topbella

Wednesday, August 10, 2011

மண்வாசம்... தொடர் பதிவு.....!

பிறந்த ஊர் பற்றி... எழுதியிருந்த சே.குமார் அவர்கள்.. என்னையும் அந்த தலைப்பில் தொடர சொல்லியிருந்தார்கள்.  இவ்வளவு நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும். எனக்கு ஊர் பற்றி விலாவாரியாக சொல்லத்தெரியல.... ஆனா, எங்க ஊரில் நான் வளரும் போது உள்ள அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பிறந்த ஊர்.. திருநெல்வேலி...! (உடனே அல்வான்னு மட்டும் தின்க் பண்ண பிடாது...). எங்க ஊர்ல பிரசித்தி பெற்ற... நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் இருக்கு... விசேஷ நாட்களில் அங்கே அம்மா கூட்டிட்டு போவாங்க.. கோவில் முன்னாடி போனதும்.. வாசலில்... கமகமன்னு வாசனையோட.. அருகம்புல் மாலை கட்டிட்டு இருப்பாங்க.. அதில் ஒன்றை வாங்கி... உள்ளே  போயி முதலில் இருக்கும் விநாயகருக்கு போட்டுட்டு... பிறகு சந்நிதானத்துக்கு உள்ளே போவோம். தரிசனம் முடிந்து வரும்போது மனதுக்கு நிறைவாய் இருக்கும்!

பொதுவா தியேட்டருக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க.. ஆனா, பொங்கல், தீபாவளி நேரங்களில்... புது துணி எடுக்கறதுக்காக எல்லாரும் போவோம்.  அங்கே நல்லி, ஆர்.எம். கே.வி. போன்ற கடைகளில் துணிகளை எடுத்துட்டு.. மதியம் லஞ்ச்.. அங்கயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுட்டு.... மேட்னி ஷோ படம் எதாச்சும் பார்த்துட்டு.. சாயங்காலம் வீட்டுக்கு வருவோம்.

திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ்.. ஹ்ம்ம்.. எப்போ அங்கே போனாலும்.. அல்வா... வாங்காமல் வருவதில்லை. அங்க தான் அரசு பொருட்காட்சி நடக்கும்... எல்லா முறையும் போவதில்லை என்றாலும்.. பெரும்பாலும் கூட்டிட்டு போவாங்க.. அங்க ராட்டினத்தில் ஏறி...  பெரிய அப்பளம் மாதிரி ஒரு ஸ்நாக் சாப்பிட்டு....  ஒன்னையும் விடுறதில்ல.



வார இறுதி நாட்களில்... பாளையம்கோட்டையில் இருக்கும் மார்க்கெட் சென்று வருவது உண்டு.  என் அம்மாவின் அம்மா இருந்த இடத்தின்... அருகில் தாமிரபரணி ஆற்றுத் தண்ணியில் குளிக்கும் வசதி உண்டு.. ரொம்ப ஆசையா இருக்கும்... (ஆனா எனக்குத் தான் தண்ணி என்றாலே பயம் என்று.. ஊருக்கே தெரியுமே...) வெளில இருந்து... வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்.  என் தம்பி, தங்கை உள்ள இறங்கி குளிச்சிட்டு.. அச்சோ மீன் கடிக்குது கடிக்குதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க.. (இதெல்லாம் யோசிச்சு தான் நாங்க தெளிவா.. கரையில் இருக்கோமாக்கும்..)

அப்புறம்.. கோவில் தசரா வரும்... அந்நேரம் தான் ரொம்ப பிடிச்ச டைம். ஆச்சி வீட்டில் போயி டேரா போடா வேண்டியது.. நைட் ரொம்ப நேரம்.. வில்லுப்பாட்டு, கச்சேரி..ன்னு வேடிக்கை பார்க்க வேண்டியது... இன்னும் கூட எனக்கு அந்த ஜவ்வு மிட்டாய் காரர்... ஒரு கம்பு மேல பொம்மைய கட்டி வச்சிட்டு... அது கைல இருக்குற... சின்க்..சா / சிங்கிய.... (அவ்வவ்... அதுக்கு பேரு சரியா தெரியலயே...) தட்டிட்டே... வாட்ச், மோதிரம், நெக்லஸ்... எல்லாம் செஞ்சு தரது ஞாபகம் இருக்கு..! அதே போல.. நைட் வேலைல.. தெருவுல.. குல்ஃபி ஐஸ், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... சோன்பப்டி... இதெல்லாம் கூட கொண்டு வருவாங்க..!

