topbella

Sunday, December 28, 2025

கவி ஞாயிறு - வாரம் ஒரு கவிஞர் - நெல்லை அன்புடன் ஆனந்தி

கவி ஞாயிறு
வாரம் ஒரு கவிஞர் நிகழ்வில்..

இன்று..

ஆம்பூர் அமிழ்தினி சுரேஷ்

எனது கவிதையை வாசித்தது அறிந்து மனமகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துகள் கண்ணம்மா..
வாழ்க வளமுடன்!!

நெல்லை அன்புடன் ஆனந்தி 



Wednesday, December 24, 2025

கவிதை உறவு - கவிஞர்கள் சந்திப்பு


https://us02web.zoom.us/j/4775896897?pwd=bzUyeFp0RnB5dGx1c1p6UE5LdjZTdz09

தினத்தந்தி நூல் மதிப்புரை செய்தி - பானை மேல் எலி - நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, December 21, 2025

மிச்சிகனில் நூல் வெளியீட்டு விழா

டிசம்பர் 06, 2025
சனிக்கிழமை மதியம் 1:00-3:00 மணி வரை

மிச்சிகனில் திரு. இரா. கள்ளப்பிரான் (இராகன்) அவர்களின் "உள்ளம் இரண்டும் ஒன்றும்" புதினம் வெளியிடப்பட்டது.

முனைவர் கவிஞர் பாலநேத்திரம் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.

கவிஞர் எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்கினார்.

திரு. அனந்தபத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார்.

சுமார் 70 பேருக்கு மேல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டாளர்கள் திரு. ராம், திருமதி. கோமதி, கவிஞர் புதுயுகன், திருமதி. அரிணி ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இலக்கியத்திற்காக இணைந்த இக்கூட்டம் நேர்த்தியான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

நேரக்காப்பை சரியான முறையில் கடைபிடித்து நிகழ்ச்சி சரியான நேரத்தில் நிறைவு செய்யப்பட்டது.

சுவையான மதிய உணவும் பேக் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.

இதுபோன்ற நிகழ்வுகள் மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

பின்புலமாக இணைந்து உழைத்த விழாக்குழுவினர் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

~ நெல்லை அன்புடன் ஆனந்தி

விழாப் புகைப்படங்கள் சில:
விழா குறித்த தினமலர் செய்தி:
https://www.dinamalar.com/world-news-nri-ta/united-states/tamil-news/tamil-book-launch-in-michigan/18850

விழாவின் காணொளிகள் சில:





Friday, December 19, 2025

கவிச்சிறகுகள் இரண்டாம் இதழ் - டிசம்பர் 2025


அனைவருக்கும் இனிய வணக்கம்!

டிசம்பர் 2025 கவிச்சிறகுகள் இதழ்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கவிச்சிறகுகள் இரண்டாம் இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அமெரிக்கா 

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு: 
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா சென்னை 

டிசம்பர் 2025 இதழ் வாசிக்க...

https://www.scribd.com/document/967778424/02-Kavi-Siragugal-Dec-2025?secret_password=t5V6708TpWuLkooITtir
(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)

Flip book link:
https://heyzine.com/flip-book/cb02461fe1.html

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற: 
kavichirakukal@gmail.com

- ஆசிரியர் குழு

மகிழினி மணிமாறன் கலந்துரையாடல் | திணை அமெரிக்கா | நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, November 30, 2025

மெட்டுக்குப்பாட்டு | ஒர்க் ஃபிரம் ஹோம் | நெல்லை அன்புடன் ஆனந்தி

Wednesday, November 19, 2025

கவிச்சிறகுகள் நவம்பர் 2025 முதல் இதழ்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 
*கவிச்சிறகுகள்* முதல்  இதழ்
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
கவிஞர் *நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்கா 

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு 
கவிஞர் *கன்னிக்கோவில் இராஜா* சென்னை 

*நவம்பர் 2025 இதழ் வாசிக்க...*

https://www.scribd.com/document/950675550/01-Kavi-Siragugal-Nov-20253
(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)

Flip book link:
https://heyzine.com/flip-book/8f23e19fbc.html

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற: 
kavichirakukal@gmail.com

- ஆசிரியர் குழு

Friday, November 14, 2025

குழந்தைகள் தின நாள் - நூலேணி நூல்கொடைத்திட்டம்

குழந்தைகள் தின நாள் 2025
குழந்தைகள் கரங்களில் எனது நூல்களும் கண்டு மகிழ்கிறேன்.

