Wednesday, December 8, 2010
காரக் குழம்பு....!!
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - பெரிது 1
தக்காளி - பெரிது 1
பூண்டு - 5 பல்
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2 டீஸ்பூன்
காய் - கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எது பிடித்தமோ அந்த காய்..
புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து சாறு எடுக்கவும்)
தாளிக்க:
கடுகு - 1 / 4 ஸ்பூன்
வெந்தயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 / 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
அரைக்க:
தக்காளி - 1 பெரிது
சீரகம் - 1 / 4 ஸ்பூன்
தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
(இவை எல்லாமும் சிறிது தண்ணீர் விட்டு, நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காயைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் பொடி, மல்லிப்பொடி சேர்த்து, வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளி சாரைச் சேர்க்கவும்.
குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.. பொடி வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள மசாலா (தக்காளி, சீரகம், தேங்காய் கலவை) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும் இறக்கவும்.
இதை சூடான சாதத்தில் விட்டு, அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்...!!
வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...! :-))
(காரம், புளிப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளலாம்....)
Subscribe to:
Post Comments (Atom)
70 comments:
சூப்பராயிருக்கு...
பார்க்க!
பாவமில்ல?
:-)
ஒஹ் இதான் கார குழம்பா :D :D
தொட்டுகிறதுக்கு சிக்கன் குருமா, காடை, கவுதாரி அப்படி ஒண்டும் தர மாட்டீங்களா??!!! :D
// நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்/
ஏன் அகல வாக்கில் வெட்டக் கூடாதா ??
//ஒரு வாய் சாப்பிட்டு போங்//
நீங்க வச்சிருக்கறதே ஒரு வாய்தான் அதில் எத்தனை பேரு சாப்பிடறது
Romba nalla erukuthunga...
Time permits pls visit
http://kurinjikathambam.blogspot.com/
//வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...//
அடடா காலை டிபன் சாப்பிட்டேனே...சரி இதை அப்படியே லஞ்ச்க்கு வச்சுகிறேன்...
சமையல் பதிவை எல்லாம் திருடுராங்களாம் ஆனந்தி.....பத்திரமா பார்த்து கோங்க....எச்சரிக்கிறேன்....!!
:))
பார்க்கவே ஆசையா இருக்கு
சாப்பிட்டாச்சு.. சூப்பர் டேஸ்ட்டுப்பா :-))
காரக்குழம்பு!!!
ஆஹா "ரத்த சரித்திரம்" மாதிரியே காரமா இருக்குமா??!!
ரொம்ப சிம்பிளான ரெசிபி....
ரொம்ப நன்றி...
Marupadium tokkan pottu arambichacha..
Last timethan sonnen.. eppa paru kottikira nenappave thiriyaranganu..
hayyo.. aruvala vera vittutu vanthutene..
கார கொழம்புல ஹாட் டோக் தெரியுது . இது வெஜ்ஜா நான் வெஜ்ஜா ?
எனக்கு பிடித்த குழம்பு தோழி அருமையா இருக்கும் எண்ணெய் கத்தரிக்கா போட்டு வச்சா ருசியே தனி
செம காரம்
ஒரு வாய் மட்டும்தானா? சாப்பாடு?
என்னடா இது இவ்லோ நாளா.. தனிமைத் துயர் கவிதை எழுதிட்டு இருந்தீங்க. இப்ப திடீர்னு விருந்து ஏற்பாடு பண்ணக் கிளம்பிட்டீங்க... அண்ணன் வந்துட்டாரு போல...
என்ன ரொம்ப நாளா நம்ம கடை பக்கம் காணோம்..
பூண்டு - 5 பல்///
எவ்வளவு தேடியும் பூண்டுக்கு பல் இல்லை என்ன செய்யலாம்
மல்லிப்பொடி///
இதோ மல்லி பூ வை mixer லே போட்டு அரைக்க சொல்றேன்
(இவை எல்லாமும் சிறிது தண்ணீர் விட்டு, நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்)/////
ரெண்டு சொட்டு போதுமா...?
வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...! :-))////
ஏன் வந்ததுக்கு தண்டனையா... :(
அருமையாக இருக்கு.
காரக் குழம்பு + அப்பளம் காம்பினேஸன் சூப்பரா இருக்கு
வாவ் பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்குங்க
தேங்காயை கொஞ்சம் வறுத்து அரைத்தால் இன்னும் மணமாக இருக்கும் ...சின்ன டிப்ஸ்.
பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு.
வாவ்...சூப்பர் நியூ template.. சூப்பர் கார குழம்பு...எம்மி சிம்பிள் ரெசிபி...
ஓ...அப்ப உங்க ஊர் பக்கம் வந்தா தைரியமா வீட்டுக்கு வரலாம் போல இருக்கே.. ஹி ஹி
செமக் காரம் தான்.. எனக்கும் காரம் தான் பிடிக்கும் ஆனால் இப்போது எனக்கு சமைக்க சந்தர்ப்பமே கிடைப்பதில்லை.. அம்மா என்னை பழதாக்கி விட்டார்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception
சூப்பர் குழம்பு!
காரக்குழம்பு ஒரு பார்சல் ப்ளீஸ்.......பார்க்கும் போதே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு
பார்க்கவே இவ்வளவு பயங்கரமா இருக்கே சாப்பிட்டவங்க நெலமையை நெனச்சா பாவமா இருக்குங்க.
பசிக்குதுங்க!
நல்லா இருக்குங்க காரக்குழம்பு..அரைக்கும் மசாலாவில் சீரகம் மட்டும் சேர்க்கமாட்டேன்,மற்றபடி இதே செய்முறைதான்..அதை புளிக்குழம்புன்னு சொல்லுவோம் நாங்க.
கடைசி 2 போட்டோவும் பசியக் கிளப்புதே!!:P
ஆனந்தி, நல்லா இருக்குப்பா. இன்னொரு ஆனந்தியும் என் ப்ளாக்கில் இருக்கிறாங்க. அதான் குழம்பிட்டேன். மீரா ஜாஸ்மீனை பார்த்ததும் தெளிவு வந்தாச்சு.
மல்லி ,சீரகம் சேர்க்காமலும் நன்றாகவே இருக்கும் .தாளிக்கும் போது வடகம் போட்டு தாளித்தால் வாசனை தூக்கலாக இருக்கும் .
ஆனந்தி, Recipe என் மனைவிக்குக் கொடுத்துச் செய்யச் சொல்லிவிட்டேன்.
ஒரு கேள்வி (அறிதுடிப்பாக): தமிழில் "குழம்பு" என்று பெயர் ஏன் வைக்கிறார்கள்? என்னமோ "சாப்பிட்டுக் குழப்பமடை!" என்பது போல் இருக்கிறதே!
கட்டுரையுடன் கொடுத்துள்ள புகைப்படங்கள் உன் சமையல்-திறமைக்கும் புகைப்படத் திறமைக்கும் சான்றுகள்.
நல்ல தயாரிப்பு ஆனந்தி....
ஆன ஒரெ ஒரு பிலெட் மட்டும் வச்சுட்டு சாப்பிட சொன்னா எப்புடி....
எச்சில் ...ம்ம்ம் லேசா..
@@ஜீ
வாங்க... தேங்க்ஸ்..
யாரு பாவம்?? சொல்லிட்டு போக கூடாதா?? :-)
வருகைக்கு நன்றிங்க..
@@சஞ்சய்
ஆமாங்கோ... அப்பிடித் தான் சொல்வாக.... :D :D
அட பாவமே... ஒரு நாளைக்கு தான், அதுங்களுக்கு லீவ் விடுங்களேன்...
ஸூஊஊ.... இவங்க கிட்ட இருந்து
காப்பாத்துரதுக்குள்ள.... :-))
@@LK
அது உங்க இஷ்டம் தான்...
எல்லாருக்கும் சாப்பாடு உண்டு...
நன்றி :-)
@@Kurinji
வாங்க.. ரொம்ப நன்றி.. கண்டிப்பா வருகிறேன்.. :-)
@@Kousalya
ஹா ஹா.. ஓகே.. சாப்பிட்டா சரி தான்.. :-)
ஆஹா.... எதையும் விடுறாங்க இல்லை... ஹ்ம்ம்
தகவலுக்கு நன்றிங்க.. :-)
@@பார்வையாளன்
வாங்க.. ஹ்ம்ம்ம்..ரொம்ப தேங்க்ஸ் :-))
@@அமைதிச்சாரல்
வாங்க... ஹ்ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... :-))
@@பிரபு.எம்
ஹா ஹா ஹா..
அது நீங்க போடுற, காரப் பொடி பொறுத்து தெரியும்...
