topbella

Thursday, November 18, 2010

அமெரிக்காவில் ஐயப்பன்...!

மலை ஏறும் காலம்


ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ இங்கே ஐயப்பன் சாமிக்கு, மாலை போட்டு மலை ஏறும் காலம்... நிறைய நண்பர்கள் மாலை போட்டு மலைக்கு போவாங்க.. இங்கே ஐயப்பன் கோவில் உள்ள ஊருக்கு செல்வது வழக்கம்.. இதில் ஒருவர் குருசாமியாய் இருக்க, உடன் செல்பவர்கள் அவரிடம் இருந்து, மாலை அணிந்து கொள்வாங்க..

          இதில் குட்டி குட்டி பசங்களும் சில நேரம் மாலை போட்டு, கன்னிச் சாமியாக செல்வதுண்டு.. அந்த குழந்தைங்க ஆவலா விரும்பி மாலை போட்டுக் கொள்வதும், அதற்கான சில விதிமுறைகளை, முழு மனதுடன் செய்வதும், உண்மையில் பார்க்கவே சந்தோசமா இருக்கும்..!

மாலை போட்டிருக்கும்  சமயத்தில், ஒவ்வொரு வார கடைசியிலும், ஒருத்தங்க வீட்டில் பூஜை இருக்கும்.. அங்கே ஐயப்பன் பாடல்கள் எல்லாரும் ஒன்றாகப் பாடி வழிபடுவது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கும்.. எப்பவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு மதிப்பு அதிகம் தானே..

          அப்படி பூஜைக்கு போகும் போது, ஒவ்வொருவர் வீட்டிலும் ஐயப்பனை அழகாக அலங்கரித்து, சுவையாய் பிரசாதம் எல்லாம் சமைத்து, ஒரே குடும்பமாய் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்றது உண்மையில் நல்ல விஷயம்..! அப்படிப்பட்ட நேரங்களில் கோவிலுக்கு சென்று வந்த மன நிறைவு, திருப்தி இருக்கும்..!!


 
இதில் மாலை போடுறவங்க தவிர, மத்த குடும்பமும் இணைந்து தான் பஜன்ஸ் எல்லாம் போவோம்.  முதலில் விநாயகரில் ஆரம்பித்து சிவன், அம்மன், ......பிறகு ஐயப்பன் பாடல்கள் பாடுவது வழக்கம்.. குருசாமி, அம்மன் பாடல்கள் பாடும் நேரம் வரும் போது, பெண்கள் பக்கம் திரும்பி "மாளிகை புறம்" பாடுங்கன்னு சொல்வாங்க..

                 எங்க குரூப் எப்போவும் கொஞ்சம் கலாட்டா பண்ற குரூப் தான்.. சரியான வாலுங்க தான்.. ரொம்ப பக்தியா எல்லாரும் உக்காந்திருக்கும் போது, என் பிரண்ட்.. என் காதுக்குள்ள "நிலவைக் கொண்டு வா...கட்டிலில் கட்டி வை...." னு சொல்ல... எனக்கு சிரிப்பு அடக்க முடியாம... முகம் எல்லாம் சிவந்து.. கீழ குனிஞ்சு ஒரே சிரிப்பு..... அப்புறம் எப்படியோ சமாளிச்சு பாடியாச்சு..
 
இதே போல தான் போன வருஷம், எல்லாரும் பக்தியா பாடிட்டு இருக்கும் போது இன்னோர் விஷயம் நடந்தது.. சில சுவாமி பாடல்களை சினிமா சாங் மெட்டில் பாடுவது மாதிரி, "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ......." பாடல் மெட்டில், "எந்நாளும் தேடும் பொன்னான ஐய்யன்....."ன்னு பாடிட்டு இருந்தோம்.. அந்த பிரண்ட்டும் பக்கத்தில் உக்காந்து நல்ல பாடிட்டு இருந்தோம்...

                 திடீர்னு சரணம், முடிஞ்சி பல்லவி ஆரம்பிக்கும் இடத்தில், நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு "எந்நாளும் தேடும்....."னு பாடறதுக்கு பதில் "செந்தாழம் பூவில்......."னு அவங்க பாட... அவ்ளோ தான்.... அவங்க பக்கத்தில் இருந்த நாங்க அத்தனை பேரும், பயங்கர சிரிப்பு வந்து அடக்கவும் முடியாம, புடவை தலைப்பால வாய பொத்தி சிரிப்பை அடக்கரதுக்குள்ள........... ஒரு வழி ஆய்ட்டோம்..! இந்த மாதிரி, மறக்க முடியாத பல சந்தோசமான தருணங்கள் இருக்குங்க..!!

