topbella

Sunday, April 25, 2010

தக்காளி சட்னி

தக்காளி சட்னி:
தேவையான பொருட்கள்:

தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு / பூடு - 2 (அ) 3 பல்
புளி - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 5 (அ) 6 காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை- சிறிது
கடுகு - 1 /4 ஸ்பூன்


செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகாய் வற்றல், உ.பருப்பு சேர்த்து வறுக்கவும்.  கடுகு வெடித்து, உ. பருப்பு நிறம் மாறியதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு, புளி சேர்த்து.. மிக்சியில் அரைக்கவும்.. மையாக அரைத்துவிட  வேண்டாம். அரைக்கும் முன்பு சிறிது நேரம் ஆற வைத்து அரைக்கவும்..

அரைத்த பின்பு,  சிறிது எண்ணையில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்..


(தமிழ் வாசிக்க தெரியாத நண்பர்கள் சில பேருக்காக இங்கிலீஷ்-ல் ஒருமுறை....)

Tomato Chatni:
Needed things:


Tomato - 2 big ones
Onion - 1 big
Garlic pods - 2 or 3
Tamarind - little
Urad dhal - 2 tbsp
Red chillies - 5 or 6 (as needed)
Mustard seeds - 1/4 sp
Curry leaves - little
Salt - as needed


Method:

In a pan, put little oil and add mustard seeds, red chillies, urad dhal and fry them for little bit..
After the mustard seeds pops, and the urad dhal turns little brown,
add onion, garlic and fry for little.
After 2 minutes of frying, add tomato. now after the tomoatos get cooked add tamarind and salt and grind it. (coarsely). Let it cool for little time before you grind it. 

After grinding, season it with mustard seeds, curri leaves, urad dhal..




48 comments:

Mythili (மைதிலி ) said...

paalgova thakkaali chuttney eppo achchu??
super chuttney

எல் கே said...

thakkali cutney nallathan irukku

:)

சைவகொத்துப்பரோட்டா said...

இது எனக்கு ரொம்ப பிடிக்கும், எங்க
அம்மா செய்வாங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ஈஸி recipe ஆனந்தி... தேங்க்ஸ் for sharing ... just a thought வனக்கரப்ப கூட கொஞ்சம் வெந்தயம் சேத்தா நல்ல வாசனையா நல்லா இருக்கும்

தமிழ் உதயம் said...

தக்காளி சட்னி நல்லா இருக்கு.

நாடோடி said...

ஓ.... உங்க‌ வீட்ல‌ இன்னைக்கு தோசையா.... அப்ப‌டியே ந‌ம‌க்கு 2 செட் பார்ச‌ல் ...

dheva said...

கூரியர்ல கொஞ்சம் அனுப்பி விடுங்க....ரெண்டு இட்லியும் சேத்து....! படத்த பாத்தலே...பசி எடுக்குது...!

S Maharajan said...

இன்னும் நெறய எதிர்பார்கிறோம்

rajasurian said...

இதுபோன்ற எளிய பேச்சிலர் சமையல் குறிப்புகளை தொடர்ந்து தரவும்.

நன்றி

ஜில்தண்ணி said...

எங்க வீட்லயும்தான் செய்வாங்க
செம டேஸ்ட்ல
நன்றி

Sanjay said...

அண்ணனுக்கு ரெண்டு ஊத்தாப்பம், தக்காளி சட்னி பார்சல்!!!!!!!!! : ) : )

Siddharth said...

we will try it in africa
tks for chuttney
write more for people who stay africa.
but pls change your profile picture.

ஸ்ரீராம். said...

ஐயோ சட்னி ரெடியா இருக்கே...இட்லி எங்க...தோசை எங்க...

ஜெய்லானி said...

