topbella

Friday, January 10, 2025

முனைவர் புகழேந்தி அவர்களின் பகுப்பாய்வு

முதற்கண் கவிஞர் முனைவர் புகழேந்தி அவர்களுக்கு மனமினிக்கும் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். ஒரு படைப்பாளருக்கு உச்ச பட்ச பெருமை அவர் தம் படைப்புகள் வாசிக்கப்படும் போது, ஆராதிக்கப்படும்போது, பேசப்படும்போது, பெருமை செய்யப்படும்போது தான்...

எழுத்துலகில் கவித்தூரிகை கொண்டு...

கண்ணும் கருத்துமாய் தொடர்ந்து பகுப்பாய்வு செய்து படைப்பாளர்களுக்கு பெருமை சேர்க்கும் தங்களுக்கு இனிய பாராட்டுகள்..

பகுப்பாய்வைக் கண்டு
பரவசம் கொண்டேன்
வார்த்தைகள் இல்லை
வாழ்த்தி மகிழ்கிறேன்
ஊக்கப்படுத்தி மகிழும்
உயர்கவிக்கு நன்றி..

தங்களது பணி மென்மேலும் வளர்க.. வாழ்த்துகள் Pugazhendhi V Poet சார்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

வணக்கம் நண்பர்களே.
07.04.2024‌ முதல் 'தன்முனைக் கவிதைகள் குழுமத்தில்', தன்முனைக் கவிதைகள் பகுப்பாய்வின் 2-ம் பாகம் வெளிவருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த 28-ம் அத்தியாயத்தில்  கவிஞர் நெல்லை அன்புடன்  ஆனந்தி அவர்களின் சிறப்பு தன்முனைக் கவிதை ஒன்றும், அதன் பகுப்பாய்வும் மற்றும் அதன் ஆங்கில, ஹிந்தி,  கன்னட மொழி
பெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன.‌ வாசித்து கடந்து விடாமல் தங்கள் மேலான பின்னூட்டங்களை அளித்து இத்தொடரை மேலும் மெருகேற்றும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
                                - அன்பன்                
                  முனைவர் வே.புகழேந்தி
********************************************
தன்முனைக் கவிதைகளின் பகுப்பாய்வு
பாகம் - 02.    (அத்தியாயம் - 28)
கவிஞர்:   நெல்லை அன்புடன் ஆனந்தி.
Poetess :    Nellai Anbudan Ananthi
कवयित्री.   :    नेल्लई अंबुडन आनंदी
ಕವಯಿತ್ರಿ  ,:   ನೆಲ್ಲೈ ಅಂಬುಡನ್ ಆನಂದಿ
***********************************************
'Poetry comes alive 
to me through
recitation'.

          - Natalie Merchant

"கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே".

            - கவிஞர் அறிவுமதி.
**********************************************
பூவிழிகளை மூடி சிரிக்கையில் புத்தம் புதுக்கவிதை
'மான்‌-நயனங்களைத் திறந்துக் காட்டினால் மரபுக்கவிதை
நிலைக் கண்ணாடியில் தோன்றும் முகமோ நீள்கவிதை.
தலையிலிருந்து  மார்பு வரை தன்முனைக் கவிதை
  
தோள்குலுக்கி, நடக்கையில், நிற்கையில்
புன்முறுவலில்  கவிதைச்சாயல்
'தோழியா? நீ  காதலியா?'  தோற்கிறேன்
விடைத்தெரியாமல்.
ஹைக்கூவென உன்னை வாசிக்கையில் 
ஹாயாக  நெளிகிறாய்
ஃபிடிலாக பாவித்து 'வாசி'க்கையில பிடிவாதம் செய்கிறாய்.

இரு-கால் கவிதையே! ஒருக்கால் நீ காதலில் விழுந்தால் -
திறந்தவெளிகள்   பாரிஜாதம்  பூத்து நிறைந்த  வெளிகளாகாதோ? 
மறைந்த வானவில் மழையின்றி  மீண்டும்
தோன்றாதோ?
இறந்த நாட்களெல்லாம் உயிர்த்தெழுந்து 
இரவும்-பகலும் இசைக்காதோ?
 
பார்வையால் படிக்கிறேன்
பாவையெனும்  தேன் கவி(தை)யே.
பரவசப் படுத்துகிறாய்  வாசகனென் ஆன்மா, மனதையே
சோர்வைப் போக்கிடும் செந்தமிழ் 
மகளே! செம்மொழியே!!
கோர்வையாய் சொல்லமைத்துப் பாடிட
நான் கவியில்லையே.

