topbella

Wednesday, August 11, 2010

"காண்டாமிருகமும் பேபி சோப்பும்....." -தொடர் பதிவு

"காண்டாமிருகமும் பேபி சோப்பும்....." தொடர் பதிவிற்கு என்னை அழைத்து.... ரெம்பக் கஷ்டமான ஒரு பதிவைப் போடச்  சொன்ன  தோழி காயத்ரிக்கு  ரெம்ப நன்றி..... !! (காயத்ரிக்கு  என் மேல என்ன கோவமோ... ???)

மொத்த பதிவர் கிட்டயும் அடி வாங்கி குடுக்காம.... உங்க ஆசை தீராது போல இருக்கு.....!! இதுக்கு நீங்க காண்ட்ஸ் மாதிரி எதாவது ஆசைப்பட்டிருக்கலாம்... அவ்வவ்...சரி எதையாவது சொல்லி, உங்க குழந்தைய சமாளிக்க ட்ரை பண்றேன்.

காயத்ரி அவங்க குடுத்த கதையின் தொடக்கம்....

“ ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்.. ஆனால் காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம்…........"

இப்போ நம்ம ரீலு... சாரி ப்பீலு... (அதாங்க பீலிங்க்ஸ்ச சொன்னேன்... இப்பவே சொல்லிட்டேன்... கதைய படிச்சிட்டு.. வர பின் விளைவுகளுக்கு  நான் பொறுப்பு இல்லிங்கோ.. )


அங்க வந்த மங்கி கிட்ட, காண்டாமிருகம் "மங்கி பையா... மங்கி பையா.." எனக்கு பேபி சோப்பு போட்டு குளிக்க ஆசைன்னு சொல்லிச்சாம்... அதுக்கு அந்த மங்கி, "கண்ணா காண்ட்ஸ்.... இங்க காட்டில அதெல்லாம் கிடைக்காது..." நீ வேணா ஒன்னு பண்ணு... நம்ம தலைவர் கிட்ட போயி கொஞ்சம் காசு வாங்கிட்டு வா... நா ஊருக்குள்ளார போயி உனக்கு சோப்பு வாங்கியாரேன்னு சொல்லிச்சாம்...!


உடனே... காண்ட்சும் ஒரே குஷி ஆகி, தலைவரான காட்டு ராஜாவைப் பார்க்க போச்சாம்... காட்டு ராஜா யாரு தெரியுமா?? நம்ம சிங்க ராசா தான்... (அவர் தன்னோட குகைக்குள்ள... புல் மீல்ஸ் அடிச்சிட்டு குப்புற படுத்து கிடந்தார்...) நம்ம காண்ட்ஸ்-கு சிங்க ராசாவ எழுப்பறதுக்கு ஒரே பயம்... (பாதியிலே எழுப்பி பாதுஷா மாதிரி கடிச்சு தின்ருசின்னா?? எதுக்கு ஏழரைன்னு......) ராசா எந்திரிக்க வரை.... குகை வாசலிலேயே காத்து கிடந்தது...


ஒரு வழியா சிங்க ராசா...முழிச்சு... சோம்பல் முறிச்சு ஒரு "ரோர்ர்ர்ர்ரர்ர்ர்ர் "-ன்னு உறுமி முடிச்சதும்... காண்ட்ஸ் மெதுவா உள்ள எட்டி பாத்தது... சிங்க ராசா... யாரடா அங்க... எட்டி பாக்கிறதுன்னு கேட்டதும், காண்ட்ஸ் சிங்கம் முன்னாடி போயி... ஒன்னும் இல்ல ராஜா... எனக்கு ஒரு உதவி கேக்க வந்தேன்.. என்று சொல்லிச்சாம்... என்ன வேணும் சொல்லுன்னு சிங்கம் கேட்டதும்... காண்ட்ஸ் தன்னோட பேபி சோப்பு கதைய சொல்லிச்சாம்..


ராஜாவும், அதுக்கு நா என்னடா பண்ண முடியும்ன்னு கேட்டதாம்.. காண்ட்ஸ்... உடனே... ராஜா ராஜா.. எனக்கு கைமாத்தா ஒரு 10 ரூவா குடுத்தியானா.... நா ஒரு பேபி சோப்பு வாங்கி... நானும் குளிச்சிட்டு, உனக்கும் பாதி சோப்பு தரேன்னு சொல்லிச்சாம்.. இம்புட்டு நாளும் குளிக்காம, அசிங்கமா இருந்த சிங்கமும் அதை நம்பி, "அட நம்மளும் தான் ஒரு தேஜஸ் ஆகலாம்னு..." 10 ரூவா குடுத்து அனுப்பிச்சாம்....


