(சரி சரி, இவ்ளோ நேரம் சீரியஸா ஏனென்று காரணம் சொல்லியாச்சு.. இப்புடு சூடு எப்படி என்ஜாய் பண்ணோம் என்று.. )
நாங்க, ஒரு 18 பேரு, விழாவிற்கு கிளம்பி போனோம்...!! சீக்கிரம் போனால் நல்ல இடத்தில உட்கார்ந்து, பாடுபவர்களை ரசிக்கலாம் என்று.. ரொம்ப சீக்கிரமாவே போய்ட்டோம்.. (பாடுபவர்களில் முக்கியமான ஒருத்தருக்ககவே போனோம்.. ஹிஹி.. யார் தெரியுமா.. கிருஷ்... (ஜூன் போனால் ஜூலை காற்றே..... பாடலை பாடியவர்...) ஹ்ம்ம்ம்.. என்ன வாய்ஸ்.. என்ன வாய்ஸ்... கிருஷ் உடன் பாட, மகதி, மாலதி லக்ஷ்மன், TMS அவர்களின் மகன், எல்லாரும் வந்திருந்தாங்க....!!
சீக்கிரம் போனதால, பிடித்த மாதிரி ஒரு இடத்துல உக்காந்தோம்.. முதலில் மகதி வந்து, "அலை பாயுதே கண்ணா... என் மனம் அலை பாயுதே....." பாட..... ஆண்கள் அனைவரும் ஒரே விசிலுடன் கூடிய ஆர்ப்பாட்டம் தான்.. அடுத்து, கிருஷ் வந்து, "ஜூன் போனால்...", "ஒரு சின்ன தாமரை...", "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..." பாட........ எங்க பங்குக்கு சும்மா இருப்போமா, நாங்களும் விசில், பறக்க... ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. அந்த நிமிடங்களில் குழந்தையாகவே மாறி விட்டோம் என்று சொல்லணும்..!!
தொடர்ந்து மாலதி வந்து, சும்மா கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாங்க.. "ஏ..... கொலுசு கடை ஓரத்துல....", "மன்மத ராசா.. மன்மத ராசா....", இந்த மாதிரி ஒரே குத்து சாங்க்ஸ் தான்..
இந்த சாங்க்ஸ் கேட்டதும், 70 வயது மதிக்கத் தக்க, ஒரு ஆன்ட்டி எழும்பி ஆட, எங்க எல்லாருக்கும் கூட உற்சாகம் தொற்றி கொள்ள.. ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்..
சின்ன பசங்க எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட..... நாங்களும் ஆட.. மகதியும், மாலதியும் மேடையை விட்டு இறங்கி வந்து, எங்களுடன் சேர்ந்து கொள்ள.. ஒரே ஒரே டான்ஸ் தான்.. அரங்கமே அதிர்ந்தது..!!
சும்மாவா சொல்றாங்க.. பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் என்று......!! ரொம்ப கரெக்டான வரிகள்....!!
அந்த ட்ரூப்ல ட்ரம்ஸ் வாசித்தவர், மேடையை விட்டு இறங்கி ஆடியன்ஸ் மத்தியில் வந்து ட்ரம்ஸ் அடிக்க, அவரை சூழ்ந்து நிறைய பேர் ஆட ஆரம்பிக்க.. அடடா.. என்னவென்று சொல்வேன்.. செம ஜாலியா இருந்தது...!!
சுமார் 8 மணி அளவில் ஆரம்பித்த இன்னிசை மழை... இரவு 12 :10 வரை நடந்தது...!! பாடகர்களும் சரி, லக்ஷ்மன் ஸ்ருதி குழுவில் உள்ளவங்களும் சரி.. கொஞ்சம் கூட சோர்ந்து போகாம, தொடர்ச்சியா பாடிகிட்டே இருந்தாங்க....!!
ஷோ, பிரேக் டைம்ல மகதி, கிருஷ், மாலதி அனைவரையும் சந்தித்தோம்.. ரொம்ப அலட்டிக்காம சாதாரணமா அன்பா பழகினாங்க.. மொத்தத்தில் ரொம்ப நாட்களுக்கு பிறகு, எதை பற்றியும் கவலை இன்றி.. ரசித்த மணித்துளிகள் என்று சொல்வேன்...!! இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பா யூஸ் பண்ணிக்கனுங்க...!!
