் நந்து :)


@r. v. saravanan
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)


@Priya
ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா :-))


@தோழி பிரஷா
ஹ்ம்ம்ம்... ரொம்ப நன்றிங்க :)

Sowmya said...

nice lines

Sowmya said...

nice lines

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

ரெம்ப நல்ல இருந்துசும்மா பதிவு எழுதும் கருத்தும் நல்ல இருக்கு வாழ்க வளமுடன் மென் மேலும் நல்ல சிறப்பான எழுத்துலகில் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள் subburajpiramu@gmail.com

Kousalya Raj said...

வாழ்க்கையின் யதார்த்தம் கூறும் வரிகள்...

அருமை ஆனந்தி.

மாதேவி said...

"வாழ்க்கைச் சக்கரம்..."
நன்றாக இருக்கிறது.

செந்தில்குமார் said...

நல்ல..வரிகள்

நிதர்சனமான.....வாழ்க்கை...வரிகள்

சித்தாரா மகேஷ். said...

ஃஃஃஃஇசையாத மனதினை
என்ன சொல்லி
இசையச்செய்ய....?ஃஃஃஃ

இரண்டு அர்த்தத்தில் நோக்கினாலும் இரு அர்த்தமும் ஆழமாகவே இருக்கிறது நன்றிங்க...

என் உயிரே.

Anonymous said...

super pa

Anonymous said...

super chanca illa very nice

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)