topbella

Wednesday, September 1, 2010

நீங்காத உன் நினைவு...!!



நீங்காத உன் நினைவோ
நெருஞ்சி முள்ளாய் எனைத் தைக்க...
நினைவிலே கலந்து நெஞ்சிலே நிறைந்து..
கனவினைக் கலைத்தாய்....!!

ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை ஆகிறேன்...
கொஞ்சா நேரமோ எதுவோ
குறைந்தது போல் உணர்கிறேன்....!!

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....
ஓர் நிமிடம் ஓர் நொடி உன்னருகே
உடனே வர ஆசை அன்பே..!!

சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??

....அன்புடன் ஆனந்தி




 




88 comments:

Sanjay said...

எதுவோ குறைந்தது போல் உணர்கிறேன்....!!
என்ன குறைஞ்சிச்சு??? :P :D

//உட்கார்ந்து யோசித்தாலும் //

ஒஹ் ஒக்காந்து யோசிக்கிற பயபுள்ளயா நீயு?? :D :D :D


//சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??//


சொல்லாடல் வழக்கம் போல அருமை...: ) : )

ஹலோ மிஸ்டர் உங்களுக்கு எத்தன கவிதை தான் எழுதுறது??எதுக்கு மறுபடி மறுபடி இப்படி பண்றப்பா நீயு??!!! :D :D :D

ஜெய்லானி said...

டைமுக்கு தூங்காட்டி இப்பிடிதான் ..!!

ஜெய்லானி said...

//உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை...//

நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன் . அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி...

Unknown said...

நல்லா இருக்குங்க......

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சொல்லாமல் நீ சென்று எனை//

இந்தக் கவிதையைப் படிச்சுப் போட்டு
திரும்ப(பி) வந்திருவாங்க; கவலைப்
படாதீங்க!!!

prince said...

//சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??//

காரணமில்லாத பிரிவின் வலி மிக கொடியாது..

'பரிவை' சே.குமார் said...

//சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??//

கவிதை அருமை...

இன்னும் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதோ..?

நடக்கட்டும்... நடக்கட்டும்...

Karthick Chidambaram said...

as usual --- super

தமிழ் உதயம் said...

தவிப்பு, ஆசை, நினைவு என்று கவிதை அற்புதம்.

Jey said...

//உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....//

அம்மனி எனக்கு தலை கீழா நின்னு படிச்சாலும் கவிதை புரிவதில்லை.
அதனல கவிதை எழுதினா ஒன்லி ஸ்மைல்...:)

Jey said...

//ஜெய்லானி said...
//உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை...//

நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன் . அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி...//

(அம்மனி உங்க வீடு ஒருத்தரை திட்ரதுகு பெர்மிசன் பிளீஸ்...)

ங்கொய்யாலே... ஜெய்லானி அப்ப உன் பிலாக்ல போட்ட கவித ஆட்டைய போட்டதா?...

ஜெய்லானி said...

//ங்கொய்யாலே... ஜெய்லானி அப்ப உன் பிலாக்ல போட்ட கவித ஆட்டைய போட்டதா?...//

கமெண்ட் மாடரேஷன் போட்ட வீட்டுக்கு போய் பர்மிஷன் வாங்கிட்டு திட்டக் கூடிய ”ஜெண்டில் மேன் ஐயா” வை பிளாக் உலகத்தில நா இப்பதான் பாக்குரேன்...

மகனே உன்னையும் “அந்த “ குளத்தில தள்ளினா ”ஸ்மைல்” வருமா உனக்கு மூச்சடிச்சு செத்துபோவே ஜாக்கிரதை நானாவது புலம்பி தள்ளினேன் ஹய்யோ..ஹய்யோ...

Sanjay said...

ஜெய்லானி:

//நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன் . அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி..//

எச்சுஸ்மி...நீங்க என்ன வௌவாலா??:D
அது சரி எங்க நிப்பீங்க? கரண்ட் கம்பிலையா??? பார்த்து பொசிங்கீர போது...... :D :D

ஜில்தண்ணி said...

///சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ?? ///

அடடா அருமை சகோ :)

ஆமா ரொம்ப நாளா அன்பே அன்பேன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க,யார் அந்த அன்புன்னு சொன்னா தேவலாம் :)

ஜெய்லானி said...