 
இந்த பூஜை நேரங்கள்ல வார வாரம் ஒரு வீட்டு பூஜைல போய் நல்ல பாடி, நல்லாவே சாப்பிட்டு ஒரு சுற்று எக்ஸ்ட்ரா ஆயிருவோம்.. ஆனா ஒண்ணு, இந்த மாதிரி பூஜை-கள்ல கலந்துக்கறது, பசங்களுக்கும் நம்ம கலாச்சாரம் தெரியறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.. குழந்தைகளையும் பாட வைக்கிறோம்..

                    அவங்களுக்கும் ஏதோ அச்சீவ் பண்ண திருப்தி..! எல்லா பாட்டும் முடிஞ்சு, படிப்பாட்டு பாடும் போது, குழந்தைகளும் சேர்ந்து ஒண்ணா பாடும் போது, நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்படத் தான் செய்கிறது..! எல்லாம் முடிஞ்சு, அய்யனுக்கு, "ஹரிவராசனம்...." பாடும் நேரமும்.... என் மனதை தொடும் தருணம்..!!
 
ஆனா ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா.... இப்பவே இங்க குளிர் காலம் ஆரம்பம் ஆயிருச்சு.. சில பிரண்ட்ஸ் வீடுகள் தூரமா இருக்கும் பட்சத்தில் குளிர்ல போயிட்டு திரும்ப வரதெல்லாம் கொஞ்சம் சிரமம்... அதுவும் குழந்தைகளை வச்சிட்டு ஏறி இறங்கி...வரதெல்லாம் கஷ்டமா இருக்கும்... ஆனா, அதையெல்லாம் தாண்டி கூட்டு பிரார்த்தனை, நண்பர்களை சந்திக்கறது.... இந்த சந்தோசம் எல்லாம் மேலோங்கி நிக்கறதுல மத்த எல்லாம் அடி பட்டு போய் விடும். விளையாட்டா, சொல்றதுண்டு.. ஐயப்பனே அமெரிக்கா வந்தா, காலில் ஷூ, ஷாக்ஸ் போட்டுட்டு தான் போகணும் போல..!
 
இப்போ தாங்க... நா இந்த பதிவு எழுதிட்டு இருக்கும் போது, ஒரு தோழி கூப்பிட்டு வர சனிக்கிழமை பூஜைக்கு வரச் சொல்லி இருக்காங்க.. அப்புறம் என்னங்க.. ஸ்டார்ட் மூஜிக்..... (ஓஹ்ஹ்ஹ்.. சாரி சாரி.. ஸ்டார்ட் பூஜை...) தான்...!! அப்புறமா சந்திக்கலாம்..!
 
...நன்றி..!

(இந்த படங்கள் எல்லாம் என் தோழி வீட்டு ஐயப்ப பூஜையில் எடுத்தது)


69 comments:

Sanjay said...

ஊதுபத்தி கொளுத்தி வைக்காதது தான் பாக்கி, இங்க ஒரே பக்தி மணமா இருக்கு !!!;-)

//"செந்தாழம் பூவில்......."னு அவங்க பாட... அவ்ளோ தான்.... அவங்க பக்கத்தில் இருந்த நாங்க அத்தனை பேரும், பயங்கர சிரிப்பு வந்து அடக்கவும் முடியாம, புடவை தலைப்பால வாய பொத்தி சிரிப்பை அடக்கரதுக்குள்ள......//
ஹி ஹி :d

//பசங்களுக்கும் நம்ம கலாச்சாரம் தெரியறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.//
ரிபீட்டு...

//ஐயப்பனே அமெரிக்கா வந்தா, காலில் ஷூ, ஷாக்ஸ் போட்டுட்டு தான் போகணும் போல..//
பேசாம கைல ஒரு போத்தல குடுங்க...எல்லாம் சரி ஆயிரும் :D :D

எல் கே said...

