ரஜினி நடித்த படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள் வரிசை படுத்த சொல்லி சௌந்தர் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க... கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..
பொதுவா ரஜினி படம்னாலே ஒரு க்ரேஸ் உண்டு... எனக்கு முக்கியமா ரஜினி கிட்ட பிடிச்சது, அவரு ஸ்டைல்... அப்புறம் டீசென்ட் நடிப்பு.. நம்பி குடும்பத்தோட போயி ரஜினி படம் பாக்கலாம்... தர்மசங்கடங்கள் எதுவும் இருக்காது..! சரி ரொம்ப வளவளக்காம, லிஸ்ட் பார்ப்போமா...? இதுல எது முதல் இடம், எது பத்தாவது இடம்னு எல்லாம் சொல்ல முடியாது.. எல்லாமே.. எனக்கு ரொம்ப பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் தான்..!
தளபதி...!
தளபதி படத்தில் மம்முட்டியுடன் ரஜினி, கலக்கி இருப்பார்.. ரெண்டு பேருமே, ஒருவரை ஒருவர் மிஞ்சிய நடிப்பு.. சூர்யா என்ற கேரக்டர்-ஆகவே மாறியிருப்பார்... அன்னையின் பாசத்தை காட்டும் இடங்களில் நமக்கு கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது.. தேவாவாக வரும் மம்மூட்டி ஒவ்வொரு இடத்திலும் "என் நண்பன்டா... என் தளபதி..டா..." ன்னு சொல்ற இடமெல்லாம் அந்த வார்த்தைக்கு பொருத்தமான..... கம்பீரமான ஒரு கதாபாத்திரம் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும்... இந்த படத்தில் வரும் "சின்னத் தாயவள்........", "யமுனை ஆற்றிலே.........", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி........." சரி விடுங்க.. எல்லா பாட்டுமே ரொம்ப பிடிக்குங்க...
எஜமான்....!
ஆஹா... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. வீட்டில் அதிகம் தியேட்டர் போயி படம் பார்க்கும் வழக்கம் இல்லை.. வெகு அபூர்வமாகத்தான் செல்வதுண்டு... அப்படி நான் பார்த்த படங்களில் எஜமான் மறக்க முடியாத படம்.. நெப்போலியனுடன் மோதும் போதும், மனைவியிடம் காட்டும் அன்பின் போதும்... மக்களிடம் காட்டும் அக்கறையின் போதும், நடந்து வரும் கம்பீரத்திலும்....... ரஜினி ரஜினி தான்... கலக்கி இருப்பார்.. இதில் வரும்.. "ஆலப்போல் வேலப்போல்.....", "ஒரு நாளும் உனை மறவாத....", "நிலவே முகம் காட்டு....." பாடல்கள் சூப்பர்ர்ர்...!!
பாட்ஷா......!
என்னை கவர்ந்த இன்னொரு ரஜினி படம் என்றால், அது பாட்ஷா...தான்... ஸ்டைலுக்கு ரஜினி-ன்னு சொன்னா மிகையாது... அவ்ளோ செமையா இருக்கும் இதுல அவர் நடிப்பு.. தங்கைக்காக மெடிக்கல் காலேஜ் சீட் வாங்க போகும் காட்சி.. இன்னமும் கண்முன் நிற்கிறது... அந்த காட்சியில், ரஜினி.. ரூமை விட்டு வெளியில் வரும் போது.. தங்கை.. என்ன ஆச்சு அண்ணா... னு கேக்கும் போது.. உனக்கு சீட் கண்டிப்பா உண்டும்மான்னு சொல்லும் போது... எப்படி அண்ணா? என்ன சொன்னிங்க.. என்ன சொன்னிங்கன்னு..? கேக்கும் தங்கையிடம்........அசால்ட்டா.... உண்மைய சொன்னேன்....னு சொல்ற இடம்... செம செம.. அச்சோ... எனக்கு இப்போ கூட விசில் அடிக்க தோணுது...
அண்ணாமலை...!