வருகைக்கு நன்றி.. :-)
@@logu
ஹா ஹா ஹா.. நாங்க சாப்பிட்டா உங்களுக்கு என்ன பிரச்சினை..?? :-)
இல்ல.. அருவா எல்லாம் வேணாம்.. நாங்க ஒன்லி வெஜிடேரியன் தான்.
நன்றி :-)
@@ஜெய்லானி
ஹா ஹா ஹா... வாங்க ஜெய்..
உங்க கண்ணுக்கு மட்டும் எப்படிங்க.. வில்லங்கமா ஹாட் டாக் தெரிது..
இது சுத்த வெஜ் தான்.... அவ்வ்வ்வவ்
ரெம்ப நன்றிங்க... :-)
@@dineshkumar
வாங்க.. ஹ்ம்ம்ம்.. எஸ்.. நீங்க சொல்றது சரி தான்..
வருகைக்கு நன்றிங்க.. :-)
@@ஆர்.கே.சதீஷ்குமார்
ஆஹா... கொஞ்சம் தண்ணீர் குடிங்க..
ஒரு வாய் சாப்பாட்டுக்கே காரம் சொல்லிட்டீங்க...!!
கருத்துக்கு நன்றிங்க.. :-)
@@பிரியமுடன் ரமேஷ்
ஹா ஹா ஹா... ஆமா... வந்தாச்சு...வந்தாச்சு...
கண்டிப்பா வரேன் ரமேஷ்.. :-))
@@சௌந்தர்
அவ்வ்வ்வவ்... வந்துட்டாருய்யா.....வந்துட்டாரு...
இவருக்கு விளக்கம் சொல்லியே.... ஸூஊஊஊ
சரி நீங்க பூண்டே போடாதீங்க....... மல்லிப்பூவையா.... ரைட்ட்டு....
இல்ல ஒரு டம்ளர் தண்ணி விடுங்க..... பத்தாது.....
ஆமா.. ரொம்ப பேசுறீங்கன்னு தான்.. :-))
நன்றி சௌந்தர்... (என்ன ஒரு கமெண்ட்.......?? )
@@asiya omar
வாங்க.. ரொம்ப நன்றிங்க... :-))
@@சாருஸ்ரீராஜ்
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-))
@@sakthi
வாங்க... கண்டிப்பா சாப்பிட்டு போங்க.. :-))
@@Mathi
வாங்க.. நன்றிங்க.. உங்க டிப்ஸ் கு.. :-))
செய்து பார்க்கிறேன்...
@@Vijisveg Kitchen
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. சாப்பிடுங்க.. :-))
@@அப்பாவி தங்கமணி
வாங்க.. தேங்க்ஸ் பா...
கண்டிப்பா.... வாங்க :-))
@@ம.தி. சுதா
ஹா ஹா .. வாங்க..
என்ன இருந்தாலும் அம்மா சமையல் தனி தான்..
வருகைக்கு நன்றிங்க.. :-)
@@தெய்வசுகந்தி
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)
@@Nandhini
வாங்க... சாப்பிடலாம்.. ;-))
தேங்க்ஸ் மா...
@@அன்பரசன்
ஹா ஹா ஹா...
அம்புட்டு மோசமாவா இருக்கு.... என் சமையல்... அவ்வ்வ்வ்
ரெம்ப நன்றிங்கோ... :-)
@@மோகன்ஜி
வாங்க.. அவசியம் வந்து சாப்பிட்டு போங்க.. :-)
கருத்திற்கு நன்றிங்க..
@@Mahi
வாங்க.. ஹ்ம்ம்... நானும் புளிகுழம்பு செய்வேன் பா..
ஹ்ம்ம்.. கண்டிப்பா வாங்க.. சாப்பிடலாம்.. :-))
@@vanathy
வாங்க... ஹா ஹா ஹா..
அதானே பார்த்தேன்... உங்கள காணவே இல்லன்னு..
ரொம்ப தேங்க்ஸ் மா.. :-))
@@பூங்குழலி
வாங்க... கருத்துக்கும், டிப்ஸ் கும் நன்றிங்க.. :-)
@@sinthanai
வாங்க.. ரொம்ப சந்தோசம்.. (செஞ்சி பார்த்து எப்படி இருக்குன்னும் அவசியம் சொல்லுங்க)
ஹா ஹா.. நல்ல கேள்வி.. தான்..
அப்படி இல்ல.. எல்லா பொருட்களும் சேர்த்து, குழம்பி வைப்பதால் அப்படி இருக்குமோ?