// ஆனா ஒண்ணு, இந்த மாதிரி பூஜை-கள்ல கலந்துக்கறது, பசங்களுக்கும் நம்ம கலாச்சாரம் தெரியறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.. குழந்தைகளையும் பாட வைக்கிறோம்.. அவங்களுக்கும் ஏதோ அச்சீவ் பண்ண திருப்தி..//


முற்றிலும் உண்மை. நமது பழக்கவழக்கங்கள் சிறு வயதிலே அவர்கள் தெரிந்து கொள்வார்கள்... இந்த வருடமாவது சினிமா பாடல் பாடாமல் ஐயப்பன் பாடல்களை பாடுங்கள்

சௌந்தர் said...

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ இங்கே ஐயப்பன் சாமிக்கு, மாலை போட்டு மலை ஏறும் காலம்... நிறைய நண்பர்கள் மாலை போட்டு மலைக்கு போவாங்க../////

இங்கயும் தான்.....

ஐயப்பா இவங்களை காப்பாத்து....

தமிழ் உதயம் said...

அமெரிக்காவில் ஐயப்பன்... கூட்டு பிராத்தனை, உண்மையிலேயே நிம்மதியை தந்தால் மகிழ்ச்சி தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))
நல்லா கொண்டாடிட்டு வாங்க

Anonymous said...

சூப்பர்..
கொலு முடிஞ்சு இப்போ ஐயப்பன் தரிசனம் ஆரம்பிச்சாச்சா.. :)
//ஆனா, அதையெல்லாம் தாண்டி கூட்டு பிரார்த்தனை, நண்பர்களை சந்திக்கறது.... இந்த சந்தோசம் எல்லாம் மேலோங்கி நிக்கறதுல மத்த எல்லாம் அடி பட்டு போய் விடும். ... //
முழுக்க உண்மை ஆனந்தி.. :)

VELU.G said...

//
சௌந்தர் said...

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ இங்கே ஐயப்பன் சாமிக்கு, மாலை போட்டு மலை ஏறும் காலம்... நிறைய நண்பர்கள் மாலை போட்டு மலைக்கு போவாங்க../////

இங்கயும் தான்.....

ஐயப்பா இவங்களை காப்பாத்து....

//

ஐயப்பா உன்ன காப்பாத்திக்க

......

மாணவன் said...

அமெரிக்காவிலும் ஐயப்பன், கேட்கவே சந்தோசமாக உள்ளது எல்லாம் பூஜைகளிலும் கலந்துகிட்டு எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்குங்க...

ஐயப்பன் படங்கள் அனைத்தும் அருமை

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

மாணவன் said...

பதிவை தமிழ்10ல் இணைக்கவில்லையா சகோ...

அருண் பிரசாத் said...

சாமிய்யேய் சரணம் ஐய்யப்பா

ஹரிவராசணம் பாட்டுக்கு உருகாதவங்க மனுஷனே இல்லைங்க


நல்ல பகிர்வு

சாந்தி மாரியப்பன் said...

ஹரிவராசனம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்.. வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடல்களை நேரம் கிடைச்சா கேட்டு பாடிப்பாருங்க..

http://www.youtube.com/watch?v=SAO15yvgNBg

Anonymous said...

பிரார்த்தனையின் மூலம் நிம்மதி கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

சசிகுமார் said...

//இதில் குட்டி குட்டி பசங்களும் சில நேரம் மாலை போட்டு, கன்னிச் சாமியாக செல்வதுண்டு//

அப்ப நான் குழந்தையா. நானும் கன்னி சாமி தான்.

இம்சைஅரசன் பாபு.. said...

சுவாமியே சரணம் ஐயப்பா.......பக்தி மனம் வீசுகிறது ..உங்கள் பதிவில் ...சுவாமி சரணம் ........

'பரிவை' சே.குமார் said...

அமெரிக்க ஐயப்பன் உங்கள் பார்வையில் அருமை. புதுச்சட்டை நல்லா இருக்கு. அமெரிக்காவுல தச்சதுல்ல... அதான்.

sakthi said...

அந்த குழந்தைங்க ஆவலா விரும்பி மாலை போட்டுக் கொள்வதும், அதற்கான சில விதிமுறைகளை, முழு மனதுடன் செய்வதும், உண்மையில் பார்க்கவே சந்தோசமா இருக்கும்..!

படிக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க

kavisiva said...

