topbella

Thursday, August 26, 2010

உன் நினைவில்....!!


எங்கேனும் நான் சென்றாலும்
என்னெதிரே உன் சாயலில்
எவர் வந்தாலும்
என் மனதிற்குள் பட்டாம்பூச்சி...!

கணநேரம் நீ காணாமல் போயினும்
ரணமாகும் என் இதயம்... அதைக்
குணமாக்க வேண்டியவன் என்
மனம் வாடச் செய்ததேனோ...??

உன்னை உயிர் என்றேன்
எந்தன் சுவாசம் என்றேன்
இவ்விரண்டும் இல்லாவிட்டால்
ஏதேனும் வாழ்க்கை உண்டோ..??

சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை..
நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!

...அன்புடன் ஆனந்தி

59 comments:

Sanjay said...

//என் மனதிற்குள் பட்டாம்பூச்சி...!//
ஒஹ் யு மீன் பட்டர்ப்ளை....:D :D

//கணநேரம் நீ காணாமல் போயினும்
ரணமாகும் என் இதயம்... அதைக்
குணமாக்க வேண்டியவன் என்
மனம் வாடச் செய்ததேனோ...??//

கணம்,ரணம்,குணம், மனம்...ஆஹா....;-)

இவ்விரண்டும் இல்லாவிட்டால்
ஏதேனும் ஒரு வாழ்க்கை உண்டோ??
அதானே..

//சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை..
நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!//

அருமையா அருமை..ICING on the CAKE...

வழக்கம் போல கலக்கல : )

ஜெய்லானி said...

:-)))))))))

மதுரை சரவணன் said...

/சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை..
நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!//

super. vaalththukkal.

Mythili (மைதிலி ) said...

kavithai superrrr.....

Priya said...

அழகான கவிதை வரிகள் ஆனந்தி... வாழ்த்துக்கள்!

Madumitha said...

காதலில் நனைந்த வரிகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதையில் பிரிவின்வலி மனதை புரளச் செய்கிறது. அழகான கவிதை ஆனந்தி.. ரொம்ப நல்லாருக்கு..

மின்மினி RS said...

அழகான கவிதை... அசத்துறீங்க அக்கா...

என்னது நானு யாரா? said...

எளிமையாகவும், அருமையாகவும் இருக்குங்க உங்க கவிதை!

சதாரணமா ஆண்கள் தான் இந்த அளவு காதலை பற்றி எழுதுவாங்க. இப்போ பெண்களும் இதில இறங்கி களக்கறீங்க! களக்குங்க!!!

சௌந்தர் said...

கணநேரம் நீ காணாமல் போயினும்
ரணமாகும் என் இதயம்...///

அது சரி ரொம்ப ரணம் போல

ஜெயந்த் கிருஷ்ணா said...

கண்ணியமான காதல் சொல்லும் கனமான வரிகள்...

சிவராம்குமார் said...

\\நேசிக்கத் தொடங்கி விட்டால்யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!\\

சத்தியமான உண்மை.... மனசுக்கு மிக நெருக்கமான வரிகள்!! அருமை!!!

'பரிவை' சே.குமார் said...

kavithai superoooooooo super.

Anonymous said...

\\கணநேரம் நீ காணாமல் போயினும்
ரணமாகும் என் இதயம்... அதைக்
குணமாக்க வேண்டியவன் என்
மனம் வாடச் செய்ததேனோ...??\\

மனதை வருடும் வார்த்தைகள்...
யார் அந்த பாக்கயசாலி...

Anonymous said...

சுவாசிக்க மறந்தாலும்.. உன்னையோசிக்க மறப்பதில்லை..நேசிக்கத் தொடங்கி விட்டால்யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!


அருமை அருமை..அருமை...

அருண் பிரசாத் said...

//சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை..
நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை.//

அதான, எதுக்கு காதலர்களுக்குள் கெளரவம். அப்படி பார்ப்பது நமக்குள் நாமே கெளரம் பார்பதற்கு சமம்

நாடோடி said...

