topbella

Sunday, March 28, 2010

நண்பர்கள் பல விதம்......ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!


நம்பிக்கைக்கு உரியவர்கள்:

"அரிது அரிது.. இது போல் அமைதல் அரிது.......
அப்படியே அமைந்தாலும் அடுத்தவர் பிரித்து விடாமல் இருத்தல் அரிது..."


இவர்களிடம் நீங்கள் எதையும்.. அதாவது எதையும் பகிர்ந்து கொள்ளலாம்.. எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு எதிராக அதை உபயோகிக்க மாட்டார்கள்.. எந்த ஒரு மன கஷ்டம் என்றாலும் இவர்களிடம் சொல்லும் போது அறிவுரையும், ஆறுதலும் கண்டிப்பாக கிடைக்கும்... அக்மார்க் கேரண்டி..!!

சுயநலமற்றவர்கள்:


"பாசக்கார பயபுள்ளைங்க....."
சில பேர் உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அவர்கள் மட்டும் நம்மிடம் அளவுக்கு அதிகமான பாசத்துடன் இருப்பார்கள்.. இப்படி நண்பர்கள் அமைவதும் அபூர்வமே.. அப்படி ஏற்கனவே அமைந்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலி..!!


தன்னலமிக்கவர்கள்:


"ஏண்டா.. எனக்கு முடியுமா? முடியாதான்னாவது கேட்டியாடா??....அவ்வ்வ்வ்வ்"
தனது சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள். பிறரிடம் எதையும் கேட்கும் போது இது அவர்களால் முடியுமா? அவர்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்குமா? என்றல்லாம் எண்ணமே இல்லாதிருப்பார்கள்... அவங்க வேலை நடந்தால் சரி.... இப்படி உங்களுக்கு அமைந்தால் அயம் வெரி சாரி.. ஒன்னும் பண்ண முடியாது...!!


ரெண்டுங் கெட்டான்ஸ்:


"ஆத்துல ஒரு காலு... சேத்துல ஒரு காலு கேஸ்..."
இதையெல்லாம் லிஸ்டிலயே வைக்க முடியாது.. இவங்க எப்போ, எப்படி, எந்த மாதிரி பல்டி அடிப்பாங்கன்னே சொல்ல முடியாது.. அதையும் மீறி, ரிஸ்க் எடுத்து பழகும் போது... அவங்க ரியாக்ஷன் வேலை எல்லாம் பார்த்து.... "நல்லாத்தான போயிட்டு இருந்தது... ஏன்.. ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன்டா இப்படின்னு கேட்டுட்டு இருக்க வேண்டியது தான்.."


பச்சோந்திகள்:


"அவ்வ்வ்வ்வ்வ்வ..... அவனா நீயியியியியி.."
உங்களுடன் இருக்கும் போது, அடுத்தவரை பற்றி குறை கூறுவது, இங்கு தான் மிகுந்த கவனம் தேவை.. அவர்கள் சொல்வதை சும்மா கேட்டு கொண்டிருக்காமல் "உம்" என்றோ "ஆம்" என்றோ, சொல்லி விட்டீர்கள் என்றால்.. ரொம்ப சாரி.. இட்ஸ் டூ லேட்.... எங்க நியூஸ் போடணுமோ அங்க வாசிச்சிருவாங்க... எதையாவது சொல்லி உங்க கிட்ட கருத்து கேட்டார்கள் என்றால், " ஹி ஹி ஹி....." என்று மட்டும் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவது உங்க உடம்புக்கும் நல்லது, மனசுக்கும் நல்லதுங்கோ..!!


இம்சை மன்னர்கள் (பொறுமையை சோதிப்போர்):


"என்ன கொடும சரவணா...??"
இவங்க ஒரு தினுசான வகை.. ஒரு வகையில சொல்லனும்னா "ரொம்ப நல்லவங்கப்பா" னு தான் சொல்லணும்.. நம்ம பொறுமையா இழுத்து பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்கோம்னே தெரியாமலயே, அதுங்க பாட்டுக்கு வறுத்துட்டு இருக்கும்.. கடைசியிலே "ஒய் ப்ளட்.... சேம் ப்ளட்......"னு சொல்லற மாதிரி ஆயிரும்..!!


நலமா.. நலம் இங்கே:


"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."
நீங்க நல்லா இருக்கிங்களா? நா நல்லா இருக்கேன்.. எங்கேயாவது வெளில பார்த்தால், ஹலோ....... எப்படி இருக்கீங்க?? என்ன பாக்கவே முடியறதில்ல.... கண்டிப்பா நம்ம மீட் பண்ணனும்பா.... (இப்படி பல வருடமாக சொல்லிக் கொள்வதுண்டு....) சரிங்க.. அப்ப பாக்கலாங்க.... வெரி நைஸ் மீட்டிங் யூ.....!! ஒரு வகையில பார்த்தால் இதுவே பெட்டெர்... எந்த பிரச்னையும் இல்லாத பிரெண்ட்ஷிப்....!!

**********************************

"இத்துடன் எனது பதிவை முடித்து கொள்கிறேன்... இதுக்கு மேல அறுத்தா அப்புறம் படிக்கிற உங்க காதுல ரத்தம் வந்திர போகுது.... பொறுமையாக படித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..."
 
 
Tamilish

39 comments:

எல் கே said...

super post .. a very good one and thoughtfull :)

எல் கே said...

//இவர்களிடம் நீங்கள் எதையும்.. அதாவது எதையும் பகிர்ந்து கொள்ளலாம்.. எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு எதிராக அதை உபயோகிக்க மாட்டார்கள்.. எந்த ஒரு மன கஷ்டம் என்றாலும் இவர்களிடம் சொல்லும் போது அறிவுரையும், ஆறுதலும் கண்டிப்பாக கிடைக்கும்... அக்மார்க் கேரண்டி..!/

intha mathiri neraya friends ungaluku kidaika valthugal

Sanjay said...