கூட்டுப்பிரார்த்தனை நல்ல மன மகிழ்ச்சியைத் தரும். அதன் பின் கிடைக்கும் சாப்பாட்டுக்காகவே நிறையபேர் வருவாங்க :)

இங்கே கோவிலில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டு பஜனை நடக்கும். அருமையா இருக்கும். ஏதோ ஒரு மனநிறைவும் நிம்மதி எல்லாம் கிடைக்கும். ஆனா பல மக்கள்ஸ் கரெக்டா சாப்பாடு போடறநேரம்தான் வருவாங்க :)

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க! இந்த மாதிரி விசயங்கள் நிச்சயம் சிறியவர்கள் கலாச்சாரம் அறிய வாய்ப்பளிக்கும்தான்!

ஜெய்லானி said...

:-))

r.v.saravanan said...

சினிமா பாடல் பாடாமல் ஐயப்பன் பாடல்களை பாடுங்கள்

logu.. said...

mmm... sami..saminu solreenga..
Kadaicheela keda vetti neengathane oru kattu katreenga..

aPdithane angaum.. poojai..poojainu neengathane
oru vettu vettareenga.

ISR Selvakumar said...

ஐயப்பன் பூஜையில் கோரஸ் சிங்கிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைவிடப் பிடித்தது, ஹெல்த்தியான பிரசாதம்!

என்னைக் கேட்டால் சினிமாப் பாடல்களின் மெட்டில் பாடப்படும் எந்த பக்தி பாடலையும் பூஜைகளில் பாடக் கூடாது என்பேன்.

சௌந்தர் said...

VELU.G said...
//
சௌந்தர் said...

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ இங்கே ஐயப்பன் சாமிக்கு, மாலை போட்டு மலை ஏறும் காலம்... நிறைய நண்பர்கள் மாலை போட்டு மலைக்கு போவாங்க../////

இங்கயும் தான்.....

ஐயப்பா இவங்களை காப்பாத்து....

//

ஐயப்பா உன்ன காப்பாத்திக்க ////

@@@VELU.G
ஏன் ஏன் பதிவை பற்றி இப்படியா வெளியே சொல்றது

Menaga Sathia said...

நல்ல படியா கொண்டாடிட்டு வாங்க..செம கலாட்டா பண்ணுவீங்கபோல..குருசாமி இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே,ஒன்னும் சொல்ல்முடியாது இந்த நேரத்துலன்னு ஒரு தெரகிரியம்தான் உங்க ப்ரெண்ட்டுக்கு...எஞ்சாய்!!

Gnana Prakash said...

நான் இங்கே ஐயப்பா பூஜை இல்லையேன்னு தான் நெனைச்சேன் ;;

நம் மக்கள் ..நம் மக்களே

எல் கே said...

/என்னைக் கேட்டால் சினிமாப் பாடல்களின் மெட்டில் பாடப்படும் எந்த பக்தி பாடலையும் பூஜைகளில் பாடக் கூடாது என்பேன். ///

உண்மை

venkat said...

nice

பித்தனின் வாக்கு said...

ஆகா அருமையான படங்கள், நல்ல பதிவு, இப்ப பதினைந்தாவது மலை யாத்திரைக்கு விரதம் இருக்க ஆரம்பித்துள்ளேன். வரும் ஞாயிறு அன்று மாலை போடப் போறேன். டிசம்பர் மூனாம் தேதி மலை யாத்திரை போறேம். இப்ப இந்த பிளாக் படிக்கும் போது கூட ஹெட் போனில் அய்யப்பன் பாட்டுதான் கேக்கின்றேன்.

சமயம் கிடைக்கும் போது என் சப்ரி மலை தொடர் பதிவுகளைப் படிக்கவும் மலைக்கு போய் வந்தது போல இருக்கும். ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லியிருக்கேன். நன்றி

அன்பரசன் said...

//அமெரிக்காவில் ஐயப்பன்...!//

அங்கயுமா???

நல்ல படங்கள்.

Unknown said...

ஹலோ ஆனந்தி..



பதிவி மிகவும் அருமை. sooper. dooper
பக்தியும்,காமெடியும் சேர்ந்த கலவை.

BTW அந்த" ப்ரிண்ட" அ ரொம்ப கேட்ட தா சொல்லுங்க. ;) ;) ;)

Mahi said...

ஹாஹ்ஹா! நல்லாவே பஜனை பாடறீங்க போங்க!! :)))))))

வெகு நாட்கள் ஒரே ஊரில இருந்தா இதெல்லாம் அட்வான்டேஜ் இல்ல? எங்களை மாதிரி நாடோடி(!!)களுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்கள்.:) ஆனா இன்னும் இப்படி கொலு-பூஜை பண்ணும் ஆட்களை பார்க்கலைங்க.