ரஜினி, குஷ்பூ... சூப்பர் நடிப்பு ரெண்டு பேருமே.. லேடீஸ் ஹாஸ்டல் உள்ள ரஜினி வர சீன்ஸ் எல்லாம்... செம காமெடி.. ரஜினி, ஒரு இடத்துல "கண்ணா.... கூட்டி கழிச்சு பாரு.. எல்லாம் கரெக்ட்-ஆ இருக்கும்-னு" சொல்ற இடம்.. ரொம்ப பிடிக்கும்.. இதுலயும் நட்பின் முக்கியத்துவம் இருக்கும்... இதில வர... "கொண்டையில் தாழம்பூ.....", "அண்ணாமலை அண்ணாமல....", "ஒரு பெண் புறா....".. பாட்டெல்லாம் நல்லா இருக்கும்..
சிவாஜி...!
ரொம்ப நாளைக்கு பிறகு.. புது ஸ்டைல்ல வந்த ரஜினி படம்.. "ஒரு கூடை சன்லைட்..." சாங் சூப்பர்....ஹிட்.. அதுல ரஜினி கலர்... ஹ்ம்ம்ம்... சூப்பர்...! வாங்க பழகலாம்..னு படம் முழுக்க சாலமன் பாப்பையா, ராஜா வோட ரஜினி பண்ற கூத்து பாத்து பாத்து ரசிக்கலாம்.. வீட்டில் சென்சஸ் ஆபீசர் மாதிரி வந்து பண்ற கலாட்டா தான் ஹைலைட்... அதிலும், அந்த காமெடி முடிவுல... லிவிங்க்ஸ்டன் என்டர் ஆகி.. "லக லக லக லக..."ன்னு சொல்லறது ஒரே காமெடி தான்.. இதுல வர "சஹானா...." பாட்டு, படமாக்கப்பட்ட விதம் அட்டகாசமா இருக்கும்.. ரொம்ப பிடிச்ச சாங்..
சந்திரமுகி...!
சொல்லவே தேவை இல்ல...இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் பத்தி.. வடிவேலு..ரஜினி காமெடி பெஸ்ட் இந்த படத்துல.. "மாப்பு வசிட்டன்யா ஆப்பு...." ஃபேமஸ் டயலாக்...! அதே மாதிரி.. வேட்டையனா வர ரஜினி.. சொல்ற "லக லக லக லக.............." ல தியேட்டர் அதிரும்.. "ரா ரா.........சரசுக்கு ரா ரா...", "கொஞ்ச நேரம்..கொஞ்ச நேரம்...." இந்த பாட்டெல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல்கள்... ஜோதிகா, சந்திரமுகியா மாறுற இடமெல்லாம் நல்லா இருக்கும்..!
படையப்பா...!
இந்த படத்தில் சிவாஜி, ரஜினி காம்பினேஷன் கலக்கல்.. ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரியா... அட்டகாசமா நடிச்சிருப்பாங்க.. சிங்க நடை போட்டு.. சிகரத்தில் ஏறு.... பாடல்-ல.. சொல்ற மாதிரி.. ரஜினி சிங்கம் மாதிரி தான் நடந்து வருவார்.. இந்த படத்துல வர.. "சுத்தி சுத்தி வந்தீக...", "மின்சார கண்ணா...என் மன்னா", "வெற்றி கொடி கட்டு..." பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்..!
Mr. பாரத்...!
சத்யராஜ், ரஜினி காம்பினேஷன்... ரொம்ப நல்லா இருக்கும்.. இது ஒரு கிளாச்சிக் ஸ்டோரி தான்.. அம்மாவிற்கு துரோகம் பண்ணின அப்பாவை தேடி கண்டுபிடிச்சு, தாயின் சபதம் நிறைவேற்றல்..! இடையில் வர சலசலப்பெல்லாம் ரசிக்கிற மாதிரி இருக்கும்... "பச்ச மிளகா அது காரம் இல்ல....", "எந்தன் உயிரின்..", பாடல்கள் மற்றும், ரொம்ப ரொம்ப... ஹிட் ஆனா.. "என்னம்மா கண்ணு..." சாங்.. டாப்..!
நான் அடிமை இல்லை...!
