topbella

Wednesday, September 29, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 3

ஒரு வழியா லைசென்ஸ் வாங்கி.. இந்த ஊருக்குள்ள...யாருக்கும் பிரச்சன ஏதும் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேங்க.. அதுல பாருங்க.. ஒரு விசேஷம்.. என்னால மத்தவங்களுக்கு தான் பிரச்சின இல்லன்னு சொன்னனே தவிர... எனக்கு சில பல தொல்லைகள்....!

ஒரு முறை வெளியூர் போயிட்டு வீடு திரும்பினோம்.. அப்போ வந்ததும், தலை வலிக்குது ஒரு காஃபி குடிச்சா தேவலாம்னு தோனுச்சு.. நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னா... நம்ம ஆளு அப்போ தான், இப்போ தானே இவ்ளோ நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்தேன்.. நீ போயிட்டு வாயேன்னு சொல்ல, கர்ர்ர்ர் னு எரிச்சலாகி சரி..கோவப்பட்டா காஃபி வருமா?? போயி வண்டிய எடுத்தேன்... அப்போ நாங்க இருந்த அபார்ட்மென்ட்-டில் கார் விட ஷெட் இருந்தது. அதிலிருந்து வண்டியை பாக்-அப் பண்ணும் போது... அந்த பில்லர்ல ஒரு இடி இடிச்சி, அங்கயே நின்னுட்டேன்... மவளே காஃபி ரொம்ப முக்கியம் இப்போ? னு என்னையே திட்டிட்டு இருந்தேன்...


இது போலத் தான் இன்னொரு முறை ஆச்சு.. வெளியூர் செல்ல, பிளான் பண்ணிட்டு, AAA ஆபீஸ் போய் மேப்ஸ் (maps ) வாங்கிட்டு வந்திருன்னு சொல்லிட்டு வேலைக்கு போய்ட்டாங்க.. நானும் பந்தாவா கிளம்பி போயி... மேப் எல்லாம் கேட்டு வாங்கிட்டு, வெளில வந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி ரிவர்ஸ்-ல பின்னாடி வரதுக்கு பதிலா.... அவ்வ்வ்வவ் ஆக்சிலரேட்டர் அழுத்தி  முன்னாடி வேகமா போய்ட்டேன்..... அப்புறம் என்ன, டமால் தான்... அங்க இருந்த சிமெண்ட் பார்-ல மோதி, பிரான்ட் பம்பர் உடைஞ்சு தொங்கிட்டு இருந்தது.... ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. ! (AAA என்பது இங்கே உள்ள இன்சூரன்ஸ் ஆபீஸ் )

இந்த மாதிரி... அப்பப்ப வீர சாஹசம் எல்லாம் செய்றது உண்டுங்க.. அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்..


அடுத்து, இங்க அமெரிக்கா-ல என்னை கவர்ந்த விஷயம், இங்க உள்ள கடைகளில் எல்லா பொருளுக்கும் (Expiration Date ) காலாவதி தேதி... போட்டிருப்பாங்க..
அந்த தேதி முடியறதுக்குள்ள... நீங்க வாங்கின பொருளில் ஏதேனும், பிரச்சினை வந்த கொண்டு போய்க் கொடுத்தால் ஒரு வார்த்தை சொல்லாமல் மாற்றி கொடுத்து விடுவாங்க. (உடனே..ஏன் நம்ம ஊர்ல கூட தான் இருக்குன்னு....கேட்டு சண்டைக்கு வரப்பிடாது..) இத ஏன் ஸ்பெஷல்-ஆ சொல்றேன்னா.. இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...! என்ன பண்றது.. ஒன்னும் பண்ண முடியாது.

அப்புறம் இங்க அமெரிக்கன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, 30 முதல் 90 நாட்கள்  வரை, திரும்ப குடுக்க பாலிசி உண்டு.. அது உண்மையில் உபயோகமான பாலிசி. வாங்கிய துணி சைஸ் சரியில்லைன்னா கொண்டு போய் குடுத்து வேற மாத்திட்டு வரலாம். (ஆனா...அதையும் மிஸ் யூஸ் பண்ற ஆளுங்களும் இருக்காங்க..) எல்லா கடைகளிலும் பெரும்பாலும் கஸ்டமர் கேர் நல்லாவே இருக்கும்.  வாங்கிய பொருளை... அப்படியே பத்திரமாய் கொண்டு போய் குடுத்து மாத்திட்டு வந்திரலாம்.. எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது. நம்ம ஊர்ல எதுவும் மாற்ற இந்த வசதி இருப்பதில்லை.. (ஆனா. நம்ம ஊர் மக்கள் கூட்டத்திற்கு... இப்படி பாலிசி வச்சா.. பின்னே கடையை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.. அதுவும் இருக்கு...)

 .....தொடரும்
(நன்றி: கூகிள் இமேஜஸ்)


73 comments:

Sanjay said...

//அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்..//
ச்சே ச்சே தைரியமா சொல்லலாம், நாங்கெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க..அப்படிலாம் பண்ணவே மாட்டோம்.....:D

//தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...!//

அதானே நாங்கெல்லாம் யாரு???!!!:D :D

//வாங்கிய துணி சைஸ் சரியில்லைன்னா கொண்டு போய் குடுத்து வேற மாத்திட்டு வரலாம்//

எத்தன முறை உடுத்தினதா இருக்கணும்??? ஒரு 2,3 முறைனா பரவால்லையா?? ஹி ஹி

//ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. !//

அதானே ஆட்டுக்கு அடிபட்டா ஆம்புலன்ஸ்ல கொண்டுபோகலாம் அந்த ஆம்புலன்சே அடிபட்டா என்ன பண்றது?? :D :D

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு... மற்ற கட்டுரைகளில் இழயோடும் நகைச்சுவை இதில் குறைவாய் தெரிவது போல் தெரிகிறது.

மின்மினி RS said...

நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க ஆனந்தி அக்கா.. தொடருங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல சுவாரசியமாத்தான் இருக்கு..

///இந்த மாதிரி... அப்பப்ப வீர சாஹசம் எல்லாம் செய்றது உண்டுங்க..///

அப்ப.. நீங்க ஒரு வீரமங்கை.

///இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...! ///

அது பழக்கதோசம்.. நம்மவிட்டு போகுமா?..

///எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது.///

அடுத்த தடவ நீங்க அந்த கடைக்கு போகணுமில்லயா.. இல்லன்னா வருவீங்களா..

நல்ல பகிர்வு ஆனந்தி.. தொடருங்கள்.

அன்புடன் பிரசன்னா said...

உங்க அனுபவம் படு ஜோரா இருக்கு அக்கா.... அதுவும் நகைச்சுவை கலந்து எழுதுற விதம் என்னும் அழகு. ஆமா உங்களுக்கு யாரு லைசென்ஸ் கொடுத்தாங்க? சொல்லி எனக்கும் ஒரு லைசென்ஸ் வாங்கி கொடுத்தா உங்களுக்கு புண்ணியமா போகும் மகராசி.

எம் அப்துல் காதர் said...

அந்த வீர சாகசம் ரொம்ப அருமை!!

அப்புறம் அந்த (Expiration Date ) விஷயம் இங்குமிருக்கு!! இங்கே முனிசிபாலிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால் நிறைய ஹைபர் மார்க்கெட் களில் அந்த டேட் முடியும் ரெண்டு மாசத்துக்கு முன்னே ஆஃபர் என்ற பேரில் ஒன்னு வாங்கினா ரெண்டு ஃப்ரீ, அல்லது ரெண்டு வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு காலி பண்ணி டுவாங்க!!

எம் அப்துல் காதர் said...

இப்பல்லாம் டிரைவிங் சரியாகிடுச்சா. அருமையா எழுதி இருக்கீங்க ஆனந்தி!!

Gayathri said...

நல்லத்தான் போகுது...தொடருங்க..
உங்க சார் ஓட்டும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு !!!

அன்பரசன் said...

//இத ஏன் ஸ்பெஷல்-ஆ சொல்றேன்னா.. இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...!//

ஹா ஹா ஹா..

சைவகொத்துப்பரோட்டா said...

//எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...!//

லேபல் ஒட்டிய இடத்துக்கு அரிச்சிருக்குமோ, ஹா....ஹா...

சௌந்தர் said...

வண்டிய ஸ்டார்ட் பண்ணி ரிவர்ஸ்-ல பின்னாடி வரதுக்கு பதிலா.... அவ்வ்வ்வவ் ஆக்சிலரேட்டர் அழுத்தி முன்னாடி வேகமா போய்ட்டேன்..... அப்புறம் என்ன, டமால் தான்..////

வீர சாகசம் செய்த ஆனந்தி வாழ்க வாழக்


ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. ! (AAA என்பது இங்கே உள்ள இன்சூரன்ஸ் ஆபீஸ் )////

ஆக்சிடென்ட் ஆனா பணம் தருவாங்களா தர மாட்டாங்களா செக் பண்றாங்களாம் அதுக்கு அந்த இன்சூரன்ஸ் ஆபீஸ்சை யா உடைப்பது அப்பறம் அந்த இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு யார் இன்சூரன்ஸ் தருவது

வல்லிசிம்ஹன் said...

பேசாம ஒரு ஹம்மர் வாங்கிடுங்க:)
அமெரிக்கால எனக்குப் பிடிச்சது இந்தத் திருப்பிக் கொடுக்கிற விஷயம்தான். ஆனால் அதை அப்யூஸ் பண்றவங்களும் அதிகம். ஒருத்தர் நம்ம தேசத்துக்காரர் ஹாண்டிகாம் வாங்கி வச்சுட்டு எல்லாப் படமும் எடுத்துட்டுத் திருப்பிப் போய்க் கொடுத்தார். நல்லா இருக்குப்பா பதிவு.

என்னது நானு யாரா? said...

என்னாது! காஃபி குடிக்க கார் எடுத்திட்டுப் போனீங்களா? அப்போ அம்மணிக்கு காஃபி போட தெரியாதா? உங்களை பத்தி நிறைய சொல்ல மாட்டேனுட்டு, டேமேஜிங்கா இதை மட்டும் சொல்லிட்டீங்களே ஆனந்தி!

