சோகம் என்னுள்...
சோதித்துச் செல்வதுன்
சுந்தர வதனம்....!
கண்டும் காணாது
நின்றும் தோணாது
சென்றும் பார்க்காது
ஏனென்றும் கேட்காது
ஏனிந்த நாடகம்...!
எட்டு வைத்தால்
எதிரில் உன்னுருவம்..
கண்ணை மூடினால்
கருத்தில் உன் முகம்..
எடுத்துக் கோர்த்தேன்
எழுதிச் சேர்த்தேன்
படித்துப் பார்த்தேன்
பத்திரமாய் காத்தேன்..!
~அன்புடன் ஆனந்தி
30 comments:
கண்டும் காணாது
நின்றும் தோணாது
சென்றும் பார்க்காது
ஏனென்றும் கேட்காது
ஏனிந்த நாடகம்...!//
ஆம் -"ஏனிந்த நாடகம்...!"???
சொல்லில் அடங்கா
சோகம் என்னுள்...
சோதித்துச் செல்வதுன்
சுந்தர வதனம்....!///
சோதனை சாவடி வைச்சு இருப்பாரோ...??
கண்டும் காணாது
நின்றும் தோணாது
சென்றும் பார்க்காது
ஏனென்றும் கேட்காது
ஏனிந்த நாடகம்...!//
உலகமே ஒரு நாடக மேடை
எட்டு வைத்தால்
எதிரில் உன்னுருவம்..
கண்ணை மூடினால்
கருத்தில் உன் முகம்..///
ம் அப்போ அவரை தவிர வேற ஒன்னும் தெரியல...??
எடுத்துக் கோர்த்தேன்
எழுதிச் சேர்த்தேன்
படித்துப் பார்த்தேன்
பத்திரமாய் காத்தேன்..!///
எப்போ கொடுப்பீங்க..???
ம்ம கொஞ்சம் சோகமா இருக்கே...ஆனா சூப்பரா இருக்கு...
இன்னும் எழுதி இருக்கலாம் ....
அழகு அழகு கவிதை அழகு
வார்த்தை கோர்ப்பு அருமை சகோ... மெல்லென மெல்லென மனதை வருடிச் செல்கிறது கவிதை வரிகள் .....
நன்றாகவுள்ளது.
கவிதை கவிதை கவிதை super!
வெகு அருமை
சகோதரி...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.
மிக மிக அருமை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும்
அற்புதமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கவிதையும் அதன் தலைப்பும் இணையில்லா சோகத்தைச் சொல்கின்றன...
:) இன்னும் கவிதை முடியலையோ?ன்னு தோணிச்சு..சொல்லிட்டேன்..!!
Beautiful:)
Beautiful:)
@ விக்கியுலகம்
அண்ணே... அது யாரு உங்களுக்கு கீழே பின்னூட்டம் போட்டிருக்குற Priya Venkat... அண்ணியா...?
கவிதை நல்லாருக்குங்க..
எடுத்துக் கோர்த்தேன்
எழுதிச் சேர்த்தேன்
படித்துப் பார்த்தேன்
பத்திரமாய் காத்தேன்
அருமை
கவிதை நல்லாருக்குங்க
படித்துப் பார்த்தேன்
பத்திரமாய் காத்தேன்./
பாராட்டுக்கள்.
யக்கா ரொம்ப நாளுக்கபுறம் இங்க வரன் ரியலி சூப்பரு.....
good lines and super
ஏன் ஒரே சோகம்? நல்லா இருக்கு... பட், கொஞ்சம் ஜாலியா ஒரு போஸ்ட் போடுங்க பிரெண்ட்... மிஸ் யுவர் ரகளை போஸ்ட்ஸ்...:))
-
Nalla kavithai... you can try different styles and themes Ananthi...unnoda kavithai's ellaathirkum some similarity irukka maathiri irukku. maybe because the theme is love
ஆமாம் ஏனிந்த சோகம்?
பத்திரமாய் காத்த கவிதை கலக்கல் போங்க...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
@மனோ சாமிநாதன்
உங்களின் அன்பிற்கும், என்னை அறிமுகப் படுத்தியதற்கும் மிக்க நன்றிகள்!! எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு! நன்றியம்மா! :)
@ராஜராஜேஸ்வரி
ஹா ஹா.. வாங்க. நானும் அதையே தான் கேட்கிறேன்..