//எச்சுஸ்மி...நீங்க என்ன வௌவாலா??:D
அது சரி எங்க நிப்பீங்க? கரண்ட் கம்பிலையா??? பார்த்து பொசிங்கீர போது...... :D :D //

பாத்தீங்களா..? வவ்வாலுக்கும் காக்கைக்கும் வித்தியசம் தெரியல பாருங்க உங்களுக்கு..


நான் கடவுள் படம் பாக்கைலையா நீங்க ..!!!!!!!!ஹி..ஹி...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகு கொஞ்சும் கவிதை

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான கவிதை

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை...அழகான வரிகள்...

எம் அப்துல் காதர் said...

கவிதை சும்மா அசத்தலா இருக்கே ஆனந்தி!!

எம் அப்துல் காதர் said...

@@ ஜெய்லானி said...

//டைமுக்கு தூங்காட்டி இப்பிடிதான் ..!!//

யார் டைமுக்கு?? பாஸ்!! ஹா. ஹா

எம் அப்துல் காதர் said...

@@ சே.குமார் said...

//இன்னும் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதோ..?//

ஆமா, கவிதையே தேடலில் தானே பாஸ்!!

எம் அப்துல் காதர் said...

@@ ஜெய்லானி:

//நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன். அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி..//

அது ஒரு ஆசனம்ல பாஸ். அதப் பத்தி ஒரு கவிதை எழுதிட வேண்டியது தானே!
"தலை கீழே கால் மேலேன்னு" ஹி..ஹி.. எப்புடி நாங்களும் சொல்வோம்ல!!

எம் அப்துல் காதர் said...

@@ Jey said...

//ங்கொய்யாலே... ஜெய்லானி அப்ப உன் பிலாக்ல போட்ட கவித ஆட்டைய போட்டதா?...//

அது மட்டுமா Jey?? அதோட ஃ பேஸ் புக்கை போய் பாருங்க,, இலக்கிய தர மிக்க என்பது மாதிரி ஒரு ஸீன் கிரியேட் பண்ணி இருக்கும். க்கி.. க்கி.

Anonymous said...

அன்பின் நினைவுகள், அழகு!

என்னது நானு யாரா? said...

யாருங்க அந்த கதாநாயகன்? மீரா ஜாஸ்மீன் போல அழகா பொண்ணு ஒன்னு இருக்கும் போது, சொல்லாம போற மனுஷனை இப்பத்தானுங்க கேள்வி படுறேனுங்க!

சௌந்தர் said...

கனவினைக் கலைத்தாய்....!!///

கனவில் மட்டும் கலந்தார் அப்போ நிஜத்தில்

சௌந்தர் said...

கனவினைக் கலைத்தாய்....!!///

வேலையும் செய்ய விடுவது இல்லை கனவும் காண விடுவது இல்லை

சௌந்தர் said...

சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ?///

சொல்லிட்டு போயிருக்கலாம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
//எதுவோ குறைந்தது போல் உணர்கிறேன்....!!
என்ன குறைஞ்சிச்சு??? :P :D ///
அது தெரிஞ்சா சொல்ல மாட்டோமாக்கும்...??? :P :P

//உட்கார்ந்து யோசித்தாலும் //
ஒஹ் ஒக்காந்து யோசிக்கிற பயபுள்ளயா நீயு?? :D :D :D ///

ஹி ஹி.. இவ்ளோ நாள் அது தெரியாதா, உங்களுக்கு?? :D :D

/////சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??//

சொல்லாடல் வழக்கம் போல அருமை...: ) : ) ////

ஹ்ம்ம்ம்.. தேங்க்ஸ் :-)))

////ஹலோ மிஸ்டர் உங்களுக்கு எத்தன கவிதை தான் எழுதுறது??எதுக்கு மறுபடி மறுபடி இப்படி பண்றப்பா நீயு??!!! :D :D :D ///

நல்ல கேளுங்க சஞ்சய்.. அப்பவாவது எதாச்சும் விளங்குதா பாப்பம் :-)))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ஜெய்லானி
///டைமுக்கு தூங்காட்டி இப்பிடிதான் ..!! ///

ஹலோ.. யாரு இப்போ டைம்க்கு தூங்கல..???

///நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன் . அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி...///

ஹா ஹா ஹா.. வேணும்னா தண்ணிக்குள்ள நின்னு யோசிங்களேன்... :-))
வருகைக்கு ரொம்ப நன்றி..




@@கலாநேசன்
/// நல்லா இருக்குங்க...... ///

உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :)

சௌந்தர் said...