நேரே அந்த ரூவாய எடுத்திட்டு, மங்கி கிட்ட போயி குடுத்து... எப்படியாவது பேபி சோப்பு வாங்கிட்டு வான்னு காண்ட்ஸ் சொல்லிச்சாம்.. மங்கியும் ஒரே குஷில பேபி சோப்பு வாங்க போச்சாம்.. ஊருக்குள்ள வந்ததும், மங்கிக்கு எங்க போயி பேபி சோப்பு வாங்கன்னே தெரியலையாம்..!


உடனே.. ஒரு மரத்து மேல உக்காந்து வர போகிற குட்டி பாப்பாவை எல்லாம் பார்த்துட்டே இருந்துச்சாம்... அப்புறம் திடீர்னு ஒரு ஐடியா வந்து... ஒரு பாப்பா பாமிலி-யை பாலோ பண்ணிட்டே அவங்க வீட்டுக்கு போயிரிச்சாம்.. அந்த பாப்பாவோட அம்மா, கொஞ்சம் நேரம் கழிச்சு, பாப்பாவை குளிக்க வைக்க பேபி சோப்பை எடுத்துட்டு, பாப்பாக்கு தண்ணீர் ஊத்திட்டு இருக்கும் போது, மங்கி அலேக்கா அந்த வடையை... (சாரி பழக்க தோஷம்...) அந்த சோப்பை எடுத்துட்டு காட்டுக்குள்ள ஓடிருச்சாம்..


நேரே போயி, காண்ட்ஸ் கிட்ட நடந்த எல்லாமும் சொல்லிச்சாம்.. காண்ட்ஸ்-க்கும் ஒரே சந்தோசம்.. இப்போ தான் சோப்பு ப்ரீயாவே கிடைச்சிருச்சே... சிங்கத்து கிட்டே போயி... எனக்கு சோப்பு எல்லாம் வேண்டாம்.. இந்தா உன் 10 ஓவான்னு குடுத்திருச்சாம்....! சிங்கத்துக்கு எப்படியாவது... குளிச்சு... முழுகி... மணக்கலாம்னு பாத்தா வடை போச்சேன்னு ... சை.. திரும்பவும் சாரிங்கோ........சோப்பு போச்சேன்னு.... பீலிங்க்ஸ்ல ஒரு பாட்டு பாடுச்சாம்.....

"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."


ஏன் பிறந்தாய் மகனே... மெட்டுல பாடிக்கோங்க...!!

அப்படியே கேமரா-வ கட் பண்ணி காண்ட்ஸ்-ச காட்றோம்.. பேபி சோப்பு போட்டு குளிச்சி.....சும்மா கும்ம்னு பாடிட்டே வரார்.... நீங்களே பாருங்களேன்.. :D :D



சப்பாஹ்.. ஒரு வழியா கதை சொல்லி முடிச்சிட்டேன்... உங்க பாப்பா என்ன சொல்றான்னு கேட்டு சொல்லுங்கப்பா..! யாருங்க அங்க.. ஒரு சோடா ப்ளீஸ்... பொய் சொல்லி சமாளிக்கிறது எம்புட்ட்ட்ட்டு கஷ்டம்....!!


83 comments:

Sanjay said...

//ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்.. //
உக்காந்து யோசிப்பைங்களோ???!!!! :D :D

//"மங்கி பையா... மங்கி பையா.." "கண்ணா காண்ட்ஸ்...//

ஹா ஹா ஆரம்பமே அசத்தல்..கவுண்டமணி கிட்ட டியூஷன் போனீங்களா?? :D :D

//மங்கி அலேக்கா அந்த வடையை... (சாரி பழக்க தோஷம்...) //
சூப்பரப்பு......

//வடை போச்சேன்னு ... சை.. திரும்பவும் சாரிங்கோ........சோப்பு போச்சேன்னு....//
:D :D

//"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...

பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."//

ஹா ஹா ஹா ஹி ஹி...சிரிச்சு சிரிச்சு முடியல..... :D :D

இவ்வளோ சிரிக்க வச்சுட்டீங்க, இப்போ எனக்கு சோடா குடுங்க....!!!

kavisiva said...

அடடா அசத்திட்ட்ட்டீங்க ஆனந்தி.

காட்டுல உட்கார்ந்து யோசிச்சீங்களோ!

r.v.saravanan said...

"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."

ஹா ஹா

முடியல....

