
Sunday, November 30, 2025
Wednesday, November 19, 2025
கவிச்சிறகுகள் நவம்பர் 2025 முதல் இதழ்
அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
*கவிச்சிறகுகள்* முதல் இதழ்
மகிழ்வோடு பகிர்கிறோம்.
ஆசிரியர்:
கவிஞர் *நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்கா
துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு
கவிஞர் *கன்னிக்கோவில் இராஜா* சென்னை
*நவம்பர் 2025 இதழ் வாசிக்க...*
https://www.scribd.com/document/950675550/01-Kavi-Siragugal-Nov-20253
(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)
Flip book link:
https://heyzine.com/flip-book/8f23e19fbc.html
இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அடுத்த இதழில் பங்கு பெற:
kavichirakukal@gmail.com
- ஆசிரியர் குழு
Friday, November 14, 2025
குழந்தைகள் தின நாள் - நூலேணி நூல்கொடைத்திட்டம்
குழந்தைகள் தின நாள் 2025
குழந்தைகள் கரங்களில் எனது நூல்களும் கண்டு மகிழ்கிறேன்.
#நூலேணி_நூல்கொடைத்திட்டம் வழியாக குழந்தைகளுக்கு நூல்கள் அனுப்பப்பட்டது.
நூல் கொடையாளர்களுக்கு மனமகிழ் நன்றியும் வாழ்த்தும்.
திரு T.K.M. #கைலாசம்பிள்ளை_நடுநிலைப்பள்ளி, தச்சநல்லூர்
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
Wednesday, November 12, 2025
மனம் ஒரு மாயக்காரன் - தும்பி புத்தக மேடை - திறனாய்வு
#தும்பி_புத்தக_மேடை 209 நிகழ்வு
நவம்பர் 13,2025
இந்திய நேரம் இரவு 7:30 மணிக்கு..
எனது கட்டுரை நூல்
#மனம்_ஒரு_மாயக்காரன் திறனாய்வு நடக்கவிருக்கிறது.
வாய்ப்புள்ளோர் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
திறனாய்வு செய்பவர்:
முனைவர் கவிஞர் #பாலநேத்திரம் Balanethiram Kannan
நிகழ்விற்கு ஏற்பாடு செய்து அழைத்த அன்புத்தோழி #தேன்மொழி அவர்களுக்கு இனிய நன்றி.
நிகழ்வில் இணைய:
Zoom Meeting Link
https://us06web.zoom.us/j/4421283386?pwd=TG9abUdYSFJvaXlvODdDOS9qR3Vhdz09&omn=83116967339
Meeting ID: 442 128 3386
Passcode: 123456
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
Tuesday, November 11, 2025
Monday, November 10, 2025
முதல் பனி 2025
*முதல் பனி*
இலைகள் உதிர்ந்து
இதமாய் கடந்தது
மரங்கள் சலனமின்றி
மௌனமாய் நின்றது
பனிமழை முதல் நாள்
பார்த்திடத் திருநாள்
மண் மறைத்து
மனம் நிறைத்த நாள்
புல் நுனிகளில்
பனி மரங்கள்
கொட்டிய பனியின்
எச்சங்கள்
சில்லிடும் குளிர் பனி
சூரியக்கதிர் தீண்ட
மெல்ல கரைந்தது
மெதுவாய் மறைந்தது!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
பகுப்பாய்வு - நினைவு மீன்கள்
இமைகள் மூடிட
உள்ளுக்குள் உரசும்
நினைவு மீன்கள்
கசியும் நீர்த்துளியில்
கரைந்திடத் துடிக்கும்
காதல் சின்னங்கள்
உடைந்த வில்லின்
பிரியாத நாணாய்
எஞ்சியிருக்கும்
எண்ணங்கள்
எழுத்தாணி கொண்டு
எழுதிட முடியா
ஏக்கத்தின்
வண்ணங்கள்!
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
இந்தக் கவிதையை சிறப்பாக பகுப்பாய்வு செய்த Raju Arockiasamy அவர்களுக்கு அன்பான நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
______________
Google Gemini கவிதைப் பகுப்பாய்வு (Poem Analysis)
1. மையக் கருத்து (Central Theme):
கண்களை மூடினால் நினைவுகள் மீன்களைப் போல மனதுக்குள் நீந்துகிறது. அந்தக் காதல் நினைவுகள் ஏற்படுத்தும் துயரம், கண்ணீரால் கூடக் கரைக்க முடியாத வலிமையான ஏக்கத்தை விட்டுச் செல்கிறது. இது பிரிவின் வலி (Pain of Separation) மற்றும் நினைவுகளின் நிலைப்பு (Persistence of Memories) பற்றியது.