பொங்கல் நேரத்தில்... தெருவோட.. எல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போட்டு.. பெரிய கோலமா போட்டு.. காலைல... சீக்கிரமா எழும்பி... அம்மா பொங்கப் பானை வச்சி... பொங்கல் விடுறதை.. ஒரு தூக்கக் கலக்கத்தில வந்து எட்டி பார்த்து... அம்மா.. போயி முதல்ல குளிச்சிட்டு வான்னு... திட்டறது வாங்கி... அப்புறம் குளிச்சிட்டு வந்து... பொங்கல் விட்டதை.. சூரியனுக்கு படைத்து... அதில் கொஞ்சம் எடுத்து.... அதனுடன் தேங்காய், வாழைப்பழம், சக்கரை பொங்கல் எல்லாமும் வச்சு.... காக்கைக்கு வைப்பாங்க.. எல்லாத்தையும் விட்ருவோம்.. அந்த மாதிரி வச்சு கேட்டு சண்டை போட்டு சாப்பிடுவோம்.


வீடெல்லாம்.... கரும்பு தின்னு சக்கையா போட்டு... அதுக்கு திட்டு வாங்கி... அப்புறம் அம்மா... வைக்கிற சாம்பார், அவியலோட.... மதியம் செமையா ஒரு வெட்டு வெட்டிட்டு.... டீவி-ல வர பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி எல்லாம் பாத்துக்கிட்டு... ஒரு குட்டி தூக்கம் மதியம் போட்டு எழுந்திருச்சு.. திரும்பவும் முதல்ல இருந்து சாப்பிட வேண்டியது! (நெஜமா அதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்...)

இதே போலத்தான் திருக்கார்த்திகை பண்டிகையும்... எல்லார் வீட்லயும்... ஜகஜோதியா விளக்குகள் எரியும்.... அம்மா.. கொழுக்கட்டையில் விளக்கு செய்வாங்க... அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து... நெய் ஊற்றி விளக்கேற்றி வீட்டின் முன் வாசலில் வைப்பாங்க.... சூப்பர்-ஆ இருக்கும்.... மறுநாள்.... சொக்கப்பனை என்று சொல்வாங்க.. சூந்துகுச்சி (வெள்ளை கலரில் இருக்கும்.... உங்க ஊர்ல என்ன சொல்வீங்கன்னு தெரியல...) அப்புறம், சைக்கிள் டயர் எல்லாம் போட்டு ஒரு இடத்துல கொளுத்துவாங்க.. பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!


என் அப்பாவோட கனவு தான் நாங்க குடியிருந்த வீடு... அளவோட ஆறு அறைகளுடன்... வீட்டைச் சுற்றி.. செடி கொடிகளுடனும்... தென்னை மரத்துடனும்... பூக்களுடனும்.... வீட்டிற்கு வந்தாலே.. அவ்ளோ நிம்மதியா இருக்கும்.  சில நேரம் பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது... அம்மா எங்கயாச்சும் வெளில போயிருப்பாங்க.. அந்நேரம் காம்பவுண்ட் சுவர் மேல ஏறி.. நெல்லிக்காய் மரத்தில ஏறி... என் தம்பி நெல்லிக்காயை பறிச்சு போடுவான். நா கீழ நின்னு, அது மண்ணுல விழுந்துராம பிடிச்சு.. மோட்டார் ஆன் பண்ணி அதை கழுவி சாப்பிடுவோம். கொய்யா மரம் கூட உண்டு.. சீனி கொய்யான்னு சொல்வாங்க.. செமையா இருக்கும். அதையும் விடுறதில்ல. 

இப்படி ஓராயிரம் விசயங்கள் இருக்கு... சொல்லிட்டே போகலாம்..! இருந்தாலும் உங்க நன்மை கருதி.. இத்துடன் என் பதிவை முடித்துக் கொள்கிறேன். படித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! :)


எங்க ஊர்ல எதை மிஸ் பண்றேனோ இல்லியோ.... இந்த அல்வாவை ரொம்ப..... மிஸ் பண்றேன்!! :)


...அன்புடன் ஆனந்தி 


(படங்கள்: நன்றி கூகிள் )

28 comments:

S Maharajan said...