சாருஸ்ரீராஜ் said...

ha ha ha , sirichu malala ellorum oru mathiri parkuranga , super kathaya irukku (he he tamil font not working)

Anonymous said...

nalal nagaichuvaya eluthi irukeengaa.. en ponnuku solla oru kathai kidachiduchu,,..

sowmya

ஸ்ரீ.... said...

தொடர்பதிவு காடு வரைக்குமா? பதிவுலகம் நல்லாயிருக்கட்டும்! :)

ஸ்ரீ....

தமிழ் உதயம் said...

எப்படியோ கதைய முடிச்சிட்டிங்க. குழந்தைங்க கதை எழுதலாமே நீங்க.

Menaga Sathia said...

ஹா ஹா அசத்திட்டீங்க அனந்தி..சிரிச்சு முடியல்..நல்லா யோசிச்சிருக்கிங்க...

ஜெய்லானி said...

யப்பா ...உஸ்..ஒரு வழியா யாரையும் கூப்பிடாம விட்டீங்களே.... அது வரைக்கும் சந்தோஷம் .
ஒரு சோடா என்ன சோடா கண்டெய்னரே தரலாம் , பதிவுலகம் தப்பிச்சுது..ஹி..ஹி..

ஜெய்லானி said...

@@@ Sanjay--//உக்காந்து யோசிப்பைங்களோ???!!!! :D :D //

அதெப்பிடி முதல் வடை உங்களுக்கு மட்டும் கிடைக்குது


இப்படிக்கு
பிளாக் திறக்காமல் வடை சாப்பிடுவோரை எதிர்க்கும் சங்கம்
யூ ஏ ஈ.கிளை

ஜெய்லானி said...

//அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்//

நல்ல வேளை இப்ப வாவது அந்த ஆசை வந்துசே..

Gayathri said...

தோழி...கதை தூள்...எவ்ளோ அழகா யோசிச்சு இருக்கிங்க..எனக்கு உங்க கதை ரொம்ப பிடிச்சுருக்கு...சுவர்ண விடம் கண்டிப்பா இதை சொல்றேன்...என் அழைப்பை ஏற்று அருமையாக அதும் படங்களோட ஒரு கதைய எழுதி அசத்திட்டீங்க...மிக்க மகிழ்ச்சி....அந்த ஏன் பிறந்தாய் மகனே பட்டு மேட்டுல நீங்க எழுதி இருந்த பட்டு தூள் டக்கர்........உங்களுக்கு சுத்தி போட சொல்லுங்க...நன்றி

Mythili (மைதிலி ) said...

ஆனந்தி, கத சூப்பர்மா... தற்செயலா என்னோட பைய்யன் கிட்ட இருந்தான்.சுட சுட அவனுக்கு வாசிச்சு காட்டினேன். அவனுக்கு பெட் டைம் ஸ்டோறி மாதிரி இருந்தது. He liked it very much. It was a treat for him. கடைசியில கொஞ்ஜம் க்ளைமாக்ஸ் மாற்றி இருக்கலாம் (சிங்கம் விஷயத்த கண்டு பிடிச்ச மாதிரி).சுத்த லூஸு சிங்கம்.

dheva said...

ஆனந்தி....

எப்பூடி இப்படி எல்லாம்...முடியல...அழுதுடுவேன்.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கற்பனை வளத்துக்கு பாராட்டுக்கள்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ம்ம்ம்ம்... அப்புறம் என்னாச்சி.. கதை நல்லாருந்தது ஆனந்தி..

பேபி சோபை எந்த கடையில் பேபியோட அம்மா வாங்கினாங்கன்னு சொல்லலியே.. என்ன பிராண்ட் சோப்?.. ஹா ஹா ஹா ஹா ஹா....

சுவாரசியமா இருந்தது.. நல்லவேளை யாரையும் இதுல இழுத்துவிடாம போனீங்களே..:)

Anonymous said...

அசத்திட்டீங்க ஆனந்தி!
ஆனந்திக்கு சோடா பார்சல் :)

Unknown said...

நல்லாருக்குங்க கதை

Unknown said...

HM
ANTHA PHOTOSLA

ULLA SONGS..SUPER,

APPRAM TIMINGACHOLRA JOKES..

ALL VERY FINE.