அப்படியே 10 இட்லி பார்சல் ( எத்தனை நாளைக்குதான் 4 இட்லின்னு சொல்றது )

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மைதிலி
//paalgova thakkaali chuttney eppo achchu??
super chuttney //

ஹிஹி.. பால்கோவா வருது வருது.. :-)

@LK
//thakkali cutney nallathan irukku //

தேங்க்ஸ் :-)

@சைவகொத்துப்பரோட்டா
//இது எனக்கு ரொம்ப பிடிக்கும், எங்க
அம்மா செய்வாங்க. //

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. :-)
ரொம்ப நன்றி..

@அப்பாவி தங்கமணி
//சூப்பர் ஈஸி recipe ஆனந்தி... தேங்க்ஸ் for sharing ... just a thought வனக்கரப்ப கூட கொஞ்சம் வெந்தயம் சேத்தா நல்ல வாசனையா நல்லா இருக்கும் //

ரொம்ப தேங்க்ஸ் உங்க டிப்ஸ்-கும், வருகைக்கும்.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ தமிழ் உதயம்
//தக்காளி சட்னி நல்லா இருக்கு.//

ரொம்ப நன்றி.. :)

@ நாடோடி
//ஓ.... உங்க‌ வீட்ல‌ இன்னைக்கு தோசையா.... அப்ப‌டியே ந‌ம‌க்கு 2 செட் பார்ச‌ல்//

பார்சல் அனுப்பியாச்சு.. ரொம்ப நன்றி.. :)

@தேவா
// கூரியர்ல கொஞ்சம் அனுப்பி விடுங்க....ரெண்டு இட்லியும் சேத்து....! படத்த பாத்தலே...பசி எடுக்குது...!//

கண்டிப்பா அனுப்பிரலாம்.. :)
ரொம்ப தேங்க்ஸ் தேவா..

@ S மகாராஜன்
//இன்னும் நெறய எதிர்பார்கிறோம்//

ரொம்ப நன்றி.. :)

@ rajasurian
//இதுபோன்ற எளிய பேச்சிலர் சமையல் குறிப்புகளை தொடர்ந்து தரவும்.நன்றி //

கண்டிப்பா எழுதறேன்.. ரொம்ப தேங்க்ஸ் :)

@ ஜில்தண்ணி
//எங்க வீட்லயும்தான் செய்வாங்க
செம டேஸ்ட்ல
நன்றி//

ரொம்ப தேங்க்ஸ் :)

வெங்கட் said...

சரி தக்காளி சட்னி
ரெடி..
தொட்டுக்க சைடு டிஷ்
என்னான்னு சொல்லலியே..!!

Anonymous said...

6 thosaium,8 idlium,koda 7 sapthium pothum,,satiniya thani thaniya parcel panidongo..

apprum rumba taste comacomanu erukku..

ithupola thengai chatnium epadi ciarthunu cholli thango..

nandri valga valamudan

varuthapadtha vaasippor sangam
niravaga thalapathi
complan surya..

(valakam pola superana swaiyana padivu ananthi..)

Anonymous said...

enda padivu vasikka varumpothu ellathium kuduthal pothum..

nandri.valga valamudan.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
// அண்ணனுக்கு ரெண்டு ஊத்தாப்பம், தக்காளி சட்னி பார்சல்!!!!!!!!! : ) : ) //

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. பார்சல் பண்ணியாச்சு.. பண்ணியாச்சு..
வருது கலக்ட் பண்ணிக்கோங்க :) :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@யாழினி
// we will try it in africa
tks for chuttney
write more for people who stay africa.
but pls change your profile picture.//

thanks for your comment..
will do more soon.. :)

@ஸ்ரீராம்.
//ஐயோ சட்னி ரெடியா இருக்கே...இட்லி எங்க...தோசை எங்க...//

வருது.. வருது.. நோ டென்ஷன் ப்ளீஸ்.. :) ரொம்ப நன்றி.. :)

@ ஜெய்லானி
//அப்படியே 10 இட்லி பார்சல் ( எத்தனை நாளைக்குதான் 4 இட்லின்னு சொல்றது ) //

ஹா ஹா.. ஓகே ஓகே.. பத்து இட்லியே பார்சல் பண்ணியாச்சு..
நாலு இட்லி தான் சட்னி கூட ப்ரீ.. மீதி ஆறு இட்லிக்கு பில் கட்டிருங்க..
ரொம்ப நன்றி. :)

Sanjay said...