தசரா அப்போ நம்ம ஜவஹர் மைதானத்தில் நடக்கும் கச்சேரியை விட்டுடீங்க.நெல்லி, நம்ம ஊரு சீனி கொய்யா எல்லா டேஸ்டும் அப்படியே நினைவுக்கு வருது ஊரு ஆசையை கிளப்பி விட்டுடீங்க.இன்னும் ரெண்டு மாசம் இருக்கே? நான் ஊருக்கு போக............
போயிடு வந்து சொல்லுறேன் ஏதவாது மற்றம் இருக்கான்னு..

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் சகோதரி...
ஒருவழியா தொடர்பதிவ எழுதிட்டிங்க போல... சந்தோஷம்...
எல்லாத்தையும் எழுதி... ஊரைப்பற்றி எழுதாம அல்வாக் கொடுத்திட்டிங்களே.... ஹா..ஹா...

நல்லா எழுதியிருக்கீங்க.... நீங்க அனுபவித்த சந்தோஷங்களை அழகா பகிர்ந்திருக்கீங்க..

கடைசியில அல்வா படத்தை போட்டு நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்களே... நியாயமா?

வாழ்த்துக்கள் சகோதரி.

R.Gopi said...

ஆயிரம் சொன்னாலும், நெல்லைன்னு சொன்னா நெல்லையப்பர விட, கோதுமையில பண்ணுன அந்த அல்வா தான் கண்ணுலயும், சாப்பிட்ட சுவை வாயிலயும் நிக்குது....

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ!!.. அல்வா :-))

சத்ரியன் said...

திருநெல்வேலி-ன்னு சொல்லிட்டு அல்வா-வை நெனைக்காதீங்கன்னா எப்படி?

நல்ல பகிர்வுங்க.

கடைசியில
இப்படி அல்வா குடுப்பீங்கன்னு எதிர்ப்பாக்கல. (அட! நான் படத்தைச் சொன்னேங்க.)

Anonymous said...

நல்ல அனுபவம் ...)

குணசேகரன்... said...

serial post is written by narratively..nice.keep it up.

Anonymous said...

.













































மண் வாசனையின்னு பேர் வெக்காம சாப்பாட்டு வாசனையின்னு வெச்சிருக்கலாமோ :) எல்லா பண்டிகையையும் ஞாபகப்படுத்தி அத்தோட வித விதமா சாப்பாடு பத்தியும் சொல்லி ஊர் ஏக்கத்த கெளப்பி விட்டுட்டீங்க ..

Paru said...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
திருநெல்வேலிஏ கண்முன்னாடி பார்த்தது போல இருக்கு
நல்ல பதிவு

Paru said...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே...
திருநெல்வேலிஏ கண்முன்னாடி பார்த்தது போல இருக்கு
நல்ல பதிவு

Priya ram said...

உங்க ஊரு அல்வாவை காட்டி ஆசையை கூட்டிடீன்களே ஆனந்தி...

விசு சொல்லற மாதிரி வாயில வச்சா நேரா வயத்துல போய் விழும் அல்வா..... ஸ்ஸ்ஸ்....... சொல்லும்போதே சாப்பிடனும் போல இருக்கு.....

அல்வா பத்தி மட்டும் சொல்லிட்டு உங்க பதிவை பத்தி சொல்லலைனா எப்படி..... உங்க பதிவும் ஸ்வீட் டா இருந்தது.... ஸ்வீட் மெமொரீஸ்.....

கவி அழகன் said...

அற்புதமான
படைப்பு

ஸ்ரீராம். said...

ஊர் ஞாபகங்கள் என்பதை விட பதின்ம வயது நினைவுகளாக இருந்தன. பதிவுலகில் நெல்லைப் பதிவர்கள் நிறைய கண்ணில் படுகிறார்கள்.

'பரிவை' சே.குமார் said...

தொடர் பதிவை ஞாபகமா எழுதியதற்கு நன்றி.

அருமையா எழுதியிருக்கீங்க... ஊரைப் பற்றி எழுதச் சொன்னால் எல்லாமாய் கலந்து கலக்கியிருக்கீங்க....

உங்கள் பதிவுக்கு முதல் பின்னூட்டமே எனதுதான்.... ஆனால் அது மாயமாகிவிட்டது போல...

என்ன ஊரைப்பற்றி எழுதுங்கன்னா அல்லாவாக் கொடுத்துட்டிங்களே... சந்தோஷம்தானே... (நான் கடைசியில் இருக்கும் அல்வா படத்தைச் சொன்னேன்... நாக்குல எச்சில் ஊறுதுங்க... இது உங்களுக்கே நியாயமா?)

'பரிவை' சே.குமார் said...