மிக மிக அருமை...!!!! : )

உங்களுக்கும் அதே போல ஒரு பூச்செண்டு வழங்கலாம் : )

//நம்ம பொறுமையா இழுத்து பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்கோம்னே தெரியாமலயே, அதுங்க பாட்டுக்கு வறுத்துட்டு இருக்கும்.. கடைசியிலே "ஒய் ப்ளட்.... சேம் ப்ளட்......"னு சொல்லற மாதிரி ஆயிரும்..!!//

ஹி ஹி சூப்பர் : ) : )

"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."

கலக்கல்ஸ்!!!!!!!!!!! : ) : )

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்,

உங்க பூச்செண்டுக்கு ரொம்ப நன்றி.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@LK,

thanks for your wishes..!!

Chitra said...

"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."

....... super assessment!

Chitra said...

Where do I stand, Ananthi? I am just curious to know......... ha,ha,ha,ha....

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Chitra,

thaangal endha idaththil irukireergal endru ungalukkae theriumae thozhi :)

Unknown said...

நல்ல பதிவு !!!

Mythili (மைதிலி ) said...

nalla irukku aanathi.. sema kalakkal. Blog ezhuthittu linkayum intha friendukku mail panni irukkeenga... entha category la vachchirukkeengalo... theritaliye. Athu sari neenga enna Type (enakku mattum ragasiyamaa sollunga)??

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ப்ரியா

உங்கள் தொடர் ஆதரவிற்கு.. நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மைதிலி

thanks..mythiii.. adhayum secret-aa inbox la solraen.. ;)

ப்ரியமுடன் வசந்த் said...

:))))

குட் ஹ்யூமர்ஸ்..

தாராபுரத்தான் said...

நண்பர்களை நல்லாவே எடை போட்டு வைத்துள்ளீரகள்.

ISR Selvakumar said...

தங்கை ஆனந்தி புதிதாக எழுத வந்திருப்பதாகத் தோன்றவில்லை. சரளமான எழுத்து. ஆச்சரியப்பட்டுப் போனேன்.

கலக்கல்!

Anonymous said...

நட்பின் இலக்கணமா? அருமை

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@nanrasitha

ரொம்ப நன்றி.!

Nandhini said...

Nice assessment about the "friendship" Ananthi....you did a great job.... and now whoever reads this will know where they stand.... for sure....I liked ur style of writing too.

'பரிவை' சே.குமார் said...

அட இந்த பயபுள்ளங்க நட்புக்குள்ள இவ்வளவு இருக்கா..? ஆவ்.......... பிரிச்சுப்புட்டிங்களே... அட நட்ப இல்லங்க... நட்புக்குள்ள இருக்கிற பிரிவிகளை...
நல்லாத்தான் இருக்கு உங்க பதிவு... வாழ்த்துக்கள்....

ம்... தொடரட்டும் உங்கள் கலக்கல்.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Nandhini

Thanks a lot for your wishes and comments.. :)

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சே.குமார்

உங்கள் தொடர் ஆதரவிற்கு ரொம்ப நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@வசந்த்

தேங்க்ஸ்....!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தாரபுரத்தான்

உங்கள் வருகைக்கும் ..வாழ்த்திற்கும் நன்றி

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@செல்வா அண்ணா..

உங்க தொடர் ஆதரவிற்கு நன்றி..
உங்கள் பாராட்டிற்கும் நன்றி..

R.Gopi said...

அட........

இம்புட்டு பேரா இருக்காய்ங்க.... இத பார்ரா..... நமக்கு தெரியாம போச்சே....

சரி... ஜோக்ஸ் அபார்ட்.... ஆனந்தி, பதிவு நல்லா இருக்கு....

//"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."//

அட்டகாசமுங்கோ.......

maha said...

frinstship partiya kavithi


nalla thanata pooikitu irukku


maha

Thenammai Lakshmanan said...

"பாத்த இடத்துல பில்ட்-அப்பு.... பக்கத்துல வந்தா ரன் அவுட்டு...."

-ஹா ஹாஹா தங்கச்சி உண்மைமா உண்மை இது

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@R.Gopi

வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேன்அக்கா..

ரொம்ப நன்றி அக்கா.. எனக்கும் அதே கருத்து தான்.. :D

Chitra said...

Ananthi, moi eluthitten. vottu pottutten. super padhivu, ma. Keep it up!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Chitra

Ellam pannitteenga.. appadiyae saapda vanthurunga..!!

Asiya Omar said...

அருமையான பதிவு.எல்லாமே மறுக்க முடியாத உண்மை.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@asiya omar

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

அன்புடன் மலிக்கா said...

//அப்படி ஏற்கனவே அமைந்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலி..!!//

அப்ப மட்டுமில்லை இப்பவும் நான் அதிர்ஷ்டசாலிதான் ஆனந்தி இதோ இன்னொரு தோழி.

அருமையாக தொகுத்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அன்புடன் மலிக்கா
//அப்ப மட்டுமில்லை இப்பவும் நான் அதிர்ஷ்டசாலிதான் ஆனந்தி இதோ இன்னொரு தோழி//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. தோழி.

ஜெய்லானி said...

ஹி ஹி ஹி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஜெய்லானி

வாங்க.. என்ன எதையோ பீல் பண்ணி சிரிக்கற மாதிரி இருக்கு?
நன்றி.. உங்கள் வரவுக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) good one

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@முத்துலெட்சுமி/muthuletchumi said...
// :)) good one //

ரொம்ப நன்றி.. :)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)