Chutni nallaa irukkumo theriyala but the Picture looks superb ;-)

Specially the shadow on the left side and the bright white on the right side : ) : )

Chitra said...

simple and easy, Thank you.

கண்ணா.. said...

அடடா... நெல்லை மண்ணிலிருந்து இன்னொரு சமையல் ராணியா?

கலக்குங்கள்... நான் தக்காளி சட்னியை சொல்லலை... ப்ளாகை சொன்னேன்.... :))

பித்தனின் வாக்கு said...

இந்த சட்னியும் சப்பாத்தி,இட்லி,தோசை நல்ல காம்பினேசன். நாலு சப்பாத்தியும், இந்த சட்னியுமெடுத்துக் கிட்டு டூர் போகலாம். நல்ல டிஷ்.

R.Gopi said...

ஆனந்தி

தக்காளி சட்னி பலே டேஸ்ட்... மூணு தோசையும் குடுத்தா, ஒரு ஜமாய் ஜமாய்க்கலாம்... எப்படி ஐடியா?

Priya said...

சுலமான குறிப்புதான் என்றாலும் அதையே த‌மிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பது குட்!!!

pattchaithamizhan said...

2 tea.... 1 vadai :-D

pattchaithamizhan said...

1 tea.... 2 vadai :-D

'பரிவை' சே.குமார் said...

சமையல் குறிப்புகளை தொடர்ந்து தரவும்.

'பரிவை' சே.குமார் said...

ம்ம்ம்...

சுவையான தக்காளி சட்னி...

நம்ம வீட்டுல அடிக்கடி இதுதாங்க...

தொடரட்டும்.

Anonymous said...

ennaku innum sapathium,thosaiyum,idliyum vanthu seyra villai..

apprum photovai change panna venam..apprum photovai change panna venam..venam..


we like jasmin.
engal sangam like jasmin.

pasikuthu seikram annupnga..

nandri valga valamudan.

complan surya
1st standard "c"section

vanathy said...

looking yummy!

மங்குனி அமைச்சர் said...

மேடம் , தக்காளி எனக்கு புடிக்காது , அதுனால தக்காளி போடாம தக்காளி சட்னி எப்படி செய்றதுன்னு சொல்லிகுடுங்க

pichaikaaran said...

பல பேரு ஆங்கிலத்துல எழுதி குழப்புறாங்க... ஒன்னும் புரிவது இல்லை... தங்கள் தமிழுக்கு நன்றி

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ வெங்கட்
//சரி தக்காளி சட்னி ரெடி..
தொட்டுக்க சைடு டிஷ்
என்னான்னு சொல்லலியே..!! //

சட்னிக்கு சைடு டிஷ்..ஆஆ... (எந்த ஊருங்க நீங்க?? )
சரி.. எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.. இட்லி, தோசை, சப்பாத்தி..இப்படி எதாவது..ஒன்னு ஓகே..
ரொம்ப நன்றி..

@ Complan Surya
//6 thosaium,8 idlium,koda 7 sapthium pothum,,satiniya thani thaniya parcel panidongo..
apprum rumba taste comacomanu erukku..
ithupola thengai chatnium epadi ciarthunu cholli thango..//

உங்க ஆர்டருக்கு... ரொம்ப நன்றி..

//enda padivu vasikka varumpothu ellathium kuduthal pothum..
nandri.valga valamudan. //

ஹ்ம்ம்.. இதுவும் நல்ல ஐடியா..
நன்றி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்
//Chutni nallaa irukkumo theriyala but the Picture looks superb ;-)
Specially the shadow on the left side and the bright white on the right side : ) : ) //

என்ன இது.. :P :P

வேணும்னா வாங்க சாம்பிள் செஞ்சு குடுத்திரலாம்..