மொத்தத்தில் சின்ன குட்டீஸ் முதல் பெரியவங்க வரை ஆட வைத்த இந்த நிகழ்ச்சி, மறக்க முடியாத இனிய அனுபவம்...!!
உங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்..!
....அன்புடன் ஆனந்தி
53 comments:
ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா இந்தா இந்தா.........இப்படி ஆடிநீங்களா???:D :D :D
குட்டீஸ் PICS சூப்பர்ர்ர்....!!!! : )
நல்ல இருக்கு உங்க விவரிப்பு. நாங்களும் நேர்ல இருந்த ஒரு பீல்
//நாங்க, ஒரு 18 பேரு, விழாவிற்கு
கிளம்பி போனோம்...!! //
லாறிலையா? :D :D :D
//ரொம்ப அலட்டிக்காம சாதாரணமா அன்பா பழகினாங்க.. மொத்தத்தில் ரொம்ப நாட்களுக்கு பிறகு, எதை பற்றியும் கவலை இன்றி.. ரசித்த மணித்துளிகள் என்று சொல்வேன்...!! இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பா யூஸ் பண்ணிக்கனுங்க...//
sarithan
வாய்ப்பு கிடைக்கும் போது முழு சந்தோசத்துடன் அனுபவிக்கணும், அப்பதான் உடம்புடன் சேர்ந்து மனதும் ரிலாக்ஸ் ஆகும்!! வாழ்த்துக்கள்!!
சூப்பர் அனுபவம் அக்கா ...
நீங்க ஆடின கேசட் இருக்கா !!ச்சே.. படம் இருக்கா!!!
ஒரு மாசத்துக்கு இந்த
ஒரு நிகழ்ச்சி போதும்னு தோணுமே..!!
ரொம்ப குடுத்து வச்சவங்க!!
//நாங்களும் விசில், பறக்க... ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. அந்த நிமிடங்களில் குழந்தையாகவே மாறி விட்டோம் என்று சொல்லணும்..!!//
உற்சாகத்தை இது போல நல்லா கொண்டாட தெரிஞ்சாலே குழந்தை மனசுதான்... கவலைகளை தானாக மறைய வைக்கும் மருந்தும் அதுதான். :)
மொத்தத்தில் ரொம்ப நாட்களுக்கு பிறகு, எதை பற்றியும் கவலை இன்றி.. ரசித்த மணித்துளிகள் என்று சொல்வேன்...!! இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பா யூஸ் பண்ணிக்கனுங்க...!!
.... rightly said, Ananthi. so true! :-)
நல்லா அனுபவிச்சிருக்கீங்க
சரி அதுல நீங்க டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு போட்டோ கூட காணோமே
பகிர்விற்க்கு நன்றி
அப்படியே நீங்க ஆடுற படத்தையும் போட்டா பாத்து ரசிப்போம்ல
ஒரு நாளாவது இப்படி
நாம் குழந்தையாய்
மாறினால் நன்றாகத்தானிருக்கும்.
மொத்தத்தில் ரொம்ப நாட்களுக்கு பிறகு, எதை பற்றியும் கவலை இன்றி.. ரசித்த மணித்துளிகள் என்று சொல்வேன்...!!//
வாழ்வின் சில தருணங்களை... மகிழ்வுடன் கழிக்க வேண்டும் .அது உங்களுக்கு அமைந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றி.
ரொம்ப அனுபவீச்சு
எழுதி இருக்கீங்க
நல்ல விவரிப்பு, உங்களுடன் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி..
சூப்பர்டா ஆனந்தி,, உங்க போட்டோஸ் பார்த்து ரொம்ப எஞ்சாய் பண்ணேன்
எங்க பங்குக்கு சும்மா இருப்போமா, நாங்களும் விசில், பறக்க... ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. அந்த நிமிடங்களில் குழந்தையாகவே மாறி விட்டோம் ////
பன்னது ரவுடித்தனம் , அதுல குழந்தைகள் மாதரின்னு சாக்கு வேற????
@சஞ்சய்
//ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் இந்தா இந்தா இந்தா.........இப்படி ஆடிநீங்களா???:D :D :D
குட்டீஸ் PICS சூப்பர்ர்ர்....!!!! : ) //
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அதே அதே.... :) ;)
அதுலயும்.. நாக்க முக்கா... சாங் இருக்கு பாருங்க..