UNGAKITA ERUNTHU INNUM ETHIRPARKIRATHU

ENTA PADHIU ULAGAM.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
/////ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்.. //
உக்காந்து யோசிப்பைங்களோ???!!!! :D :D ////

.........ஹா ஹா.. இந்த கதை எழுத உக்காந்து யோசிச்ச விளங்கிரும் :D :D :D

///"மங்கி பையா... மங்கி பையா.." "கண்ணா காண்ட்ஸ்...//
ஹா ஹா ஆரம்பமே அசத்தல்..கவுண்டமணி கிட்ட டியூஷன் போனீங்களா?? :D :D ////

........ஹ்ம்ம்ம்... இல்லையே... வேற ஒருத்தங்க கிட்ட டியுஷன் போறேன்.. ;-)

//////மங்கி அலேக்கா அந்த வடையை... (சாரி பழக்க தோஷம்...) //
சூப்பரப்பு......////

........ஹா ஹா.. நன்றி...ன்றி.....ரி... :-))

///வடை போச்சேன்னு ... சை.. திரும்பவும் சாரிங்கோ........சோப்பு போச்சேன்னு....//
:D :D ////

......:D :D

//"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."//
ஹா ஹா ஹா ஹி ஹி...சிரிச்சு சிரிச்சு முடியல..... :D :D ////

..........ஹா ஹா.. ரெம்ப டாங்க்ஸ்.... :-)

///இவ்வளோ சிரிக்க வச்சுட்டீங்க, இப்போ எனக்கு சோடா குடுங்க....!!! ///

..........உங்களுக்கு இல்லாமலா?? இதோ இப்பவே... :-)))

சாந்தி மாரியப்பன் said...

அசத்திட்டீங்க ஆனந்தி, குளிச்சப்புறம் காண்ட்ஸ் என்னமா பளபளக்கிறார் :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@kavisiva
///அடடா அசத்திட்ட்ட்டீங்க ஆனந்தி.

காட்டுல உட்கார்ந்து யோசிச்சீங்களோ! ////

ஹா ஹா.. இல்ல இல்ல.. இன்னும் அந்த நிலைமை வரலப்பா.. :-))
வருகைக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@r.v.சரவணன்
///"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."

ஹா ஹா

முடியல....////

ஹா ஹா..வருகைக்கு நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சாருஸ்ரீராஜ்
//////ha ha ha , sirichu malala ellorum oru mathiri parkuranga , super kathaya irukku (he he tamil font not working) ////

ஹா ஹா..... ரொம்ப தேங்க்ஸ்..
வருகைக்கு நன்றி... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@திவ்யாம்மா
////nalal nagaichuvaya eluthi irukeengaa.. en ponnuku solla oru kathai kidachiduchu,,..

சௌம்யா///

ரொம்ப நன்றி சௌம்யா.. வருகைக்கு நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஸ்ரீ....

///தொடர்பதிவு காடு வரைக்குமா? பதிவுலகம் நல்லாயிருக்கட்டும்! :)

ஸ்ரீ....////

அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா..! :-))
வருகைக்கு நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ் உதயம்
///எப்படியோ கதைய முடிச்சிட்டிங்க. குழந்தைங்க கதை எழுதலாமே நீங்க. ////

ஹா ஹா.. நீங்க வேறங்க.. நானே ஏதோ, தொடர் பதிவாச்சேன்னு.. இந்த குட்டி கதை எழுதினேன்..
வருகைக்கு நன்றி.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Mrs.மேனகாசதியா
///ஹா ஹா அசத்திட்டீங்க அனந்தி..சிரிச்சு முடியல்..நல்லா யோசிச்சிருக்கிங்க...///

ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ்ப்பா..
வருகைக்கு நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
////யப்பா ...உஸ்..ஒரு வழியா யாரையும் கூப்பிடாம விட்டீங்களே.... அது வரைக்கும் சந்தோஷம் .
ஒரு சோடா என்ன சோடா கண்டெய்னரே தரலாம் , பதிவுலகம் தப்பிச்சுது..ஹி..ஹி.. ////

அடடா... தெரியாம போச்சே...!!
வருகைக்கு நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
///@@@ Sanjay--//உக்காந்து யோசிப்பைங்களோ???!!!! :D :D //
அதெப்பிடி முதல் வடை உங்களுக்கு மட்டும் கிடைக்குது

இப்படிக்கு
பிளாக் திறக்காமல் வடை சாப்பிடுவோரை எதிர்க்கும் சங்கம்
யூ ஏ ஈ.கிளை////

இதுக்கு சஞ்சய் வந்து பதில் சொல்வாங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி
/////அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்//

