பொத்தி வைத்த பூச்செடியோ
பொழுது வந்தால் மணம் வீசும்
நான் கட்டி வைத்த காதல் நெஞ்சோ
காலம் எல்லாம் கவி பேசும்...!
எட்டி நின்ற போதும் நீ
எதுவும் பேசாத போதும்
உனைக் கட்டி அணைப்பதொன்றே
என் கண்களுக்குள் காட்சியாக....!
விரும்பும் விஷயமொன்றை
விதி வசத்தால் நெருங்காவிடினும்
அரும்பி பூத்த ஆசையினாலே
அன்பே உனை ஆழமாய்
என்னுள் விதைத்தேன்...!
பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!
என்னிரண்டு நாட்களாய்
ஏதோ ஒரு காரணத்தால்
என்னெதிரில் நீ வந்தும்...
ஏதும் செய்யமுடியா நிலையில் நான்...!
...அன்புடன் ஆனந்தி
48 comments:
பொத்தி வைத்த பூச்செடியோ//
எது அந்த மல்லிகை மொட்டா?? :D :D
அன்பே உனை ஆழமாய்
என்னுள் விதைத்தேன்...!
அறுவடை எப்போ?? :D
பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!
ஆஹா...
நன்று நன்று....!!;-)
feb 14 special? immmm...
NICE FEEL !!!
very nice
படமும் கவிதையும் அழகு
(மனக்க)ண் திறக்க ரசித்தேன்...
arumaiyana varigal... romba nalla irukku sister.
//பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!//
arumai. vaalththukkal
appadiye kaadhaliya mana kangalil kondu canchu vitteergal.vaazhthukkal......
ch my cooking blog
http://savithakitchen.blogspot.com
அருமையான வார்த்தையுடனான வரிகள் ஆனந்தி...
"பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!"
ரொம்ப ரசித்தேன்
/ ஏதும் செய்யமுடியா நிலையில் நான்...! /
ஏக்கம் இன்னும் அதிகரிக்குமே ?
இனிமையான வரிகள்... அழகு!
அதென்ன எதுவும் செய்ய முடியாத நிலை...
//என்னிரண்டு நாட்களாய்
ஏதோ ஒரு காரணத்தால்
என்னெதிரில் நீ வந்தும்...
ஏதும் செய்யமுடியா நிலையில் நான்...!//
ஏன் சார் கூட சண்டையோ?
இந்த கவிதையை அவர் கிட்டே காமிங்க...
அவர் கோவம் போய்விடும்....
//பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!///
ரசித்த வரிகள்
கவிதை மிக அருமை
hiiiii..
nallathan irukku..
ana engiyo idikkutheyyyy?
பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!////
superb :)
அழகான வரிகள் ஆனந்தி! :)
காதலர் தினம் வர போகுது.... ஹ்ம்ம்
அழகு
காதல் மழை பொழிகிறது...
வாழ்த்துக்கள்.
wow perfect lines to show the feeling of love...
Its nice..
ஆனந்தி கவிதை அழகுன்னா ரோஸ் கொள்ளை அழகு
/////////பொத்தி வைத்த பூச்செடியோ
பொழுது வந்தால் மணம் வீசும்
நான் கட்டி வைத்த காதல் நெஞ்சோ
காலம் எல்லாம் கவி பேசும்...!/////
ஆனந்தி வரிகள் அருமை....அன்பு காதலின் வெளிப்பாடு மிகவும் அருமை.
ஆனந்தி....ம்ம்ம்
அருமையான வரிகள்
பூத்திருந்த பூவெல்லாம்
புதிதாய் வெட்கத்தில்... நான்
காத்திருந்த காதலனோ
கைக்கெட்டும் தூரத்தில்...!
very nice
ஆனந்தி உங்க கவிதை மிகவும் அருமை. காதலர் தினத்திற்கு ஏற்ற வரிகள். வாழ்த்துக்கள்.
ஆனந்தி உங்க கவிதை மிகவும் அருமை. காதலர் தினத்திற்கு ஏற்ற வரிகள். வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
படம் நல்லாருக்கு
விரும்பும் விஷயமொன்றை
விதி வசத்தால் நெருங்காவிடினும்
அரும்பி பூத்த ஆசையினாலே
அன்பே உனை ஆழமாய்
என்னுள் விதைத்தேன்...!
Wow! What poetry!
But....
ஆசையினால் ஆழமாய்
விதையாக அரும்பிப் பூத்து
விருப்பமாக உள்ளும் புறமும்
முழுமையாகப் பரவிய பிறகும்
தூரம் ஏது? தொலைவு ஏன்?
