topbella

Tuesday, November 6, 2012

பக்கோடா...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வெண்ணெய் - 2 tsp (அல்லது) சூடான எண்ணெய் - 1 கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
வேர்க்கடலை (அல்லது) முந்திரி பருப்பு - கொஞ்சம்

செய்முறை:

  • வெண்ணெய் (அ) எண்ணெய் , மிளகாய் தூள், சோடா உப்பு, உப்பு - சேர்த்து கலக்கவும்.
  • இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். 
  • இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் தெளித்து பிசையவும். 
  • வாணலியில் எண்ணெய் காய வைத்து, பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக.. பிய்த்து போடவும். 
  • பொன்னிறமாக வெந்து, எண்ணெய் சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.



~அன்புடன் ஆனந்தி




3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தீபாவளிக்கு செய்து விடுவோம்...

மிக்க நன்றி...

Vijaya Vellaichamy said...

மிக்க நன்றி! இப்படியெல்லாம் படத்தோடு சுவையான பலகாரங்களை எல்லாம் போட்டு ஏன் என் பாவத்தை கொட்டி கொள்ளவேண்டும்?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@திண்டுக்கல் தனபாலன்

ஹ்ம்ம்.. கருத்துக்கு மிக்க நன்றி.



@சரண்சக்தி

நன்றி.


@விஜி

அடுத்த முறை அனுப்பி வச்சிரலாம். திட்ட கூடாது ;)

நன்றி விஜி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)