உன் அன்பிற்கும்..
ஆணைக்கும் அடங்கிப்
போய்விடும் மனது ஏனோ..
உன் நிராகரிப்பை
மட்டும் நிச்சயம்
தாங்கிக் கொள்ளாது..
நேசம் என்பது
நேரில் கண்டால் மட்டுமா?
பாசம் என்பது
பக்கத்தில் இருந்தால் தானா?
பகலிலும் இரவிலும்
பக்குவமாய் பிடித்த எல்லாம்
பார்த்து பார்த்து செய்தும்
பட்டென்று கோபம் கொள்கிறாய்..
விலகி இருத்தலே
விதி என்றாயின்
வேண்டி விரும்பிதான்
என்ன ஆகப் போகிறது?
ஆதாரம் நீ என்றே
ஆலயம் செல்லும் போதும்
ஆண்டவனிடம் சொல்கிறேன்
தெரிந்தும் கேட்கிறேன் எனைத்
தேடி வருவதெப்போது...??
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
12 comments:
நல்ல கவிதை! பிரிவை பற்றி உணர்ந்து எழுதியது போல் உள்ளது! மனதில் நின்றுவிட்டது:)
தங்ஸ்,
உன் எழுத்துகள் தற்போது மிகவும் பக்குவப்பட்டு உள்ளன.
அருமை!
//நேசம் என்பது
நேரில் கண்டால் மட்டுமா?
பாசம் என்பது
பக்கத்தில் இருந்தால் தானா?//
மனசுகளுக்கிடையே இடைவெளி இல்லாத போது மற்ற இடைவெளிகள் என்ன செய்துவிட முடியும்??..
கவிதை அருமை ஆனந்தி..
''...ஆதாரம் நீ என்றே
ஆலயம் செல்லும் போதும்
ஆண்டவனிடம் சொல்கிறேன்
தெரிந்தும் கேட்கிறேன் எனைத்
தேடி வருவதெப்போது...??...''
பிரிவும், பிரியமும், தயக்கமும் என் பல ஊடாடும் கவிதை...தொடரட்டும் hயணம்.வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
//** தெரிந்தும் கேட்கிறேன் எனைத்தேடி வருவதெப்போது...?? **//
ரொம்ப புடிச்சிருக்கு...
அருமை.
வாழ்த்துகள்.
ஆதாரம் நீ என்றே
ஆலயம் செல்லும் போதும்
ஆண்டவனிடம் சொல்கிறேன்
தெரிந்தும் கேட்கிறேன் எனைத்
தேடி வருவதெப்போது..
அருமை மிகவும் ரசிக்கும் படி உள்ளது
விலகுவதும், சேருவதும்
காத்தலின் இனிமையும்
இன்பத்தின் மோகமும்
கேட்காமல், எதிர்பாராமல்
கிடைத்தால் தான் இனிக்கும்...
அருமையான கவிதை --- எப்போதும் போல்...
ஊடலின் கோபம்?!
yen intha sogam?
yen intha sogam?
Post a Comment