எப்பவும் போல, நாயகியை ரவுடிகளிடம் இருந்து மீட்கும் ரஜினி, மீது காதல் கொண்டு, தன் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய பிரச்சினைகள். தன்மானம் மிக்க கதாநாயகன், கருத்து வேறுபாட்டில் நாயகியைப் பிரிந்து, பின்னர் இருவரும் சேர்வது தான் படம்.. ஸ்ரீதேவியும், ரஜினியும்... போட்டி போட்டு சூப்பர்-ஆ நடிச்சிருப்பாங்க.. அதில் வரும் "ஒரு ஜீவன் தான்.. உன் பாடல் தான்..." ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்.. அப்போ உள்ள ஸ்டைலில் சோகப் பாட்டும் இதே சாங் வரும்.
எந்திரன்...!
ரொம்ப நாள் கழிச்சு, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வெளி வந்த படம்.. முதல் பாதி, விறு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அட்டகாசமா இருந்தது.. இரண்டாம் பாதியில், முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆக்கிரமிப்பு.. ரஜினியின் நடிப்பை இன்னும் கொஞ்சம் பார்க்க முடியவில்லை என்று சின்ன வருத்தம்.. கிளைமாக்ஸ்-ல் கிராபிக்ஸ்.. உண்மையில் டாப்... வசியாக வரும் ரஜினியோ, அலட்டாமல் நடிப்பு என்றால், சிட்டி-யாக வரும் ரஜினி, ஒரே கலகலப்பில், வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி.. நடிப்பில் கலக்கல்.. சிட்டியாக வரும் ரோபோ... "ஹூ இஸ் தட் செல்லாத்தா? " ன்னு கேக்குற இடம், செம செம...காமெடி.. அதே மாதிரி தான் வில்லன் ரோபோ-வாக வரும் ரஜினி "சோல்ஜர்ஸ் ரோடேட் யுவர் ஹெட்ஸ்...."ன்னு சொல்ற இடமும்....அதிரடி தான்..! இதில் வரும் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை...." சூப்பர் சாங்..
ஸூஊஊஉ.. எப்பா சாமி ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்.. இந்த தொடர் பதிவுக்கே...இம்புட்டு நாள் எடுத்திருக்கேன்... இந்த அழகுல... தொடர் பதிவு சீக்கிரம் எழுதலன்னா, அடுத்த தொடர் பதிவுக்கு கூப்பிடுவோம்-னு மிரட்டல் வேற.. எவ்ளோ அடியைத் தான் தாங்குறது...!
நா நார்மல் பதிவு எழுதரதுலயே ரொம்ப சுறுசுறுப்பு.. இதுல தொடர் பதிவு... ஹ்ம்ம்.. எப்படியும் சமாளிப்போம்ல...!
ஆத்தா நா பாசாயிட்டேன்னு.........கத்தனும் போல இருக்கு.. (ஹ்ம்ம் கும்ம்....அத நாங்க சொல்லணும்..... அதானே... ஹிஹி.. .. உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குதுங்க..) சரி சரி.. பயப்புடாதீங்க.. அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம செய்ய மாட்டேன்.. ரெம்ப நன்றிங்க.. வந்து, பொறுமையா படிச்சதுக்கு...!!
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை.. உங்களிடம் இருந்து விடை பெறுவது ஆனந்தி....!
Wednesday, December 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
70 comments:
சந்திரமுகி,சிவாஜி, எந்திரன் இந்த மூணு மட்டும் தான் எனக்கு தெரியும், மீதி படம்லாம் நான் பிறக்க முன்னாடியே வந்திரிச்சாமே.....ஹி ஹி
எனக்கு எப்போவுமே "நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ தான்", அத ;-)அடிச்சிக்க வேற படமே கிடையாது!!!!!!
vadai !!! Ananthi
ayoo !! miss ayiduchu ..ah..vadai..super movies..ellame
சரி ரொம்ப வளவளக்காம, லிஸ்ட் பார்ப்போமா...?//
இல்லை இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்
அனைத்துப்பங்களும் அருமையான படங்கள்.
தொடர்பதிவு கொஞ்சம் கேப் விட்டு போட்டாதான் நல்லா இருக்கு. நல்ல தேர்வுகள். இந்த மைன்ட் வாய்ஸ் பிரச்சனை பதிவுலகில் ஜாஸ்தியா இருக்கு
செம செம.. அச்சோ... எனக்கு இப்போ கூட விசில் அடிக்க தோணுது...///
நல்ல விசில் அடிங்க நாங்க என்ன வேண்டாம்னா சொல்ல போறோம்
தொடர் பதிவு எழுதியதற்கு ரொம்ப நன்றி
"ஒரு ஜீவன் தான்.. உன் பாடல் தான்.."