நல்ல வேளை இப்ப வாவது அந்த ஆசை வந்துசே..///

ஹா ஹா... ஏன் பீலிங்க்ஸ்.. :-))
வருகைக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@காயத்ரி
////தோழி...கதை தூள்...எவ்ளோ அழகா யோசிச்சு இருக்கிங்க..எனக்கு உங்க கதை ரொம்ப பிடிச்சுருக்கு...சுவர்ண விடம் கண்டிப்பா இதை சொல்றேன்...என் அழைப்பை ஏற்று அருமையாக அதும் படங்களோட ஒரு கதைய எழுதி அசத்திட்டீங்க...மிக்க மகிழ்ச்சி....அந்த ஏன் பிறந்தாய் மகனே பட்டு மேட்டுல நீங்க எழுதி இருந்த பட்டு தூள் டக்கர்........உங்களுக்கு சுத்தி போட சொல்லுங்க...நன்றி////

அன்புத் தோழி காயத்ரி... ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. உங்க கருத்து பார்த்து.. எஸ், கண்டிப்பாக ஸ்வர்ணா-குட்டிக்கு இந்த கதை படிச்சு காமிங்க.. தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு மிக்க நன்றி.. :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)
////ஆனந்தி, கத சூப்பர்மா... தற்செயலா என்னோட பைய்யன் கிட்ட இருந்தான்.சுட சுட அவனுக்கு வாசிச்சு காட்டினேன். அவனுக்கு பெட் டைம் ஸ்டோறி மாதிரி இருந்தது. He liked it very much. It was a treat for him. கடைசியில கொஞ்ஜம் க்ளைமாக்ஸ் மாற்றி இருக்கலாம் (சிங்கம் விஷயத்த கண்டு பிடிச்ச மாதிரி).சுத்த லூஸு சிங்கம்.///

ஹ்ம்மம்ம்ம்ம்... ரொம்ப சந்தோசமா இருக்கு மைதிலி.. :-)))
ஹா ஹா.. லூசு சிங்கமா??? சூப்பர் மா.. :D :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@dheva
/// ஆனந்தி....

எப்பூடி இப்படி எல்லாம்...முடியல...அழுதுடுவேன்.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கற்பனை வளத்துக்கு பாராட்டுக்கள்!////

வாங்க தேவா...!
ச ச.. இதுக்கே அழுதா எப்புடிங்க.. இன்னும் என்னெல்லாம் இருக்கு.. :-))
வருகைக்கு ரொம்ப நன்றி :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Starjan ( ஸ்டார்ஜன் )
///ம்ம்ம்ம்... அப்புறம் என்னாச்சி.. கதை நல்லாருந்தது ஆனந்தி..

பேபி சோபை எந்த கடையில் பேபியோட அம்மா வாங்கினாங்கன்னு சொல்லலியே.. என்ன பிராண்ட் சோப்?.. ஹா ஹா ஹா ஹா ஹா....

சுவாரசியமா இருந்தது.. நல்லவேளை யாரையும் இதுல இழுத்துவிடாம போனீங்களே..:)///

ஹா ஹா.. ச ச ச.. நா யாரையும் கூபிடலன்னு இவ்ளோ பீல் பண்ணுவீங்கன்னு தெரியாம போச்சே.
சரி விடுங்க.. அடுத்த முறை, ஞாபகமா கூப்பிடுரேன்..
வருகைக்கு நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@Balaji saravana
/// அசத்திட்டீங்க ஆனந்தி!
ஆனந்திக்கு சோடா பார்சல் :) ////

ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கலாநேசன்
/// நல்லாருக்குங்க கதை ///

வருகைக்கு ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@siva
//// HM
ANTHA PHOTOSLA

ULLA SONGS..SUPER,
APPRAM TIMINGA CHOLRA JOKES..

ALL VERY FINE.

UNGAKITA ERUNTHU INNUM ETHIRPARKIRATHU
ENTA PADHIU ULAGAM. //////

ஹாய் சிவா, ரொம்ப நன்றி.. உங்க கருத்துக்கு..! :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிச்சாரல்
///அசத்திட்டீங்க ஆனந்தி, குளிச்சப்புறம் காண்ட்ஸ் என்னமா பளபளக்கிறார் :-))) ////

ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ்...
வருகைக்கு நன்றிங்க.. :-))

Sanjay said...

@ ஜெய்லானி:

கண்ணா ப்ளாக் இருக்கா இல்லையாங்கிறது முக்கியமில்ல, வடைய வாங்குரோமா இல்லையாங்கிறது தான் முக்கியம்...

அங்க தான் நிக்கிறான் சஞ்சய்..!!!!! :D :D

ஜெயந்த் கிருஷ்ணா said...

