topbella

Wednesday, March 16, 2011

தக்காளி கிச்சடி / கொத்சு :


தேவையான பொருட்கள்:
தக்காளி - 4 
வெங்காயம் - 2
மல்லி இலை - சிறிது 

மசாலா (அரைக்க):
தேங்காய் - 1 துண்டு
பொட்டு கடலை - 5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 7 / 8 (காரத்திற்கேற்ப)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை

செய்முறை:

          முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பெரிய பெரிய துண்டுகளாய் நறுக்கி, அதை பிரஷர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். (பாத்திரத்திலும் வேக வைக்கலாம்).

          தக்காளி, வெங்காயம் ஆறியதும், அதை நன்கு மசித்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்துக் கொள்ளலாம்), ரொம்பவும் மையாக அரைத்து விட கூடாது.

          ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, அதனுடன் மசித்த தக்காளி கலவை, மற்றும், அரைத்த மசாலா, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (தண்ணீர் வேண்டுமளவு சேர்த்துக்கொள்ளலாம்).

நன்கு கொதித்ததும், மல்லி இலை போட்டு இறக்கவும்.



இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.


Tuesday, March 8, 2011

பெண் என்னும்....!


"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்" என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை... அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்ததாய், பெருமையுடன் எண்ணிக் கொண்டு, இந்த "அகில உலக மகளிர் தினத்தில்"... அனைத்து மங்கையர்க்கும், எனது வாழ்த்துக்களுடன் சில வரிகள்...!

கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலபல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!

அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!

எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!

அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!

பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!

ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!




~அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகிள் )

Friday, March 4, 2011

என் உள்ளம் ஊமையாய்...!



விடை தெரிந்தும் என்னிடம்
போகவா என்கிறாய்...
ஏன் வேண்டாமென்றால்
என்ன செய்வதாய் உத்தேசம்?

மணிக்கணக்கில் பேசினாலும்
மனமில்லை உன்னை வழியனுப்ப..
உதடு சரி என்கையில்......
என் உள்ளம் ஊமையாய்..!

என்னிடத்தில் எதைக்  கண்டு
எனை நீ விரும்பினாயோ நானறியேன்..
உன்னிடத்தில் ஒவ்வொன்றும் என்
உள்ளம் கவர்ந்தவை அன்றோ..!

புதிதாய் பார்த்தால் பழகுவதில்
தயக்கம் இயற்கை... அதென்ன...
உன்னைக் கண்ட நாள் முதல்
உன்னையே சுற்றி வரச் செய்துவிட்டாயே...!

வேறெதிலும் என் மனம்
லயிப்பது இல்லை...
வேர் கொண்ட மரமாய் 
உன் நினைவலை...!

~அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)