""சின்னத் தாயவள்........", "யமுனை ஆற்றிலே.........",
இந்த இரண்டு பாடலும் ரொம்ப டாப் பாடல்கள்
உங்க லிஸ்ட்டை பார்த்தா நீங்க அதிரடி படங்களுக்கு ரசிகை போல இருக்கு!
ரஜினி சாப்ட் கேரக்டர்ஸ் வரும் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரைலாம் வரலை
ரஜினினாலே அதிரடிதானே என நீங்க சொல்வது புரியுது
@@சஞ்சய்
வாங்க சார்.. ஆமா... இவரு ரொம்ப யூத் தான்... யாரும் இல்லன்னு சொல்லல... :D :D
எஸ்.. கிரேட் டயலாக் ...நீங்க சொன்னது சரி தான்.. ரெம்ப தேங்க்ஸ். :-))
@@Mathi
வாங்க மதி.. நம்ம ப்ளாக் ல.. வடை எல்லாம் இல்லப்பா. ஒன்லி பூக்கள் தான்..
உங்களுக்கு ஸ்பெஷல் மலர்கள்.. தரேங்க.. :-))
ரொம்ப தேங்க்ஸ்.. :-)
@@சௌந்தர்
ஹா ஹா ஹா. என்னா குசும்பு... இதுக்கே..ஆயிரத்தெட்டு மிரட்டல்.. :-))
@@ப்ரஷா
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@@எல். கே.
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)
@@சௌந்தர்
ஹா ஹா ஹா. நா விசில் அடிப்பேன்.. பாவம் வந்தவங்க ஓடிப்போய்ட்டா?
உங்க தொடர்பதிவை யார் படிக்கிரதாம்..?
தொடர்பதிவிற்கு..என்னையும் மதித்து அழைத்ததற்கு நன்றி :-))
@@dineshkumar
வாங்க.. ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. உங்க கருத்திற்கு :-)
@@அருண் பிரசாத்
வாங்க அருண்.. எஸ் எஸ்.. அதிரடி தான்..
எல்லா படமும் பிடிக்கும்...இந்த படமெல்லாம் கொஞ்சம் ஸ்பெஷல்..
முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை... படங்களும் பிடிக்கும்..தான்..
ஆனா.. 10 படங்கள் தானே இங்க சொல்ல முடியும்.. :-))
ரொம்ப நன்றிங்க. :-)
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
@@சௌந்தர்
ஹா ஹா ஹா. என்னா குசும்பு... இதுக்கே..ஆயிரத்தெட்டு மிரட்டல்.. :-))///
நான் அடித்ததை எல்லாம் வெளிய சொல்லவில்லை போல....
நல்ல தொகுப்பு (template போடாம வேற என்ன சொல்ல?)
மிஸ்டர் பாரத் எனக்கும் ரெம்ப பிடிக்கும்.
Nice!
Kurinji
நல்ல தேர்வு அனைத்து பாடல்களுமே சூப்பரான பாட்டு...
நல்ல தேர்வுகள்.. அனைத்தும் மிகவும் பிடித்த படங்கள்...
நல்ல படங்கள்தான்!! :-)
நல்ல லிஸ்ட்..
பழைய நினைவையெல்லாம் கிளறி படங்களை தொகுத்திருக்கீங்க.
அடுத்த தொடர் பதிவு சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள் ;)
சூப்பர்ஸ்டாரின் அனைத்து படங்களுமே சிறந்த தேர்வு அருமை,
பகிர்வுக்கு நன்றிங்க....
//மீண்டும் உங்களை சந்திக்கும் வரை.. உங்களிடம் இருந்து விடை பெறுவது ஆனந்தி....!
//
”அந்தக் கால” சிலோன் ரேடியோ கேட்ட எப்கெட்.
ரஜினி என்ற ஒரு சொல் போதும், அந்த சுறுசுறுப்பே குப்பைக் கதையக் கூட கரை சேர்த்திடும்
Super Selections.
Super Star Super star thaan. naanum oru thadavai visil atikkiren.