கதை நல்லாருக்கு..

அசத்திட்ட்ட்டீங்க ...

கவி அழகன் said...

அசத்தல்

சௌந்தர் said...

சோப்பு சூப்பர்... சாரி.. கதை சூப்பர் இதுலா பாட்டு வேற.....முடியலை.....

நாடோடி said...

எப்ப‌டியோ க‌ண்டாமிருக‌த்தை சோப்பு போட்டு குளிக்க‌ வைச்சிட்டீங்க‌... :)))) அப்ப‌டியே அடுத்த‌ தொட‌ர்ப‌திவு ஒன்றில் சிங்க‌ ராஜாவை குளிக்க‌ வைச்சிருங்க‌... :)))))

Ramesh said...

கதை உண்மைலயே இண்ட்ரஸ்டா இருந்ததுங்க..அதுக்கு நீங்க போட்டிருக்க படங்களும்..அதுல கமெண்ட்ஸும் செம...

அதுசரி இந்தத் தொடர்பதிவு தொடர்பதிவுங்கறீங்களே..அப்படில்லாம்...எதுக்கும் என்னை யாரும் ஆட்டைல சேத்துக்க மாட்டேங்குறீங்களே...இன்னும் என்னையும் ஒரு பதிவரா இந்தப் பதிவுலகம்..ஏத்துக்கலையோ...

Asiya Omar said...

ரொம்ப நகைசுவையாக எழுதி அசத்திருக்கீங்க.இப்ப தான் உங்கள் ப்ளாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

Unknown said...

super !!!!!!!

Anonymous said...

ஆனந்தி கதை சூப்பர் ..எப்பிடி பா இவ்ளோ சூப்பர் ஆ எழுதினீங்க ..படங்களும் பாட்டும் செம்ம அசத்தல் தான் ..

'பரிவை' சே.குமார் said...

//"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."


ஏன் பிறந்தாய் மகனே... மெட்டுல பாடிக்கோங்க...!!//

ஹா ஹா ஹா ஹி ஹி...சிரிச்சு சிரிச்சு முடியல.....

சசிகுமார் said...

கதை அருமை இந்த தலைப்பை உருவாக்கியது யார் அருமை

எம் அப்துல் காதர் said...

ஏதோ,தொடர் பதிவிற்கு என்று, விளையாட்டா எழுதியதைப் போலிருந்தாலும் அருமையான தலைப்பில் அருமையான கதை!! அமர்க்கள ஆசீர்வாதம் போங்கோ ஆனந்தி!.

உண்மையிலேயே இதில் உள்ள சில பல விஷயங்களை சரி பண்ணினால் (நீக்கினால்), பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நிச்சயமாக பாடமாக வைக்கலாம் என்பது என் கருத்து. யாரவது பரிந்துரைப்பவர்கள் தாராளமாக பரிந்துரைக்கலாம். வாழ்த்துக்கள் சிஸ் ஆனந்தி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
// @ ஜெய்லானி:

கண்ணா ப்ளாக் இருக்கா இல்லையாங்கிறது முக்கியமில்ல, வடைய வாங்குரோமா இல்லையாங்கிறது தான் முக்கியம்...

அங்க தான் நிக்கிறான் சஞ்சய்..!!!!! :D :D /////

ஹா ஹா ஹா... முடியல :D :D :D
ROFL

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@வெறும்பய
///கதை நல்லாருக்கு..

அசத்திட்ட்ட்டீங்க ...///

ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@யாதவன்
///அசத்தல் ///

ரொம்ப நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சௌந்தர்
////சோப்பு சூப்பர்... சாரி.. கதை சூப்பர் இதுலா பாட்டு வேற.....முடியலை..... ///

ஹா ஹா... நன்றி சௌந்தர்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நாடோடி
////எப்ப‌டியோ க‌ண்டாமிருக‌த்தை சோப்பு போட்டு குளிக்க‌ வைச்சிட்டீங்க‌... :)))) அப்ப‌டியே அடுத்த‌ தொட‌ர்ப‌திவு ஒன்றில் சிங்க‌ ராஜாவை குளிக்க‌ வைச்சிருங்க‌... :))))) ///

ஹா ஹா.. ஓகே ஓகே..
வருகைக்கு நன்றிங்க :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரமேஷ்
/////கதை உண்மைலயே இண்ட்ரஸ்டா இருந்ததுங்க..அதுக்கு நீங்க போட்டிருக்க படங்களும்..அதுல கமெண்ட்ஸும் செம...

