topbella

Monday, August 12, 2024

பறை இசைக்கலைஞர் மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் சித்திரசேனன் அவர்களுடன் நேர்காணல்

https://youtu.be/ic0y7Ztiek0?si=X5q4mX7jeeevNrO3

Saturday, August 10, 2024

நிலவோடு...

நிலவோடு நீந்திடவா
நில்லாமல் மிதந்திடவா
அவளோடு பேசிடவா
அன்பையும் சொல்லிடவா..

வாசல் வரை வந்தாச்சு
வண்ணத்துடன் நின்னாச்சு
வாசமல்லி பூவாட்டம்
வாசம் வீச வந்தாச்சு...

கருமேகம் நகல் எடுக்க
கலையாம நிப்பவளே
தலையாட்டும் மரங்களுமே
தவம் செய்ய கடப்பவளே...!

நெல்லை அன்புடன் ஆனந்தி

Monday, August 5, 2024

ஆனந்த அந்தாதி

https://www.facebook.com/share/p/a4ErLSVupqMYA3hw/?mibextid=qi2Omg

நெல்லையப்பர் வீதி - நினைவுப்பரிசாய்

ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380-ஆவது பிறந்த நாளில் 38 படைப்பாளர்களின் நூல்களை நூலேணி பதிப்பகம்  வெளியிட இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் இருந்து நான் பிறந்த மண்ணான திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நெல்லையப்பர் பெயரைத் தாங்கிய எனது லிமரைக்கூ நூலான..

#நெல்லையப்பர்_வீதி நூலை..

இன்று பிறந்தநாள் கண்ட சிவன் பூங்கா அமைப்பாளர் #கிருபானந்தன்  அவர்களுக்கு முதல் அரங்கம் சார்பில் சிறப்பு செய்யப்பட்ட போது
நூலை அவருக்கு நினைவுப்பரிசாக முனைவர் #தாமோதரன் அவர்கள் வழங்கியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

திரு.வி.க. அரங்க உறவுகளுக்கு என் அன்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
அமெரிக்கா

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)