ரஜினி நடிப்பில் எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுவது வரை எல்லாம் பழையனவாக இருந்தாலும் நல்ல படங்களே... உங்கள் லிஸ்டில் எந்திரன் எல்லாம் வரும்போது இவை வராதது வருத்தமே... இருப்பினும் நல்ல தொகுப்பு.
எல்லாமே ரஜினி படமாவே இருக்கு.? :-)
எல்லாமே ரஜினி படமாவே இருக்கு.? :-)
ePA;f u$pdpBahl bghGJBghf;F glA;fis kl;LBk Oy; gz;zpUf;fPA;f… BkYk; ghf;^; #pl; glA;fis kl;LBk (ehd; moikapy;I jtpu) Mdhy; mtu; eoj;j epiwa glA;fis guprPypf;fBt ny;iy vd;gjpy; bfhq;rk; tUj;jk;jhd;. (fhaj;up, MwpypUe;J mWgJ tiu, vA;BfBah Bfl;l Fuy; Kjyhdit)
ரஜினியின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களையே நீங்கள் செலக்ட் செய்து இருக்கிறிர்கள்
உங்க தொகுப்பும் ரசனையும் நல்லா இருக்கு அக்கா .!!
அனைத்தும் அதிரடி படங்கள் ..action படம் ரொம்ப புடிக்குமோ ?
The mass...
enakkum" Oru pen pura " song romba pidikum..
atha kekumpothuthan inga vanthen..
matchinga postinggguu...mmm..
இந்த தொடர் பதிவு இன்னும் முடியலையா நா எழுதியே அஞ்சாறுமாதம் ஆயிற்றே. அடங்கப்பா template கமெண்ட் அலுத்து போச்சே .இருந்தாலும் போடுகிறேன் . உங்களுடைய தொகுப்பும் அருமையா இருக்குங்க
சகோ எந்திரனுமா ?
wow
:)
பள்ளிப்பருவம் முதலே நான் ரஜினி ரசிகன். இப்போ அதுக்கெல்லாம் கால அவகாசமில்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான். உங்களுடைய செலக்ஷன் அருமை.
சூப்பர் ஸ்டாரின்
சூப்பர் படங்கள் பற்றிய
சூப்பரான விளக்கங்கள்
சுப்பர் பதிவு!
http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html
பாடல்களோடு விமர்சனமும் நல்லாயிருக்கு ஆனந்தி..தளபதி எஜமான் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்..
wow all are my favorite too dear...
நல்ல மசாலாவா எடுத்து போட்டு இருக்கீங்க.. சமையல் ஞாபகமோ???
நல்லாத்தான் இருக்கு விருந்து!!!
நல்ல தேர்வுங்க...
//குடும்பத்தோட போயி ரஜினி படம் பாக்கலாம்... //
Very true Ananthi..
All you mentioned here are my favourites too...enakku "Guru Sishyan" padam kooda remba pidikkum...
தொடர்பதிவில் எல்லா தேர்வுகளுமே நன்றாக இருக்கின்றன!
அதிலும் 'தளபதி'யை முதல் இடத்தில் வைத்தது சரியான செலக்ஷன்!
nice selection Ananthi
தில்லுமுல்லு-வை விட்டுட்டீங்களே? செம காமெடி படம்!
நல்ல படங்கள் ஆனந்தி!
நல்ல தேர்வுகள் ஆனந்தி...நீங்க பாசாகிடீங்களா??
கொஞ்சம் ரஜினியை மறந்தது போல இருந்தது...நீங்க நினைவு படுத்திடீங்க...
கலக்கல் பதிவு தோழி. அடுத்த தொடர் பதிவு எப்போ....??
நான் பார்த்து கண்கலங்கிய படம்
முல்லும் மலரும்...
என்னை தனியாக திரையரங்குக்கு
இழுத்து சென்றது பாட்ஷா...
மறக்கமுடியாத நினைவுகள்
நல்ல பதிவு ஆனந்தி...வாழ்த்துகள்
நல்ல தொகுப்பு..
எல்லாம் சூப்பர் தோழி நம்ம கட பக்கமும் கொஞ்சம் வந்து போங்க தோழி
இதைவிடவும் நடிப்பில் பின்னிய படங்களும் உண்டுங்க....
