topbella

Tuesday, March 6, 2012

உருளைக் கிழங்கு போண்டா...!


தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு - 5
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:


  • உருளைக் கிழங்கையும், பட்டாணியையும் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்க்கவும். 
  • கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, வேக வைத்த உருளை கிழங்கு, பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்து கொள்ளவும். (பஜ்ஜி மாவு போல)
  • ஆறிய உருளைக்கிழங்கு மசியலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, கரைத்த மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு, பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  • இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னி, தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

~அன்புடன் ஆனந்தி 

19 comments:

Vijaya Vellaichamy said...

ஆஹா பார்க்கும்போதே சாப்பிட ஆசை! நான் குடுத்துவச்சது அம்புட்டுதானா?

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு டிபன்..

'பரிவை' சே.குமார் said...

super

ஆமினா said...

பாக்கவே கலர்புல்லா... ஆசையை தூண்டி விடுது!

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Vijiskitchencreations said...

wow super recipe.

Anonymous said...

அடிபாவி மகளே !பதிவுன்னு வந்தா ..சமைக்க சொல்றீங்களே ?

Avainayagan said...

போண்டாவைச் செய்யும் முறையை மிக எளிமையாகச் சொல்லி யிருக்கிறீர்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@விஜி..

ஒரு வழியா உங்க கமெண்ட் கண்டுபிடிச்சு போட்டுட்டேன்... என்ன இப்படி சொல்லிட்டீங்க... செஞ்சு கொண்டு வரேன் ;)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@அமைதிசாரல்

வாங்க.. ரொம்ப நன்றிங்க. புது கமெண்ட் மாடரேஷன் புரியாம குழம்பி இப்ப தான் எல்லாம் பாக்குறேன். மன்னிக்க.

:)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சே. குமார்

வாங்க.. ரொம்ப நன்றிங்க. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஆமினா

வாங்க.. ரொம்ப நன்றிங்க :)
செஞ்சு பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@ஸாதிகா

மன்னிக்க.. இவ்வளவு தாமதமான பதிலுக்கு.. ரொம்ப ரொம்ப சந்தோசங்க.. பார்த்தேன்.. படித்தேன். மிக்க நன்றி.

:)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Vijiskitchencreations

Thanks a lot. I appreciate your comment. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@மா. சரவணகுமார்

உங்க வருகைக்கு நன்றி :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@வியபதி

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. :)

நம்பள்கி said...

நீங்கள் அக்காவா தங்கையா என்று தெரியாது! ஆனால், "உருளைக் கிழங்கு போண்டா"-வைப் பற்றி எழுதி நீங்கள் நம்ம ஜாதி என்று நிரூபித்து விட்டீர்கள்!

என்ன பொல்லாத உருளைக் கிழங்கு போண்டா?

நான் செய்த தயிர் வடையை சாப்பிட்டு விட்டு அப்புறம பேசவும்!

பார்க்க: தயிர் வடை செய்வது மனைவியை அசத்துவது எப்படி என்ற பதிவை..

நம்பள்கி said...

நீங்கள் அக்காவா தங்கையா என்று தெரியாது! ஆனால், "உருளைக் கிழங்கு போண்டா"-வைப் பற்றி எழுதி நீங்கள் நம்ம ஜாதி என்று நிரூபித்து விட்டீர்கள்!

என்ன பொல்லாத உருளைக் கிழங்கு போண்டா?

நான் செய்த தயிர் வடையை சாப்பிட்டு விட்டு அப்புறம பேசவும்!

பார்க்க: தயிர் வடை செய்வது மனைவியை அசத்துவது எப்படி என்ற பதிவை..

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)