topbella

Sunday, September 23, 2012

இன்ஸ்டண்ட் கேரட் தோசை..!


தேவையான பொருட்கள்:

காரட் - 1 கப் (துருவியது)
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்த மாவுடன் சேர்க்கவும்.

தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டு பாருங்க.





~அன்புடன் ஆனந்தி 





8 comments:

r.v.saravanan said...

நல்லாருக்கு கேரட் தோசை பகிர்வுக்கு நன்றி

Avargal Unmaigal said...

முதல் தோசை எனக்குதான்...ஹாய்யா

Avargal Unmaigal said...

பார்க்க அழகாக இருக்கும் இந்த தோசையை இங்கு வந்து கருத்து சொல்பவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாமே

சந்திர வம்சம் said...

பார்த்த உடன் செய்து பார்க்கத்தோன்றும் எளிய ஆனால் சுவையான தோசை!
[நேரம் வாய்க்கும்போது வரவும்:

பத்மாவின் தாமரை மதுரை

Vijaya Vellaichamy said...

என்னை போல் சோம்பேறிகளுக்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட அறுசுவை உணவு! நன்றி!!!!!

Menaga Sathia said...

ரொம்ப நாளாச்சு உங்க பதிவை பார்த்து,எப்படி இருக்கீங்க??

ஆரோக்கியமான தோசை சூப்பர்ர்...

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்த்திடுவோம்....

நன்றிங்க...

வல்லிசிம்ஹன் said...

காரட் தோசை ருசியாக இருக்கும் போல இருக்கே.உடலுக்கும் நல்லது,. பேரனுக்குச் செய்து கொடுக்கச் சொல்கிறேன்.நன்றி மா.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)