உங்கள் பாராட்டிற்கு நன்றிகள் :-))
@@செந்தில்குமார்
வாங்க.. ஆஹா... என்னங்க இது.. ஏதோ ஏவிஎம் படத் தயாரிப்பு மாதிரி சொல்றீங்க.. :D :D
வீட்டுக்கு வரும் போது, நிறைய சாப்பாடு தருவோம்.. :-))
ரொம்ப நன்றி..
ரொம்ப டேஸ்டா இருக்கும்போல.. பார்த்தாலே சாப்பிடணும்போல இருக்கு ஆனந்தி.
அம்மா ஊருக்கு போய்ட்டாங்க.
நாளைக்கு நான் இந்த குழம்பு தான் வைக்கபோறேன்.
செஞ்சு பார்த்துட்டு மறுபடியும் வரேன். நன்றி.
மன்னிக்கணும், செஞ்சு சாப்டுட்டு மறுபடியும் வரேன். நன்றி. :))))
ஒரு வாய் சாப்பிட்டு போங்//
நீங்க வச்சிருக்கறதே ஒரு வாய்தான் அதில் எத்தனை பேரு சாப்பிடறது
repeat....
மங்கு நீ டூ லேட்டுடா .......... ஏதாவது மிச்சம் மீதி இருக்கான்னு பாரு
ஐயோ எனக்கு காரம் பிடிக்காது .!!
kaara kuzhambu looks lovely...
Dish Name Starts with C: - Main Dishes & Cakes
Dish Name Starts with C: - Snacks & Sweets
Dish Name Starts with C: - SideDishes & Beverages
Event: Dish Name Starts with D
Regards,
Akila.
super taste
அட....நம்ம சமையல்.கத்தரிக்காய் பொரிச்சுக் குழம்பும் புட்டும் எப்பிடி !
காரக் குழம்புகளின் ரசிகன் நான். படத்தில் பார்க்கும் போதே சாப்பிட தோனுது.
காரைக்குடி காரக் குழம்புகள் தான் தமிழகத்திலேயெ அதிக காரம் என்று நினத்திருந்தேன், ஆனால் ஆந்திரா காரம் அறிந்த போது, காரைக்குடி பச்சக் குழந்தை போலானது.
ஆனால் ஸ்ரீலங்கா காரம் அதுக்கும் மேலே, அங்கே சாதாரன சாப்பாடு சாப்பிட்ட பின் நாக்கை “டிரை வாஷ்”-க்கு போட்டாதான் நார்மலாகும்
//வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...!//
பசிக்கிற நேரம் பார்த்து இதைப் போய் படிப்பேனா! :-)
ரொம்ப சுலபமான செய்முறை... முயற்சித்துப் பார்ப்போம்.
Mudiyala..
Kavithai la irunthu kara kolambu varai.......
athu enna ponnunga na samayal tips kodukkama pathive illaye :(
Anyway its good.
@@ஸ்டார்ஜன்
வாங்க.. ஆமாங்க.. கண்டிப்பா செஞ்சு பாருங்க.. நல்லா இருக்கும்..
நன்றி. :-)
@@கவிநா
வாங்க.. கண்டிப்பா செஞ்சு பாருங்க.. உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன்.. :-)
சாப்பிட்டுப் பார்த்து விட்டு, வந்து அவசியம் சொல்லுங்க.. நன்றி.. :-)
@@r. v. saravanan
ஹா ஹா.. நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு..!
பரவாயில்ல வீட்டுக்கு வரவங்களுக்கு... ஒரு வாய் இல்ல, நிறையவே சாப்பாடு கிடைக்கும்..
நன்றி :-)
@@மங்குனி அமைச்சர்
வாங்க.. அதெல்லாம் ஒன்னும் லேட் இல்லை.. சாப்பிடலாம்.. நன்றி :-)
@@கோமாளி செல்வா
சரி ரைட்ட்டு.. விடுங்க..
வேற ரெசிபி போட்டுருவோம்... :-)
நன்றி..
@@Akila
வாங்க. தேங்க்ஸ் அகிலா. :-)
@@கரிசல்காரன்
வாங்க. வருகைக்கு நன்றி.. :-)
@@ஹேமா
வாங்க.. ஹ்ம்ம்.. அதுவும் கலக்கல் காம்பினஷன் தான்.. :-)
நன்றி..