அம்மனி எனக்கு தலை கீழா நின்னு படிச்சாலும் கவிதை புரிவதில்லை//

@@@@jey இனி மேல் புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன அதான் கல்யாணம் முடிந்து போச்சே

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@NIZAMUDEEN
//சொல்லாமல் நீ சென்று எனை//

இந்தக் கவிதையைப் படிச்சுப் போட்டு
திரும்ப(பி) வந்திருவாங்க; கவலைப்
படாதீங்க!!! ////

ஹா ஹா.. உங்க ஆறுதல் வார்த்தைக்கு ரொம்ப நன்றிங்க :-))



@@ப்ரின்ஸ்
//சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??//

காரணமில்லாத பிரிவின் வலி மிக கொடியாது.. ////

எஸ்.. சரியா சொன்னிங்க.. பிரின்ஸ்..
வருகைக்கு நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சே.குமார்

//கவிதை அருமை...
இன்னும் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதோ..?
நடக்கட்டும்... நடக்கட்டும்... ///

ஹா ஹா.. எஸ் எஸ்..
வருகைக்கும், உங்க கருத்துக்கும் நன்றிங்க.. :-))



@@Karthick Chidambaram
//// as usual --- super ///

ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக் :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழ் உதயம்

////தவிப்பு, ஆசை, நினைவு என்று கவிதை அற்புதம். ///

உங்க வருகைக்கும், ரசித்து கருத்து இட்டதிற்கும் நன்றிங்க.. :-))



@@Jey

//அம்மனி எனக்கு தலை கீழா நின்னு படிச்சாலும் கவிதை புரிவதில்லை.
அதனல கவிதை எழுதினா ஒன்லி ஸ்மைல்...:) ///

ஓகே ஓகே.. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. வேற என்னத்த சொல்றது...

வருகைக்கு, ரொம்ப நன்றிங்கோ :-))

/////ஜெய்லானி said...
//உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை...//

நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன் . அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி...//

(அம்மனி உங்க வீடு ஒருத்தரை திட்ரதுகு பெர்மிசன் பிளீஸ்...)

ங்கொய்யாலே... ஜெய்லானி அப்ப உன் பிலாக்ல போட்ட கவித ஆட்டைய போட்டதா?... ///

என்னது இது.. கொஞ்ச நேரம் வீட்ல இல்லாம.. அப்ப்டிக்கா போனேன்...

அதுக்குள்ள.....என்ன நடக்குது இங்க...??? :-))))

@@ஜெய்லானி


//ங்கொய்யாலே... ஜெய்லானி அப்ப உன் பிலாக்ல போட்ட கவித ஆட்டைய போட்டதா?...//

கமெண்ட் மாடரேஷன் போட்ட வீட்டுக்கு போய் பர்மிஷன் வாங்கிட்டு திட்டக் கூடிய ”ஜெண்டில் மேன் ஐயா” வை பிளாக் உலகத்தில நா இப்பதான் பாக்குரேன்...

மகனே உன்னையும் “அந்த “ குளத்தில தள்ளினா ”ஸ்மைல்” வருமா உனக்கு மூச்சடிச்சு செத்துபோவே ஜாக்கிரதை நானாவது புலம்பி தள்ளினேன் ஹய்யோ..ஹய்யோ... ///

ஓகே.. நீங்களே டீல் பண்ணிக்கிறீங்களா..
எந்த குளத்துல...??? அதெல்லாம் சரி.. அவங்க யாரு?? அத்த மட்டும் சொல்லாம எஸ். ஆயிருவீங்களே??
ரெம்ப நன்றிங்கோ :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
///ஜெய்லானி:

//நானெல்லாம் தலைகீழா நின்னு யோசிக்கிறோன் . அப்பவே ஓன்னும் வர மாட்டேங்கிது. ஹி..ஹி..//

எச்சுஸ்மி...நீங்க என்ன வௌவாலா??:D
அது சரி எங்க நிப்பீங்க? கரண்ட் கம்பிலையா??? பார்த்து பொசிங்கீர போது...... :D :D ////

ஹா ஹா... ஐயோ ஐயோ.. முடியலப்பா... :D :D
ஜெய் பதில் சொல்லுங்க வாங்க..