#நூலேணி_நூல்கொடைத்திட்டம் வழியாக குழந்தைகளுக்கு நூல்கள் அனுப்பப்பட்டது.
நூல் கொடையாளர்களுக்கு மனமகிழ் நன்றியும் வாழ்த்தும்.

திரு T.K.M. #கைலாசம்பிள்ளை_நடுநிலைப்பள்ளி, தச்சநல்லூர்

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

Wednesday, November 12, 2025

மனம் ஒரு மாயக்காரன் - தும்பி புத்தக மேடை - திறனாய்வு

#தும்பி_புத்தக_மேடை 209 நிகழ்வு

நவம்பர் 13,2025
இந்திய நேரம் இரவு 7:30 மணிக்கு..

எனது கட்டுரை நூல் 
#மனம்_ஒரு_மாயக்காரன் திறனாய்வு நடக்கவிருக்கிறது.

வாய்ப்புள்ளோர் வருக என அன்புடன் அழைக்கிறோம்.

திறனாய்வு செய்பவர்:
முனைவர் கவிஞர் #பாலநேத்திரம் Balanethiram Kannan 

நிகழ்விற்கு ஏற்பாடு செய்து அழைத்த அன்புத்தோழி #தேன்மொழி அவர்களுக்கு இனிய நன்றி.

நிகழ்வில் இணைய:
Zoom Meeting Link

https://us06web.zoom.us/j/4421283386?pwd=TG9abUdYSFJvaXlvODdDOS9qR3Vhdz09&omn=83116967339

Meeting ID: 442 128 3386
Passcode: 123456

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

Tuesday, November 11, 2025

திருக்குறள் மாமன்றம் மதுரை - சிறப்புச் சொற்பொழிவு

உள்ளம் இரண்டும் ஒன்றும் - நூல் வெளியீடு - டிசம்பர் 06, 2025 - Novi, Michigan

Monday, November 10, 2025

முதல் பனி 2025


*முதல் பனி*

இலைகள் உதிர்ந்து
இதமாய் கடந்தது
மரங்கள் சலனமின்றி
மௌனமாய் நின்றது

பனிமழை முதல் நாள்
பார்த்திடத் திருநாள்
மண் மறைத்து
மனம் நிறைத்த நாள்

புல் நுனிகளில்
பனி மரங்கள்
கொட்டிய பனியின்
எச்சங்கள்

சில்லிடும் குளிர் பனி
சூரியக்கதிர் தீண்ட
மெல்ல கரைந்தது
மெதுவாய் மறைந்தது!

✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி

பகுப்பாய்வு - நினைவு மீன்கள்

இமைகள் மூடிட
உள்ளுக்குள் உரசும்
நினைவு மீன்கள்

கசியும் நீர்த்துளியில்
கரைந்திடத் துடிக்கும்
காதல் சின்னங்கள்

உடைந்த வில்லின்
பிரியாத நாணாய்
எஞ்சியிருக்கும் 
எண்ணங்கள்

எழுத்தாணி கொண்டு
எழுதிட முடியா
ஏக்கத்தின்
வண்ணங்கள்!

