topbella

Wednesday, November 28, 2012

நீங்காத உன் பிம்பம்...!


எப்போதும் அவள் 
கடந்து செல்லும் வீதி...
ஏக்கங்கள் நிறைத்துப் 
போட்டிருக்கும் என் மனம்..

காலம் இழுத்து வந்த பாதை 
காதல் கடந்து வந்த மீதி..
எனதுயிரை சுமந்து போகும் பாதை..
ஏக்கங்கள் நிறைத்து 
என்னுள்ளம் தொலைத்து 
எதுவுமறியாத எல்லைக்கோடு...

காரணம் தேவையில்லை 
அவள் கைகளில் நான் பிள்ளை
யாரவள் என் வாழ்வில் 
எனை தாலாட்டும் வீணை...

தேடலில் தெரிந்த சொந்தம்
தீண்டியும் தீராத பந்தம்...
மோனத்தில் உதிர்ந்த இன்பம்
உன் மௌனத்தால் 
உணர்ந்த துன்பம்...

கலைந்த எண்ணத்தில் 
கவனச் சிதறலில் கூட 
கலையாத உன் வண்ணம் 
நிறைத்த எண்ணத்தில் 
நீங்காத உன் பிம்பம்...!

~அன்புடன் ஆனந்தி



Tuesday, November 6, 2012

பக்கோடா...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வெண்ணெய் - 2 tsp (அல்லது) சூடான எண்ணெய் - 1 கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
வேர்க்கடலை (அல்லது) முந்திரி பருப்பு - கொஞ்சம்

செய்முறை:

  • வெண்ணெய் (அ) எண்ணெய் , மிளகாய் தூள், சோடா உப்பு, உப்பு - சேர்த்து கலக்கவும்.
  • இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். 
  • இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் தெளித்து பிசையவும். 
  • வாணலியில் எண்ணெய் காய வைத்து, பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக.. பிய்த்து போடவும். 
  • பொன்னிறமாக வெந்து, எண்ணெய் சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.



~அன்புடன் ஆனந்தி




About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)