பதிவு அருமை! தொடருங்க!

சி.பி.செந்தில்குமார் said...

ஃபாரின் பற்றி நல்ல பகிர்வு.டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஏன் வெறுமையா இருக்கு,?கண்ணுக்கு குளிர்ச்சியா ஃபிகருங்க கூட்டம் அங்கே கிடையாதா?

சிவராம்குமார் said...

எக்ஸ்பயரி தேதின்னு ஒன்னே இருக்காது! அப்புறம் எங்கே சொரிய! கிழிக்க?

Madhavan Srinivasagopalan said...

//அடுத்து, இங்க அமெரிக்கா-ல என்னை கவர்ந்த விஷயம், இங்க உள்ள கடைகளில் எல்லா பொருளுக்கும் (Expiration Date ) காலாவதி தேதி... போட்டிருப்பாங்க.. //

நம்ம ஊருல அதெல்லாம் இல்லை.. ஏன்னா.. வாங்கி சாப்பிட்டா, எப்போ வேணா காலாவதி ஆகலாம்.. ஒரு பிக்சட் டேட்லாம் கெடையாது.. ஆமாம்..

//எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...!//

Sometime, even MRPs also..

சிங்கக்குட்டி said...

அப்ப மாசா மாசம் காருக்கு ஒரு பெரிய பில் இருக்கு :-).

Dhinakar said...

///இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா
தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...! என்ன
பண்றது.. ஒன்னும் பண்ண முடியாது.///

எங்கே சென்றாலும் இந்தியர்கள் இந்தியர்கள் தான் ..................

இந்தியர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பழக்கம் மாறாது என்பதற்கு உதாரணமாக சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வை கூறலாம், சிங்கையில் மற்ற இடங்களில் இதை போல மோசம் இல்லை

சிங்கப்பூரிலேயே மிகவும் பழைமையான இடங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று

சிங்கப்பூருக்கே த்ரிஷ்டியாக இந்த இடம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது இது என் தனிப்பட்ட கருத்து

சிங்கை முழுவதும் சுத்தம், போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட்டாலும் அவை எதுவுமே இங்கு கொஞ்சம் கூட பின்பற்றப்படுவதில்லை, அரசும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை சொல்லி சலித்து போய் விட்டார்களோ என்னவோ!

அவரவர் இஷ்டத்திற்கு சாலையை கடந்து கொண்டு இருப்பார்கள், சாலை விதியா! கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்! (இந்த கொடுமையில் என் பங்கும் கொஞ்சம் உண்டு)

மற்ற நாட்டினர் பார்த்தால் இவங்க எங்கே இருந்தாலும் இப்படி தான் போல என்று கிண்டலாக தான் நினைப்பார்கள், நம்மை பார்த்து அவர்களும் சாலை விதிகளை மதிப்பதில்லை இங்கு

கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள் (இந்த பழக்கத்தை விடவே மாட்டாங்களா)

இந்தியர்கள் அனைவரும் (பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தினர்) கூடும் இடம் இங்கே தான். சனி ஞாயிறு இரு நாட்களும் கூட்டம் நிரம்பி வழியும், சென்னை டி நகர் தோற்று போய் விடும்

லிட்டில் இந்தியாவில் இருக்கும் போது நாம் வேறு ஒரு நாட்டில் இருக்கும் உணர்வே இருக்காது, சென்னை வீதிகளில் சுற்றி கொண்டு இருப்பது போலவே இருக்கும், எங்கு நோக்கினும் நம்மவர்களே இருப்பார்கள்.

நண்பர்கள் அனைவரும் இங்கே வந்து கூடி தங்கள் விடுமுறை நாட்களை செலவிடுவார்கள் (சாப்பாடு சரக்கு என்று) சந்தோசமாக

இங்கே சிங்டெல் என்ற தொலைபேசி நிறுவனம் மிகவும் பிரபலம், நம் ஊருக்கு சலுகை விலையில் மற்றும் பல கவர்ச்சி திட்டங்களுடன் தங்கள் சேவைகளை தருகிறார்கள்

லிட்டில் இந்தியா வந்தால் இவர்கள் தரும் விளம்பர சீட்டை பெற்று கொள்ளாமல் நாம் லிட்டில் இந்தியா வை விட்டு வெளியேற முடியாது, அந்த அளவுக்கு நம் இடத்தில் விளம்பரம் செய்கிறார்கள். எங்கு சென்றாலும் யாரவது ஒருவர் விளம்பர காகிதத்தை வைத்து நின்று கொடுத்துக்கொண்டு இருப்பார்

இவர்கள் தரும் சீட்டை மற்றும் பலர் தரும் விளம்பர சீட்டை கவலையே படாமல் வழியில், சாலையில் போட்டு விட்டு செல்வார்கள்

நம் இடம் பழைய முறையில் நீண்ட காலமாக இருப்பதாலோ என்னவோ சாக்கடை செல்லும் இடங்களில் சிங்கப்பூர் ல் மற்ற இடங்களை போல அல்லாமல் இங்கு நாற்றம் அடிக்கும்

கூட்டம் அதிகம் இருப்பதாலோ இல்லை வேறு காரணமோ திருட்டுகளும் உண்டு. இங்கு வந்தால் மட்டும் இருக்க வேண்டும்.