உங்க வருகைக்கு நன்றிங்க! :)
@சௌந்தர்
இல்ல வேதனை சாவடி.. வச்சிருப்பார்.
ஆமா.. அதில் நாம் எல்லாம் நடிகர்கள். ஸூஊ முடியல.
ஆமா.. கண்ணு ரெண்டும் வீக்..!!!
அவர் கேட்டதும் கொடுப்பேன்!
அவ்வ.. இதென்ன கவிதைய.. பிட் பிட். ஆ பிரிச்சு கேள்வி கேட்டுகிட்டு.. போங்க போயி.. எதாச்சும் வேலைய பாருங்க.:)
இன்னும் என்னத்த எழுத.. போங்க! :))
தேங்க்ஸ் சௌந்தர்!
@மகேந்திரன்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க :)
@தினேஷ்குமார்
மிக்க நன்றிங்க.. உங்கள் கருத்திற்கு நன்றி! :)
@முனைவர். இரா.குணசீலன்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க :)
@விக்கியுலகம்
மிக்க நன்றி!!! :)
@பிரியா வெங்கட்
தேங்க்ஸ் ப்ரியா ;)
@ரத்னவேல்
மிக்க நன்றி அய்யா. உங்கள் வருகைக்கு நன்றி :)
@சே.குமார்
வாங்க குமார்.. ரொம்ப நன்றிங்க :)
@ரமணி
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி :)
@middleclassmadhavi
ஹ்ம்ம்.. வாங்க. உங்க கருத்திற்கு நன்றிங்க!!
@ரங்கன்
இப்படி கவிதைகள் என்று முடிந்திருக்கு.. இன்னும் தொடரும்...
உங்க கருத்திற்கு நன்றிங்க :)
@விஜயா வெள்ளைச்சாமி
தேங்க்ஸ் விஜி ;)
@Philosophy Prabhakaran
இல்லங்க.. அது என்னோட தோழி. நன்றி வருகைக்கு!
@அமைதிச்சாரல்
ரொம்ப நன்றிங்க :)
@பாரு
தேங்க்ஸ் டா ;)
@இராஜராஜேஸ்வரி
ஆஹா.. ரெண்டு முறை படிச்சிட்டீங்களா... ரொம்ப நன்றிங்க :)
@ஜில்தண்ணி
ஹா ஹா.. வாங்க. எப்படி இருக்கீங்க?
ரொம்ப தேங்க்ஸ் :)
@பித்தனின் வாக்கு
வாங்க.. எப்படி இருக்கீங்க? ரொம்ப நன்றிங்க :)
@அப்பாவி தங்கமணி
ஹா ஹா.. சீக்கிரம் போடுரேங்க.
அதான் ரகளை வேணும்னா.. நா தான் உங்க ப்ளாக் வரேனே..! ;)
(சும்மா தாம்பா. சொன்னேன்.. நீங்க கலக்குறீங்க பா)
நன்றி! :)
@மைதிலி கிருஷ்ணன்
வாங்க மைதி.. இருக்கலாம்.. மத்த தலைப்பிலும் எழுத முயன்று கொண்டு தான் இருக்கிறேன். தேங்க்ஸ் மா.. :)
@Jaleela Kamal
ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னுமில்லங்க.. ஒரு பீலிங் தான்.. :)
நன்றிங்க! :)
@மனோ சாமிநாதன்
உங்க அறிமுகங்கள் அனைத்தும் அருமை. கை வலியுடன், சிரமம் பார்க்காது நீங்கள் எழுதிய விதம்.... எப்படி சொல்வது!
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..!
@மாய உலகம்
வாங்க.. ரொம்ப நன்றிங்க உங்க வருகைக்கும், வாழ்த்திற்கும்! :)
சிறிது சோகமான, ஆனால் அருமையான கவிதை!
சொல்லில் அடங்கா
சோகம் என்னுள்...
சோதித்துச் செல்வதுன்
சுந்தர வதனம்....
வலிதரும் கவிதை வரிகளுக்கு
பாராட்டுகள் சகோ அருமையா
எழுதி உள்ளீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு வாருங்கள் எங்கள் தளத்திற்கும்
சந்தர்ப்பம் கிடைக்கும்போது .
//சோதித்து செல்வதுன் சுந்தர வதனம்// அருமை.....
Post a Comment