"பிரிவின் வ‌லி" க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.. வாழ்த்துக்க‌ள்.

Ramesh said...

கவிதை மிகவும் அருமை...அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படமும் மிக அருமை....

Unknown said...

நல்ல வரிகள்.. சூப்பர் கவிதை..

Unknown said...

அன்பிற்கினிய ஆனந்தி..,

பெண்களின் காதல்,கற்பனை,பிரிவு ... இவையெல்லாம் அவள் மனதினுள்ளே புதைந்துவிடுகிறது. மீட்டெடுத்து தாருங்கள் தாய்க்குலமே..
உங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது - மீண்டும் கல்லூரி நினைவுகள் வந்து போனது.

/ / "உன்னை உயிர் என்றேன்
எந்தன் சுவாசம் என்றேன்

சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை.." / /

மீண்டும் மீண்டும் படித்து ரசித்ததால் ஒரு சந்தேகம்..

"அவன் சுவாசமாக இருக்கும் போது எப்படி மறக்க முடியும்?"

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.

Kousalya Raj said...

//நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..//

உண்மையான உணர்வுகள்....! நேசத்திற்கு முன் அனைத்தும் தலை வணங்கிவிடும்... அருமை தோழி.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. கவித.. கவித.

நல்லாருக்கு

சசிகுமார் said...

அருமை

அன்புடன் நான் said...

கவிதை மிக கலக்கல்.பாராடுக்கள்.

அன்புடன் நான் said...

இது பசலை தூதா?

Menaga Sathia said...

very nice kavithai ananthi!!

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு பா எல்லா வரிகளும் அருமை

"சுவாசிக்க மறந்தாலும்.. உன்னையோசிக்க மறப்பதில்லை..நேசிக்கத் தொடங்கி விட்டால்யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!"

இது ரொம்ப ரொம்ப அருமை ..

சின்னப்பயல் said...

“அது” கொஞ்சம் யாருன்னு சொல்றீங்களா?
:-)

sakthi said...

அழகியதொரு கவிதை

r.v.saravanan said...

நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..

கவிதை வரிகள் அருமை ஆனந்தி வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//எங்கேனும் நான் சென்றாலும்என்னெதிரே உன் சாயலில் //

//கணநேரம் நீ காணாமல் போயினும்ரணமாகும் என் இதயம்..//

//உன்னை உயிர் என்றேன்எந்தன் சுவாசம் என்றேன் //

//சுவாசிக்க மறந்தாலும்.. உன்னையோசிக்க மறப்பதில்லை//


அடேங்கப்பா..........!!! ஆட்டோ பின்னேடியே எழுதலாம் போல இருக்கே...!!! சூப்பர் ...இருங்க நா முதல்ல போய் ஒரு ஆட்டோ வாங்கிட்டு வரேன்..


நான் ரசித்த சூப்பர் வரிகள் ....

Sanjay said...

@ஜெய்லானி:

அம்புட்டு தான்...இந்த வாட்டியும் வடை கிடைக்காது..ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணி கெளம்புங்க...:D :D

ஜெய்லானி said...

//அம்புட்டு தான்...இந்த வாட்டியும் வடை கிடைக்காது..ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணி கெளம்புங்க...:D :D//

வடையா ச்சே..ச்சே..நா சாப்பிடுவதே கிடையாது .. எனக்கு அலர்ஜி டாக்டர் சொல்லிட்டாரு ...அதனால் நீங்களே சாப்பிடுங்க சார்...ஐயா...!!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
.......எஸ் எஸ்.. அதே அதே :D :D
எப்புடி......அடுக்கு மொழில T .R . ஐ மிஞ்சிட்டேனா??? :P :P

//ICING ON THE CAKE//
நன்றி நன்றி.. :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
......என்ன இவ்ளோ பெரிய ஸ்மைல்-லு :-))))


@மதுரை சரவணன்
.......ரொம்ப நன்றிங்க..