@@ரிஷபன்Meena
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)
//ஆனால் ஸ்ரீலங்கா காரம் அதுக்கும் மேலே, அங்கே சாதாரன சாப்பாடு சாப்பிட்ட பின் நாக்கை “டிரை வாஷ்”-க்கு போட்டாதான் நார்மலாகும்//
ஹா ஹா ஹா.. அச்சோ... முடியலங்க.. செம கமெண்ட்..! ...ROFL
வருகைக்கு நன்றி..
@@ராதை /Radhai
வாங்க.. ஹா ஹா.. கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.. நன்றி :-)
@@சே. குமார்
வாங்க.. ஆமாங்க எளிமையான செய்முறை தான்..
அவசியம் செய்து பாருங்க.. நன்றி.. :-)
@@Thanlish Payan
வாங்க.. ஹா ஹா.. பெண்களும்....சமையலும்... தொடர்பு இல்லாம இருக்குமாங்க.. ??
வருகைக்கு நன்றி.. :-)
Please Don't stop creating new items... என்னைப் போல சில பாவப்பட்ட ஆண்களுக்கு இது தான் சமையல் ஆசிரியை
by mahes
http://www.maheskavithai.blogspot.com/
my fav kuzhambu, looks yummy
@@Maheswaran. M
வாங்க.. அடிக்கடி சமையல் குறிப்பு போட முயற்சி பண்றேன்..
நன்றி :)
@@Krishnaveni
வாங்க.. உங்க கருத்துக்கு நன்றி :)
பதிவு போட்டு ஒரு வாரம் ஆகுது போல?
\\ Ananthi said...
@@Maheswaran. M
வாங்க.. அடிக்கடி சமையல் குறிப்பு போட முயற்சி பண்றேன்..
நன்றி :)
@@Krishnaveni
வாங்க.. உங்க கருத்துக்கு நன்றி :)\\
Marupadiumaa...?
earkanave kolaverila irukom..
marupadium samaiyalnu ethachum blogla vanthuchu...mmm...
nangalum roudi..nangalum roudi.. nangalum roudi..
proof panniduvom.
காரசாரமா ருசியா இருக்கு ஆனந்தி.
காரசாமான புளி குழம்பா சூப்பர், அப்பளத்துடன் சாப்பிட சுவை கேட்கவே வேணாம்,
உங்களது இந்தப் பதிவை.. வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும்.
-- madhavan 16th dec 2010
//"காரக் குழம்பு....!!"//
செய்முறை விளக்கம் தெளிவா சொல்லிகொடுத்திருக்கீங்க....
அருமை....
தொடருங்கள்.....
பகிர்வுக்கு நன்றி
@@சி.பி. செந்தில்குமார்
வாங்க.. ஆமாங்க.. சீக்கிரம் பதிவு போடுறேன்.. நன்றி.. :)
@@logu..
வாங்க... ஹா ஹா ஹா..
ஏன் கொல வெறி??? ரொம்ப காரமா ஆச்சா??
ரொம்ப டென்ஷன் ஆவாதீங்க.. உடம்புக்கு ஆகாது...
சரி விடுங்க.. அடுத்த முறை, காரமெல்லாம் குறைச்சு, சமையல் குறிப்பு போடுறேன்..
ரொம்ப நன்றி...:)
@@tamil blogs
வாங்க.. அழைப்பிற்கு நன்றி.. :-)
@@ஆதிரா
வாங்க.. ரொம்ப சந்தோசம்.. வருகைக்கு நன்றி.. :-)
@@Jaleela Kamal
வாங்க.. ஜலீலா.. எஸ்...அப்பளத்துடன் அமர்க்களமா இருக்கும்.. நன்றிங்க :-)
@@Madhavan Srinivasagopalan
வாங்க.. ரொம்ப ரொம்ப நன்றி...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு....!! :-)
பார்த்தேன், படித்தேன்... நல்லா இருக்குங்க..
மீண்டும் நன்றி.
@@மாணவன்
வாங்க.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.. :-)
அன்புடன் ஆனந்தி
இங்கே விருது வழங்கியிருக்கிரென் வந்து பெற்றுக்கொள்ளவும்.
http://naanentralenna.blogspot.com/2010/12/blog-post.html
super
நல்லா இருக்கு, கொஞ்சம் எளிமையா செய்யமுடியும்னு தோணுது நன்றி. முயற்சிக்கிறேன்.
Post a Comment