டெம்ப்ளேட் ப்ரைட்டா இருக்கு ஆனந்தி!

Akila said...

wow loved the pictures and love the description.... love ur new template design....

சங்கரியின் செய்திகள்.. said...

வாழ்த்துக்கள் ஆனந்தி.....பக்தி மலரட்டும்....எங்கிருந்தாலும்.

Unknown said...

சாமியே சரணம்
ஐயப்பா...
சாமியே சரணம்
ஐயப்பா...
சாமியே சரணம்
ஐயப்பா...

Unknown said...

கொஞ்சம் லேட்

அழகான குறும்புகள்

நானும் பண்ணி இருகிறேன்...

பல அர்ச்சனைகளும் வாங்கியதும் உண்டு

நல்ல பகிர்வு

செல்வா said...

நல்லா இருக்கு அக்கா ., இங்கயும் ஐயப்பன் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கிருச்சு.! இனி இந்த கார்த்திகை மாதம் முழுவதும் ஒரே பாடல் மயமா இருக்கு, .. எங்க பார்த்தாலும் மாலை போட்ட முகங்களா இருக்கும் ..

//வீட்டு பூஜைல போய் நல்ல பாடி, நல்லாவே சாப்பிட்டு ஒரு சுற்று எக்ஸ்ட்ரா ஆயிருவோம்.//

ஹி ஹி ஹி ..

என்னது நானு யாரா? said...

அம்மாடி! ஹா! ஹா! ஹா சிரிப்பு தாங்கல! உங்க ஃப்ரெண்டு செய்த கலாட்டா ரொம்ப கலக்கல்!!!

Priya said...

வாழ்த்துக்கள் ஆனந்தி!
படங்கள் அனைத்தும் அருமை!

R.Gopi said...

வீரமணின்னு ஒருத்தர் தான் இப்படி ஐயப்பன் பாடல்களை சினிமா மெட்டுகளில் பாட ஆரம்பித்தவர் என்று நினைக்கிறேன்....

பக்திக்கு கூட இப்போது சினிமாவின் அருள் தேவைப்படுகிறது...

பொய்யின்றி, மெய்யோடு நெய் கொண்டு போனால், அய்யனை நீ காணலாம்

என்று ஜேசுதாஸ் பாடியது நினைவுக்கு வந்தது....

S Maharajan said...

சுவாமியே சரணம் ஐயப்பா.......

dogra said...

"இந்த மாதிரி பூஜை-கள்ல கலந்துக்கறது, பசங்களுக்கும் நம்ம கலாச்சாரம் தெரியறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.. "

அப்படித்தான் நம் கலாச்சாரம் ஆயிரமாயிரம் வருடங்களாக தலைமுறை தலைமுறையாக நமக்கு வந்ததுள்ளது. இந்த கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சொத்து ஒப்படைப்பதுபோல் ஒப்படைப்பது நம் கடமை.

நல்ல கட்டுரை.

ஹேமா said...

ஆனந்தி....உங்க பக்தியை நான் கெடுக்கலப்பா !

Nandhini said...

செம செம.....தாங்க முடியல....சிரிப்பு நெஞ்ச அடைக்குது .....அம்மாடி....சூப்பர் ஆனந்தி.....அனாலும் இப்படியா நம்ப கும்பல பப்ளிக்கா டேமேஜ் பண்றது?

test said...

//எல்லாம் முடிஞ்சு, அய்யனுக்கு, "ஹரிவராசனம்...." பாடும் நேரமும்.... என் மனதை தொடும் தருணம்..!!//

:))

நெல்லை விவேகநந்தா said...

ஆனந்தி... கொஞ்ச நாளா உங்களை பாக்கல... அந்த கேப்புல ஆளே மாறிட்டீங்க... நான் சொன்னது, உங்கள் வலைப்பூவோட டெம்பிளேட்டை. வெரி நைஸ் டெம்ளேட். அத்துடன், அமெரிக்க அய்யப்பன் பற்றிய தகவலும் அருமை.

dheva said...

இப்டிதான் பண்றதா...? சாமி கும்பிட போகச் சொன்னா.. அங்க போய் மெட்டு மறக்காம ட்யூன் போட வேண்டியது....

