*பகுதி 2:*
https://youtu.be/OvgqQy8sUqI?si=KIsI8AVyBBic_UpD
*பகுதி 1:*
https://youtu.be/VMJGGHnXkrA?si=hf6c_NGuMb7VkaQo
கடந்த மார்ச் மாதம் 16ஆம் நாள் தமிழ் இணையக் கல்விக் கழகம், கோட்டூர்புரம், சென்னையில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வட அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசித்து வரும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்களின் 11 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
"மௌன புத்தன்" நூலினை மக்கள் குரல் ராம்ஜி, "நெல்லையப்பர் வீதி" நூலை கவின் கலை வேந்தர் சத்யநாராயணராஜ் பாலகுரு, "வாசமல்லி பூத்திருக்கு" நூலை கவிச்சுடர் கா. ந. கல்யாணசுந்தரம், "Abi's Brilliant Idea" நூலை தங்க மங்கை மீனா திருப்பதி, "சோர்விலாள் பெண்" நூலை முனைவர் பா. தாமோதரன், "ஒற்றைமரக்காகம்" நூலை எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா, "திருப்பாவைத் தன்முனை" நூலை கவிஞர் காவிரி மைந்தன், "தும்பியின் தூறல்கள்" நூலை பன்முகத்தென்றல் ச. விஜய் ஆனந்த், "அடைமழைக்குள் தனிக்குடை" நூலை முனைவர் இரா. பூங்கோதை, "உதிரும் உயிர்த்துளி" நூலை தலைமையாசிரியர் புனிதா சுப்ரமணியம், "சூரரைப் போற்று" நூலை கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.
நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் மகிழ்வுடன் ஏற்புரை அளித்தார்.
சிறுவர்கள் ஜனனி, யுவஸ்ரீ கடவுள் வாழ்த்து பாட, முனைவர் அன்பழகி ஸ்ரீதர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கோ. நிதின் பறையிசை வாசித்தார். ஆம்பூர் அமிழ்தினி சுரேஷ் மற்றும் ஜீ. மைத்ரேயி நாட்டியமாடினர். ஜீ. மைத்ரேயி வரவேற்புரை வழங்கிய நிகழ்வை கவிஞர் பானுமதி குமார் மற்றும் முனைவர் பாலநேத்திரம் தொகுத்து வழங்கினர். அமிழ்தினியின் நன்றியுரை, நினைவுப்பரிசுகள் மற்றும் மதிய உணவு உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுபெற்றது.