@மைதிலி கிருஷ்ணன்
.......தேங்க்ஸ் மைத்தி... ;-))


@priya
.........வாழ்த்துக்கு நன்றி பிரியா.. :-))

ஜில்தண்ணி said...

என்ன சகோ இதென்ன ப்ளாக் விடு தூதா :)

என்னுமோ நடத்துங்க :)

ஸ்ரீராம். said...

கணம்,ரணம், குணம்,மனம்,
சுவாசிக்க,யோசிக்க,,நேசிக்க யாசிக்க...
அட...!
கடைசி வரி நல்லா இருக்கு. ஆனாலும்...

சைவகொத்துப்பரோட்டா said...

காதல் ரசம் சொட்டுகிறது!!

vanathy said...

super kavithai.

Sriakila said...

அருமையான காதல் வரிகள்!

Akila said...

kavithai migavum arumai.... last para is superb....

எம் அப்துல் காதர் said...

@@@@ கவிதை அருமை ஆனந்தி!

ஜெய்லானி said...

// இருங்க நா முதல்ல போய் ஒரு ஆட்டோ வாங்கிட்டு வரேன்..//

முந்தா நேத்து ஆட்டோ அனுப்புனேனே! ஆட்டோவும் திரும்பல, அதிலனுப்பிய ஆட்களும் திரும்பல! பகீர்ங்குது. என்னாச்சு!!!~??? ஹஹா.. ஹஹா..

வேங்கை said...

NICE MA :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Madumitha
.....வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)



@Starjan (ஸ்டார்ஜன்)
....வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :)



@மின்மினி
....ரொம்ப நன்றி :)



@என்னது நானு யாரா?
...உங்க வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க..:)



@சௌந்தர்
....வாங்க சௌந்தர்.. கருத்துக்கு நன்றி :)



@வெறும்பய
.....உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி :)



@சிவராம்குமார்
........உங்க வருகைக்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றி :)



@சே. குமார்
......ரொம்ப நன்றிங்க :)



@surya
.......ஹா ஹா.. நல்ல கேள்வி தான்..!
உங்க வருகைக்கு நன்றிங்க :)



@அருண் பிரசாத்
......உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :)



@நாடோடி
......ஹ்ம்ம்.. உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :)



@பிரியமுடன் ரமேஷ்
........வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ரமேஷ் :)



@பதிவுலகில் பாபு
..........வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :)



@ரமேஷ்
//// "உன்னை உயிர் என்றேன்
எந்தன் சுவாசம் என்றேன்
சுவாசிக்க மறந்தாலும்.. உன்னை
யோசிக்க மறப்பதில்லை.." / /

மீண்டும் மீண்டும் படித்து ரசித்ததால் ஒரு சந்தேகம்..
"அவன் சுவாசமாக இருக்கும் போது எப்படி மறக்க முடியும்?"

மறக்க முடியாது தான்...!! உங்க புண்ணியத்துல எனக்கும் அந்த சந்தேகம் இப்போ வந்திருச்சு.. :-))
வருகைக்கு நன்றி...

Nandhini said...

கவிதை அருமை... அருமை......

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Kousalya
.........உண்மை தான்.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி.. :)


@அமைதிச்சாரல்
..........வருகைக்கு ரொம்ப நன்றி... :)


@சசிகுமார்
...........ரொம்ப நன்றிங்க.. :)


@ சி. கருணாகரசு
.......தூதெல்லாம் ஒன்னும் இல்லங்க.. :-))
ரொம்ப நன்றிங்க..


@Mrs.Menagasathia
..........ரொம்ப நன்றிங்க :)


@sandhya
...........நீங்க ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.. :)


@சின்னப்பயல்
.............இப்படி ஒரு பேர் வச்சுக்கிட்டு கேக்குறீங்களே... :-))))
வருகைக்கு ரொம்ப நன்றிங்க..