வாசிக்கிறேன் பார்வையால் கொஞ்சம், இதழ்களால் கொஞ்சம்
நேசிக்கிறேன் மனதால் கொஞ்சம்
இதையறியும் நெஞ்சம்
இமைகள்  மூடியக்  கவிதையே!  
பொங்கி-வரும் கங்கையே!
வாசித்து  விட்டேன்
நயனங்களை திறந்திடு நங்கையே!

        கன்னியரை வர்ணித்து கவிதை எழுதுகையில்  எழுதுக்கோலுக்கும்
இளமை திரும்பி விடுகிறது,  வெள்ளைத் தாள்களை வெட்கம் தொற்றிக் கொள்கிறது, வார்த்தைகள் வண்ணம் பூசிக்கொள்கின்றன. வசனகர்த்தாவும்
கவிஞனாகிறான். வல்லினம் மிகும், 
மிகா இடங்கள் தெள்ளத் தெளிவாகத்
தெரிகின்றன. சொற்கள் தம்மைத் தாமே அலங்கரித்துக் கொள்கின்றன. 'பிரமன்' என்னும் 'மகாகவி'  எழுதிய 'பெண்' என்னும் கவிதை, காதலி ஆகும் பட்சத்தில், வாய்ப் பேசாதவனும் வாசிக்கலாம்.‌  பார்வையால் பருகலாம். பேரெழிலை ஆராதிக்கலாம். போற்றி துதிக்கலாம். 
பெண்ணொருத்தி கவிதை எழுதுகையில்
'பென்' னும் பேப்பரும் புளகாங்கிதம் அடைகின்றன. அப்பெண்ணே கவிதையாகையில் ஆண் வர்க்கம் 
அவள் எழிலை  வாசிக்கத் துடிக்கிறது. அவளிடம் காதலை யாசிக்கிறது. அவளைப்பற்றியே அல்லும் பகலும் யோசிக்கிறது. கவிதை எழுதும் காளையரைக் கன்னியருக்குப் பிடிக்கும்.
நடமாடும் கவிதைப் போன்ற நங்கையரைக் 
காளையருக்குப் பிடிக்கும். சொல்லை வைத்து சிறப்பானக் கவிதைகள் புனையும் கவிஞர்  நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் கவிதைகளில் பெண்ணியம் 
பேசப்படும், , இயற்கை எழில் கொஞ்சி விளையாடும், சமூக நீதி சதிராட்டம் போடும்,  நூல்கள் பல எழுதியுள்ள இவர் 
சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பினரையும் ஊக்குவித்து 
அவர்தம் எழுத்துகளை புத்தகமாக மாற்றிடும் கலையில் வல்லுநர் ஆவார்.
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் சிறப்பு தன்முனைக் கவிதையையும் அதன் ஆங்கில, ஹிந்தி மற்றும் கன்னட மொழியாக்கங்களைப் பார்வையிடலாம் வாருங்கள்.

"கண்களை மூடியே
கவிதை சொல் என்றாள் .
வாசிக்கத் தொடங்கினேன்
கண் மூடிய கவிதையை".

        - நெல்லை அன்புடன் ஆனந்தி.
      
Closing her eyes, 
she pleaded to recite a poetry.
I started reciting
the poetry  of closed-eye.

       -  Poetess Nellai Anbudan Ananthi

           
अपनी आँखें बंद करके
उसने  एक कविता सुनाने का आग्रह किया।
मैं एक कविता सुनाने लगा
एक बंद आँख कविता पर।

          -  कवयित्री नेल्लई अंबुडन आनंदी

ಕಣ್ಣುಗಳನ್ನು ಮುಚ್ಚಿಕೊಂಡು
ಕವಿತೆಯೊಂದನ್ನು ವಾಚಿಸಲು ವಿನಂತಿಸಿದಳು.
ಕವಿತೆ ಹೇಳಲು ಪ್ರಾರಂಭಿಸಿದೆ ನಾನು
ಕಣ್ಮು ಮುಚ್ಚಿದ ಕವಿತೆಯನ್ನು.

              - ಕವಯಿತ್ರಿ ನೆಲ್ಲೈ ಅಂಬುಡನ್ ಆನಂದಿ
***********************************************


0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)