குளிர்ல கூட எழுந்து போகும் ஆர்வத்துக்குப் பின்னால சுண்டல் ஒரு காரணமா இருக்குமோ....? இருங்க எஃப். பி.ஐ ய விசாரிக்கச் சொல்லியிருக்கேன்...விவரம் கிடைக்கட்டும்....


இந்த வருசம்...பாட்டுப்பாடவும் சுண்டல் சாப்பிடவும் போகலையா....! டவுட்டு....:)))

மோகன்ஜி said...

ஆனந்தி! ஐயப்பன் பதிவை ரொம்ப ரசிச்சேன்! நானும் சபரி மலைக்குப் போறேனே!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்
ஹா ஹா ஹா... எஸ் எஸ்.. ஐயப்ப சீசன் ஆச்சே..

சரி ரைட்டு... :-))

ஏன் இந்த கொல வெறி.. அவ்வவ்வ்வ்வ் (ஐயப்பன் பாவம்...)

தேங்க்ஸ் சஞ்சய்.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@LK
ஆமாங்க.. வருகைக்கு நன்றிங்க..




@@சௌந்தர்
ஹ்ம்ம்.. எல்லா இடமும் தான் :-))
ரெம்ப நன்றி.. ஐயப்பன் கிட்ட எங்களுக்காக வேண்டினதுக்கு.. :-)




@@தமிழ் உதயம்
ஆமாங்க.. கண்டிப்பா தருவது உண்மை தான்..
(விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்க... ஐயனை சேர்ந்து வழிபடும்போது அந்த பவர் இருக்க தான் செய்கிறது)
உங்க வருகைக்கு நன்றிங்க.. :-))




@@முத்துலட்சுமி
ஹ்ம்ம்.. வாங்க.. கண்டிப்பாங்க..
வருகைக்கு நன்றி.. :-))



@@Balaji saravana
ஹா ஹா ஹா.. எஸ்.. எஸ்.
ஆரம்பிச்சாச்சு.. :-)
வருகைக்கு நன்றிங்க..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@VELU .G
ஹா ஹா ஹா.. ஏங்க.. இவ்ளோ நம்பிக்கை எங்க மேல..??
வருகைக்கு நன்றி..





@@மாணவன்
வாங்க. எஸ். கண்டிப்பா வேண்டிக்கிறேன்.
ரொம்ப நன்றிங்க.. உங்க வருகைக்கு நன்றிங்க.. :-))

இல்லங்க.. இணைக்கல.. இணைக்கத் தோணவில்லை.. :D




@@அருண் பிரசாத்
வாங்க.. சுவாமி சரணம்..
சரியாச் சொன்னிங்க.. வருகைக்கு நன்றிங்க.. :-))





@@அமைதிச்சாரல்
ஹ்ம்ம்.. வாங்க.. ரொம்ப சந்தோசம்.. லிங்க் செக் பண்றேங்க..
வருகைக்கு நன்றி :-))




@@இந்திரா
வாங்க.. எஸ்.. கண்டிப்ப்பா கிடைக்கும்..
வருகைக்கு நன்றிங்க. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சசிகுமார்
ஹா ஹா.. வாங்க.. மாலை போட்டிருக்கீங்களா...??
சந்தோசம்... :-))





@@இம்சை அரசன் பாபு
வாங்க.. பாபு.. உண்மை தான்..
வருகைக்கு நன்றிங்க.. :-)





@@சே. குமார்
ஹா ஹா ஹா.. வாங்க குமார்..
சந்தோசங்க.. உங்க வருகைக்கு நன்றி.. :-))





@@சக்தி
வாங்க.. சக்தி.. அவர்களைப் பார்க்கவும் சந்தோசமா இருக்கும்...
வருகைக்கு நன்றிங்க. :-))




@@kavisiva
வாங்க.. ஹ்ம்ம்ம்.. சில நேரங்களில் அப்படியும் நடக்கும்..
கரெக்ட் தாங்க.. மனநிறைவு நிச்சயம் கிடைக்கும்..
ஹா ஹா ஹா.. அதுவும் சரி தான்.. ;-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@எஸ். கே..
வாங்க. சரியா சொன்னிங்க.. நன்றிங்க.. :-))




@@ஜெய்லானி
வாங்க ஜெய்.. ஸ்மைல் -கு நன்றிங்க.. :-))





@@r .v . saravanan
ஹா ஹா.. சரிங்க.. ரொம்ப நன்றிங்க.. :-))





@@logu
வாங்க.. சாரி ராங் அட்ரஸ்...
நாங்க அதெல்லாம் சாப்பிடரதில்லங்க.
எஸ் எஸ்.. வெஜ் என்றால் என்ன பயம்.. :-))
நன்றிங்க..