அருமை
supper
மிகவும் அருமையாக இருக்கிறது....
ஆனந்திக்கா... ம்ம்ம்.. கவிதையெல்லாம் தூள் பறக்குது.. கலக்குங்க :)
//என்னிரண்டு நாட்களாய்
ஏதோ ஒரு காரணத்தால்
என்னெதிரில் நீ வந்தும்...
ஏதும் செய்யமுடியா நிலையில் நான்...!//
Oops.. ;)
** முதலில் இவ்ளோ லேட்டா பதில் போடுவதற்கு மன்னிக்கவும் **
@சஞ்சய்
ஹா ஹா.. இல்லை முல்லை மொட்டு..
அறுவடை.. விளைச்சல் ஆனா பிறகு...
பேஷ் பேஷ்.. சொல்லலையா...?? :-)))
வந்துட்டாரு கேள்வி கேட்க..!! ரெம்ப நன்றிங்க சார்...
தொடர்ந்து இது போல கேள்வி கேளுங்க.. :-)
@கோநா
வாங்க.. அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.. நன்றிங்க :-)
@Mathi
Thanks a lot Mathi.. :-)
@சீமான்கனி
வாங்க.. ரொம்ப நன்றிங்க, ரசித்து சொன்ன கருத்திற்கு..! :-)
@சே. குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@மதுரை சரவணன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@savitha ramesh
வாங்க சவிதா.. கருத்திற்கு ரொம்ப நன்றிங்க..
கண்டிப்பா பார்க்கிறேன்.. தேங்க்ஸ் :-)
@தோழி பிரஷா
ரொம்ப நன்றிங்க பிரஷா.. :-))
@வினோ
வாங்க.. எஸ்.. உண்மை தாங்க.. ரொம்ப நன்றி உங்க கருத்திற்கு :-)
@Priya
வாங்க.. தேங்க்ஸ் பிரியா :-)
@Philosophy Prabhakaran
ஹா ஹா.. வாங்க.. நினைத்ததெல்லாம் செய்து விட முடியாது இல்லையா..? அதை தான் சொன்னேன்.
ரொம்ப நன்றிங்க :-)
@S Maharajan
ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க..
ரசித்து சொன்ன கருத்திற்கு நன்றி :-)
@சசிகுமார்
ரொம்ப நன்றிங்க :-)
@logu
ஹா ஹா.. இடிக்குதுன்னா.. கொஞ்சம் தள்ளி நில்லுங்க..
கருத்திற்கு நன்றி :-)
@ஜெ. ஜெ.
ரொம்ப நன்றிங்க.. :-)
@Balaji Saravana
ரொம்ப நன்றிங்க பாலாஜி.. :-)
@Arun Prasath
ஹ்ம்ம்ம்.. ரொம்ப நன்றிங்க :-)
@ஜீ
வாங்க.. ரொம்ப தேங்க்ஸ் :-)
@திகழ்
வாங்க.. நன்றிங்க :-)
@சி. கருணாகரசு
வாங்க.. ஆமாங்க.. ரொம்ப நன்றி :-)
@Akila
வாங்க அகிலா.. ரொம்ப நன்றிங்க :-)
@Thanglish Payan
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@சி. பி. செந்தில்குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@நந்தினி
வாங்க நந்து.. தேங்க்ஸ்டா ;-)
@செந்தில்குமார்
வாங்க செந்தில்... ரசித்து சொன்ன கருத்திற்கு நன்றிங்க :-)
@r.v. saravanan
வாங்க.. தேங்க்ஸ் :-)
@Radhai
வாங்க.... உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிங்க :-)
வாழ்த்துக்கும் நன்றி..!!
@தமிழ்த்தோட்டம்
வாங்க.. நன்றிங்க :-)
@ரிஷபன்Meena
ஆஹா.. அப்போ கவிதை மோசமா.. :-)
நன்றிங்க
@sinthanai
வாங்க... சமயத்தில் விரும்பும் பொருள், அருகில் இருப்பினும் நெருங்க முடியா நிலை வரும் தானே.. அந்த நிலைமையின் வெளிப்பாடு தான்.. இந்த தூரம்..!!
கருத்திற்கு மிக்க நன்றிங்க :-)
@Jaleela kamal
ரொம்ப நன்றிங்க :-)
@யாழ். நிதர்சனன்
ரொம்ப தேங்க்ஸ் :-)
@ம.தி. சுதா
வாங்க. ரொம்ப நன்றிங்க :-)
@அன்னு
வாங்க அன்னு.. ரொம்ப நன்றி :-)
Post a Comment