topbella

Wednesday, March 21, 2012

மௌனம் காத்தாவது...!



விரும்பும் ஒருவர் 
விளையாட்டாய் செய்யும்
விஷயம் கூட
வினையில் கொண்டு
விட்டு விடுகிறதே..

வெறுப்பாய் பேசும்
வார்த்தைகளில் கூட
விண்மீனாய் தோன்றும்
உன் காதல் வேகம்..

சொல்லிப் புரிய வைக்க
சொற்கள் கிடைக்க வில்லை..
தெளிவு படுத்தவோ
தெரிந்த வார்த்தை கூட
உதவ வில்லை..

கோபத்தில் வரும் வேகத்தில்
கொதித்துத் தான் போகிறாய்..
கொண்டவன் கொந்தளிப்பில்
நிர்கதியாய் நிற்கும் நிலை..

மயக்கும் வார்த்தைகள்
பேசத் தெரியாது உனக்கு
மனதின் காதல்
மறைக்கத் தெரியாது எனக்கு..

மௌனம் காத்தாவது உன்
மன்னிப்பை கேட்கிறேன்..
கரையாத உன் கோபம் கூட
குறையாத என் அன்பில் தீரும்...!


~அன்புடன் ஆனந்தி 


(படம்:கூகிள், நன்றி)

7 comments:

dogra said...

அருமையான கவிதை! முதல் 5 வரிகள் வி.. வி.. வி.. வி.. வித்தியாசமாக உள்ளன! எல்லாமே "வி"தான்!

வாழ்த்துக்கள்!

Vijaya Vellaichamy said...

மிக மிக அருமை! கடைசி எட்டு வரிகள் மனதில் நிற்கிறது!

சசிகலா said...

சொல்லிப் புரிய வைக்க
சொற்கள் கிடைக்க வில்லை..
தெளிவு படுத்தவோ
தெரிந்த வார்த்தை கூட
உதவ வில்லை..//
உண்மைநிலை சொல்லும் வரிகள் அருமை .

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

வாழ்த்துக்கள் சகோதரி.

நம்ம பக்கமும் வாங்க.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சிந்தனை
மிக்க நன்றி.. உங்கள் கருத்துக்கும் அருமை. :)


@விஜி
ரொம்ப நன்றி விஜி :)


@சசிகலா
மிக்க நன்றிங்க :)


@சே.குமார்
ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா வரேன் :)

அனைவருக்கும் அன்பு  said...

இப்படி எல்லாம் சொன்னால் மட்டும் உரைத்திடுமா என்ன .................கணவன் என்ற பட்டம், அப்படி செய்ய வைக்கிறது தோழி என்ன செய்ய .........அருமையா பகிர்த்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

arul said...

nice post last para superb

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)