6லிருந்து 60 வரை
அவர்கள்
முள்ளும் மலரும்
என பழைய ரஜினி படங்களும் உண்டு
நீங்க வேன படம் பாத்துட்டு சொல்லுங்க
உங்களுக்கு பிடித்த வரிசையும் அருமைதான்.
அனைத்துப் படங்களும் அருமையான படங்கள்.
***பொதுவா ரஜினி படம்னாலே ஒரு க்ரேஸ் உண்டு... எனக்கு முக்கியமா ரஜினி கிட்ட பிடிச்சது, அவரு ஸ்டைல்.***
:-)))
அட எல்லாமே எனக்கும் பிடித்தது டா ஆனந்தி.. என்னோட முகப் புத்தக சுவர் உனக்காக காத்துக்கிட்டு இருக்கு.. கொஞ்சம் வரமுடியாததால சில நாள் பூட்டி வைச்சிருந்தேண்டா..
தொடர் பதிவு போடுறதுல அக்காவை ஃபாலோ பண்ணுற மாதிரி தெரியுது.. குட்... கீப் இட் அப்..:))
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html#
அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆஹா சூப்பர் தேர்வு
அருமை
@@சௌந்தர்
ஹி ஹி ஹி.. யார அடிச்சீங்க.. நல்ல நினைவு படுத்தி பாருங்க! :-))
@@Arun Prasath
ஹா ஹா.. இட்ஸ் ஓகே.. ரொம்ப நன்றிங்க :-)
@@தமிழ் உதயம்
ஹ்ம்ம்.. நல்ல படம்... :-) நன்றிங்க..
@@Kurinji
தேங்க்ஸ் :-)
@@சாருஸ்ரீராஜ்
ரொம்ப நன்றிங்க... ஆனா ஒரு சின்ன திருத்தம்... பிடித்த படங்கள் சொன்னேன்.. ஒருவேளை நீங்க இந்த படங்களில் உள்ள பாட்டை சொல்றீங்களா..? அப்படின்னா சரி தான்.. :-)
@@வெறும்பய
ரொம்ப நன்றிங்க :-)
@@ஜீ
ரொம்ப நன்றிங்க :-)
@@அமைதிச்சாரல்
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-)
@@Balajisaravana
ஹா ஹா ஹா... ரொம்ப நன்றிங்க...
(அடுத்த தொடர் பதிவு.... உங்க வாழ்த்துபடி உடனே கிடைச்சு எழுதிட்டேன்) :-))
@@மாணவன்
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)
@@ரிஷபன்Meena
ஹா ஹா ஹா... சும்மா ஒரு கலாட்டா தான்...
ஹ்ம்ம்.. உங்க வருகைக்கு நன்றிங்க :-)
@@Starjan (ஸ்டார்ஜன் )
ஹா ஹா.. அடிங்க அடிங்க..
எஸ்.. சூப்பர் ஸ்டார் ...சூப்பர் ஸ்டார் தான்... :-)
நன்றி
@@சே. குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க...
எனக்கும் பழைய படங்களும் பிடிக்கும்... இருந்தாலும்... தற்போதைய ரஜினி படங்களும் இணைக்கலாம்னு தோணுச்சுங்க..
அது மட்டும் இல்ல... ரஜினி, அன்று முதல் இன்று வரை அதே....
பெயரோடு இருப்பதும் சொல்லத்தான்.... :-)
@@ஜெய்லானி
ஹா ஹா ஹா... வாங்க சார்..
தூக்க கலக்கமாங்க? பிடித்த ரஜினி படங்கள் தானே தலைப்பு...?
நன்றி :-)
@@Nagarajan
என்னது இது?? ரொம்ப தேங்க்ஸ்.. :-)
@@Nagarajan
ஹ்ம்ம்.. எனக்கும் பிடிக்கும் இந்த படங்கள்.. :-)
நன்றி
@@கோமாளி செல்வா
ஹ்ம்ம்.. வாங்க செல்வா.. ரொம்ப நன்றி :-)
@@இம்சை அரசன் பாபு
ஹா ஹா ஹா.. அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல..
இதுவும் பிடிக்கும்... நன்றிங்க :-)
@@logu
yes... it is.. :-) thanks
@@logu
Glad you liked that song.. my favorite too..
haa haa.. co-incidence.. aa? :-)
thanks
@@நா. மணிவண்ணன்
ஹா ஹா ஹா.. இன்னும் முடியல....
