சிந்தையில் நாளும்
சிதறாமல் உலவுகின்றாய்
கண்மூடி தூங்கையிலும்
கைதட்டி எழுப்புகிறாய்...
கரம் பிடித்து விரல் பிரித்து
கதைகள் பல சொல்கிறாய்
உன் சிரம் சாய்த்து
என் நெஞ்சில்
ஸ்வரம் மீட்டி நகர்கிறாய்..
உள்ளங்கையில் தாங்குகிறாய்
உயிருடன் ஊஞ்சலாடுகிறாய்
எண்ணத்தில் கலகம் செய்கிறாய்
உன் நெஞ்சத்தில் சிறை வைக்கிறாய்..!
உனைச் சேரத் துடிக்கும் உயிரை
காணத் தவிக்கும் காதலை
காதல் செய்யும் என்னை
கை பிடிப்பது எப்போது..!
ஏதும் பெரிதில்லை
எதுவும் தேவையில்லை
அன்பன் உன் அன்பு
ஒன்றே அடைக்கலம் எனக்கு
தஞ்சம் புகுந்தேன் உன்னிடம்
தயை செய்வாய் எனக்கு..!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
9 comments:
ஏதும் பெரிதில்லை
எதுவும் தேவையில்லை
அன்பன் உன் அன்பு
ஒன்றே அடைக்கலம் எனக்கு
தஞ்சம் புகுந்தேன் உன்னிடம்
தயை செய்வாய் எனக்கு..!//
எதிர்பார்ப்பு ஏதும் இல்லாத அன்புதானே
உண்மையானது புனிதமானது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சமையலில் தான் நீங்கள் பெஸ்ட்
அப்படீன்னு நினைச்சேன்
''கவிதை '' ம்ம்ம்
பொருளும்
வார்த்தை கோர்வைகள் அருமை
மெச்சும் கவிதை தோழி
சமையலுடன் கவிதையும் தொடரட்டும்
அருமை சகோ ..!
மென்மையாய், இதமாய் இருக்கிறது:)
அன்பு ஒன்றே அடைக்கலம் என தயையுடன் சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள் !
உங்க ஊரு மதுரையா?
ஆனந்தினு பேரு பார்த்து வந்தேன், மத்தபடி எதுவும் இல்லை
நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .
ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php
அம்மனி நல்லாருக்கீகளா?....,வருஷமாச்சு கமெண்ட்ட்ஸ் போட்டு...
Post a Comment