எவர் நம்மின் உற்ற நண்பன்?
அன்றாட வாழ்க்கையில்
அவரவர்க்கு ஆட்டிப்படைக்கும்
ஆயிரமாயிரம் வேலைகள்...!
ஓடியாடி வேலை செய்து
ஓய்ந்து உட்காரும் நேரத்தில்
உள்ளன்போடு செவி சாய்க்க
ஓர் ஜீவன் இருந்தாலும்
அதுவே நம் உற்ற நண்பன்...!
அறியா வயதில் ஆறேழு நண்பர்கள்
அறிந்த வயதில் ஓரிருவர் இருப்பினும்
ஒளிவு மறைவின்றி நடிப்பு நாடகமின்றி
நல்ல துணையாய் நண்பன் அமைய
நாம் செய்திருக்க வேண்டியது தவம்...!
இன்பத்தில் இணைந்து இருந்தும்..
இடர் வரும் வேளையில்
இரு கைநீட்டி அரவணைத்தும்
இதயத்தில் அமர்ந்து இருப்பவனே
உண்மையான உற்ற நண்பன்...!
காசு பணம் எதிர்பார்த்தோ..
காரியம் நடக்க வேண்டும் என்று
கை கோர்த்தோ நட்பு படர்ந்தால்
காலத்துக்கும் உடன் வராது
கரை சேரவும் தோதுபடாது....!
எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!
கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன். உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
August 07: Friendship day
அன்றாட வாழ்க்கையில்
அவரவர்க்கு ஆட்டிப்படைக்கும்
ஆயிரமாயிரம் வேலைகள்...!
ஓடியாடி வேலை செய்து
ஓய்ந்து உட்காரும் நேரத்தில்
உள்ளன்போடு செவி சாய்க்க
ஓர் ஜீவன் இருந்தாலும்
அதுவே நம் உற்ற நண்பன்...!
அறியா வயதில் ஆறேழு நண்பர்கள்
அறிந்த வயதில் ஓரிருவர் இருப்பினும்
ஒளிவு மறைவின்றி நடிப்பு நாடகமின்றி
நல்ல துணையாய் நண்பன் அமைய
நாம் செய்திருக்க வேண்டியது தவம்...!
இன்பத்தில் இணைந்து இருந்தும்..
இடர் வரும் வேளையில்
இரு கைநீட்டி அரவணைத்தும்
இதயத்தில் அமர்ந்து இருப்பவனே
உண்மையான உற்ற நண்பன்...!
காசு பணம் எதிர்பார்த்தோ..
காரியம் நடக்க வேண்டும் என்று
கை கோர்த்தோ நட்பு படர்ந்தால்
காலத்துக்கும் உடன் வராது
கரை சேரவும் தோதுபடாது....!
எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!
கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன். உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
August 07: Friendship day