அதுசரி இந்தத் தொடர்பதிவு தொடர்பதிவுங்கறீங்களே..அப்படில்லாம்...எதுக்கும் என்னை யாரும் ஆட்டைல சேத்துக்க மாட்டேங்குறீங்களே...இன்னும் என்னையும் ஒரு பதிவரா இந்தப் பதிவுலகம்..ஏத்துக்கலையோ... /////

ரொம்ப தேங்க்ஸ்.. ரமேஷ்.. :-))
ச ச.... அப்படியெல்லாம் இருக்காதுங்க..
இப்போ சொல்லிட்டீங்க தானே.... அடுத்த தொடர்பதிவிற்கு கண்டிப்பா உங்களுக்கு அழைப்பு வருங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@asiya omar
///ரொம்ப நகைசுவையாக எழுதி அசத்திருக்கீங்க.இப்ப தான் உங்கள் ப்ளாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ///

வாங்க வாங்க.. உங்க முதல் வருகைக்கு நன்றி... :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@g
////super !!!!!!! ///

ரொம்ப நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சந்த்யா
////ஆனந்தி கதை சூப்பர் ..எப்பிடி பா இவ்ளோ சூப்பர் ஆ எழுதினீங்க ..படங்களும் பாட்டும் செம்ம அசத்தல் தான் .. ///

ஹ்ம்ம் ஹ்ம்ம்... ரொம்ப தேங்க்ஸ் சந்த்யா..
எல்லாம் நம்ம காயத்ரியோட குட்டிக்கு தான்.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்
//"வேண்டும் ஒரு சோப்பு என்று நானும் ஓர் தவம் இருக்க...
பல்பு மட்டும் ஏன் கொடுத்தாய் மங்கு மங்கியே...."

ஏன் பிறந்தாய் மகனே... மெட்டுல பாடிக்கோங்க...!!//

ஹா ஹா ஹா ஹி ஹி...சிரிச்சு சிரிச்சு முடியல..... ////

ஹா ஹா ஹா.. ரொம்ப தேங்க்ஸ் குமார்.. :-)))

மங்குனி அமைச்சர் said...

ஐ ,கதை ரொம்ப நல்லா இருக்கும் அடுத்து அந்த முயலு ஆமைகதை சொல்லுங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@சசிகுமார்
////கதை அருமை இந்த தலைப்பை உருவாக்கியது யார் அருமை ///

ரொம்ப நன்றிங்க.. :-)
கதை காயத்ரி அவங்க குழந்தை குடுத்த தலைப்பு தான்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@எம் அப்துல் காதர்
////ஏதோ,தொடர் பதிவிற்கு என்று, விளையாட்டா எழுதியதைப் போலிருந்தாலும் அருமையான தலைப்பில் அருமையான கதை!! அமர்க்கள ஆசீர்வாதம் போங்கோ ஆனந்தி!.

உண்மையிலேயே இதில் உள்ள சில பல விஷயங்களை சரி பண்ணினால் (நீக்கினால்), பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நிச்சயமாக பாடமாக வைக்கலாம் என்பது என் கருத்து. யாரவது பரிந்துரைப்பவர்கள் தாராளமாக பரிந்துரைக்கலாம். வாழ்த்துக்கள் சிஸ் ஆனந்தி! ////

அடடா... ரொம்ப நன்றிங்க :-))
உங்க வாழ்த்துக்கும் நன்றிகள் பல..

Unknown said...

கதை அருமை ஆனந்தி.
உங்கள் கற்பனை வளம் சூபர்.

ஜெய்லானி said...

@@@Sanjay --
@ ஜெய்லானி:

கண்ணா ப்ளாக் இருக்கா இல்லையாங்கிறது முக்கியமில்ல, வடைய வாங்குரோமா இல்லையாங்கிறது தான் முக்கியம்...//

ரெண்டுதடவை வடை வாங்கிய சந்தோஷம்....இப்பிடி பேச வைக்குது.....குரு...என்னைக்காவது வாழ்கையில பிளாக் திறக்காமலா போய்டுவீங்க ....அன்னைக்கு இருக்குது..கும்மி..ன்னா என்னான்னு

//அங்க தான் நிக்கிறான் சஞ்சய்..!!!!! :D :D //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@மங்குனி அமைசர்
//// ஐ ,கதை ரொம்ப நல்லா இருக்கும் அடுத்து அந்த முயலு ஆமைகதை சொல்லுங்க ////