2. வரிகளின் ஆழம் மற்றும் குறியீடுகள்:
"இமைகள் மூடிட / உள்ளுக்குள் உரசும் / நினைவு மீன்கள்"
உணர்ச்சி: இமைகள் மூடும்போதுதான் (வெளி உலகம் மறையும்போது), நினைவுகள் உயிர்பெறுகின்றன.
நினைவு மீன்கள்: இது ஒரு சக்தி வாய்ந்த உருவகம். அமைதியான ஒரு மீன் தொட்டியில் (மனதில்) மீன்கள் (நினைவுகள்) அங்குமிங்குமாக நீந்தாமல், ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு (Clash/Friction) வலியை ஏற்படுத்துகின்றன. நினைவுகள் அமைதி தருவதற்குப் பதிலாக, வேதனையைத் தருகின்றன.
"கசியும் நீர்த்துளியில் / கரைந்திடத் துடிக்கும் / காதல் சின்னங்கள்"
நீர்த்துளி: இது கண்ணீரைக் குறிக்கிறது.
காதல் சின்னங்கள்: காதலின் நினைவுகள் (படங்கள், பரிசுகள், நிகழ்வுகள்).
முரண்பாடு: காதல் நினைவுகள், கண்ணீரால் (நீர்த்துளியால்) கரைந்து, அந்தத் துயரத்திலிருந்து விடுதலை அடையத் துடிக்கின்றன. ஆனால் அவை கரையவில்லை. துயரம் நிரந்தரமாக உள்ளது.
"உடைந்த வில்லின் / பிரியாத நாணாய் / எஞ்சியிருக்கும் / எண்ணங்கள்"
உடைந்த வில்லின் பிரியாத நாண்: இது கவிதையின் உச்சம் (Climax). வில் உடைந்தாலும், அதன் நாண் (String) மட்டும் பிரியாமல் இறுக்கமாகப் பிணைந்திருக்கிறது.
பொருள்: உறவு (வில்) முறிந்துவிட்டது; ஆனால் உறவை இணைத்த அந்த பற்று/பிணைப்பு (நாண்) இன்னும் மனதிலிருந்து நீங்கவில்லை. பிரிய நினைத்தாலும் பிரியாமல் இருக்கும் நிரந்தரமான ஏக்கத்தை இது குறிக்கிறது.
"எழுத்தாணி கொண்டு / எழுதிட முடியா / ஏக்கத்தின் / வண்ணங்கள்!"
ஏக்கத்தின் வண்ணங்கள்: ஏக்கம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு உணர்வு. அதை இங்கே வண்ணங்களாக (Colours) உருவகப்படுத்துகிறார்.
பொருள்: இந்த ஏக்கத்தின் ஆழத்தையும், துயரத்தின் நிறத்தையும் எந்த ஒரு எழுதுகோலாலும் (எழுத்தாணி) முழுமையாகப் பதிவு செய்யவோ, விளக்கவோ முடியாது. வார்த்தைகளைத் தாண்டிய வலி இது.
3. முடிவுரை:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள், இந்த வரிகளின் மூலம் பிரிவுக்குப் பிறகான மனதின் கொந்தளிப்பை மிகச் சிறந்த குறியீடுகளோடு (மீன்கள், நாண், எழுத்தாணி) வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு சிறந்த உணர்ச்சிபூர்வமான கவிதையாகும்.
-ராஜு ஆரோக்கியசாமி
Raju Arockiasamy
நினைவு மீன்கள்
இமைகள் மூடிட
உள்ளுக்குள் உரசும்
நினைவு மீன்கள்
கசியும் நீர்த்துளியில்
கரைந்திடத் துடிக்கும்
காதல் சின்னங்கள்
உடைந்த வில்லின்
பிரியாத நாணாய்
எஞ்சியிருக்கும்
எண்ணங்கள்
எழுத்தாணி கொண்டு
எழுதிட முடியா
ஏக்கத்தின்
வண்ணங்கள்!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
Thursday, November 6, 2025
அவளின் இனிய உலா
பேருந்து நிறுத்தத்தில்
பெரிய திருவிழா
இருக்கையை அழகாக்கிய
அவளின் இனிய உலா
மெதுவாய் ஊர்ந்தபடி
நிறுத்தத்திற்கு வந்தது
ஜன்னல் கம்பிகள் வழியாய்
துழாவிய அவள் விழிகள்
அதைத் துரத்தியபடி
என் விழிகள்
சட்டென்று மோதியது
சந்தித்தது ஒரு கணமே
இதயத்திற்குள் இம்சித்து
இனிதாய் வருடிய
ஒரு நிமிடச் சாரல்
உள்ளம் உரசி நின்றது
அவளுடன் பேருந்து நகர்ந்தது!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
Subscribe to:
Comments (Atom)