பிக்சர் கமெண்ட்-க்கு தேங்க்ஸ்.. :)

நீங்க சொல்லித்தான் நானே பாக்கறேன்.. :D :D

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ Chitra said...

//simple and easy, Thank you.//

Thanks chitra :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@கண்ணா
// அடடா... நெல்லை மண்ணிலிருந்து இன்னொரு சமையல் ராணியா?
கலக்குங்கள்... நான் தக்காளி சட்னியை சொல்லலை... ப்ளாகை சொன்னேன்.... :))//

உங்க கமெண்ட்-க்கு நன்றி.. கண்ணா.. :)

@ பித்தனின் வாக்கு
//இந்த சட்னியும் சப்பாத்தி,இட்லி,தோசை நல்ல காம்பினேசன். நாலு சப்பாத்தியும், இந்த சட்னியுமெடுத்துக் கிட்டு டூர் போகலாம். நல்ல டிஷ்.//

ஹ்ம்ம்.. நானும் அப்படி பண்ணியிருக்கேன்.. ரொம்ப தேங்க்ஸ்.. :)

@ R.Gopi said...

//ஆனந்தி ..
தக்காளி சட்னி பலே டேஸ்ட்... மூணு தோசையும் குடுத்தா, ஒரு ஜமாய் ஜமாய்க்கலாம்... எப்படி ஐடியா? //

ஹ்ம்ம்.. நல்ல ஐடியா தான்.. நோ ப்ராப்ளம்..!!
நன்றி கோபி..

@ Priya said...

//சுலமான குறிப்புதான் என்றாலும் அதையே த‌மிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பது குட்!!!//


தேங்க்ஸ் பிரியா.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ Thamizh Senthil said...
//2 tea.... 1 vadai :-D //

என்ன அதிசயம்.. வாங்க செந்தில்...!!
தேங்க்ஸ்.. :)

@ சே.குமார் said...

//சமையல் குறிப்புகளை தொடர்ந்து தரவும்.//


கண்டிப்பா தொடர்கிறேன்.. ரொம்ப நன்றி குமார்.. :)

// ம்ம்ம்...
சுவையான தக்காளி சட்னி...
நம்ம வீட்டுல அடிக்கடி இதுதாங்க...
தொடரட்டும் //

மீண்டும் நன்றி குமார்.. :)

prince said...

finger licking taste ....mmmm yummy

prince said...

கடைசி வரைக்கும் மேல இருக்குற அந்த இரண்டு இலையை பற்றி சொல்லவே இல்லை

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சூர்யா
// ennaku innum sapathium,thosaiyum,idliyum vanthu seyra villai..//

உங்க வீட்ல டோர் டெலிவரி பண்ணியாச்சு..:)

//apprum photovai change panna venam..apprum photovai change panna venam..venam..
we like jasmin.
engal sangam like jasmin.
pasikuthu seikram annupnga.. //

மாத்தல.. மாத்தலை.. டென்ஷன் ஆகாதீங்க..
மீண்டும் நன்றி..

@ vanathy
// looking yummy! //

ஹ்ம்ம்... ரொம்ப தேங்க்ஸ்..

@ மங்குனி அமைச்சர்
// மேடம் , தக்காளி எனக்கு புடிக்காது , அதுனால தக்காளி போடாம தக்காளி சட்னி எப்படி செய்றதுன்னு சொல்லிகுடுங்க //

சரிங்க சார்... சீக்கிரமா சொல்றேன்..
ரொம்ப நன்றி.

@ பார்வையாளன் said...
// பல பேரு ஆங்கிலத்துல எழுதி குழப்புறாங்க... ஒன்னும் புரிவது இல்லை... தங்கள் தமிழுக்கு நன்றி //

ரொம்ப நன்றிங்க.. :)

Anonymous said...

