topbella

Wednesday, October 10, 2012

நில்லாமல் சென்றாயோ..!



இறுக்கமான உள்ளம் கூட 
இயல்புக்கு திரும்பும் வண்ணம்
இயல்பாய் அசைந்து அசைந்து 
இலை உதிர்க்கும் மரங்கள்...

தன்னியல்பு மாறாது 
தனித்தன்மை குறையாது 
தன்னலம் கருதாது 
தயங்காது தரை தொடும் 
தன்னிகரில்லா இலைகள்...

பிரதி பலன் எதிர்பார்க்காது 
பின் விளைவுகளை எண்ணாது 
பிரகாசிக்கும் வண்ணத்துடன் 
புத்துணர்வோடு வலம் வந்தாய்...

உத்திரவாதம் ஏதுமின்றியே
உதிர்ந்து போகும் போதும்
உன்னழகில் எமை வென்று 
உல்லாசமாய் செல்கிறாய்...

எதையும் எதிர்பார்க்காது
எவர் உதவியும் நாடாது 
நீ நீயாய் இருந்து போவென்றே 
சொல்லாமல் சொல்லி
நில்லாமல் சென்றாயோ..!

~அன்புடன் ஆனந்தி

13 comments:

Tamilthotil said...

த,தாயென்று சந்த நயத்துடன் நமக்கு உயிர்க்காற்றை தரும் இலைகளைப் பற்றியை உங்களின் கவிதை அருமை.

அத்துடன் உங்களின் கவிதையைப் படிக்கையில் ஒரு அழகான தாள லயம் இழையோடுவது மேலும் அழகு

Vijaya Vellaichamy said...

நல்ல ரசனை! கவிதையின் கடைசி வரிகள் மிக அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... அருமை...

நன்றி...

Mahi said...

Nice click Ananthi! :)

Kavithai nalla iruku!

இராஜராஜேஸ்வரி said...

பிரதி பலன் எதிர்பார்க்காது
பின் விளைவுகளை எண்ணாது
பிரகாசிக்கும் வண்ணத்துடன்
புத்துணர்வோடு வலம் வந்தாய்...

அருமையான ரச்னை !

Unknown said...

அருமை

'பரிவை' சே.குமார் said...

ரசனை மிகுந்த கவிதை.
வாழ்த்துக்கள்.

AshIQ said...

கவிதையில் சும்ம எதுகை மோனையை தவிர வேற எதுவும் இருப்பதாக தெரியவில்லை, எதோ ரைம்ஸ் வகையில் சேர்க்கலாம்

மண்ணிக்க
ஆஷிக் (எ) பஹ்ருத்தீன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தமிழ்ராஜா k.

கருத்திற்கு மிக்க நன்றி.


@விஜி

ரொம்ப நன்றி விஜி.


@திண்டுக்கல் தனபாலன்

மிக்க நன்றி.


@மஹி

ரொம்ப நன்றி மஹி. :)


@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றி.


@Mohan P

நன்றி.



@சே. குமார்

மிக்க நன்றி.


@AshIQ

கருத்துக்கு நன்றி.



@தொழிற்களம் குழு

நன்றி.

dogra said...

"நீ நீயாய் இருந்து போ" என்ற கருத்து 'இயல்பு' என்னும் வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் இக்கவிதையின் மூலம் இயல்பாகவே வெளிப்படுவது கவிதையின் சிறப்பு.

நமக்கு இயல்பாக இருப்பதை பின்பற்றினாலே சந்தோஷமும், வளர்ச்சியும், எழுச்சியும், மலர்ச்சியும் தானாக வரும்.

உங்கள் இதர கவிதைகளைப் போலவே கருத்தும், ஒலிநயமும், அடியமைப்பும் இணைந்து அழகுண்டாக்கும் சிறந்த கவிதை இது. வாழ்த்துக்கள்!

dogra said...

"நீ நீயாய் இருந்து போ" என்ற கருத்து 'இயல்பு' என்னும் வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் இக்கவிதையின் மூலம் இயல்பாகவே வெளிப்படுவது கவிதையின் சிறப்பு.

நமக்கு இயல்பாக இருப்பதை பின்பற்றினாலே சந்தோஷமும், வளர்ச்சியும், எழுச்சியும், மலர்ச்சியும் தானாக வரும்.

உங்கள் இதர கவிதைகளைப் போலவே கருத்தும், ஒலிநயமும், அடியமைப்பும் இணைந்து அழகுண்டாக்கும் சிறந்த கவிதை இது. வாழ்த்துக்கள்!

Thanglish Payan said...

Nice one !!!

Thanglish Payan said...

Nice one !!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)