ரொம்ப நன்றிங்க :-)
@@வினோ
வாங்க வினோ.. இந்திரன் கிராபிக்ஸ்-கு, ரஜினி..யின் மங்காத ஸ்டைலுக்கு.. :-))
நன்றிங்க
@@கல்பனா
தேங்க்ஸ் :-)
@@இனியவன்
ஹ்ம்ம்.. ரொம்ப சந்தோசங்க.. :-)
@@கலையன்பன்
ரொம்ப நன்றிங்க :-)
@@தமிழரசி
வாங்க தமிழ்.. எஸ்..எனக்கும் தான்.. :-)
@@AKila
ஹ்ம்ம்.. தேங்க்ஸ் அகிலா :-)
@@பலே பாண்டியா
ஹா ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க :-))
@@அன்பரசன்
ரொம்ப நன்றிங்க :-)
@@அப்பாவி தங்கமணி
ஹ்ம்ம்ம்... எனக்கு கூட குரு சிஷ்யன் படம் பிடிக்கும்...
10 தானே கேட்டிருந்தாங்க... ;-) இல்ல அதுவும் சொல்லி இருக்கலாம்..
ரொம்ப தேங்க்ஸ் :-))
@@மனோ சாமிநாதன்
வாங்க.. ரொம்ப சந்தோசம்... சரியா சொன்னிங்க.. தளபதி இல்லையா...!
ரொம்ப நன்றிங்க..
@@Mahi
வாங்க மகி.. எஸ் மா.. அதுவும் பிடிக்கும்... இன்னும் சில படங்கள் கூட இருக்கு... ஆனா... பத்து படம் தான சொல்ல முடியும்.. :-))
ரொம்ப தேங்க்ஸ்
@@Kousalya
ஹா ஹா ஹா.. அத நீங்க தான் சொல்லணுங்க.. ;-)
அடுத்த தொடர் பதிவும் எழுதியாச்சு... நீங்களும் ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டாச்சு.... :D
ரொம்ப நன்றி
@@செந்தில்குமார்
ஹ்ம்ம்.. எஸ்.. நல்ல படங்க.. முள்ளும் மலரும்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்..
ஹ்ம்ம்.. பாட்ஷா.. ஸ்டைல்... ஆச்சே..
ஆமா மறக்க முடியாத நினைவுகள் தான்.... வருகைக்கு நன்றி :-)
@@பதிவுலகில் பாபு
ரொம்ப நன்றிங்க :-)
@@dineshkumar
ஹ்ம்ம்.. கண்டிப்பா வரேங்க.. :-)
நன்றி
@@சி. கருணாகரசு
ஹ்ம்ம்.. எஸ்.. இன்னும் நிறையவே இருக்குங்க.. பத்து தான் அனுமதி... அதனால் அவைகளை எல்லாம் இணைக்க வில்லை.. நானும் பாத்து இருக்கேன்...அந்த படங்கள்.. எல்லாம் :-)
ரொம்ப நன்றிங்க
@@Nandhini
தேங்க்ஸ் நந்து.. :-)
@@வருண்
ரொம்ப தேங்க்ஸ் :-)
@@தேனம்மை லக்ஷ்மணன்
வாங்க அக்கா...
ஹா ஹா ஹா.. எஸ் எஸ்.. அதே அதே... ;-)
எஸ்... வர ஆரம்பித்து விட்டேன்..
தேங்க்ஸ் அக்கா..
@@சைவகொத்துபரோட்டா
தேங்க்ஸ்.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.. :-)
@@Jaleela Kamal
ரொம்ப நன்றிங்க :-))
ஆனந்தி....
உங்களோட இந்த பதிவை படிக்காமல் எப்படி நான் விட்டேன்னே தெரியல...
என் சாய்ஸ் 9 படங்கள் இருக்கு.. நான் அடிமை இல்லை படம் தவிர... ஆனால் அந்த படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கும்...
எல்லாரும் அந்த படம், இந்த படம் சேர்க்கலேன்னு கேக்கறாங்க... நான் 20 படங்கள் எழுதின போது, பில்லா படமே விட்டு போச்சு...
இதோ என் டாப்-20 ரஜினி படங்கள் :
சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html
சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html
சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html
Post a Comment