அப்போ நீங்க பாத்திருக்கணும் :D :D
செம செம.. ஆட்டம் தான்..:D :D
@சஞ்சய்
//நாங்க, ஒரு 18 பேரு, விழாவிற்கு
கிளம்பி போனோம்...!! //
லாறிலையா? :D :D :D //
ஆங்... ஏரோ பிளேன்ல.. :P :P :P
@LK
//நல்ல இருக்கு உங்க விவரிப்பு. நாங்களும் நேர்ல இருந்த ஒரு பீல் //
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி.. :)
//LK said...
//ரொம்ப அலட்டிக்காம சாதாரணமா அன்பா பழகினாங்க.. மொத்தத்தில் ரொம்ப நாட்களுக்கு பிறகு, எதை பற்றியும் கவலை இன்றி.. ரசித்த மணித்துளிகள் என்று சொல்வேன்...!! இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பா யூஸ் பண்ணிக்கனுங்க...//
சரிதான்//
மீண்டும் நன்றி.. :)
@கௌசல்யா
//வாய்ப்பு கிடைக்கும் போது முழு சந்தோசத்துடன் அனுபவிக்கணும், அப்பதான் உடம்புடன் சேர்ந்து மனதும் ரிலாக்ஸ் ஆகும்!! வாழ்த்துக்கள்!!//
எஸ்.. ரொம்ப கரெக்ட்.. வருகைக்கு நன்றி.. :)
நானும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்..ஆட்டம் போட்டேன்...ஆனா மீரா ஜாஸ்மின் மாதிரி (உங்க புகைப்படம்) யாரும் வந்த மாதிரி தெரியலியே?
vijay
junpviji.blogspot.com
"சும்மாவா சொல்றாங்க.. பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் என்று......!! ரொம்ப கரெக்டான வரிகள்....!!"
சரியா சொன்னிங்க ஆனந்தி எனக்கும் சில டைம் லே ஆடனம் போல் இருக்கும் ,ஆடினா பூமி தாங்குமா ????
அமெரிக்காவில் இருந்து இவ்ளோ என்ஜாய் பன்னரிங்க என்னே பாரு சென்னையில் இருக்கே இதுவரைக்கும் இந்த பாடகர்களே டி வீ யில் பார்த்ததோடு சரி ...
உங்க எழுத்து ரொம்ப நல்லா இருக்கு பா
எங்களையும் ரசிக்க வச்சிட்டீங்க...
நாங்களும் இங்கிருந்தே ரசிச்சோமே :-)))
@ சௌந்தர்
ரொம்ப நன்றி.. :)
@ ஜெய்லானி
//நீங்க ஆடின கேசட் இருக்கா !!ச்சே.. படம் இருக்கா!!! //
நாங்க ஆடினத நாங்களே எப்படி எடுக்கரதுங்க?? :)
அப்படி எதுவும் படத்த போட்டு நீங்க பயந்து இந்த பக்கமே வரலன்ன என்ன பண்றது?? :D :D
நன்றி..
@ அண்ணாமலை..!!
//ஒரு மாசத்துக்கு இந்த
ஒரு நிகழ்ச்சி போதும்னு தோணுமே..!!
ரொம்ப குடுத்து வச்சவங்க!!//
எஸ்.. ரொம்ப கரெக்ட்.. நன்றி.. :)
@ கண்ணா..
