topbella

Wednesday, November 10, 2010

உன்னைக் காண்கையில்...!!


நினைவில் நின்றவன்
என் கண்ணெதிரே நிற்க
விழி இமைக்காமல் அவனை
விசித்திரமாய் நான் நோக்க...!!

அருகில் நிற்கும் அவனை
அணைக்கத் துடிக்கும் நெஞ்சம்
அவசரமாய் மனம் மாற்றி
அங்கிருந்தே அகன்றதென்ன..!!

காரணம் நீ சொன்னாலும்
அதை நான் கருத்தில் கொண்டாலும்
என் கண்ணனைக் காண்கையில்
கட்டவிழ்ந்த கன்றாய் என்
காதல் மனம் செல்வதென்ன...!!

உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!
நீ பார்க்கும் பார்வையிலும்
பேசும் வார்த்தையிலும்
நான் பனித்துளியாய் கரைவதென்ன..!!

ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!
 
......அன்புடன் ஆனந்தி
 

68 comments:

Sanjay said...

//அவசரமாய் மனம் மாற்றி
அங்கிருந்தே அகன்றதென்ன..!!//
மறுபடியும் மொதல்ல இருந்தா???!!!!:D :D

//என் கண்ணனைக் காண்கையில்
கட்டவிழ்ந்த கன்றாய் என்
காதல் மனம் செல்வதென்ன...!!//
க க க போ....

உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!//
அட...

//நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!//
காலால கோலம் போடுவீங்களா??:D

தினேஷ்குமார் said...

உன்னைக் காண்கையில்
உடனிருப்போர்
மறைந்திறுப்பர்
மனவிழிதனிலே

உண்மைதானே தோழி

ம.தி.சுதா said...

ஃஃஃஃஉன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!ஃஃஃஃ
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

மதுரை சரவணன் said...

//நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!//

காதல் ரசம் சொட்டுக்கிறது.... வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

//ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!//
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்.

Unknown said...

அழகான கவிதை..

Unknown said...

காதல் மழை சொட்ட சொட்ட கவிதை வரிகள் நல்லா இருக்கு..

அனைத்து வரிகளும் ரசிக்கும் படி இருக்கு

Ramesh said...

கவிதை நல்லா இருக்கு.. ஆனா உங்க ஸ்டைல் மிஸ்ஸிங்..

ஜெய்லானி said...

:-))))

எம் அப்துல் காதர் said...

காதலை காதலாய் சொல்லி நடுவில் நாணி கொஞ்சம் கோணி ...ம்ம்ம் அடடா!! சொல்லவைக்கும் கவிதை!!

எல் கே said...

என்ன என்ன என்ன ??

வரிசையா கேள்வி கணை தொக்கி நிக்குது...

//பிரியமுடன் ரமேஷ் said...

கவிதை நல்லா இருக்கு.. ஆனா உங்க ஸ்டைல் மிஸ்ஸிங்..//

repeat

Anonymous said...

உள்ளம் உருகுதையா கண்ணா, "உன்னைக் காண்கையிலே" ( ஒரு ரீமிக்ஸ் ;) )
ம் ம்... அழகு கவிதை..

dogra said...

அருமையான கவிதை.

அன்பரசன் said...

//அருகில் நிற்கும் அவனை
அணைக்கத் துடிக்கும் நெஞ்சம்
அவசரமாய் மனம் மாற்றி
அங்கிருந்தே அகன்றதென்ன..!!//

நல்ல வரிகள்.

சி.பி.செந்தில்குமார் said...

kavithai கவிதை சூப்பர்

>>>>கட்டவிழ்ந்த கன்றாய் என்
காதல் மனம் செல்வதென்ன...!!>>>

கேட்சிங்க் லைன்

நிலாமதி said...

அழகான காதல் மழை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல தான் இருக்கு கவிதை .

Anonymous said...