"சிறிது நேரம் வதக்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு, புளி சேர்த்து.. மிக்சியில் அரைக்கவும்..
udaney araikka venduma..?

sirithu (5minsafter) neram aravaithu araithal nalla erukkum..(yena Mixiyila udaney sooda arithal taste poidum apprum jarai open pana kastama erukkum.(enpathu enda ennam)orumurai eppadi udaney mixiyila pottu jar sooda agai apprum open panna kastapatuthu oru thakalichatni anupavam)

மையாக அரைத்துவிட வேண்டாம். okk..you are so jenious..and poetic.

VAruthapadatha vaasippor sangam
complan surya

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@பிரின்ஸ்
//finger licking taste ....mmmm yummy //

தேங்க்ஸ் :)

//கடைசி வரைக்கும் மேல இருக்குற அந்த இரண்டு இலையை பற்றி சொல்லவே இல்லை //

ஹிஹி.. கறிவேப்பிலை பத்தி சொல்லியிருக்கேனே..நல்லா பாருங்க..
நன்றி..

@சூர்யா

//"சிறிது நேரம் வதக்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு, புளி சேர்த்து.. மிக்சியில் அரைக்கவும்..
udaney araikka venduma..?

sirithu (5minsafter) neram aravaithu araithal nalla erukkum..(yena Mixiyila udaney sooda arithal taste poidum apprum jarai open pana kastama erukkum.(enpathu enda ennam)orumurai eppadi udaney mixiyila pottu jar sooda agai apprum open panna kastapatuthu oru thakalichatni anupavam)

மையாக அரைத்துவிட வேண்டாம். okk..you are so jenious..and poetic. //

ரொம்ப தேங்க்ஸ்... சூர்யா..
சூட அரைக்க கூடாதுன்னு போடுவதற்கு மறந்துட்டேன்.. நினைவு படுத்தியதற்கு நன்றி.. :)

Jaleela Kamal said...

ஆனந்தி ரொம்ப நல்ல இருக்கு, எனக்கு தோசைக்கு தொட்டு கொள்ள் ரொம்ப பிடிக்கும்,

ஓவ்வொரு முறையும் உங்கள் பதிவ பார்ககனும் என்றூ , நேரமிலலததால் முடியல,

பார்க்கவே நல்ல இருக்கு, கொஞ்சம் இஞ்சி சேர்த்து , சிறிது வெல்லமும் சேர்த்துகொண்டால் இன்னும் நல்ல இருக்கும்.


அமைச்சரே உமக்குதான் தக்காளி/

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Jaleela
//ஆனந்தி ரொம்ப நல்ல இருக்கு, எனக்கு தோசைக்கு தொட்டு கொள்ள் ரொம்ப பிடிக்கும்,
ஓவ்வொரு முறையும் உங்கள் பதிவ பார்ககனும் என்றூ , நேரமிலலததால் முடியல,//

ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி.. பரவாயில்லை.. உங்களுக்கு எப்போ நேரம் கிடைத்தாலும் கண்டிப்பாக வாங்க..

//பார்க்கவே நல்ல இருக்கு, கொஞ்சம் இஞ்சி சேர்த்து , சிறிது வெல்லமும் சேர்த்துகொண்டால் இன்னும் நல்ல இருக்கும்.//

ஹ்ம்ம்.. செய்து பார்கிறேன்.. நன்றி..

//அமைச்சரே உமக்குதான் தக்காளி///

ஹிஹி.. நா ஒன்னும் சொல்லலப்பா.. :D :D

Anonymous said...

வாவ், ஏனுங்க இது அமெரிக்கன் தக்காளி சட்னிய இல்ல இந்தியன் தக்காளி சட்னிய???
போட்டோ பார்த்தாலே ரொம்ப சூப்பரா இருக்குங்க...ஹ்ம்மம்ம்ம்ம்.....

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)