இங்கு திருட்டு பயத்தால் நாம் போகும் முன்பு நம் உடமைகளை பாதுகாவலரிடம் கொடுத்து விட்டு தான் செல்ல வேண்டும், இல்லை என்றால் அவர்களே நம் பைகளை கட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்த அங்காடி இருக்கும் இடத்தை சுற்றி ரங்கநாதன் தெருவை போல எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரியும், தாறுமாறான கூட்டமாக இருக்கும், அத்தனையும் இந்தியர்கள் மற்றும் கொஞ்சம் மற்ற நாட்டினர்.

நம்ம ஊரில் இருக்கும் அனைத்து உணவகங்களும் இங்கே உண்டு சரவண பவன், அஞ்சப்பர், கோமளாஸ் முருகன் இட்லி, வசந்த பவன் ஆனந்த பவன் என்று ஒன்று விடாமல். அனைத்துமே படு கேவலமாக இருக்கும். வாங்கும் பணத்திற்கு மனசாட்சியே இல்லாத தரத்தில் தருவார்கள். சுவையே இருக்காது.

சிங்கையில் இந்திய உணவகங்கள் தவிர வேறு எங்கேயும் குடிக்க தண்ணீர் தர மாட்டார்கள், யோவ்! அப்ப என்ன விக்கிட்டு சாவுறதான்னு கேட்கறீங்களா! :-) ) தண்ணீருக்கும் காசு கொடுக்கணும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னையா! இது கொடுமையா இருக்குன்னு சொல்றீங்களா! அது அப்படி தான்! இதுல நம்ம உணவகங்கள் வள்ளல்கள்

அதுவும் விரைவு உணவகங்களில் வாய்ப்பே இல்லை, கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் வாங்கியே ஆக வேண்டும்.

janaki said...

hmmmm i think u r accident specialist.....

நிகழ்காலத்தில்... said...

கார் ஓட்டி கலக்கறீங்க...:))))

வாழ்த்துகள் சகோ.

priyamudanprabu said...

//அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்..//

அதுதான் ஏற்கனவே பண்ணியாச்சே

Anonymous said...

//எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது.//
இதெல்லாம் நம்ம ஊருல எப்போ நடக்கும்? :(

ப.கந்தசாமி said...

அட்வன்சர் முடிந்த பிறகு வண்டியை ரிப்பேர் பண்ணுவீங்களா, இல்லே அப்படியே காயலான் கடைக்கு அனுப்பிச்சுடுவீங்களா?

Anonymous said...

அழகா தொகுத்து இருக்கிங்க ஆனந்தி

Anonymous said...

ஒரு வழியா லைசென்ஸ் வாங்கி.. இந்த ஊருக்குள்ள...யாருக்கும் பிரச்சன ஏதும் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேங்க//
லைசன்ஸ் வாங்க அங்க எவ்வளவு மால் வெட்டணும்?

dheva said...

இன்சூரன்ஸ் கம்பெனி வாசலிலேயே ... ஆக்ஸிடண் பண்ணிய.. உங்களுக்கு வெளி நாடு வாழ் இந்தியர்கள் சார்பா ஒரு பாராட்டு விழா துபாயில அரேஞ்ச் பண்னியிருக்கோம்...

வந்து வாங்கிட்டு போங்க... ( அமெரிக்கால எப்படி எல்லாம் லைசன்ஸ் கொடுக்குறாங்க.. பாருங்க....!!!! )

சும்மா சொல்லக்கூடாது.. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பண்ற போன் காச சேமிச்சிருக்கீங்கா....கங்கிராஜுலேசன்...!

Anonymous said...

இங்க அமெரிக்கன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, 30 முதல் 90 நாட்கள் வரை, திரும்ப குடுக்க பாலிசி உண்டு.. அது உண்மையில் உபயோகமான பாலிசி//
எல்லா பொருட்களும் உண்டா ஆச்சர்யமான விசயம் தான்

ஜீவன்பென்னி said...

துபாய்ல திடிர்ர்ர்ர்ர்ர்னு ஹெல்த் இன்ஸ்பெக்டர் கடைக்குள்ளார நுழஞ்சு செக் பண்ணிட்டு ஏதாச்சும் சரியில்லன்னா லம்பா ஒரு அமவுண்டுக்கு பேப்பரை கொடுத்துட்டு நடைய கட்டிட்டே இருப்பாங்க.....

சாருஸ்ரீராஜ் said...

nalla eluthi irukinga

கவி அழகன் said...

நகைச்சுவையுடன் சில கருத்துக்களும்
தரமாக உள்ளது வாழ்த்துக்கள்

செல்வா said...

//இந்த மாதிரி... அப்பப்ப வீர சாஹசம் எல்லாம் செய்றது உண்டுங்க.. அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்.. //

அது சரி ..!!

செல்வா said...

// எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது. நம்ம ஊர்ல எதுவும் மாற்ற இந்த வசதி இருப்பதில்லை..//

செமையா இருக்கும் போல ..! ஆனா நீங்க சொல்லுறது சரிதான் .. நம்ம ஊர்ல கூட்டம் அதிகம் .. அதனால கட்டுப்படுத்த முடியாது ..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த திருப்பிக்கொடுக்கிற விசயத்தை அமரிக்காகாரங்க மிஸ்யூஸ் செய்யறாங்களா..இல்ல நம்ம ஊருக்காரங்களா.

நாடோடி said...

உங்க‌ள் அனுப‌வ‌மும் சேர்த்து எழுதுவ‌தால் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையாக‌ போகிற‌து..

ஹேமா said...

//வண்டிய ஸ்டார்ட் பண்ணி
ரிவர்ஸ்-ல பின்னாடி வரதுக்கு பதிலா.... அவ்வ்வ்வவ் ஆக்சிலரேட்டர் அழுத்தி முன்னாடி வேகமா போய்ட்டேன்..... அப்புறம் என்ன, டமால் தான்..//

ஐயோ....நானும்தான்.ஆனால் 8 வருடத்திற்கு முன்னம்.
அனுபவங்களைத் தொடருங்கள்.
ரசிக்க ரெடி !

Priya said...

சுவாரசியமா இருக்கு!தொடருங்கள் தோழி!

Menaga Sathia said...

/////எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது.///

அடுத்த தடவ நீங்க அந்த கடைக்கு போகணுமில்லயா.. இல்லன்னா வருவீங்களா..// ஹா ஹா இது சூப்பரு...நல்லா நகைச்சுவையா எழுதிருக்கிங்க ஆனந்தி..தொடருங்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னால மத்தவங்களுக்கு தான் பிரச்சின இல்லன்னு சொன்னனே தவிர//
அதை நாங்க இல்ல சொல்லணும்

முன்னாடி பின்னாடி மாத்தி மாத்தி ஓட்டுறதுல எக்ஸ்பெர்ட் போல இருக்கே... நானும் ஒரு முறை இந்த மாதிரி செஞ்சு அன்னிக்கி உயிர் பொழச்சது எங்கம்மா செஞ்ச புண்ணியம் தான்... ஹா ஹா

//ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. !//
ஹா ஹா ஹா... இது சூப்பர்...

//அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்//
இதுக்கு மேலயும் டேமாஜ் ஆக என்ன இருக்குங்க... ஹா ஹா ஹா

Riyas said...

சூப்பருங்கோ...


http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post.html

ம.தி.சுதா said...

உங்களுக்கென்னப்பா அமெரிக்காவாசிகள்....

ILA (a) இளா said...

அடடே எப்படி 2 பதிவுகளை தவறவிட்டேன்? நாம் பண்ற தப்பை இன்னொருத்தரும் பண்ணியிருக்காங்களான்னு படிக்கிறதே தனி சுகம்தானுங்களே

Mahi said...

/ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. ! /ஆஹா,நீங்க ரொம்ப சமர்த்து ஆனந்தி! AAA வாசல்லயே ஆக்சிடெண்ட் ஆனா,ஜாலிதானே?அவிங்க வரவரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதில்லயே!!!எப்பூடி???

பாருங்க,எல்லாரும் இதவச்சு உங்க பேர டேமேஜ் பண்றப்ப,நானு உங்க இமேஜ பூஸ்ட் பண்ண வந்திருக்கேன். ஹிஹிஹி!
சீக்கிரம் தொடருங்க ஆனந்தி!இமேஜ் பத்தில்லாம் கவலைப்படாதீங்க,மீண்டும் பூஸ்ட்டுடன் வரேன்.:)))))))))

Unknown said...

arumai ananthi.

well said.
:)

vanathy said...

ஆனந்தி, சூப்பரா இருக்கு. கார் ஓட்டுவதில் நீங்கள் கில்லாடி போல இருக்கே. என் காரில் ஒரு சின்ன கீறல் விழுந்தாலே எனக்கு என் ஆ.காரரை நினைச்சு நடுக்கமே வந்து விடும்.

/ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே.//
superma!

கமலேஷ் said...

உங்க பதிவை படிச்ச எப்பேர்பட்ட டென்சனும் ரிலாக்ஸ் ஆகிடுதுங்க.

நல்ல சுவாரசியம். வாழ்த்துக்கள் தொடருங்கள்..

Anisha Yunus said...

நீங்களாவது பரவாயில்ல. நான் லைசன்ஸ் இல்லாமலே மூணு டிக்கட் வாங்கி ஃபைனும் கட்டியிருக்கேன்...எப்பூடி, இந்தியாக்காரங்கன்னா டிஃபரண்ட்டுன்னு அவங்களுக்கு தெரிய வேணாம்? ஹி ஹி ஹி.

Try with all your might next time, sis. Good luck :)

Dhinakar said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...

லைசன்ஸ் வாங்க அங்க எவ்வளவு மால் வெட்டணும்?/////


சதீஷ்குமார் நல்ல கேள்வி !!!

Kousalya Raj said...