@@r . selvakkumar
எஸ். எனக்கும் தான்.. அந்த வைப்ரேஷன் நல்லா இருக்கும்..
:-))) சரி தான்..
வருகைக்கு நன்றி

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@சௌந்தர்
ஹா ஹா.. யாரும் உங்க பதிவ பத்தி வெளில சொல்லல...
இப்போ சந்தோசமா? :D



@@Mrs . Menagasathia
ஹ்ம்ம்ம்.. ரொம்ப சந்தோசம்ப்பா..
எஸ் எஸ்.. நம்ம குரூப் பார்த்து மிரண்டு போயிருப்பார்.
தேங்க்ஸ் பா... :-))




@@Gnana Prakash
ஹ்ம்ம்.. வாங்க.. வருகைக்கு நன்றிங்க.. :-)




@@LK
மீண்டும் உங்க கருத்திற்கு நன்றி.. :-)




@@venkat
உங்க வருகைக்கு நன்றி :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@பித்தனின் வாக்கு
வாங்க... நலமா?
ரொம்ப சந்தோசங்க.. பத்திரமாக போய் வாங்க..
எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க.. :-)

கண்டிப்பாக படிக்கிறேன்.. நன்றிங்க..




@@அன்பரசன்
வாங்க.. என்ன இவ்ளோ அதிர்ச்சி..
வருகைக்கு நன்றிங்க.. :-)





@@poorna
ஹாய்.. வாங்க..
ரொம்ப தேங்க்ஸ்-மா..
எஸ் எஸ்.. கண்டிப்பா சொல்றேன்.. :D :D




@@Mahi
வாங்க மகி..
ஆமாங்க.. ஒரே ஊரில் வெகு நாட்கள் இருக்கும் காரணத்தினால்,
நிறைய நம்ம கலாச்சாரம் தொடர முடிகிறது...
ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Akila
வாங்க அகிலா.. ரொம்ப தேங்க்ஸ் பா.. :-))




@@நித்திலம் - சிப்பிக்குள் முத்து
வாங்க. வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-)





@@siva
வாங்க.. சுவாமியே சரணம்..
ஹ்ம்ம்.. ஹா ஹா ஹா...
அப்போ நீங்களும் நம்ம செட்..
வருகைக்கு நன்றி. :-)




@@ப. செல்வக்குமார்
வாங்க செல்வா.
ரொம்ப கரெக்ட்.. ஒரு வகையில் அப்படி பார்ப்பதும் நல்லா இருக்கும்
ஹலோ.. என்ன சிரிப்ப்ப்பு.... :-))
நன்றி...




@@என்னது நானு யாரா?
ஹா ஹா.. வாங்க.
ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Priya
வாங்க ப்ரியா.. ரொம்ப தேங்க்ஸ் பா. :-))





@@R .Gopi
ஹ்ம்ம்.. சரி தான் நீங்க சொல்றது..
எனக்கும் "பொய்யின்றி.... " பாடல் ரொம்ப பிடிக்கும்..
அதுவும் பாடுவோம்.. :-))
நன்றி..





@@S Maharajan
வாங்க.. வருகைக்கு நன்றி.. :-)





@@sinthanai
வாங்க.. ரொம்ப சந்தோசம்..
உங்க கருத்திற்கு நன்றிங்க.. :-)





@@ஹேமா
ஹா ஹா ஹா.
அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க வாங்க.. :D
வருகைக்கு நன்றிங்க.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@Nandhini
ஹா ஹா ஹா.. வாங்க நந்தினி
இப்போ யாராவது... கேட்டாங்களா...
டீட்டைல்ஸ்.... அவ்வ்வ்வவ்




@@ஜீ
வாங்க. வருகைக்கு நன்றி.. :-)




@@நெல்லை விவேகாநந்தா
வாங்க.. ஹ்ம்ம்.. ஆமாங்க..
ரொம்ப சந்தோசம்... உங்க வருகைக்கு நன்றி.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@dheva
ஹா ஹா ஹா.... சரி சரி... திட்டப் பிடாது..
ஹலோ.. அவ்ளோ மோசம் எல்லாம் இல்லையாக்கும்...
அதெல்லாம் அப்பவே ஸ்டார்ட் பண்ணியாச்சு பண்ணியாச்சு.. :-))
தேங்க்ஸ் தேவா..