@@ஜில்தண்ணி - யோகேஷ்
///சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ?? ///

அடடா அருமை சகோ :)

ஆமா ரொம்ப நாளா அன்பே அன்பேன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க,யார் அந்த அன்புன்னு சொன்னா தேவலாம் :) ///

ஹ்ம்ம்ம்.. அது தெரியாதா உங்களுக்கு??
ரொம்ப நன்றி யோகேஷ்.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ஜெய்லானி

///பாத்தீங்களா..? வவ்வாலுக்கும் காக்கைக்கும் வித்தியசம் தெரியல பாருங்க உங்களுக்கு..

நான் கடவுள் படம் பாக்கைலையா நீங்க ..!!!!!!!!ஹி..ஹி///

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... யாரு வவ்வால்.. யாரு காக்கா...?? :D :D



@@அப்பாவி தங்கமணி
/// அழகு கொஞ்சும் கவிதை ///

ரசித்து கருத்து சொன்னதிற்கு நன்றி தோழி.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Starjan ( ஸ்டார்ஜன் )
/// அழகான கவிதை ////

வருகைக்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க ஸ்டார்ஜன் :-))




@@சங்கவி
// அழகான கவிதை...அழகான வரிகள்... //

வருகைக்கும், ரசித்து இட்ட கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@எம் அப்துல் காதர்
///கவிதை சும்மா அசத்தலா இருக்கே ஆனந்தி!! ///

ரொம்ப நன்றிங்க :-))

//யார் டைமுக்கு?? பாஸ்!! ஹா. ஹா ///

நல்ல கேளுங்க.. நானும் அதையே தான் கேட்டேன்??

////ஆமா, கவிதையே தேடலில் தானே பாஸ்!! //

அட அட.. அட.. என்னமா பதில் சொல்றீங்க.. சூப்பர் :-)))

///அது ஒரு ஆசனம்ல பாஸ். அதப் பத்தி ஒரு கவிதை எழுதிட வேண்டியது தானே!
"தலை கீழே கால் மேலேன்னு" ஹி..ஹி.. எப்புடி நாங்களும் சொல்வோம்ல!!///

ஹா ஹா. .. சரி சரி.. ஜெய் வந்து பதில் சொல்லட்டும்.. :-)))

///அது மட்டுமா Jey?? அதோட ஃ பேஸ் புக்கை போய் பாருங்க,, இலக்கிய தர மிக்க என்பது மாதிரி ஒரு ஸீன் கிரியேட் பண்ணி இருக்கும். க்கி.. க்கி. ///

ஹா ஹா. முடியல...
ஜெய்.. டோட்டல் டேமேஜ்...... வந்து பாருங்க.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Balaji saravana
/// அன்பின் நினைவுகள், அழகு! ///

ரசித்து கமெண்ட் சொன்னதற்கு நன்றிங்க.. :-))




@@என்னது நானு யாரா?
///யாருங்க அந்த கதாநாயகன்? மீரா ஜாஸ்மீன் போல அழகா பொண்ணு ஒன்னு இருக்கும் போது, சொல்லாம போற மனுஷனை இப்பத்தானுங்க கேள்வி படுறேனுங்க! ///

ஹா ஹா..... நீங்க சொல்லிட்டீங்கள்ல.. இனி சொல்லிட்டு போறாங்களான்னு பாப்போம்..
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க.. :-))

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகான கவிதை நல்லா இருக்குங்க......

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்
///கனவினைக் கலைத்தாய்....!!///

வேலையும் செய்ய விடுவது இல்லை கனவும் காண விடுவது இல்லை ////

ஹா ஹா.. கரெக்ட்.. :-)))

///சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ?///

சொல்லிட்டு போயிருக்கலாம்//

உங்களுக்கு தெரிது..... போனவருக்கு தெரியலயே...
என்ன பண்றது????? :-)))

///@@@@jey இனி மேல் புரிந்தால் என்ன புரியவில்லை என்றால் என்ன அதான் கல்யாணம் முடிந்து போச்சே ////

ஹா ஹா ஹா.. ஏன் சௌந்தர்... ஏன்?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@வெறும்பய
/// அழகான கவிதை நல்லா இருக்குங்க...... ////

ரசித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க :-)

சைவகொத்துப்பரோட்டா said...

முடிவில் சோகத்தை கொண்டு வந்து விட்டீர்களே.

Anonymous said...

தொடக்கம் ரொமாண்டிகா இருந்து ஆனா முடிக்கசே ஏன் இந்த சோகம் தோழி ?கவிதை நல்லா இருந்தது ..நன்றி..

உங்களை நான் face book லே பார்த்தேன் ..

sakthi said...

ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை ஆகிறேன்...
கொஞ்சா நேரமோ எதுவோ
குறைந்தது போல் உணர்கிறேன்...

ரசித்தேன் இவ்வரிகளை

ISR Selvakumar said...

//
ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை ஆகிறேன்...
கொஞ்சா நேரமோ எதுவோ
குறைந்தது போல் உணர்கிறேன்....!!
//
எனக்கு பிடித்த வரிகள். குறிப்பாக நீ கொஞ்சும்போது குழந்தை ஆகிறேன்.

நாடோடி said...

நினைவுக‌ளின் வ‌லி கொடிய‌து தான்... க‌விதை ரெம்ப‌ நால்ல‌ இருக்கு..

tamil said...

உங்கள் படைப்புகள் அருமை ...
கணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்
http://www.raghuvarman.co.cc/

சசிகுமார் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

அடா...
அடா...
அடாஆஆஆஅ...

கவிதை கவிதை....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சைவகொத்துப்பரோட்டா
//// முடிவில் சோகத்தை கொண்டு வந்து விட்டீர்களே.///

எல்லாம் ஒரு பீலிங்க்ஸ் தாங்க..
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@sandhya
///தொடக்கம் ரொமாண்டிகா இருந்து ஆனா முடிக்கசே ஏன் இந்த சோகம் தோழி ?கவிதை நல்லா இருந்தது ..நன்றி..////

ரொமான்ஸ் வந்தாலே....கூடவே சோகமும் ப்ரீ தானே... தோழி.. ;-))

////உங்களை நான் face book லே பார்த்தேன் ..////

ஓ அப்படியா.. பிரண்ட் ரெக்வெஸ்ட் குடுத்திருக்கலாமே... சந்த்யா :-))
ஆவலுடன் காத்திருக்கிறேன்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@sakthi
/// ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை ஆகிறேன்...
கொஞ்சா நேரமோ எதுவோ
குறைந்தது போல் உணர்கிறேன்...

ரசித்தேன் இவ்வரிகளை//////

ரசித்து கமெண்ட் போட்டதிற்கு நன்றிங்க.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@r.selvakkumar
//ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை ஆகிறேன்...
கொஞ்சா நேரமோ எதுவோ
குறைந்தது போல் உணர்கிறேன்....!!
//
எனக்கு பிடித்த வரிகள். குறிப்பாக நீ கொஞ்சும்போது குழந்தை ஆகிறேன். //////

ஹ்ம்ம்ம்... ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ;-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@நாடோடி
///நினைவுக‌ளின் வ‌லி கொடிய‌து தான்... க‌விதை ரெம்ப‌ நால்ல‌ இருக்கு..///

ஹ்ம்ம்...உண்மை தான்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@P.RAGHUVARMAN
//// உங்கள் படைப்புகள் அருமை ...
கணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்
http://www.raghuvarman.co.cc/ ////

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-)
உங்க பிளாக் வந்து பாக்குறேன்.. பகிர்வுக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சசிகுமார்
///அருமையான கவிதை வாழ்த்துக்கள்///

நன்றி சசி.... உங்க வருகைக்கும், கருத்துக்கும்.. நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அருண் பிரசாத்
////அடா...
அடா...
அடாஆஆஆஅ...

கவிதை கவிதை....////

ஹா ஹா ஹா... வாங்க வாங்க..
நீங்க அடடே அருண்-ஆ.. (சும்மா தான்... :-))) )

வருகைக்கும், ரசித்து கருத்து இடத்திற்கும் நன்றிங்க.. :-))

ம.தி.சுதா said...

//...உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....//
நம்மளுக்கு படுத்திருந்து யோசித்தாலும் சிலது புரிவதில்லை... கவி அருமை வாழ்த்துக்கள்....

ம.தி.சுதா said...

என்ன சகோதரி விருதுகள் வைக்க இடமில்லை போல இருக்கு வாழ்த்துக்கள்...

Priya said...

அழகான கவிதை ஆனந்தி!

vanathy said...

சூப்பரா இருக்கு உங்கள் கவிதை.

முனியாண்டி பெ. said...