உங்க ஸ்டைல கார் ஓட்ட கத்துக்கணும் ஆனந்தி...!! ஊர் பக்கம் வந்தா சொல்லுங்க....

அது எப்படிப்பா அவஸ்தையை கூட இப்படி அழகா வருணிக்கிரீங்க...!!?

:))

Vijiskitchencreations said...

super ananthi.

Akila said...

u r amazing..... neenga solra vitham romba nalla iruku.....

looking for more from u.....

Nandhini said...

//////வாங்கிய துணி சைஸ் சரியில்லைன்னா கொண்டு போய் குடுத்து வேற மாத்திட்டு வரலாம். (ஆனா...அதையும் மிஸ் யூஸ் பண்ற ஆளுங்களும் இருக்காங்க..)////

சூப்பர் கண்ணா சூப்பர்....இந்த மாதிரி ஆட்கள் திருந்தவே மாட்டாங்க. எழுதுங்க...எழுதுங்க...எழுதிகிட்டே இந்த மாதிரி ஆட்கள் மானத்த வாங்குங்க.

Geetha6 said...

nice madam!!

மோகன்ஜி said...

ஆனந்தி! உங்கப் பதிவு அட்டகாசமாய் இருக்கு.கார் டிரைவிங் அனுபவங்கள் ரசித்தேன்.என்னிடம் பெண்களின் கார் டிரைவிங் பற்றிய க்ளிப்பிங் இருந்தது.இப்பொழுது தேடும் போது கிடைக்கவில்லை. பிறிதொரு சமயம் அனுப்புகிறேன்.காரை ஓட்டும் போது பார்த்து ஓட்டவும்.ஒபாமா மேல் மோதி விடாமல்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கருத்து கூறிய, அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...
உங்க எல்லாருடைய கருத்துக்கும், தனி தனியே சீக்கிரம் பதில் சொல்கிறேன்.. :-))))
தொடர் ஆதரவிற்கு...மனமார்ந்த நன்றிகள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
யாரு நீங்க தானே.... ஆமாமா.. எனக்கு ரெம்ப நல்லாத் தெரியுமே... :P :D
ஓ.. எக்ஸ்பயரி தேதி சொரியற கேஸ்-ஆ?? ஓகே ஓகே... :-))
அட பாவி.. அடி வாங்கி தரதுக்கா.....?? ரொம்ப மோசம்....
ஹா ஹா ஹா... சஞ்சய் செம செம.. உதாரணம்.. :-))))
தேங்க்ஸ்....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சே. குமார்
ஹ்ம்ம்... சரிங்க.. இன்னமும் முயற்சி செய்கிறேன்..
கருத்துக்கு நன்றி.. :)




@@ஸ்டார்ஜன்
நன்றிங்க..
ஹா ஹா.. ஆமாமா.. வீரமங்கை தான்... :-))
ஹா ஹா... அதானே....
அதுவும் சரி தான்... இருக்குமாய் இருக்கும்..
கருத்துக்கு நன்றிங்க :-)




@@அன்புடன் பிரசன்னா
ரொம்ப சந்தோசம்..
ஹா ஹா.. எல்லாம் இங்க உள்ள ஒப்பீசெர் தான்.. :-))
ஒன்னும் கவலைபடாதீங்க ஏற்பாடு பண்ணிரலாம்..
வருகைக்கு நன்றி.. :-)



@@எம். அப்துல் காதர்
ஹா ஹா.. நன்றிங்க..
ரொம்ப சரி.. இங்கும் சில சமயங்களில் அப்படி செய்வாங்க...
எஸ், டிரைவிங் சரி ஆச்சுங்க.. பயப்படற மாத்ரி எல்லாம் இல்லை..:)
வருகைக்கு நன்றிங்க. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அன்பரசன்
வந்து ரசித்து சிரித்ததற்கு நன்றிங்க.. :-)




@@சைவகொத்துப்பரோட்டா
ஹா ஹா ஹா...
முடியலங்க.... சூப்பர் கமெண்ட் போங்க.. :-)))
வருகைக்கு நன்றிங்க :-)




@@சௌந்தர்
ஹா ஹா ஹா... (ஆஹா... பைசா குடுக்காமயே சவுண்ட் ஓவரா இருக்கே....ஹ்ம்ம்ம்)
ஹலோ... நாங்க டெஸ்டும் பண்ணுவோம்.... ரிப்பேர்-ம் பண்ணுவோம்...
அது எங்களுக்குள்ள டீலிங்....
வருகைக்கு நன்றி :-))





@@என்னது நானு யாரா?
ஹா ஹா ஹா... எச்சூச்மி சார்....
பதிவ ஒழுங்கா படிங்க சார்...
வெளியூர் சென்று திரும்பி வந்ததால், காபி போட பால் வாங்க போனேன்.. :-))

கேப் கிடச்சா.. வந்து டேமேஜ் பண்ணிற வேண்டியது.. என்னா வில்லத்தனம்...???
வருகைக்கு நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சி. பி,. செந்தில்குமார்
ஹா ஹா ஹா.. நிறையவே இருக்காங்க... (மனுஷனுக்கு என்னென்ன கவலை பாருங்க )
திங்க்ஸ் நேர்த்தியா அடுக்கி இருக்குதேன்னு இந்த படம் செலக்ட் பண்ணேன்.. :-))
வருகைக்கு நன்றிங்க... :-)