@sakthi
..............வருகைக்கு நன்றிங்க.. :)


@r .v .saravanan
............வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.. :)


@ஜெய்லானி
........ஆட்டோ வா....????
நா இப்போ என்ன சொல்லிட்டேன்னு ஆட்டோ..... :-)))
வருகைக்கு நன்றி..



@சஞ்சய்
...........ஹா ஹா.. ஓகே ஓகே..
ஜெய்லானி வாங்க, பதில் சொல்லுங்க..


@ஜெய்லானி
...........அலர்ஜியா?? ஓகே ஓகே.. :-))


@ஜில்தண்ணி - யோகேஷ்
........ஹிஹி... அதெல்லாம் ஒன்னுமில்லையே.. :-))
வருகைக்கு நன்றி.. :)



@ஸ்ரீராம்
..........ஆஹா.. இப்படியா... பாதியில கேள்வி விட்டுட்டு போவீங்க...
என்ன ஆனாலும்??? சொல்லிட்டு போங்க ஸ்ரீராம்... :-)
வருகைக்கு நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சைவக்கொத்துப்பரோட்டா
.........வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.. :)
ரொம்ப நாள் ஆச்சு உங்கள பாத்து.. எப்படி இருக்கீங்க??


@vanathy
............வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி வாணி.. :-)


@Sriakila
..............வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :)


@Akila
...........உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க :)



@எம். அப்துல் காதர்
............வருகைக்கு ரொம்ப நன்றிங்க... :-)

இப்போ ஆட்டோ எல்லாம் சப்ளை பண்றீங்களா?? ஓகே ஓகே..


@வேங்கை
...............வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க :)


@அன்பரசன்
..............வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க... :)



@Nandhini
.................ரொம்ப நன்றி நந்தினி :-)

சௌந்தர் said...

இந்த பதில் கமெண்ட் எல்லாம் ஏதோ அவசரத்தில் எழுதியது போல இருக்கு..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
...அவசரம் எல்லாம் ஒண்ணும் இல்லை.. ஊரில் இல்லாததால் பதில் போட நேரம் ஆகிவிட்டது. :)

சீமான்கனி said...

நினைவின் கவிதையில் நானும் தேடி பெற்றேன் என் நினைவுகளில் சில...அழகாய் வந்திருக்கு தோழி...வாழ்த்துகள்,,,,

Ahamed irshad said...

Nice Lines...

priyamudanprabu said...

அழகான கவிதை...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சீமான்கனி

///நினைவின் கவிதையில் நானும் தேடி பெற்றேன் என் நினைவுகளில் சில...அழகாய் வந்திருக்கு தோழி...வாழ்த்துகள்,,,,///

உங்க நினைவுகளை மீட்டுத் தந்ததில் சந்தோசம்..
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.. :)



@@அஹமது இர்ஷாத்
///Nice Lines...///

உங்க வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.. :)



@@பிரியமுடன் பிரபு
///அழகான கவிதை...///

உங்க வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

//சுவாசிக்க மறந்தாலும்.. உன்னையோசிக்க மறப்பதில்லை..நேசிக்கத் தொடங்கி விட்டால்யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!//
இனிய வரிகள்
கவிதையாய் இருக்கிறது...!
உங்கள் வருகைக்காக எனது பக்கங்கள் காத்திருக்கிறது..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com

முனியாண்டி பெ. said...

Nallaa ezhuthirinka...Vazhththukkal.

எல் கே said...

//நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!//

நேசிப்பில் உயர்வு தாழ்வு இல்லை...

செந்தில்குமார் said...

நேசிக்கத் தொடங்கி விட்டால்யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!

பட்டாசு வரிகள் ஆனந்தி.....

தினேஷ்குமார் said...

வணக்கம் ஆனந்தி
// நேசிக்கத் தொடங்கி விட்டால்
யாசிக்க கௌரவம் பார்ப்பதில்லை..!//

அருமையான வரிகள்

thiyaa said...

அருமைங்க

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)