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

இந்தக் கவிதையை சிறப்பாக பகுப்பாய்வு செய்த Raju Arockiasamy அவர்களுக்கு அன்பான நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
______________
Google Gemini கவிதைப் பகுப்பாய்வு (Poem Analysis)

1. மையக் கருத்து (Central Theme):
கண்களை மூடினால் நினைவுகள் மீன்களைப் போல மனதுக்குள் நீந்துகிறது. அந்தக் காதல் நினைவுகள் ஏற்படுத்தும் துயரம், கண்ணீரால் கூடக் கரைக்க முடியாத வலிமையான ஏக்கத்தை விட்டுச் செல்கிறது. இது பிரிவின் வலி (Pain of Separation) மற்றும் நினைவுகளின் நிலைப்பு (Persistence of Memories) பற்றியது.

2. வரிகளின் ஆழம் மற்றும் குறியீடுகள்:
"இமைகள் மூடிட / உள்ளுக்குள் உரசும் / நினைவு மீன்கள்"

உணர்ச்சி: இமைகள் மூடும்போதுதான் (வெளி உலகம் மறையும்போது), நினைவுகள் உயிர்பெறுகின்றன.

நினைவு மீன்கள்: இது ஒரு சக்தி வாய்ந்த உருவகம். அமைதியான ஒரு மீன் தொட்டியில் (மனதில்) மீன்கள் (நினைவுகள்) அங்குமிங்குமாக நீந்தாமல், ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு (Clash/Friction) வலியை ஏற்படுத்துகின்றன. நினைவுகள் அமைதி தருவதற்குப் பதிலாக, வேதனையைத் தருகின்றன.

"கசியும் நீர்த்துளியில் / கரைந்திடத் துடிக்கும் / காதல் சின்னங்கள்"

நீர்த்துளி: இது கண்ணீரைக் குறிக்கிறது.

காதல் சின்னங்கள்: காதலின் நினைவுகள் (படங்கள், பரிசுகள், நிகழ்வுகள்).

முரண்பாடு: காதல் நினைவுகள், கண்ணீரால் (நீர்த்துளியால்) கரைந்து, அந்தத் துயரத்திலிருந்து விடுதலை அடையத் துடிக்கின்றன. ஆனால் அவை கரையவில்லை. துயரம் நிரந்தரமாக உள்ளது.

"உடைந்த வில்லின் / பிரியாத நாணாய் / எஞ்சியிருக்கும் / எண்ணங்கள்"

உடைந்த வில்லின் பிரியாத நாண்: இது கவிதையின் உச்சம் (Climax). வில் உடைந்தாலும், அதன் நாண் (String) மட்டும் பிரியாமல் இறுக்கமாகப் பிணைந்திருக்கிறது.

பொருள்: உறவு (வில்) முறிந்துவிட்டது; ஆனால் உறவை இணைத்த அந்த பற்று/பிணைப்பு (நாண்) இன்னும் மனதிலிருந்து நீங்கவில்லை. பிரிய நினைத்தாலும் பிரியாமல் இருக்கும் நிரந்தரமான ஏக்கத்தை இது குறிக்கிறது.

"எழுத்தாணி கொண்டு / எழுதிட முடியா / ஏக்கத்தின் / வண்ணங்கள்!"

ஏக்கத்தின் வண்ணங்கள்: ஏக்கம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு உணர்வு. அதை இங்கே வண்ணங்களாக (Colours) உருவகப்படுத்துகிறார்.

பொருள்: இந்த ஏக்கத்தின் ஆழத்தையும், துயரத்தின் நிறத்தையும் எந்த ஒரு எழுதுகோலாலும் (எழுத்தாணி) முழுமையாகப் பதிவு செய்யவோ, விளக்கவோ முடியாது. வார்த்தைகளைத் தாண்டிய வலி இது.

3. முடிவுரை:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள், இந்த வரிகளின் மூலம் பிரிவுக்குப் பிறகான மனதின் கொந்தளிப்பை மிகச் சிறந்த குறியீடுகளோடு (மீன்கள், நாண், எழுத்தாணி) வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு சிறந்த உணர்ச்சிபூர்வமான கவிதையாகும்.

-ராஜு ஆரோக்கியசாமி
Raju Arockiasamy

எதையும் ஊன்றிப்பார் - இளையார் ஆத்திசூடி கதை

ஆனந்தசந்திரிகை மாத இதழில் வெளிவந்த கதை..