@@சிவராம்குமார்
ஹா ஹா ஹா.. ச ச.. அப்படியெல்லாம் இல்லைங்க..
இந்த முறை இந்தியா வந்திருந்த போது, கவனித்தேன்..
நம் நாட்டிலும்...நல்லதொரு முன்னேற்றம் வந்திருக்கிறது.
வருகைக்கு நன்றி :-))





@@Madhavan
ஹ்ம்ம்... எஸ்.. MRP பத்தி சொன்னிங்களே ரொம்ப சரி..
வருகைக்கு நன்றிங்க. :-)




@@சிங்கக்குட்டி
ஹா ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.
வருகைக்கு நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Dhinakar
வாவ்... விளக்கமான உங்கள் கருத்திற்கு நன்றிங்க..





@@janaki
அச்சச்சோ.... அப்படி எல்லாம் இல்லைங்க....நீங்க வேற..
வருகைக்கு நன்றி :-)





@@நிகழ்காலத்தில்
ரொம்ப நன்றிங்க..
வருகைக்கு நன்றி.. :-)





@@ப்ரியமுடன் பிரபு
ஹா ஹா ஹா..
சரி சரி.. கேட்டத அப்படியே இங்கயே விட்டுறணும்...
வருகைக்கு நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Balaji saravana
ஹ்ம்ம்.. இருக்கற மக்கள் தொகைக்கு இப்போதைக்கு நினைக்க முடியாது தான்...
எதிர்காலத்தில் இப்படி நடக்கும்னு நம்புவோமாக...
வருகைக்கு நன்றிங்க. :-)




@@DrPKandaswamyPhD
ஹா ஹா ஹா.. அடடா...அவ்ளோ மோசம் எல்லாம் இல்லைங்க.. அவ்வ்வ்வ்
நீங்களே பாக் பண்ணிட்டு தான் மறுவேலை பாப்பீங்க போல இருக்கு :-))

வருகைக்கு நன்றிங்க



@@ஆர். கே. சதீஷ்குமார்
ரொம்ப நன்றிங்க.. :-)
ஹா ஹா ஹா.. நம்ம ஊர் மாதிரி மால் வெட்டி எல்லாம் லைசென்ஸ் வாங்க முடியாதுங்கோ..!!!
வருகைக்கு நன்றி :-)

r.v.saravanan said...

அழகான சுவாரஸ்யமான தொகுப்பு நல்லாருக்கு ஆனந்தி

லதானந்த் said...

நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

ரெண்டு விஷயம் மேடம் , பஸ்ட்டு உங்க காருல பிரேக்க கலட்டி விட்டு ஓட்டிப் பாருங்க ..(ஹய்யா...... ஒரு ஆழ மாட்டி விட்டாச்சு ) அப்புறம் இந்த மால்கல்ல 3 மாச பாலிசிய இன்னும் கொஞ்சம் எச்டன் பண்ண மாட்டாங்களா ?

நெல்லை விவேகநந்தா said...

நீங்கள் அப்பார்ட்மென்டில் குடியிருந்தது பற்றி குறிப்பிட்டபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சென்னையைவிட அமெரிக்காவில் அப்பார்ட்மென்ட்,வீட்டுமனை விலை குறைவு என்று ஒருமுறை செய்தி படித்தேன். அது உண்மையா? அது பற்றி நீங்கள் குறிப்பிட்டால், மேலும் பல பயனுள்ள அமெரிக்க தகவல்களும் தமிழர்களை சென்றடையுமே...

Ramesh said...

ரொம்ப சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க..இப்பதான் 3 பாகத்தையும் படிச்சு முடிச்சேன்...அருமையா இருக்குங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
ஹிஹி.. ரெம்ப நன்றிங்க சார்..
ஹலோ வைக்கிற விழாவ லோக்கல்-ல வைக்க பிடாதா?
சரி விடுங்க, டிக்கெட் அனுப்புங்க வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்.. :-))

ஹா ஹா.. அதே அதே.. என்ன ஒரு கண்டுபிடிப்பு.. :D
ரொம்ப தேங்க்ஸ்..





@@ஆர். கே. சதீஷ்குமார்
ஆமாங்க.. எல்லா பொருட்களுக்கும் உண்டு..:-)
நன்றிங்க.




@@ஜீவன்பென்னி
ஐ... இது நல்ல ஐடியா-வா இருக்கே..!
வருகைக்கு நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சாருஸ்ரீராஜ்
ரொம்ப நன்றிங்க :-)







@@யாதவன்
ரசித்து கருத்து இட்டதற்கு நன்றிங்க.. :-))





@@ப. செல்வக்குமார்
ஆமா.. நம்ம ஊர் கூட்டத்துக்கு சரியா வராது :)
வருகைக்கு நன்றிங்க...