கவிதையை படிச்சதும் மெளனமாய் மெல்லச் சிரிக்கிறது மனசு.. நேற்று கோவமாய் நான் எழுதிய கவிதை என்னை கேலி செய்கிறது ஆனந்தி..உந்தன் ஒவ்வொரு வரிகளிலும் தெரித்த் காதல் மீண்டும் காதல் சிறையில் தள்ளிவிட்டது...இன்னும் பாராட்ட ஆசை எப்படின்னு தெரியலை அவ்வளவு பிடிச்சிருக்கு இந்த கவிதை..

சௌந்தர் said...

அட டா கவிதை கவிதை

அன்புடன் மலிக்கா said...

உணர்வுகளை
உள்ளது உள்ளபடிச் சொல்லும்
உண்மைக்காதல்.

அருமை ஆனந்தி..

S Maharajan said...

//ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!//


அருமையான காதல் வரிகள் வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com said...

//ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!//

அனுபவித்த வரிகள்...

logu.. said...

Hayyo..Hayyoo...

sema kalakkalnga..

Unknown said...

காதல் ... காதல் ...

அருண் பிரசாத் said...

:) என்ன என்ன என்ன?

எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அழகான வரிகளில் ஒரு காதல் அனுபவம். ரசிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. கவிதை ரொம்ப நல்லாருக்கு ஆனந்தி..

கவி அழகன் said...

வழமைபோல் சுப்பர்

உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!
எனக்கு பிடித்த கவிதை வரிகள்

சிவராம்குமார் said...

\\ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!//

செம டச்!!!

க.மு.சுரேஷ் said...

//உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!
நீ பார்க்கும் பார்வையிலும்
பேசும் வார்த்தையிலும்
நான் பனித்துளியாய் கரைவதென்ன..!!//


நீ பேசிய வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் நினைவில் ஓடுவதென்ன.

என்ன அழகான கவிதை..
மிகவும் அருமை..
வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

//என் கண்ணனைக் காண்கையில்
கட்டவிழ்ந்த கன்றாய் என்
காதல் மனம் செல்வதென்ன...//

கண்ணசைத்து காதல் அழைக்கையில் கன்று குட்டிக்கு அங்கென்ன வேலை??? அழகான வார்த்தை கூட்டு ரசித்தேன் வாழ்த்துகள் ஜி...

r.v.saravanan said...

கவிதை நல்லா இருக்கு

செல்வா said...

//உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!
நீ பார்க்கும் பார்வையிலும்
பேசும் வார்த்தையிலும்
நான் பனித்துளியாய் கரைவதென்ன..!!///

இந்த வரிகள் கலக்கலா இருக்கு அக்கா .,
அதே மாதிரி கடைசி பத்த்தியும் ஹய்யோ உண்மைலேயே காதல பிழிச்சு எடுத்துட்டீங்க ..!!

ஹேமா said...

காதல் சிலசமயம் கண்ணை மறித்துவிடும் தோழி.கவனம்.வரிகள் அழகு காதல்போல !

Thanglish Payan said...

Kavithai superb ..

எஸ்.கே said...

அழகான வரிகள்! கவிதை அருமை!

ஆர்வா said...

நல்ல நாணம்.. நல்ல ரசனை......

dheva said...

கனவில் நினைத்திருந்த காதலின் வருகை கொடுத்த மாற்றத்தில் கிளைத்தெழுந்திருக்கும் உணர்வுகளை வார்த்தைகளாக்கி கொண்டு வந்த மாத்திரத்தில் காதலால் மொத்த வார்த்தைகளும் அழாகாய் ஆகிப் போன மாயம் நிகழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை ஆனந்தி....!

அவசரமாய் மனமாற்றி போகும் இடைத்தில் நளினமும்....

கட்டவிழ்ந்த கன்றாய் மனம் செல்லுமிடத்தில்....தீராக்காதலும்

கோபமே வராமல் பனித்துளியாய் கரைவதில் சரணாகதியும்


என்று காதலி அள்ளித் தெளிக்கும் பன்னீராய் இறைக்கும் வரிகள்.....ஸ்பரிசம் பட்டு நாணும் இடத்தை ஒரு செடி நாணுவதற்கு இணையாய் உவமை கொள்ளும் போது.....
ஒரு நிமிடம் செடியாய் மனம் மாறி நாணம் கொண்டு அந்த ஸ்பரிசம் கொடுத்த கூச்சத்தில் தலைகுனிந்து இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை....