ஓஹ்ஹோ.. ஓகே ஓகே..
வருகைக்கு நன்றி :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@poorna
//// கதை அருமை ஆனந்தி.
உங்கள் கற்பனை வளம் சூபர்.////

தேங்க்ஸ் பூர்ணா... :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி

///@@@Sanjay --
@ ஜெய்லானி:

கண்ணா ப்ளாக் இருக்கா இல்லையாங்கிறது முக்கியமில்ல, வடைய வாங்குரோமா இல்லையாங்கிறது தான் முக்கியம்...//

ரெண்டுதடவை வடை வாங்கிய சந்தோஷம்....இப்பிடி பேச வைக்குது.....குரு...என்னைக்காவது வாழ்கையில பிளாக் திறக்காமலா போய்டுவீங்க ....அன்னைக்கு இருக்குது..கும்மி..ன்னா என்னான்னு

//அங்க தான் நிக்கிறான் சஞ்சய்..!!!!! :D :D //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ////

அடடா... இதுவும் எனக்கு கமெண்ட் இல்லியா...
ஓகே ஓகே...
ரெம்ப நன்றிங்கோ... :-))

Riyas said...

கதை சூப்பர்.. ஆனந்தி அக்கா..

Unknown said...

ஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவைத் திறன் உங்களுக்கு.. சிரிச்சிட்டே படிச்சேன்..

aavee said...

ரொம்ப நல்ல இருக்கு! இந்த காலத்து "பாட்டி கதை" போல் சுவாரஸ்யமாவும் இருந்தது..

கமலேஷ் said...

அனைத்துமே பதிவுக்கு பொருத்தமான படங்கள்.
நல்ல நகைசுவையா இருந்திச்சி.

Thenammai Lakshmanan said...

ஒஹோஓ பதிவு சூப்பர்.. கடைசி பாட்டு அருமை.. சித்ரா பார்த்துக்கம்மா போட்டிக்கு ஆள் ரெடியாகிக் கிட்டு இருக்கு,..:))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@ரியாஸ்
.....ரொம்ப நன்றி :-)


@அப்துல்காதர்
...ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :-)



@கோவை ஆவி
....ரொம்ப நன்றி :-)


@கமலேஷ்
.....ரொம்ப நன்றி :-)


@தேனக்கா
......யாருடனும் போட்டி இல்ல அக்கா... அதுவும் என் தோழி கூட இல்லவே இல்ல...நன்றி அக்கா :-))

R. Gopi said...

காபி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ராம நாராயணன் சுட்டாலும் சுட்டுடுவார்:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@R .கோபி

ஹா ஹா.. ஓகே ஓகே.. நீங்க சொன்னா சரி தான்.. ரொம்ப நன்றி.. :-))

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாம் தொடர் பதிவா

ஓடிடுடா கைப்புள்ள ...

செந்தில்குமார் said...

ம்ம்ம்ம் யம்மாடி கொஞ்சம் கஸ்டம் தான் பயங்கர கதை தொடர்பதிவுதான் அதுக்குன்னு இப்படி வெளுக்கிரது தாங்க முடியல ஆனந்தி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நட்புடன் ஜமால்

ஹா ஹா.. இப்படி எல்லாம் பயப்பட கூடாது.. எங்க ஓடுறீங்க??
ஏங்க, தொடர் பதிவுக்கு குடுத்த தலைப்பில் தானே எழுத முடியும்.
வருகைக்கு நன்றி..





@செந்தில் குமார்

ஹா ஹா... ஒண்ணும் வெளுக்கல.. காண்ட்ஸ் குளிச்சுது.. அவ்ளோ தான்..
வருகைக்கு நன்றி..

தினேஷ்குமார் said...

வணக்கம் ஆனந்தி
கொஞ்ச நேரம் நான் நானாவே இல்லைங்க அப்படியே ஒரு குழ்ந்தை கதை கேக்கிற மாதிரி உங்க பேபி சோப் கதைல குழ்ந்தையாகிட்டேன்

http://marumlogam.blogspot.com

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@தினேஷ்குமார்

///வணக்கம் ஆனந்தி
கொஞ்ச நேரம் நான் நானாவே இல்லைங்க அப்படியே ஒரு குழ்ந்தை கதை கேக்கிற மாதிரி உங்க பேபி சோப் கதைல குழ்ந்தையாகிட்டேன்////

வணக்கம்.. உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க..

Anonymous said...

Very funny thoughts...Nice one Anandhi..:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@எழினி.ப
///Very funny thoughts...Nice one Anandhi..:) ///

ரொம்ப தேங்க்ஸ்.. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)