topbella

Tuesday, September 24, 2013

கத்தரிக்காய் காரக்குழம்பு...!


தேவையான பொருட்கள்:

அரைக்க:

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)
மல்லி விதை - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

வதக்க: 

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
கத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)

புளி கரைசல் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  • வெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


...அன்புடன் ஆனந்தி 







8 comments:

Yaathoramani.blogspot.com said...

மனைவி ஊருக்குப் போய் உள்ளதால்
சுய சமையல்தான் நடந்து கொண்டு உள்ளது
நாளைக்கு இதை செய்து பார்த்துவிடவேண்டியதுதான்
பகிர்வுக்கு நன்றி

ராஜி said...

பார்க்கும்போதே எச்சி ஊறுது.

வெற்றிவேல் said...

எனக்கு மிகவும் பிடித்தது... நன்றாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

ஜெய்லானி said...

எனக்கு ஒரே ஒரு டவுட்டு # கண்ணுல வெளக்கெண்ணைனையை விட்டும் பார்த்துட்டேன் ஆனா செய்முறையில எங்கேயும் மிளகாயை போடலியே அப்புறம் எப்படிங்க ’கார’கொழம்பு அவ்வ்வ்வ்வ்வ் :-)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Ranjani Narayanan said...

இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

இளமதி said...

வணக்கம் சகோதரி!...

இன்றைய வலைச்சரத்தில்
உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்!

இங்கும் உங்கள் தளத்தில் அருமையான மனங்கவர் பதிவுகள் காண்கிறேன்... தொடருகிறேன்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@Ramani S

கருத்துக்கு நன்றி.. கண்டிப்பாய் செய்து பாருங்கள்.


@ராஜி

ஹ்ம்ம். கருத்துக்கு நன்றி.



@வெற்றிவேல்

தங்கள் கருத்துக்கு நன்றி.


@ஜெய்லானி

மிளகாய் வத்தல்/காய்ந்த மிளகாய் சேர்த்து செய்யும் குழம்பு இது. தங்கள் கருத்திற்கு நன்றி.


@திண்டுக்கல் தனபாலன்

அறிமுக விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி.


@ரஞ்சனி நாராயணன்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

@இளமதி

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.



About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)