தமிழ்மணம்
இண்ட்லி
இரண்டிலும் வாக்களித்தாச்சு...

தமிழ்10-ல் உங்கள் படைப்பை இணைதது ஓட்டும் போட்டாச்சு....

Nandhini said...

அல்வா சுவையோ..சுவை....

Kousalya Raj said...

அடடா...நம்ம ஊரை பற்றி சொல்லி இருக்கீங்க ? இத்தனை நாளா கவனிக்கலையே...!

உங்களுக்கே உரிய ஸ்பெஷல் நடையில் மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ஆனந்தி ! படிக்க சுவாரசியமா இருக்கு.

வாழ்த்துக்கள் தோழி.

Mythili (மைதிலி ) said...

நெல்லையப்பர் கோவில் பக்கத்தில் உள்ள இருட்டுக்கடை அல்வாவ சொல்ல மறந்துட்டியே ஆனந்தி .... நல்ல பதிவு.

மகேந்திரன் said...

நெல்லைச் சீமை பற்றிய அழகிய பதிவு.
அல்வா பற்றி கூறிய நீங்கள் இருட்டுக்கடை பற்றி
சொல்லவே இல்லையே...
பதிவை படித்தது பால்ய பருவம் மனதில் ஊஞ்சலாடுகிறது

இன்று முதல் உங்கள் வலைப்பக்கம் வலம் வருகிறேன்.....

http://www.ilavenirkaalam.blogspot.com/

அன்பன்
மகேந்திரன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@R . Gopi
ஹா ஹா.. உண்மை தாங்க.. வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க :)


@அமைதிச்சாரல்
ஹா ஹா ஹா... அதே தாங்க.. :)))
நன்றிங்க



@சத்ரியன்
ஹா ஹா.. வந்தவுகளுக்கு.. எதுவும் கொடுக்காம அனுப்பினா நல்லா இருக்காதே.. அதாங்க.! நன்றி :)


@கந்தசாமி
ரொம்ப நன்றிங்க :)



@கவி அழகன்
ரொம்ப நன்றிங்க :)



@கௌசல்யா
ஹ்ம்ம்... சரி விடுங்க.. இப்போ பார்த்துட்டீங்களே.. ;)
தேங்க்ஸ் பா..


@மைதிலி கிருஷ்ணன்
ஹ்ம்ம்ம்... சரி.. ரொம்ப ஓவர்-ஆ அல்வா கொடுக்கேன்னு நினைச்சிறக் கூடாதேன்னு தான்.. விட்டுட்டேன். :))))
தேங்க்ஸ் மா..



@மகேந்திரன்
ரொம்ப நன்றிங்க.. ஆமாங்க.. நிறைய அல்வா பற்றியே பேசுறமேன்னு விட்டுட்டேன்.
நான் விட்ட குறைக்கு.. நீங்க எல்லாரும்... எடுத்து சொல்லிட்டீங்க. :))
மிக்க நன்றி!!

Sanjay said...

நெஜமா அதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்..//
ஆள பார்த்தா அப்பிடி ஒண்ணும் மிஸ் பண்ற மாதிரி தெரியலையே...!!!:D :D

Sanjay said...

நெஜமா அதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்...)//

ஆள பார்த்தா அப்டி ஒண்ணும் மிஸ் பண்ற மாதிரி தெரியலையே...!!!:D :D :D

Sanjay said...

ஒரு சசிகுமார்(சுப்ரமணியபுரம்) படம் பார்த்த மாதிரி இருக்கு...!!!

ஏலே பின்னிட்டேலே...!!!:D :D

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@S. Maharajan

சரியா சொன்னிங்க.. ஆமா.. அதுவும் விட்டுடேன்.. நீங்க சொல்லிட்டீங்க. :)

கண்டிப்பா சொல்லுங்க. உங்க கருதுக்குன் நன்றிங்க!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

கிர்ர்ர்.. ஏன் ஏன் இப்படி?? பொறாமை உங்களுக்கு!

ரெம்ப தேங்க்ஸ்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@சஞ்சய்

ஹா ஹா ஹா... தேங்க்ஸ் சஞ்சய்! :))

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சொக்கவைக்கும் சொந்தஊர் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Jaleela Kamal said...

ரொம்ப ஸ்வாரசியமா இருந்தது

அப்ப்டியே தின்னவேலியிலிருந்து பாளையங்கோட்டை வரை கூப்பிட்டு போய் வந்துட்டீங்க...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)