Super....Very good Kavithai

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ம.தி.சுதா

//...உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....//
நம்மளுக்கு படுத்திருந்து யோசித்தாலும் சிலது புரிவதில்லை... கவி அருமை வாழ்த்துக்கள்....///



ஹா ஹா.. உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-))

//என்ன சகோதரி விருதுகள் வைக்க இடமில்லை போல இருக்கு வாழ்த்துக்கள்...//

அதெல்லாம் ஒன்றும் இல்லை.. எல்லாம் நண்பர்கள் அன்பினால் கொடுத்தது..
வாழ்த்திற்கு நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ப்ரியா
/// அழகான கவிதை ஆனந்தி! ///

வருகைக்கும், ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@வானதி

/// சூப்பரா இருக்கு உங்கள் கவிதை. ///

ஹாய் வாணி... ரொம்ப தேங்க்ஸ்பா.. ;-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@முனியாண்டி

//// Super....Very good Kavithai ///

உங்க வருகைக்கும், கருத்திற்கும்.. நன்றிங்க.. :-))

Nandhini said...

//////சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??////

வழக்கம் போல ஒரே பீலிங்க்ஸ் போல....நடக்கட்டும் நடக்கட்டும்....அருமையான கவிதை.

எல் கே said...

//சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ//

எங்க சொல்லாம போனாரு ?? நீங்க என்ன பண்ணீங்க அப்படி ? கோச்சிக்கிட்டு போய்ட்டாரு ... கவிதை அருமை ஆனந்தி. படமும் அருமை. வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் போட்டுகிர்றேன்

Akila said...

lovely kavithai...

http://akilaskitchen.blogspot.com

r.v.saravanan said...

ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை
ஆகிறேன்...


நல்லா இருக்கு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@LK
//எங்க சொல்லாம போனாரு ?? நீங்க என்ன பண்ணீங்க அப்படி ? கோச்சிக்கிட்டு போய்ட்டாரு ... கவிதை அருமை ஆனந்தி. படமும் அருமை. வாழ்த்துக்கள்///

அது தெரியாம தான கவிதை..!
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@மங்குனி அமைசர்
// ஆஜர் போட்டுகிர்றேன் //

குட்.. இப்படி தான் பொறுப்பா இருக்கோணும்.. :-))
வருகைக்கு நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Akila
/// lovely kavithai... ////

ரொம்ப தேங்க்ஸ் அகிலா.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@r.v.saravanan
///ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை
ஆகிறேன்...

நல்லா இருக்கு ////

வருகைக்கும், கருத்து இடத்திற்கும் நன்றிங்க :-))

Ramesh said...

Arumai! Perumbalum (tharkaliga) pirivuthuyar kavidhaigala yeludhi kalakkareengale!

தாராபுரத்தான் said...

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....

elamthenral said...

//உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....
ஓர் நிமிடம் ஓர் நொடி உன்னருகே
உடனே வர ஆசை அன்பே..!//

nice linesss....ananthi

culinary tours worldwide said...

dear friend ur blogger v nice \
im mohan right now swiss hospitality industry as kitchen arts in kuwait

hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@பிரியமுடன் ரமேஷ்
///Arumai! Perumbalum (tharkaliga) pirivuthuyar kavidhaigala yeludhi kalakkareengale! ////

ஹ்ம்ம்.. ஆமா.. ரொம்ப நன்றிங்க உங்க வருகைக்கு.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தாராபுரத்தான்
///உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....///

அடடா.. ஒரு தமிழ் அன்பர்... .தமிழில் எழுதிய கவிதை புரியவில்லை என்று விட்டீர்களே??
நான் என் செய்வேன்...!!!!
உங்க வருகைக்கு நன்றிங்க...!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@புஷ்பா
//உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....
ஓர் நிமிடம் ஓர் நொடி உன்னருகே
உடனே வர ஆசை அன்பே..!//

nice linesss....ananthi ////

ரொம்ப நன்றிங்க... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@mohan KING OF KITCHEN ART'S CARVING

//dear friend ur blogger v nice //

Thanks for your visit and comment. And its really good to know about your profession.

pinkyrose said...

ஹாய்!

எப்டியிருக்கீங்க?

உங்க காண்டா மிருகம் பேபி சோப் கதை செம கலக்கல்...

Unknown said...

Nice................

செந்தில்குமார் said...

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....
ஓர் நிமிடம் ஓர் நொடி உன்னருகே
உடனே வர ஆசை அன்பே..!!


ஏக்கத்தின் உச்சகட்டம் ஆனந்தி....

வாழ்த்துக்கள்

"தாரிஸன் " said...

//சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??//
இப்படி தாங்க.... காதலிகரவங்க நிலைமை எல்லாம் கடைசில இப்படிதான் ஆகும்...!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)