காதலும் அதைச் சொல்ல வந்த கவிதையும் வெற்றி வாகை சூடிய இடம்...இது....!


செம....!!!!!!!!!!

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா....ஒரு திகில் கதை படிச்சுப்புட்டு கமெண்ட் போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது.....ஏண்ணே பாத்துகிட்டே நிக்கிறீங்களே....ஓடிபோய் ஒரு ஜோடா வாங்கிட்டு வாங்க.....வெரசா...)


அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா.......!

சௌந்தர் said...

@@@தேவா இந்த கவிதையை கூட 5 நிமிஷத்தில் எழுதி இருப்பாங்க இவர் என்னடானா அப்பா ஒரு நாள் முழுவதும் கமெண்ட் எழுதிவைச்சி இருக்கார்...இதுல சோடா வேற சரி சரி சோடா கேட்டு பிற்கு என்ன செய்வது புடிங்க இனி இந்த மாதிரி நடக்க கூடாது ஏதுவா இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வோம்

[ma][im]http://farm3.static.flickr.com/2441/3870874026_fe1affb4da.jpg[/im][/ma]

ISR Selvakumar said...

அட..அட..அட..
அருமையா இருக்கு!
இது போல, இன்னும் நிறைய எழுது தங்கை!

மாணவன் said...

”உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!
நீ பார்க்கும் பார்வையிலும்
பேசும் வார்த்தையிலும்
நான் பனித்துளியாய் கரைவதென்ன..!!”

வரிகள் ஒவ்வொன்றும் அருமை அழகான ரசனை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Nandhini said...

"ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!"


அழகு...
நீ எழுதும் நடை அழகு...
அழகு....
மொத்தத்தில் எல்லாம் அழகு போங்க....

போளூர் தயாநிதி said...

m
polurdhayanithi

பால்ராஜ் said...

அழகான உணர்வுகள்,அற்புதமான வரிகள்! வாழ்த்துக்கள் !

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மனதை வருடுகிறது ஒவ்வொரு வரிகளும். பெண்ணினேன் உண்மையான காதல் வெளிப்பாடு.
மிகவும் அருமை ஆனந்தி.
நன்றி
ராக்ஸ்....

http://rockzsrajesh.blogspot.com/

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மனதை வருடுகிறது ஒவ்வொரு வரிகளும். பெண்ணினேன் உண்மையான காதல் வெளிப்பாடு.
மிகவும் அருமை ஆனந்தி.
நன்றி
ராக்ஸ்....


http://rockzsrajesh.blogspot.com/

Anonymous said...

kavithai nalla irukkunga ananthi..

சிவகுமாரன் said...

காதலை அழகாய் மென்மையாய் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

காதலை அழகாய் மென்மையாய் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

Akila said...

wow what a lovely kavithai dear.... simply love each and every lines.....

அன்புடன் நான் said...

காலமெல்லாம் காதல் வாழ்க....... கவிதை நல்லாயிருக்குங்க.

செந்தில்குமார் said...

அன்புடன் ஆனந்தி அன்பு எழுத்துக்களுடன்.....ம்ம்ம்ம்


காரணம் நீ சொன்னாலும்
அதை நான் கருத்தில் கொண்டாலும்
என் கண்ணனைக் காண்கையில்
கட்டவிழ்ந்த கன்றாய் என்
காதல் மனம் செல்வதென்ன...!!

தமிழ்க்காதலன் said...

முரண்பட்ட மனதின்
முனைப்புகள் முன்னிறுத்தி
நினைப்புகள் அலையும்
நிதர்சனம் கண்ணாடியின்
பிம்பமாய் பிரதிபலிக்க
பின்வரிகள் கலக்கல்...