//உற்சாகத்தை இது போல நல்லா கொண்டாட தெரிஞ்சாலே குழந்தை மனசுதான்... கவலைகளை தானாக மறைய வைக்கும் மருந்தும் அதுதான். :)//
ஹ்ம்ம்.. சரிதான்.. ரொம்ப நன்றி.. :)
@சித்ரா
//.... rightly said, Ananthi. so true! :-) //
தேங்க்ஸ் சித்ரா.. :)
@ஜில்தண்ணி
//நல்லா அனுபவிச்சிருக்கீங்க
சரி அதுல நீங்க டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு போட்டோ கூட காணோமே
பகிர்விற்க்கு நன்றி //
பொதுமக்கள் சேப்டி கருதி.. போடவில்லை.. :D :D
நன்றி.. :)
@priya
//அப்படியே நீங்க ஆடுற படத்தையும் போட்டா பாத்து ரசிப்போம்ல //
ஹிஹி.... :D :D
@Madumitha
//ஒரு நாளாவது இப்படி
நாம் குழந்தையாய்
மாறினால் நன்றாகத்தானிருக்கும் //
கரெக்ட்... நன்றி.. :)
@சி. கருணாகரசு
//வாழ்வின் சில தருணங்களை... மகிழ்வுடன் கழிக்க வேண்டும் .அது உங்களுக்கு அமைந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றி//
ரொம்ப நன்றி :)
@S மகாராஜன்
//ரொம்ப அனுபவீச்சு
எழுதி இருக்கீங்க//
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி.. :)
@நாடோடி
//நல்ல விவரிப்பு, உங்களுடன் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி..//
ரொம்ப நன்றிங்க :)
@thenammailakshmanan
//சூப்பர்டா ஆனந்தி,, உங்க போட்டோஸ் பார்த்து ரொம்ப எஞ்சாய் பண்ணேன்//
நன்றி அக்கா.. :)
@மங்குனி அமைச்சர்
//பன்னது ரவுடித்தனம் , அதுல குழந்தைகள் மாதரின்னு சாக்கு வேற???? //
ஹிஹி.. சரி சரி.. கோவப்படாதீங்க :)
@Vijay Kumar
//நானும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்..ஆட்டம் போட்டேன்...ஆனா மீரா ஜாஸ்மின் மாதிரி (உங்க புகைப்படம்) யாரும் வந்த மாதிரி தெரியலியே? //
ஹா ஹா.. மீரா ஜாஸ்மின், ஜஸ்ட் ப்ரோப்ய்ல் பிக்சர் தான்.. நன்றி :)
@சந்த்யா
//சரியா சொன்னிங்க ஆனந்தி எனக்கும் சில டைம் லே ஆடனம் போல் இருக்கும் ,ஆடினா பூமி தாங்குமா ???? //
வாங்க சந்த்யா.. அதெல்லாம் தாங்கும் தாங்கும்.. :D :D
//அமெரிக்காவில் இருந்து இவ்ளோ என்ஜாய் பன்னரிங்க என்னே பாரு சென்னையில் இருக்கே இதுவரைக்கும் இந்த பாடகர்களே டி வீ யில் பார்த்ததோடு சரி ...//
எனக்கும் கூட புது அனுபவம் தான்.. சந்த்யா.. :)
ரொம்ப நன்றி..
@ஸ்ரீராம்
//எங்களையும் ரசிக்க வச்சிட்டீங்க... //
ரொம்ப நன்றிங்க.. :)
@அமைதிச்சாரல்
//நாங்களும் இங்கிருந்தே ரசிச்சோமே :-))) //
ரொம்ப நன்றிங்க.. :)
@சந்த்யா
//உங்க எழுத்து ரொம்ப நல்லா இருக்கு பா //
ரொம்ப ரொம்ப நன்றி, சந்த்யா.. :)
என்னதான் நிகழ்ச்சி சூப்பரா இருந்தாலும்....பப்ளிக்கா இப்படியா எல்லாருடைய வைத்தெறிச்சலைக் கொட்டிகிறது.....போங்க ஆனந்தி நீங்க ரொம்ப மோசம்.
உங்கள் எழுத்து திறமையால் நிகழ்ச்சியை பற்றி மேலும் மெருகேற்றி கூறிய விதம் மிகவும் அருமை.
ரொம்ப நல்ல பகிர்வுங்க...
இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்துக்கனும்...
நல்லா சொன்னிங்க... அப்போ அப்போ இந்த மாதிரி பூஸ்ட் பண்ணிகிட்டாதான் வாழ்க்கை சலிப்பு தட்டாம இருக்கும்... good post Ananthi
Ochaamaa cheeyumaa... Ochaamaa cheeyumaa...
Sirppi virlgaloo silai sethukkumae.... Pennin vizhigaloo nammai sethukkumae..... Jjune poonaal...
I love this song :-)
Paadinaaraa கிரீஸ் டப்பா ?:-D
@நந்தினி
//என்னதான் நிகழ்ச்சி சூப்பரா இருந்தாலும்....பப்ளிக்கா இப்படியா எல்லாருடைய வைத்தெறிச்சலைக் கொட்டிகிறது.....போங்க ஆனந்தி நீங்க ரொம்ப மோசம்.