@@மோகன்ஜி
வாங்க.. ரொம்ப சந்தோசங்க..
பத்திரமா போயிட்டு வாங்க..
வருகைக்கு நன்றிங்க.. :-))

Thenammai Lakshmanan said...

மனம் நிறைந்த அழகான பகிர்வு ஆனந்தி..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தேனம்மை லக்ஷ்மணன்

வாங்க அக்கா.. ரொம்ப சந்தோசம்.. :-))

மே. இசக்கிமுத்து said...

அமெரிக்காவிலும் ஐயப்பன்,நல்ல செய்தி. நல்ல பகிர்வு!

அனுபவம் said...

என்ன ஆனந்தி எனது ப்ளக்கோட பெயரையே லேபலாக வச்சிருக்கீங்க? ஹ..ஹ...!

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு

Mathi said...

very nice ananthi !!! i like ur post.good sharing !!!

பிச்சைக்காரன் said...

பகிர்வுக்கு நன்றி

எல் கே said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

Unknown said...

ஆனந்தி யாரு என்ன சொன்னாலும் திரும்பிய பக்கமெல்லாம் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிட்டேதான் போகுது. என்பையன் சிவா 5 வருஷமா போய்வரான். பாடரவங்கமனசு,கலந்துக்கரவங்கமன்சில் ஒரு சொந்தோஷம் இருக்கத்தான்செய்யுது.

செந்தில்குமார் said...

பக்தி மணம் ம்ம்ம்ம் கூடவே சிரிப்பும்

சினிமா மெட்டில் பக்த்தி பாடல் சரியாக பயிற்ச்சி எடுத்திங்களா...
இல்லையினா அப்படித்தான் ஆகும்

பஜனைக்கு இடையில்.....

எங்க குரூப் எப்போவும் கொஞ்சம் கலாட்டா பண்ற குரூப் தான்.. சரியான வாலுங்க தான்.. ரொம்ப பக்தியா எல்லாரும் உக்காந்திருக்கும் போது, என் பிரண்ட்.. என் காதுக்குள்ள "நிலவைக் கொண்டு வா...கட்டிலில் கட்டி வை...." னு சொல்ல... எனக்கு சிரிப்பு அடக்க முடியாம... முகம் எல்லாம் சிவந்து.. கீழ குனிஞ்சு ஒரே சிரிப்பு..... அப்புறம் எப்படியோ சமாளிச்சு பாடியாச்சு..

இதயேல்லாம் இப்படியா பப்ளிக்க சொல்லரது ம்ம்ம்ம்...

சாமியே ஜயப்பா...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆனாலும் லேட்டா பதில் சொல்றேன், உங்க எல்லாருக்கும்.. :-) மன்னிக்கவும்..!

@@இசக்கிமுத்து
வாங்க.. கருத்துக்கு ரொம்ப நன்றிங்க. :-)


@@அனுபவம்
வாங்க.. ஹா ஹா.. எஸ்.. நானும் கவனித்தேன். நன்றிங்க :-)



@@மங்குனி அமைச்சர்
வாங்க.. என்ன.. பஸ் கிளப்பி விட்டு போற மாதிரி ரைட்ட்டு.. :-) நன்றிங்க


@@Mathi
தேங்க்ஸ் மதி.. :-)


@@பிச்சைக்காரன்
வாங்க.. வருகைக்கு நன்றிங்க :-)



@@LK
விருதிற்கு நன்றிங்க.. :-)



@@umaasvini.asvini
வாங்க.. ரொம்ப சந்தோசங்க.. அதிலும் சின்ன பிள்ளைங்க பக்தியோட.. போறது. பார்க்க, பார்க்க மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க.. நன்றிங்க. :-)


@@செந்தில்குமார்
வாங்க செந்தில்..
ஹா ஹா.. இந்த முறை.. அதிகம் சினிமா மெட்டில் பாடவில்லை.. அதுவும் சரி தான்.. :-)
நீங்க எல்லாரும் என் பிரண்ட்ஸ் தானே.. அந்த தைரியம் தாங்க.. வருகைக்கு நன்றி..

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)