@@முத்துலட்சுமி/muthuletchumi
ஹா ஹா... குட் கொஸ்டின்..
ரெண்டு பேருமே தான்.. என்னத்த சொல்ல :-))
வருகைக்கு நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@நாடோடி
ரசித்து படித்தமைக்கு நன்றி
வருகைக்கு நன்றிங்க... :-))






@@ஹேமா
ஹா ஹா ஹா... ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்... :D
ரொம்ப நன்றிங்க..





@@Priya
ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா :-))






@@Mrs . Menagasathia
ரொம்ப நன்றிங்க மேனகா.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அப்பாவி தங்கமணி
ஹா ஹா... சரி சரி.. சொன்னா நம்புங்கப்பா...
எஸ் எஸ்.. எக்ஸ்பெர்ட்டே தான்ப்பா.. நம்ம திறமை ஊருக்கு தெரியா மாட்டேங்குது..
ஹா ஹா ஹா.. செம செம.. //உங்க அம்மா செஞ்ச புண்ணியமா.../// சூப்பர் :-)
அதானே... நாமளே டேமேஜ் பண்ணியாச்சு.. சரி விடுங்க..
ரசித்து சிரித்ததற்கு தேங்க்ஸ் பா..






@@Riyas
ரொம்ப தேங்க்ஸ் :-)






@@ம. தி. சுதா
ஹா ஹா ஹா... இதில நல்லதும் இருக்கு, கேட்டதும் இருக்குங்க...
அமெரிக்க வாசி என்ற போர்வை எல்லாம், சும்மா பேச்சுக்கு தான்...
வருகைக்கு நன்றிங்க :-)





@@ILA @இளா
ஹா ஹா ஹா.. அதுவும் சரி தான்...
நீங்க ரசிச்சு படிச்சதற்கு ரொம்ப நன்றி.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Mahi
ஹா ஹா ஹா.. ரொம்ப கரெக்ட் மகி.. :-)))
ரொம்ப தேங்க்ஸ்ப்பா...
சீக்கிரம் தொடருகிறேன்.. :-))







@@poorna
தேங்க்ஸ் பூர்ணா.. ;-))







@@vanathy
ஹா ஹா ஹா.. இப்போ ஒழுங்கா ஓட்டுரேன் வாணி.. ;-))
அது என்னவோ உண்மை தான்.. இடிச்சதும் பர்ஸ்ட் கண் முன்னாடி வருது...அவங்க முகம் தானே... :D
ரொம்ப தேங்க்ஸ்ப்பா. :-))






@@கமலேஷ்
நீங்க சொன்னது கேட்டு ரொம்ப சந்தோசம்.. :-)
உங்க வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@அன்னு
ஹா ஹா ஹா... சூப்பர் அன்னு..
நீங்க தான் நம்ம தோஸ்த்.. ;-))
தேங்க்ஸ் பா.






@@Dhinakar
வாங்க தினா..
இங்க மால் வெட்டும் பழக்கம், என் கண் எதிரில் பார்த்ததில்லை.. :-))






@@Kousalya
ஹா ஹா ஹா... கண்டிப்பா...உங்களுக்கு சொல்லித் தராமலாங்க.. :-))
உங்க கருத்திற்கு ரொம்ப நன்றிப்பா:-)






@@Vijiskitchen
ரொம்ப தேங்க்ஸ்மா. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Akila
thanks a lot Akila .... :-))
yes , surely i will try to write more






@@Nandhini
ஹா ஹா ஹா... ஏன்ம்பா நீங்க வேற...
கண்ணா நீ எத நினச்சு சிரிக்கிறீங்கன்னு.. நேக்கு தெரியும்... :P :P
தேங்க்ஸ் நந்தினி :)







@@Geetha6
ரொம்ப தேங்க்ஸ் :-))







@@மோகன்ஜி
ஹா ஹா ஹா... ரொம்ப ரொம்ப சந்தோசங்க..
நீங்க ரசித்து படித்ததற்கு நன்றி..
எஸ், கண்டிப்பா கிளிப்பிங் கிடைத்தால் அனுப்புங்க..
(இருக்கற கொஞ்ச நஞ்சம் இமேஜ்-ஜையும் டேமேஜ் பண்ணிரலாம்) சும்மா சொன்னேங்க.
ஓகே ஓகே.. ஒபமா பத்திரமா இருப்பார்.. :-))
நன்றி...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@r . v . saravanan
ரொம்ப நன்றிங்க சரவணன்.. :-))






@@லதானந்த்
ரொம்ப நன்றிங்க.. :-)






@@மங்குனி அமைச்சர்
ஹா ஹா ஹா.. ஏன் இந்த கொலை முயற்சி??? :-))
ஆமா... ஒரு வருஷம் எக்ஸ்டண்ட் பண்ண சொல்லி மனு போட்ருக்கேன்.. :-)
ரொம்ப நன்றிங்க.






@@நெல்லை விவேகானந்தா
கண்டிப்பாக.. அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்..
உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி :-))






@@பிரியமுடன் ரமேஷ்
வாங்க ரமேஷ்.. ரொம்ப நன்றி.. பொறுமையா 3 பாகமும் ஒண்ணா படிச்சதுக்கு..:-))

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)