ஆனந்தி ஆர்பரிக்கும்
மனசு இறகு முளைக்க
இன்னோர் உலகில்
இங்குமங்கும் அலைகிறது.
தனித்த மோனம்
தலைத்தூக்க வானம்
என் காலுக்கு கீழ்.

மிக்க நன்றி அழகான கவிதைக்கு. vaanga... ithayasaaral.blogspot.com

Mathi said...

very nice!!!

kavisiva said...

கவிதை வரிகள் அருமை ஆனந்தி! மையல் கொண்ட பெண்ணின் மனதை அழகாக வெளிப்படுத்துகிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சஞ்சய்

ஹிஹிஹி... எஸ். எஸ்.. :D :D

ஹா ஹா ஹா.. என்னது இது...??? ஏன் திட்டுறீங்க??
ஆமா.....அப்படி தான் :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@dineshkumar
வாங்க.. தினேஷ். ரொம்ப சரியா சொன்னிங்க.. நன்றிங்க :-)


@@ம. தி. சுதா
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)


@@மதுரை சரவணன்
வாங்க... ரொம்ப நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சே. குமார்
வாங்க.. ரொம்ப நன்றிங்க. :-))


@@பதிவுலகில் பாபு
வாங்க.. ரொம்ப நன்றி :-)


@@சிநேகிதி
வாங்க.. ரொம்ப சந்தோசங்க.. உங்க கருத்துக்கு நன்றி.. :-)


@@பிரியமுடன் ரமேஷ்
வாங்க ரமேஷ்.. ஒஹ்ஹ.. சரி அடுத்தமுறை ட்ரை பண்றேன்.. :-))
நன்றிங்க..


@@ஜெய்லானி
வாங்க.. ஸ்மைல்-கு நன்றிங்க. :-)


@@எம்.அப்துல் காதர்
ஹா ஹா. வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)


@@LK
வாங்க. கார்த்திக்.. கருத்துக்கு நன்றி.. :-)

தினேஷ்குமார் said...

தோழி தொழில் கற்றுக்கொடுத்துட்டு இப்படி கடை பக்கமே வராமல் இருந்தால் எப்படி கொஞ்சம் கடைக்கு வந்து போங்க தோழி சமயம் இருந்தால்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Balaji saravana
ஹா ஹா ஹா.. அதே அதே.. எல்லாம் ஒரு ரீமிக்ஸ் தான்.. :-)
நன்றிங்க..


@@sinthanai
வாங்க.. ரொம்ப நன்றி :-)


@@அன்பரசன்
வாங்க.. ரசித்து கருத்து இட்டதற்கு நன்றிங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@சி. பி. செந்தில்குமார்
வாங்க.. ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி.. :-)



@@நிலாமதி
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. வாழ்த்திற்கும், உங்கள் வருகைக்கும் :-)



@@இம்சை அரசன் பாபு
வாங்க. நீங்க சொன்னிங்கன்னா சரி தாங்க.. நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@தமிழரசி
வாங்க.. ஹ்ம்ம்.. உங்க கமெண்ட் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு..
நீங்க இவ்ளோ தூரம் ரசிச்சு கருத்து சொன்னதில் உண்மையில் மகிழ்ச்சி.
உங்க பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி.. :-)



@@சௌந்தர்
ஆமா ஆமா.. கவிதை கவிதையே தான்.. நன்றி :-)




@@அன்புடன் மலிக்கா
வாங்க.. சரியாச் சொன்னிங்க.. ரொம்ப நன்றிங்க.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@S Maharajan
வாங்க.. கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-)



@@சங்கவி
வாங்க... அனுபவித்து கருத்து சொன்னதில் மகிழ்ச்சி. நன்றிங்க.. :-)



@@logu ..
ஹா ஹா.. ரொம்ப நன்றிங்க.. :-)



@@கே. ஆர். பி. செந்தில்
எஸ் எஸ்.. வருகைக்கு நன்றிங்க.. :-)




@@அருண் பிரசாத்
ஹா ஹா ஹா ... வாங்க அருண்..
நன்றி. :-))




