நிர்ச்சலனமான அமைதி
நிலைகுலைய வைக்கும்
நினைவுகளின் நீட்சி..
எண்ணத்தின் திண்ணத்தில்
ஏதோ ஒரு ஏக்கம்...
கட்டுக்கடங்கா காதலின்
கவலை தோய்ந்த தேடல்
கார்முகிலின் கருமையாய்
மனமுகிலில் மங்கிய இருட்டு..
உணர்ச்சிகளின் உச்சத்தில்
உதிரும் வெப்பத்தில்
உள்ளார்ந்த காதலைத் தான்
உன்னிடம் உளறுகிறேன்...
கோபம் கொந்தளிக்க...
மீறும் காதல் கரையுடைக்க
தாயின் மடி தேடி தவழும்
குழந்தையாய் என் மனது...
உன்னடி தேடும்...
அன்பை உணர்வாயா
உன் தயை தேடும் தளிரை
தாங்கிப் பிடிப்பாயா இல்லை
தவிக்க விட்டே செல்வாயா?
உள்ளுணர்வின் உண்மை நிலை
யாரும் உதவமுடியா ஊமை நிலை
உயிராய் இருப்பவனே
உள்நெஞ்சின் உரசல் அறியாயோ?
~அன்புடன் ஆனந்தி
படம்: கூகிள், நன்றி.
13 comments:
ரசிக்க வைத்தது .. :)
மாலை தென்றல் போல் மிக மென்மையாய் மனத்திற்கு இதமாக இருக்கிறது! ரசனனையுள்ள நினைப்புகள்!
//நிர்ச்சலனமான அமைதி
நிலைகுலைய வைக்கும்
நினைவுகளின் நீட்சி..
எண்ணத்தின் திண்ணத்தில்
ஏதோ ஒரு ஏக்கம்...//
ஆஹா!! ஆரம்பமே பட்டையை கிளப்புதே.. அருமை.
//கோபம் கொந்தளிக்க...
மீறும் காதல் கரையுடைக்க
தாயின் மடி தேடி தவழும்
குழந்தையாய் என் மனது...//
கவிதை வரிகளில் விளையாடியிருக்கின்றன வார்த்தைகள்...
//எண்ணத்தின் திண்ணத்தில்...//
//கார்முகிலின்... மனமுகிலில்...//
இப்படி அழகழகாய் தொடுத்த கவிதை அருமை சகோதரி.
உள்நெஞ்சின் உரசல்...!
உள்ளுணர்வின் உண்மை நிலை உணர்த்தும் கவிதைக்குப் பாராட்டுக்கள்..
@வரலாற்று சுவடுகள்
வருகைக்கும், தங்கள் கருத்திற்கும் நன்றி. :)
@விஜி
ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிமா.. :)
@ரத்னவேல் நடராஜன்
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா. :)
@அமைதிச்சாரல்
ஹா ஹா..... வாங்க.. ரொம்ப நன்றிங்க. :)
@சே. குமார்
ஹ்ம்ம்.. வாங்க.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. :)
@இராஜராஜேஸ்வரி
வாங்க.. உங்க கருத்துக்கு மனமார்ந்த நன்றிங்க. :)
உன் தயை தேடும் தளிரை
தாங்கிப் பிடிப்பாயா இல்லை
தவிக்க விட்டே செல்வாயா?
அருமை. வாழ்த்துகள்.
@ரிஷபன்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள். :)
உன் தயை தேடும் தளிரை
தாங்கிப் பிடிப்பாயா இல்லை
தவிக்க விட்டே செல்வாயா?...
அழகு.. ரொம்ப அழகான வரிகள்..
Wow very nice...
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத்துங்கள்... - சபா.
@அகிலா
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
@bantlan with love
Thank You
@chandrapal kavithaigal
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
அருமை, மனதை பிசையும் வரிகள்
Post a Comment