Books available at Commonfolks

வான் மழையே வா - திருக்குறள் கவிதை

திருக்குறள்-கடவுள் வாழ்த்து கவியரங்கம்

தொழில்நுட்பக் கலவரத்தில்...

அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் - போட்டி#1

தன்முனைத் தளிர் கார்த்திகை

என்னுயிர் நீயன்றோ - ஆனந்த அந்தாதி

தன்முனைத் தளிர் கார்த்திகை

உள்ளத்தில் ஒளி வீசும்

எங்கும் பெருமையே

வரிகளில் வாழும் கண்ணதாசன்


https://youtube.com/live/TIM2F-gZN_Q?feature=share

எண்ணக் குமிழ்களில்...

நினைவு மீன்கள்

இமைகள் மூடிட
உள்ளுக்குள் உரசும்
நினைவு மீன்கள்

கசியும் நீர்த்துளியில்
கரைந்திடத் துடிக்கும்
காதல் சின்னங்கள்

உடைந்த வில்லின்
பிரியாத நாணாய்
எஞ்சியிருக்கும் 
எண்ணங்கள்

எழுத்தாணி கொண்டு
எழுதிட முடியா
ஏக்கத்தின்
வண்ணங்கள்!

✍️  நெல்லை அன்புடன் ஆனந்தி

Thursday, November 6, 2025

வாழ்க்கை வசமாகும்

தன்முனைக் கவிதைகள் - கொக்கரக்கோ நவம்பர் 2025

கவிச்சிறகுகள் மின்னிதழ் தொடக்கம்

அவளின் இனிய உலா


பேருந்து நிறுத்தத்தில்
பெரிய திருவிழா
இருக்கையை அழகாக்கிய 
அவளின் இனிய உலா

மெதுவாய் ஊர்ந்தபடி 
நிறுத்தத்திற்கு வந்தது
ஜன்னல் கம்பிகள் வழியாய்
துழாவிய அவள் விழிகள்

அதைத் துரத்தியபடி
என் விழிகள்
சட்டென்று மோதியது
சந்தித்தது ஒரு கணமே

இதயத்திற்குள் இம்சித்து
இனிதாய் வருடிய
ஒரு நிமிடச் சாரல்
உள்ளம் உரசி நின்றது
அவளுடன் பேருந்து நகர்ந்தது!

✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, October 19, 2025

ஆனந்தசந்திரிகை தீபாவளி மலர் 2025 - திருக்குறள் கவிதை

#ஆனந்தசந்திரிகை 

#தீபாவளி_மலரில்..

எனது பங்களிப்புகள்..

WISH YOU ALL A VERY HAPPY DEEPAVALI

For reading Anandachandrikai 10-19-2025: (தீபாவளி மலர்)
https://drive.google.com/file/d/1i1L3_6sdW4_p69Qro5hFLcYxAeKe0Flo/view?usp=drive_link

For your review, feedback & comments:
https://www.facebook.com/share/p/1CmjiN8dfr/

@highlight 
Anandachandrikai - Tamil Digital Magazine 
Ramkey Ramakrishnan 
Ramkey Ramakrishnan 

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

ஆனந்தசந்திரிகை தீபாவளி மலரில் எனது சிறுகதை 2025

#ஆனந்தசந்திரிகை 

#தீபாவளி_மலரில்..

எனது சிறுகதை..

WISH YOU ALL A VERY HAPPY DEEPAVALI

For reading Anandachandrikai 10-19-2025: (தீபாவளி மலர்)
https://drive.google.com/file/d/1i1L3_6sdW4_p69Qro5hFLcYxAeKe0Flo/view?usp=drive_link

For your review, feedback & comments:
https://www.facebook.com/share/p/1CmjiN8dfr/

@highlight 
Anandachandrikai - Tamil Digital Magazine 
Ramkey Ramakrishnan 
Ramkey Ramakrishnan 

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)