@@Starjan (ஸ்டார்ஜன்)
வாங்க.. ரொம்ப சந்தோசங்க..
உங்க கருத்திற்கு நன்றி.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@யாதவன்
வாங்க.. கருத்திற்கு மிக்க நன்றி.. :-)




@@சிவா
வாங்க.. கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-)




@@க. மு. சுரேஷ்
வாங்க.. ஹ்ம்ம்.. நீங்க ரசித்து சொன்ன கருத்திற்கு ரொம்ப நன்றிங்க.. :-)



@@சீமான்கனி
வாங்க.. ஹ்ம்ம்... அதானே..!! நல்ல கேள்வி..
ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றிங்க.. :-)



@@r . v . saravanan
வாங்க.. ரொம்ப நன்றிங்க :-)



@@ப. செல்வக்குமார்
வாங்க.. ஹ்ம்ம்.. ரொம்ப நன்றி..உங்க கருத்துக்கு.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@ஹேமா
வாங்க. உண்மை தான்.. நன்றி தோழி.. :-)




@@Thanglish Payan
வாங்க. ரொம்ப நன்றிங்க.. :-)




@@எஸ். கே.
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. உங்க கருத்திற்கு :-)





@@கவிதை காதலன்
வாங்க.. ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@dheva
எசூச்மி... கமெண்ட் பதில் போடுவதற்கு முன்னாடி ஒரு கோலி ஜோடா.... ப்ளீஸ்.
ஹ்ம்ம்ம்... நளினம், தீராக்காதல், சரணாகதி....

நீங்க கவிதையை ரசித்து புரிந்து, விளக்கம் சொன்ன விதம் சூப்பர்..
ரொம்ப நன்றிங்க.. :-)

(ஹலோ உங்களுக்கு பதில் போடறதுக்கே ஒரு ஜோடா காலி... சரி ரைட்டு.. உங்களுக்கும் ஒன்னு ஆர்டர் பண்ணிரலாம்....)




@@r . selvakkumar
வாங்க அண்ணா.. ரொம்ப தேங்க்ஸ்.. இன்னும் எழுத முயற்சி செய்கிறேன்.. :-)





@@மாணவன்
வாங்க.. ரசித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@@Nandhini
ஹா ஹா ஹா.. வாங்க நந்தினி..
ரொம்ப தேங்க்ஸ் பா.. ;-))



@@polurdhayanithi
வாங்க. நன்றிங்க. :-)




@@பால்ராஜ்
வாங்க. கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.. :-)



@@rockzsrajesh
வாங்க.. வருகைக்கும், ரசித்து இட்ட கருத்திற்கும் நன்றிங்க.. :-)




@@திவ்யாம்மா
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)




@@சிவகுமாரன்
வாங்க. ஹ்ம்ம்ம்.. ரசித்து கருத்து சொன்னமைக்கு நன்றிங்க.. :-)




@@Akila
வாங்க.. தேங்க்ஸ் மா.. :-))




@@சி. கருணாகரசு
வாங்க.. ரொம்ப நன்றிங்க.. :-)




@@செந்தில்குமார்
வாங்க.. ஹ்ம்ம்.. ரொம்ப நன்றிங்க.. :-))




@@தமிழ்க்காதலன்
வாங்க... கவிதையினை ரசித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு ரொம்ப நன்றிங்க..
உங்கள் வரிகளும் அருமை.. :-))



@@Mathi
வாங்க.. தேங்க்ஸ்.. :-)




@@kavisiva
வாங்க கவி.. ஹ்ம்ம்.. அதே தான்..
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.. :-))



@@dineshkumar
ஹா ஹா ஹா.. அச்சோ.. நா எதுவும் கற்றுக் கொடுக்கலிங்க..
கண்டிப்பாக வருகிறேன்.. அழைப்பிற்கு நன்றி :-)

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை.........வாழ்த்துகள்

R.Gopi said...

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

இந்த கண்ணதாசனின் வைர வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது....

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)