உங்கள் எழுத்து திறமையால் நிகழ்ச்சியை பற்றி மேலும் மெருகேற்றி கூறிய விதம் மிகவும் அருமை.//
ஹா ஹா.. :D :D
சரி சரி.. அடுத்த முறை நீங்களும் கூட வந்துருங்க ;)
ரொம்ப நன்றி :)
@கமலேஷ்
//ரொம்ப நல்ல பகிர்வுங்க...//
ரொம்ப நன்றி, கமலேஷ் :)
@mmj
//இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்துக்கனும்...//
ஹ்ம்ம்..கரெக்ட்.. வருகைக்கு நன்றி :)
@அப்பாவி தங்கமணி
//நல்லா சொன்னிங்க... அப்போ அப்போ இந்த மாதிரி பூஸ்ட் பண்ணிகிட்டாதான் வாழ்க்கை சலிப்பு தட்டாம இருக்கும்... good post ஆனந்தி //
எஸ்.. ரொம்ப கரெக்டா சொன்னிங்க.. கண்டிப்பா பூஸ்ட் தான்.. :D :D
வருகைக்கு நன்றி :)
@Thamizh Senthil
//Ochaamaa cheeyumaa... Ochaamaa cheeyumaa...
Sirppi virlgaloo silai sethukkumae.... Pennin vizhigaloo nammai sethukkumae..... Jjune poonaal...
I love this song :-)
Paadinaaraa கிரீஸ் டப்பா ?:-D //
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. கிரீஸ் டப்பாவா??? :O :O
உங்களுக்கு எவ்ளோ வம்பு இருக்கணும்..!
நல்லாவே ஆடியிருப்பிங்க
ஆனந்தி ஏன்னா பாட்டு அப்படி
எனக்கும் அனுபவம் இருக்கு ஆனந்தி
நாங்க சுமார் 52 பேர் மணல் சாவாரி போய்ட்டு ஒரு பெரிய ரவுண்டு ஆட்டாம் எல்லாம் நம்ம பாட்டுக்கள்தான்
நான் மற்றும் ஒரு சிலரை தவிர
மற்றவர்களாள் ஒரு வாரம் நடக்கமுடியவேயில்லை
நீங்க எப்படி......... ஆனந்தி
have given you an award come and collect it
http://lksthoughts.blogspot.com/2010/06/blog-post_15.html
@ ஆனந்தி
அச்சச்சோ.. வடை போச்சே ......
அருமை, அருமை.
தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடுத்திருக்கிறேன்... நீங்கள் விருதினை பெற்றுக்கொண்டால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html
@செந்தில்குமார்
//நல்லாவே ஆடியிருப்பிங்க
ஆனந்தி ஏன்னா பாட்டு அப்படி //
......ஹ்ம்ம்.. கரெக்ட்.. பாட்டு அப்படி.. :)
//எனக்கும் அனுபவம் இருக்கு ஆனந்தி
நாங்க சுமார் 52 பேர் மணல் சாவாரி போய்ட்டு ஒரு பெரிய ரவுண்டு ஆட்டாம் எல்லாம் நம்ம பாட்டுக்கள்தான்..
நான் மற்றும் ஒரு சிலரை தவிர
மற்றவர்களாள் ஒரு வாரம் நடக்கமுடியவேயில்லை
நீங்க எப்படி......... ஆனந்தி //
......ஓ அப்படியா? .. நாங்களும் கொஞ்சம் டயர்டு ஆனோம்.. :)
@LK
//// have given you an award come and collect it /////
உங்கள் விருதிற்கு.. ரொம்ப நன்றி.. எல். கே.. :)
@பூர்ணா
//// @ ஆனந்தி
அச்சச்சோ.. வடை போச்சே ......
அருமை, அருமை. ////
அருமை.. அருமை.... வடை போனதுக்கா...??
இல்ல... கான்செர்ட் வர முடியலன்னா??
எதா இருந்தாலும், ஏற்பாடு பண்ணிரலாம்.. :D :D
@philosophy prabhakaran
//// தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடுத்திருக்கிறேன்... நீங்கள் விருதினை பெற்றுக்கொண்டால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்... /////
உங்கள் அன்பான விருதிற்கு மிக்க நன்றி.. :)
நாங்களும் கலந்து கொண்ட திருப்தி
நன்றி
Awesome sis
Post a Comment