தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 4
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
கரம் மசால் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- பாகற்காயை நன்கு கழுவி ஈரம் போக துடைத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அதில் கடலை மாவு, மிளகாய் வத்தல் பொடி, காயப் பொடி, கரம் மசால் பொடி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிசிறிக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க அவசியம் இருக்காது, பாகற்காயில் உள்ள ஈரப்பதமே போதும். தேவை என்றால் லேசாக தெளித்துக் கொள்ளவும்).
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாகற்காய்களை உதிர்த்து விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
~அன்புடன் ஆனந்தி
3 comments:
ஊரில் பேக்கரியில் சூடாக வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்... செய்முறை பார்க்கும் போது சுலமபமாகத்தான் இருக்கிறது... ஒரு முறை செய்து பார்க்கலாம்.
ஆகா... அருமையாக இருக்கே... செய்து பார்த்திட வேண்டியது தான்...
செய்முறை விளக்கத்திற்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
Will try soon!Thanks for posting:)
Post a Comment